"ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்"
படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை வேகம் வேகம் வேகம் ....
காட்சி ஆரம்பித்த உடன், நம்மால் யோசிக்க முடியாத அளவுக்கு படம் வேகமாக நகருகிறது , அனைத்தும் முடிந்து வெளியே வந்து யோசிக்கும் போது தான் காதில் அரை கிலோ பூ தொங்குவதை உணர முடிகிறது....இங்கு தான் டைரக்டர் வெற்றி பெறுகிறார்....
கதை இது தான், 'குண்டு மிரட்டல் விடப்பட்ட vatican நகரில் ஒரு நாள்'
ஒரு ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் anti- matter அடங்கிய குடுவையை ஒரு நபர் திருடி விடுகிறான்,அதை வைத்து "எளிமினாட்டி" என்னும்
anti-vatican கும்பல் vatican சிட்டி க்கு மிரட்டல்விடுவது போல் ஆரம்பிக்கிறது படம்....
பழைய போப் இறந்து விட,
புதிய போப் ஐ தேர்ந்தெடுக்க வேண்டிய கார்டினல்கள் நால்வரையும் அந்த கும்பல் கடத்தி ஒரு மணி நேரத்தில் ஒருவரை கொல்ல போவதாக மிரட்டுகிறது....
இந்த விசயத்துக்கு உதவ professor லாங்டன் வாடிகன் காவலர்களால் அழைக்க படுகிறார்...
கரும்பு தின்ன கூலியா என்று தன் நெடுநாள் ஆசையான vatican நகரின் ரகசியங்களை அறிய ஒப்புகொள்கிறார் லாங்டன்....
முதலில் கலிலீயோவின் புத்தகத்தில் இருந்து முதல் குறிப்பை கண்டு அந்த எளிமினாட்டி கும்பலின் ரகசிய இடத்தின் முதல் மைய்யத்தை அடைகிறார்..
மிரட்டலில் உள்ளது போல் முதல் மணியில் ஒரு கார்டினல் அங்கே கொல்லப்பட்டு இருக்கிறார்...
இந்த நிலையில் கார்டினல்களில்லாமல் புதிய போப் தேர்ந்தெடுக்கும் வைபவம் தொடங்கிகிறது....
அந்த anti-matter அடங்கிய குடுவை வெடித்தால் மொத்த நகரமும் காலி என்ற சூழ்நிலையில் படம் பரப்பரப்பாக நகர்கிறது, யார் அந்த எளிமினாட்டி, அவர்களுக்கு உதவும் நபர் யார் என்று அறிவதற்குள் அடுத்து அடுத்து மூன்று கார்டினல்கள் கொல்லப்பட, கடைசி கார்டினலை மட்டும் லாங்டன் காப்பாற்றுகிறார்...
இதில் பல போலீஸ் மரணம் அடைய...படத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொள்கிறது, இதில் இறந்த போப் கூட கொலை செய்ய பட்டது தெரிய , அதிர்ந்து அடங்குகிறது பாதிரியார் கூட்டம்...
வெளியே மக்கள் புது போப் யார் என்று அறிய ஆவலாக இருக்க ,இங்கே இத்தனை களேபரங்கள் நடந்தேறி விடுகிறது....
கடைசியில் யார் போப் ஆனார்கள் , யார் இந்த எளிமினாட்டி கும்பலின் சூத்ரதாரி என்பதும் மற்றும் அந்த anti-matter வெடித்து சிதறுவதும் பிரம்மாண்டம்....
கடைசியில் யார் போப் ஆகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்....
------------------------------
படத்தில் நான் கண்ட சில மைனஸ்....
முதலில் வரும் போப் க்கு நெருங்கிய பாதிரியார் சம்பந்தமில்லாமல் நான் ராணுவத்தில் ஹெலிகாப்ட்டர் விமானி என்று சொல்வதிலயே தெரிந்து விடுகிறது,குண்டு வெடிப்பு வானில்தான் மற்றும் அதை செய்ய போகிறவர் இந்த பாதிரியார் என்பதும்.....
தேவையே இல்லாத அந்த பெண் கேரக்டர் ஒரு திணிப்பு என்பது போல் ஆகிவிடுகிறது....(பட பார்முலா )அவரால் தான் அந்த anti-matter குடுவையை செயலிழக்க செய்ய முடியும் என்பது காரணம்,ஆனால் அதற்க்கு வேலையே இல்லை....
ஏதோ குறிப்புகள் லாங்டன் க்காகவே புரியும்படி அமைக்க பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை, ஒரு வேலை அவரை இதை நோக்கி வில்லன் செலுத்துகிறானோ என்று தோன்றுகிறது....இதிலும் வழக்கமான பார்முலாவான ஹீரோ மற்றும் ஹீரோயினியை வில்லன் வாய்ப்பு இருந்தும் கோட்டை விடுவது ஏன் என்பது புரியவில்லை....
-------------------------
படம் ஏதோ மார்ட்டின் mystery மற்றும் சில துப்பறியும் நாவல்களின் கலவை போல் தான் ஒரே பார்முலாவில் உள்ளது என்ன கொஞ்சம் பிரம்மாண்டம் அவ்வளவே....
--------------------------
கடைசியில் கடவுள் தான் உங்களை அனுப்பினார் என்று அந்த பாதிரியார் சொல்வதும் ஹீரோ அதற்கு மறுப்பதும் வழக்கமான கடவுள் இருக்கிறாரா என்று கேட்கும் போது வரும் பதில் போல் , தசாவதாரம் போல் அவர் வேறு செயல்கள் மூலம் தன் இருப்பை காட்டி கொள்கிறார் என்று முடித்து கொள்கிறார்கள்....
--------------------------
படம் ஆரம்பிக்கும் பொது கேட்ட ஒரு comment....
டைட்டில் போது கதியில் வருவது கர்ப்பனையே என்றது அருகிலிருந்தவர்,
"மச்சி லொள்ளு சபா மாதிரியாடா?"
------------------
நடிப்பு....
Tom Hanks
Anne Hathaway
மற்றும் பலர்...
தொடார்வது
"ஏஞ்சல்ஸ் and டீமன்ஸ் VS டாவின்சி code "
-------------------------
நன்றி நபர்களே இது என் கருத்து மட்டுமே உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்....
நன்றி கார்த்தி....
Be Cool...
Stay Cool...
நன்றி நபர்களே இது என் கருத்து மட்டுமே உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்....
நன்றி கார்த்தி....
Be Cool...
Stay Cool...