Monday, December 15, 2008

முடியுமா உங்களால்(பதிலளியுங்கள் )பார்ட்-3


இந்த முறை சற்று வித்தியாசமாக உங்களுக்கு கேள்விகள்....

சென்ற முறை அனைவரும் பின்னி பெடலேடுத்து இருந்தீர்கள்....எனவே இந்த முறை சற்று கஷ்டமாக.....


கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியை தொடர்ந்து முதல் கேள்வி....


1.ஒரு ஆட்டத்தில் இரண்டு batsmen, இருவரும் 96 இல் உள்ளார்கள் இன்னும் ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் உள்ளன என்னும் நிலையிலும்,இன்னும் ஆறு ரன்கள் எடுத்தால் ஆட்டம் வெற்றி என்றும் உள்ளது,இந்நிலையில் இருவரும் சதம் கடக்க வாய்ப்பு உள்ளதா?உள்ளது என்றால் எப்படி.....



2. இது வித்தியாசமான ,clue மூலம் வார்த்தையை கண்டு பிடிக்கும் வகை...

இது ஆங்கில வார்த்தை...

a.I'm kept secret by everyone.

b.my 2 3 4 is an animal..

c.my 3 5 6 7 8 is a fighting weapon

d.my 1 2 8 is used for writing...(not in system)

e.my 3 4 are the same.....


find me.....


3. அது ஒரு இரவு,ஒரு பாலம் உள்ளது அந்த பாலத்தை கடக்க நால்வர் உள்ளனர்,அவர்களில் முதலாமவன் ஒரு நிமிடத்திலும்,இரண்டமாவன் இரண்டு நிமிடத்திலும் மூன்றாமவன் ஐந்து நிமிடத்திலும் கடக்க கூடியவர்கள்,நான்காமவர் ஒன்போது நிமிடத்திலும் கடக்க கூடியவர்,இந்த நிலையில் அந்த பாலத்தை லாந்தர் இன்றி கடக்க முடியாது,மற்றும் ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையும்,கையில் ஒரே ஒரு லாந்தர் மட்டுமே உள்ளது என்னும் நிலையில்,இருவர் அந்தபுரம்(அந்த பக்கம்...ஹி ஹி )சென்றால் மற்றவர் பயன் பாட்டுக்கு லாந்தரை கொடுக்க வேண்டும் என்பதால் ஒருவர் மீண்டும் இந்த புறம் வர வேண்டும்......

என்னும் நிலையில் ஐந்து பேரும் எவ்வளவு குறைந்த நேரத்தில் அந்த பாலத்தை கடப்பார்கள்?
(குறிப்பு:முதலாமவரும் ,நான்காமவரும் செல்கிறார்கள் என்றால் இருவரும் போய் சேர ஆகும் நேரம் 9 நிமிடங்கள்)


4. இது கொஞ்சம் பழசு என்றாலும்,திறமையை சோதிக்க வல்லது, ஓரு ஊரில் இரண்டே இரண்டு முடி திருத்துபவர்கள் தான் உள்ளார்கள் ,அதில் ஒருவனின் தலை முடி கந்தர கோலமாக,சரியான படி வெட்டப்படாமல்,அசிங்கமாக உள்ளது ஆனால் மற்றவனின் தலைமுடியோ அழகாக ,ஒழுங்காக உள்ளது என்னும் நிலையில் நீங்கள் யாரிடம் முடி வெட்டி கொள்ள செல்வீர்கள்....


5. இது situation handling வகையறாவை சார்ந்தது....

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களை வேலையை விட்டு தூக்க நினைத்து உங்களுக்கு ஓரு வாய்ப்பாக,சீட்டு குலுக்க முடிவு செய்கிறது ...இரண்டு சீட்டுகள் உங்கள் முன் போட படும்,ஒன்றில் தொடரலாம் என்றும் மற்றதில் வெளியே போடா என்றும் எழுதியிருக்கும் ,நீங்கள் எதை எடுக்குரீர்களோ அதன் படி முடிவு எடுக்கப்படும் என்கிறது நிர்வாகம்,

இந்நிலையில் CBI (கொஞ்சம் ஓவர் தான்)மூலம் நீங்கள் அறிந்து கொள்வது என்னவென்றால்,இரண்டிலும் ஒன்றே தான் ,அதாவது வெளியே போ என்று தான் எழுதியுள்ளது என்று அறிகிரிர்கள்...உங்கள் முன் சீட்டுகள் போட பட்டு விட்ட நிலையில்...நீங்கள் எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள்?


நன்றி கூல்....உங்கள் கார்த்தி...

21 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒன்னு ஒன்ன ட்ரை பண்றேன்..

பதில் இரண்டாம் கேள்விக்கு ..
PASSWORD

a.I'm kept secret by everyone. (Password)

b.my 2 3 4 is an animal.. (ASS)

c.my 3 5 6 7 8 is a fighting weapon (SWORD)

d.my 1 2 8 is used for writing...(not in system) (PAD)
e.my 3 4 are the same.....(SS)

http://urupudaathathu.blogspot.com/ said...

நான்காம் கேள்விக்கு பதில் :

..a//ஒருவனின் தலை முடி கந்தர கோலமாக,சரியான படி வெட்டப்படாமல்,அசிங்கமாக உள்ளது ..??

இவரிடம் தான் முடி வெட்ட செல்ல வேண்டும்.. ஏனென்றால் இன்னொரு நாவிதரின் தலை முடி அழகாக வெட்ட பட்டிருப்பதால் அதை இந்த நாவிதர் தான் வெட்டி இருப்பார்.. அதனால் அங்கு தான் செல்லவேண்டும்

http://urupudaathathu.blogspot.com/ said...

5th கேள்விக்கான பதில்

இது ரொம்ப சிம்பிள்..
ஒரு சீட்டை முதலில் எடுத்து அதை பிரிக்காமல் கிழித்து விட வேண்டும் அல்லது தூக்கி எரிந்து விட வேண்டும்..
அப்படி செய்யும் பட்சதில் நாம் எடுக்காத இன்னொரு சீட்டில் வெளியே போ என்று இருக்கும்.. அப்படி என்றால் நீங்கள் எடுத்தது தொடரலாம் என்று அர்த்தப்படும்.. எனவே நீங்கள் தொடரலாம்..

( சரியாக விளக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்??) ,

http://urupudaathathu.blogspot.com/ said...

Ans for ! Q;;;

முதல் பேட்ஸ்மேன் அந்த கடைசி முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கிறார் , அப்பொழுது அந்த பந்து overthrow ஆகி பவுண்டரி ஆகின்றது.. அதனால் அவர் இப்பொழுது 101 ரன்கள்..(சதம் அடித்து விட்டார்) அதனால் அந்த முதல் ஆட்டக்காரர் இந்த பக்கம் வந்து விடுகிறார் . (Bowling End) அடுத்தவர் இப்பொழுது striker பக்கம் சென்று விடுக்கிறார் .. இன்னும் ஆட்டதிருக்கு 1 ரன் மட்டுமே தேவை என்னும் போது அடுத்த ஆட்டக்காரர் அந்த கடைசி பந்தில் ப்பௌண்டரி அல்லது சிக்ஸ் அடித்து ஆட்டத்தையும் ஜெயித்து, அவரும் சதத்தை எட்டுக்கிறார்..

Anonymous said...

1. அணிமா கூறிய பதில் தான்
2. Password
3. 3 நிமிடம் 19 வினாடிகள்

(1&3 - போக 1 நிமிடம், 3 திரும்பிவர 5 வினாடிகள், 2&3 - 2 நிமிடங்கள், 3 திரும்பி வர 5 வினாடிகள், 3&4 போக மட்டும் 9 வினாடிகள் - மொத்தம் 3 நிமிடம் 19 வினாடிகள்)
4. ஒருவனின் தலை முடி கந்தர கோலமாக,சரியான படி வெட்டப்படாமல்,அசிங்கமாக உள்ளவரிடம்.
5. ஒரு சீட்டை எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டு விட வேண்டும். அப்போது மீதி உள்ள சீட்டுக்கு எதிர்பதம் வருவது தான் சரியானதாக இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதி எதெல்லாம் சரியான பதிலோ அதெல்லாம் ரீபீட்டு ..........

Anonymous said...

// SUREஷ் said...
இதி எதெல்லாம் சரியான பதிலோ அதெல்லாம் ரீபீட்டு .......... //

இதெல்லாம் போங்கு ஆட்டம்...

coolzkarthi said...

ஆஹா இந்த முறையும் கலக்கிட்டிங்க....ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமின்னும் சரியான பதில் வரவில்லை....
அது அந்த பாலத்தை கடக்கும் கேள்வி....

coolzkarthi said...

அணிமா இவ்வளவு சீக்கிரம் சொல்லிட்டிங்களே?

coolzkarthi said...

ராகவன் சார் கலக்குறீங்க....

coolzkarthi said...

//இராகவன், நைஜிரியா said...

// SUREஷ் said...
இதி எதெல்லாம் சரியான பதிலோ அதெல்லாம் ரீபீட்டு .......... //

இதெல்லாம் போங்கு ஆட்டம்...//
repeat...

coolzkarthi said...

ஆஹா இந்த முறையும் கலக்கிட்டிங்க....ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமின்னும் சரியான பதில் வரவில்லை....
அது அந்த பாலத்தை கடக்கும் கேள்வி....

Anonymous said...

ராஜு

மூன்றாம் கேள்விக்கான பதில் இருபது நிமிடம்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

3. கேள்விக்கு பதில்.

அனைவரும் குறைவாக பாலம் கடக்க

18 நிமிடங்கள்

Shakthiprabha (Prabha Sridhar) said...

Explanation: ( சரியா இருந்தா ஹிஹி)

1st man takes the lamp along with second man.

(now calculate only 2 minutes (as the firstman's 1 minute falls within this 2 minute)

(first man gets back alone add one minute)

he gets back to pick third man (now add 5 mins)

(first man gets back alone add one minute)

now he picks up the fourth man who takes 9 mins

so totally

2 + 1 + 5 + 1 + 9

= 18

coolzkarthi said...

ஆஹா சாரி Shakthiprabha அது தவறு நண்பரே.....

coolzkarthi said...

answer for 3rd question is 16...tell how...

Shakthiprabha (Prabha Sridhar) said...

yup. sorry :oops:
dumb of me.

Ans

16 mins

___

1. first guy and second

(total 2 mins)

(first guy returns back: 1 min)

2. third and fourth person

( total 9 mins)

(gives the lamp to the second guy)

(second returns : 2 mins)

3. first and second travel

(total 2 mins)

so

2 + 1 + 9 + 2 + 2

16

:(

coolzkarthi said...

அசத்திட்டிங்க சக்தி பிரபா....நீங்கள் தான் சரியான பதில் தந்துள்ளீர்கள்.....

Balaji Thirumoorthy said...

கிரிக்கெட்
- முதல் மட்டை வீச்சாளர் முதல் பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுக்கிறார்
- இவர் நான்கு ஓட்டங்கள் எடுத்த நிலையில் சதம் கடக்கிறார்
- இரண்டாவது பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து மூன்றவது பந்தை இரண்டாவது மட்டை வீச்சாளரை ஆடச் செய்கிறார்
- இரண்டாவது மட்டை வீச்சாளர் நான்கு ஓட்டங்கள் எடுத்து சதம் கடந்து ஆட்டத்தை வெற்றி அடையச் செய்கிறார் :)

- மற்ற அனைத்து கேள்விகளுக்கும் நண்பர்கள் சரியா விடை தந்துள்ளனர் :)

coolzkarthi said...

Balaji Thirumurthy sorry only two balls are remaining....

Blog Widget by LinkWithin