வீட்டில் நான் தனியே இருக்கும் நேரங்களை நான் மிகவே ரசிப்பது உண்டு,மனதில் பல எண்ணங்கள் நம்மை பற்றி நமக்கே அடையாளம் கண்டுகொள்ள உதவும்,சில சமயங்களில் டேய் பன்னாட நீ போக்கிரிடா என்றும் சில சமயங்களில் உத்தமபுத்திரனாகவும் பல சமயங்களில் வீழ்த்த முடியாத ஹீரோ ஆகவும் காட்டும்.
அன்றும் அப்படிதான் சிந்தனையினூடே, வீட்டில் இருந்து ஒரு அபயக்குரல்,சத்தியமாக கனவு இல்லை என்று மட்டும் தெரிகிறது,அந்த குரல் என் பேர் சொல்லி காப்பத்த சொல்ல,
வீட்டில் யாரும் இல்லை என்ற நிதர்சனமான உண்மை மட்டும் தெரிந்தது,ஆனால் குரல் வந்த திக்கில் நான் கவனித்த போது,கிட்டத்தட்ட சிலந்தி ஒன்று அந்த குழவியை நெருங்கி விட்டது தெரிந்தது,ச்சே இது என்ன இப்படியும் இருக்குமா என்று நான் திரும்ப நினைக்கும் போது,போகாதே என்னை இதனிடம் இருந்து காப்பாத்து நான் உண்மையிலே வரம் தரும் ஜீனி என்றது,
நான் எப்படி நம்புவது?(நான் அறிவாளி இல்ல),முட்டாளே நான் பேசுவதில் இருந்தே தெரியவில்லை நான் something special என்று?முட்டாளே என்றதில் என் தன்மானம் சற்றே உசுப்ப பட்டாலும்,அந்த கவர்ச்சிகரமான வரம் என்னை ஈர்த்தது,மீண்டும் நான் அதனிடம் நீ something special என்றால் நீயே உன்னை காப்பாத்திகொள்ளலாமே என்றேன்(மீண்டும் நான் அறிவாளி என்று prove பண்ண)அது மரண வாயில் இருந்து டேய் ***^# என்று திட்டி விட்டு எனக்கு நானே பண்ண முடியாது என்பது தான் விதி என்று மீண்டும் அபாய குரல் எழுப்பியது,இந்த முறை உண்மையிலே இரண்டும் மோத தயாராக இருக்க,நான் ஜீனியை காப்பாற்றுவது என்று முடிவெடுத்தேன்,ஒரு அட்டையை எடுத்து குறி பார்த்து அந்த சிலந்தியை ஒரே அடியில் சட்னி ஆக்கினேன்,அந்த குழவியை கைகளில் ஏந்தினேன் ,என் மானசீக ஜீனியே வரம் தா என்று சொல்லுமுன் ....அவர் ஒரு கொட்டு கொட்டி விட்டு பறந்து விட்டார்,சுரீர் என்று கையில் வலியுடன்,நடந்ததை நினைத்து கொண்டு இருந்தேன்,மூலையில் சுரீர் என்று ஏதோ உரைக்க encyclopaedia வில் சிலந்திகள் பற்றி பார்த்தேன்,அதில் சிலந்தியின் முக்கிய எதிரிகள் என்ற இடத்தில்....... red wasp (குழவி)
இது play boy பத்திரிக்கையில் இருந்து சுஜாதா எடுத்தது ,கதை வடிவம் என்னுடையது(க்கும்)...
»