Showing posts with label முடியுமா உங்களால் பதிலளியுங்கள் பார்க்கலாம் பார்ட்-8... Show all posts
Showing posts with label முடியுமா உங்களால் பதிலளியுங்கள் பார்க்கலாம் பார்ட்-8... Show all posts

Sunday, September 6, 2009

முடியுமா உங்களால் பதிலளியுங்கள் பார்க்கலாம் பார்ட்-8

இவை சற்றே எளிய ரகம் தான் ஆனாலும் எனக்கு பிடித்து இருந்தது.....


1.நீங்கள் ஒரு ஓட்ட பந்தயத்தில் இரண்டாவதாக ஓடி கொண்டு இருப்பவரை முந்தி கொண்டு சென்றால் எத்தனையாவது இடத்தில் இருப்பீர்கள்?

2.அதே போல் ஒரு ஓட்ட பந்தயத்தில் கடைசியாக ஓடி கொண்டு இருப்பவனை முந்தி சென்றால் எத்தனையாவது இடத்தில் இருப்பீர்கள்?

3.நான் கொடுக்கும் இந்த எளிய கணக்கை மனதில் போட்டு பாருங்களேன்,

1000+40+1000+30+1000+20+1000+10=?

4.ஊமை ஒருவர் ஒரு கடைக்கு சென்று தனக்கு டூத் brush வேண்டும் என்பதை ஒருவாறு சைகையில் ,விரல்களால் பல்லை தேய்த்து காட்டி வாங்கி செல்கிறார்,

இதே ஒரு குருடர் தனக்கு சன் கிளாஸ் வாங்க வருகிறார்,எவ்வாறு அவர் வாங்கி செல்வார்?

5.ஒரு கெட்ட பையன் இருக்கிறான்,அவனுக்கு நான்கு சிகரட் துண்டுகள் இருந்தால் போதும்,அதில் இருக்கும் பஞ்சுகளை எடுத்து முழு சிகரட் தயாரித்து குடிப்பான்,

அவன் ஒருவாறு அங்கே இங்கே பொறுக்கி 28 சிகரட் துண்டுகள் சேர்த்தான் என்றால்,அதை வைத்து எத்தனை சிகரெட்கள் தயாரித்து குடிப்பான்?

(statuary warning:சிகரட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்)


நன்றி நண்பர்களே.....விடைகள் நாளை மறுமொழியில்....
comment moderation enable பண்ணி உள்ளேன்.....


Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin