Showing posts with label logical questions. Show all posts
Showing posts with label logical questions. Show all posts

Tuesday, June 16, 2009

முடியுமா உங்களால் விடை அளியுங்கள் பார்க்கலாம்...பார்ட்-6


ஹல்லோ நண்பர்களே,வெகு நாட்களுக்கு பின்பு மீண்டும் புதிர்.......

சில கேள்விகள் சவால் விட கூடியதாக தெரிந்தது,நீங்கள் முயற்சியுங்களேன்.....

உங்கள் விடைகளை காண ஆவல்......
சரியான விடைகள் நாளை comment இல் தெரிவிக்கப்படும்...அதுவரை உங்கள் விடைகளை அனுப்பவும்.....

விடைகள் லீக் ஆகாது இருக்கும் பொருட்டு comment moderation enable பண்ணி உள்ளேன்......



1.Solve this

2+3=10
, 7+2=63, 6+5=66, 8+4=96, 9+7=?

-----------------------------

2.ஒரு திருடனுக்கு அரசர் தண்டனை கொடுக்க விரும்பினார்,ஆனாலும் அவனின் சாமர்த்தியத்தை சோதிக்க எண்ணி அவனிடம் மூன்று அறைகளை காட்டி சொன்னார்.....

முதல் அறையில் முழுவதும் நெருப்பு பற்றி கொண்டு உள்ளது என்றும்,

இரண்டாம் அறையில் போர் வீரர்கள் கையில் பயங்கர ஆயுதத்துடன் இருப்பதாகவும்,அவர்கள் இரக்கம் அற்றவர்கள் என்றும் கூறினான்...

மூன்றாம் அறையில் மூன்று ஆண்டுகளாக சாப்பிடாத ஆறு சிங்கங்கள் உள்ளன என்றான்......

அதில் ஏதாவது ஒரு அறையில் இரண்டு நாட்கள் தாக்கு பிடித்தால் அவனுக்கு விடுதலை என்றான்....
சரி நண்பர்களே,அவனுக்கு எந்த அறை பாதுகாப்பானது என்று சொல்லுங்களேன்.....
---------------------------
3. சராசரி மனிதனின் ஆயுளில் அவனுக்கு எத்தனை பிறந்த நாட்கள் இருக்கும்(இந்திய மக்களின் சராசரி ஆயுள் 63 ஆண்டுகள்)
------------------------------

4.Can you name three consecutive days without using the words Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, or Sunday? (or day names in any other language)

-------------------------
5.ஏன் பாதாள சாக்கடை மூடிகள் வட்ட வடிவத்தில் உள்ளன,சதுரமாக(square)இருந்தால் என்ன?

----------------------------------
நன்றி நண்பர்களே...உங்கள் விடைகளை காண ஆவல்......

Be Cool...
Stay Cool...

Monday, December 22, 2008

முடியுமா உங்களால் (பதிலளியுங்கள் பார்க்கலாம்)பார்ட்-4

இந்த முறை கொஞ்சம் கடினமான கேள்விகள் .....வழக்கம் போல் கலக்குங்க....


1. உங்கள் இனிப்பகத்தில் ,பத்து அட்டைபெட்டிகள் உள்ளது ,ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் பத்து மைசூர் பாகு (mysore
pak)உள்ளது ,ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது ,இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவல்
வருகிறது அதன் படி உங்கள் ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்
அளவுக்கு திருடிவிட்டான் என்று தெரியவருகிறது...துரதிஷ்ட வசமாக அந்த நேரத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் balance
இல் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடையை காண முடிகின்ற அளவுக்கு மட்டும் சார்ஜ் உள்ளது என்னும் நிலையில்,அந்த
அட்டை பெட்டி எது என்று நீங்கள் கண்டறிந்து அதை செய்தவனை நீக்க வேண்டும்...(ஒவ்வொரு அட்டை பெட்டியையும்
ஒருவன் pack செய்தான் என கொள்க)
(Hint:நீங்கள் ஒவ்வொரு அட்டை பெட்டியையும் திறந்து பார்க்கவும் ,தேவையென்றால் அதில் உள்ள இனிப்பை வெளியே எடுக்கவும் அனுமதி உண்டு(அதுக்காக நீங்களே சாப்பிட கூடாது))


2. இது situation handling வகையறா.....

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்து கொள்ளுங்கள் உங்களுடைய நோயாளி ஒருவர்க்கு இரண்டு வகையான மாத்திரைகளில்
இருந்து ஒவ்வொன்றிலும் ஒன்றை மட்டும் தர வேண்டும் என்னும் நிலையில் உங்கள் நர்ஸ் இரண்டு வகையான
மாத்திரைகளில் இருந்தும் இரண்டு இரண்டு எடுத்து வந்து விடுகிறார்,அதை பார்க்கும் உங்களுக்கு பயங்கர ஷாக் .ஏனெனில்
நான்கும் பார்க்க ஒரே மாதிரி தோற்றம் கொண்டவையாக உள்ளது,நோயாளிக்கு கண்டிப்பாக ஒரு வகையில் இருந்து ஒன்று
மட்டுமே கொடுக்க வேண்டும் ,ஒரே வகையில் இருந்து இரண்டு கொடுத்தாலோ அல்லது மாத்திரையே கொடுக்காமல்
போனாலோ நோயாளியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில் எப்படி இந்த நிலையை சமாளிப்பீர்கள்?
(மேலும் மாத்திரைகள் கைவசம் இல்லை )

3. நீங்கள் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில் ,ஒரு இருட்டு அறையில் உங்களுடைய சாக்ஸ்,ஐந்து
வெள்ளை சாக்ஸ் உம் ஏழு கருப்பு சாக்ஸ் உம் உள்ளது ,உங்களுக்கு ஏதோ ஒன்றிலாவது ஒரு ஜோடி சரியான ஜோடி யாக
அமைய வேண்டும் எனில் எத்தனை (ஜோடி அல்ல எண்ணிக்கை)சாக்ஸ் எடுப்பிர்கள்(உங்களால் பார்க்க முடியாது)

4. உங்களுடைய சட்டையை விட உங்களின் பாண்ட்(pant) இன் விலை நூறு ரூபாய் அதிகம்.....இரண்டும் சேர்த்தி 110 ரூபாய்
எனில் தனி தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்களேன்....

5. இது கொஞ்சம் டப்பா,சரி சரியான பதில் சொல்லுகிறீர்களா பார்ப்போம்,
இதற்கான பதிலை நீங்கள் முதலில் நினைத்ததை தான் சொல்ல வேண்டும்....

நான் சொல்லும் எண்களை எல்லாம் அப்படியே கூட்டி கொண்டு வாருங்கள்....

முதலில் பத்துடன் ஆயிரம் கூட்டவும்,

பின்பு அதனுடன் ஒரு அறுபதை கூட்டவும்...

இப்பொழுது வரும் விடையுடன் ஒரு இரண்டாயிரம் கூட்டவும்

அதனுடன் ஒரு இருபது கூட்டவும்....

அதனுடன் ஒரு ஆயிரம் கூட்டுங்கள் ...

இப்பொழுது ஒரு பத்தை மட்டும் கூட்டி விடை சொல்லுங்களேன்....
--------------------------------
(comment moderation enable பண்ணி உள்ளேன்)

----------------------------------------

Monday, December 15, 2008

முடியுமா உங்களால்(பதிலளியுங்கள் )பார்ட்-3


இந்த முறை சற்று வித்தியாசமாக உங்களுக்கு கேள்விகள்....

சென்ற முறை அனைவரும் பின்னி பெடலேடுத்து இருந்தீர்கள்....எனவே இந்த முறை சற்று கஷ்டமாக.....


கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியை தொடர்ந்து முதல் கேள்வி....


1.ஒரு ஆட்டத்தில் இரண்டு batsmen, இருவரும் 96 இல் உள்ளார்கள் இன்னும் ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் உள்ளன என்னும் நிலையிலும்,இன்னும் ஆறு ரன்கள் எடுத்தால் ஆட்டம் வெற்றி என்றும் உள்ளது,இந்நிலையில் இருவரும் சதம் கடக்க வாய்ப்பு உள்ளதா?உள்ளது என்றால் எப்படி.....



2. இது வித்தியாசமான ,clue மூலம் வார்த்தையை கண்டு பிடிக்கும் வகை...

இது ஆங்கில வார்த்தை...

a.I'm kept secret by everyone.

b.my 2 3 4 is an animal..

c.my 3 5 6 7 8 is a fighting weapon

d.my 1 2 8 is used for writing...(not in system)

e.my 3 4 are the same.....


find me.....


3. அது ஒரு இரவு,ஒரு பாலம் உள்ளது அந்த பாலத்தை கடக்க நால்வர் உள்ளனர்,அவர்களில் முதலாமவன் ஒரு நிமிடத்திலும்,இரண்டமாவன் இரண்டு நிமிடத்திலும் மூன்றாமவன் ஐந்து நிமிடத்திலும் கடக்க கூடியவர்கள்,நான்காமவர் ஒன்போது நிமிடத்திலும் கடக்க கூடியவர்,இந்த நிலையில் அந்த பாலத்தை லாந்தர் இன்றி கடக்க முடியாது,மற்றும் ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையும்,கையில் ஒரே ஒரு லாந்தர் மட்டுமே உள்ளது என்னும் நிலையில்,இருவர் அந்தபுரம்(அந்த பக்கம்...ஹி ஹி )சென்றால் மற்றவர் பயன் பாட்டுக்கு லாந்தரை கொடுக்க வேண்டும் என்பதால் ஒருவர் மீண்டும் இந்த புறம் வர வேண்டும்......

என்னும் நிலையில் ஐந்து பேரும் எவ்வளவு குறைந்த நேரத்தில் அந்த பாலத்தை கடப்பார்கள்?
(குறிப்பு:முதலாமவரும் ,நான்காமவரும் செல்கிறார்கள் என்றால் இருவரும் போய் சேர ஆகும் நேரம் 9 நிமிடங்கள்)


4. இது கொஞ்சம் பழசு என்றாலும்,திறமையை சோதிக்க வல்லது, ஓரு ஊரில் இரண்டே இரண்டு முடி திருத்துபவர்கள் தான் உள்ளார்கள் ,அதில் ஒருவனின் தலை முடி கந்தர கோலமாக,சரியான படி வெட்டப்படாமல்,அசிங்கமாக உள்ளது ஆனால் மற்றவனின் தலைமுடியோ அழகாக ,ஒழுங்காக உள்ளது என்னும் நிலையில் நீங்கள் யாரிடம் முடி வெட்டி கொள்ள செல்வீர்கள்....


5. இது situation handling வகையறாவை சார்ந்தது....

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களை வேலையை விட்டு தூக்க நினைத்து உங்களுக்கு ஓரு வாய்ப்பாக,சீட்டு குலுக்க முடிவு செய்கிறது ...இரண்டு சீட்டுகள் உங்கள் முன் போட படும்,ஒன்றில் தொடரலாம் என்றும் மற்றதில் வெளியே போடா என்றும் எழுதியிருக்கும் ,நீங்கள் எதை எடுக்குரீர்களோ அதன் படி முடிவு எடுக்கப்படும் என்கிறது நிர்வாகம்,

இந்நிலையில் CBI (கொஞ்சம் ஓவர் தான்)மூலம் நீங்கள் அறிந்து கொள்வது என்னவென்றால்,இரண்டிலும் ஒன்றே தான் ,அதாவது வெளியே போ என்று தான் எழுதியுள்ளது என்று அறிகிரிர்கள்...உங்கள் முன் சீட்டுகள் போட பட்டு விட்ட நிலையில்...நீங்கள் எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள்?


நன்றி கூல்....உங்கள் கார்த்தி...

Thursday, December 11, 2008

புதியது:முடியுமா உங்களால்.(விடை அளியுங்கள் பார்க்கலாம்)பார்ட்-2

சென்ற இதழில்,சாரி சென்ற போஸ்டில் கொடுத்த கேள்விகள் வகை, வெற்றி பெற்றதை தொடர்ந்து...அதன் தொடர்ச்சி....
* நீங்கள் ஒரு காரை ஓட்டி கொண்டு செல்கிறீர்கள்,அப்பொழுது இரண்டு ஜோடிகள்(couples) லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார்கள்,
அதில் முதல் ஜோடியில் கணவனின் வயது (22+17-1*5+20/5)
மனைவியின் வயது (21+16-1*4+16/4)
இரண்டாம் ஜோடியில் கணவனின் வயது, (20+15-1*3+12/3),
மனைவியின் வயது ,(19+14-1*2+8/2) எனில்
அந்த காரின் ஓட்டுனரின் வயது என்னவாக இருக்கும்.?..... (தெளிவாக எப்படி என்று விளக்கவும்)

* இது situation handling வகையறாவை சார்ந்தது,
நீங்கள் ஒரு interview இல் உள்ளீர்கள்...நீங்கள் சொல்லிய பதில் நிச்சயம் சரி என்று உங்களுக்கு தோன்றுகிறது,ஆனால் interviewer தவறு என்கிறார் ...
இந்த சமயத்தில் நீங்கள் சரியான விடையை கேட்பீர்களா அல்லது வேறு என்ன கேட்பீர்கள்?
* உங்களிடத்தில் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் கொடுக்க படுகிறது,அப்பொழுது உங்களுக்கு CBI இருந்து போன் ,நீங்கள் வைத்து இருக்கும் ஒன்பது நாணயங்களில் ஒன்று போலி என்றும் அது மற்றவற்றை விட சற்று எடை குறைவானது என்கிறார்கள்,அது எது என்று நீங்கள் கண்டு பிடித்து தூக்கி போடா விட்டால் பிரச்சனை...அனைத்தையும் தூக்கி போட முடியாது உங்களுக்கு எட்டு ரூபாய் அவசியம்,பக்கத்தில் ஒரு தராசு உள்ளது ஆனால் அது இரண்டு முறை மட்டுமே எடை காட்டும் பின்பு அறுந்து விடும் என்னும் நிலையில் எப்படி போலியை கண்டு பிடிப்பிர்கள்?
*இது சும்மா லாஜிக்,
if,
1=5
2=6
3=7
4=8 எனில்,
5=?
* மாவீரன் நெபோலியன் சிறையில் இருக்கும் போது எழுதப்பட்டதாக சொல்லப்படும் இந்த வாக்கியத்தின் சிறப்பு?
"Able was I Ere I saw Elba"

நான் ஒவ்வொரு வாரமும் இது போன்று கேள்விகள் நிறைந்த post இரண்டு போடலாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்,உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க படுகிறது....
comment கண்டு பலர் விடை அளிக்காமல் சென்று விடுவதால் comment moderation enable பண்ணி உள்ளேன்.....
நன்றி கார்த்தி.....
விடைகளை எதிர்பார்த்து.....

Tuesday, December 9, 2008

முடியுமா உங்களால்.(விடை அளியுங்கள்)


சில கேள்விகள் பார்க்க ஒன்றும் இல்லாதவை போல் தோன்றினாலும்,அதன் ஆழம் நம்மை வியக்க வைக்கும்,பிறகு தான் நம் தவறு நமக்கு புரியும்,அவற்றில் சில,

1.மேரி இன் அப்பாவிற்கு நான்கு குழந்தைகள்,
முதல் குழந்தையின் பெயர் AIBQ


இராண்டாவது குழந்தையின் பெயர் BJCR


மூன்றாவது குழந்தையின் பெயர் CKDS


எனில் நான்காம் குழந்தையின் பெயர்?

2.இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,

நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...
3.typical classical question இது,
ஒரு வித்தியாசமான அல்லி செடி ஒரு நாளில் இரண்டு மடங்காக பெருகும்,அந்த செடிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குளத்தை மூட நூறு நாட்கள் எடுத்து கொண்டன எனில்,அந்த குளத்தில் பாதியை மூட எத்தனை நாட்கள் எடுத்து கொண்டிருக்கும்?
4.நீங்கள் ஒரு சிறிய குளத்தில் ஒரு படகில் போகும் போது கடுமையான மழை வந்து விடுகிறது,உங்கள் படகில் இருந்து ஒரு கயிறு 50 cm கீழே நீட்டி கொண்டிருக்கிறது,அதில் குளத்தில் 25 cm உள்ளது எனில் முழு 50 cm குளத்தில் மூழ்க எவ்வளவு நேரம் ஆகும்?மழை குளத்தை நிமிடத்திற்கு இரண்டு cm என்ற நிலையில் நிரப்பி கொண்டு வருகிறது....
5.ஒரு physics question,ஒரு பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன படகு போன்ற பொருளை மிதக்க விடுகிறிர்கள்,அந்த படகில் ஒரு கல்,இரண்டு இரும்பு துண்டு உள்ளது,அந்த படகு கஷ்ட பட்டு மிதக்கிறது,இப்பொழுது நீங்கள் அந்த கல்லையும் இரும்பையும் படகில் இருந்து எடுத்து அது மிதக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுகிரிர்கள் இப்பொழுது அந்த பாத்திரத்தை நிரம்பி இருந்த தண்ணீரின் level குறையுமா கூடுமா?



பதில்களை comment மூலம் சொல்லலாம்.

விடை காண முடியாத கேள்விகளுக்கு பின்னால் விடை தரப்படும்.
Blog Widget by LinkWithin