Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

Tuesday, May 26, 2009

சில சோக்குகள்....ஹி ஹி ஹி ...


ஒரு சேவலின் புலம்பல்....

"காலையில் கொக்கரக்கோ......என்றேன்,
மதியம் குக்கருக்குள் வெந்தேன்......"

----------------------------------------------------

கப்பல் கேப்டன் :கரை தெரியுது கரை தெரியுது......

சர்தார்:அந்த கரை , இந்த கரை எதுவா இருந்தாலும் "surf excel" போடுங்க கரை மாயமா மறைஞ்சிடும்.....
---------------------------------------------------
lecturer : டேய் ஒழுங்கா இந்த பரிட்ச்சையில 90 % எடுக்கணும்.....
நம்ம ஆளு: சார் 100% எடுப்பேன் சார்....
lecturer: டேய் காமெடி க்கும் ஒரு அளவு இருக்கு.....
நம்ம ஆளு: கொய்யால நானா மொதல்ல ஆரம்பிச்சேன்....
---------------------------------------------------

நீதிபதி: இதோட நீ மூணாவது முறை கோர்ட் க்கு வந்து இருக்க வெட்க்கமா இல்ல ?

கைதி: நீங்க கூடத்தான் தினமும் வரேங்க நான் ஏதாவது கேட்டேனா?
----------------------------------------------------
அன்றைய democracy:
"For the People,
By the people and
Of the people"
இன்றைய democracy:
"Far the people,
Buy the people and
Off the people"
----------------------------------------------------
நன்றி நண்பர்களே ......
கூல்...

Be Cool...
Stay Cool...

Sunday, January 4, 2009

கொஞ்சம் சோக்கு கதைகள்....+கொஞ்சம் சோக்கு



எனக்கு மிகவும் பிடித்தவை இவை.......

இந்த கதைகள் அனைத்தும் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டவை....


போதகரும் காரோட்டியும்....

போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு தாங்கள் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இதைக்கேட்ட போதகர் கடும் கோபம் அடைகிறார்."எனக்கு முன்னர் உள்ளே சென்றவன் ஒரு சாதாரண காரோட்டி.அவனுக்கு தங்க அங்கி, ஆண்டுக்கணக்காக மக்களுக்கு நல்லதை போதனை செய்த எனக்கு வெறும் பருத்தி அங்கியா?" என்று சத்தம் போடுகிறார். அதைக்கேட்ட காவலாளி புன்னகையுடன் சொல்கிறான், "ஐயா! தாங்கள் வருடக்கணக்காக கடவுளைப்பற்றி போதனை செய்தாலும் , மக்கள் உங்கள் போதனையைக் கேட்காமல் தூங்கி வழிந்தார்கள்.ஆனால், அந்த காரோட்டியின் காரில் பயணம் செய்த ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்தார்கள்.என்வே, அவன் தான் உங்களைவிட மக்களை கடவுள் பால் திருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறான்.அதனால் தான் அவனுக்கு தங்க அங்கி தரப்பட்டது"
---------------------------------------
கிணற்றில் போட்ட காசு...

ஒருமுறை எங்கள் உறவினர்களுடன் பக்தி சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது ஒரு கோவிலில் இருந்த கிணற்றில் சிலர் காசு போட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் என்ன என்று கேட்டதற்கு மனதில் ஏதாவது விருப்பத்தை நினைத்து கொண்டு அதில் காசு போடவேண்டும் என்றும் , அப்படி போட்ட காசு நீரில் மூழ்காமல் கிணற்று திட்டில் நின்றுவிட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் சொன்னார்கள்.ஆசை யாரைவிட்டது.எனவே நாங்களும் ஒவ்வொருவராக முயற்சி செய்தோம்.ஒன்றும் பலனில்லை.கடைசியாக எனது மதினி காசு போட்டார். அந்த காசு சரியாக திட்டில் நின்றுவிட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அப்பாடா ஒருவரது ஆசையாவது நிறைவேறப்போகிறது என்று.உடனே அனைவரும் "நீ மனதில் என்ன நினைத்து காசு போட்டாய்" என்று அவரை கேட்டார்கள். அவர் ரொம்ப நிதானமாக சொன்னார்."கடவுளே எப்படியாவது இந்த காசை திட்டில் நிற்கசெய்" என்று வேண்டிக்கொண்டேன்.
-------------------
பள்ளியில் டீச்சர் ஒருநாள் மாணவர்களை ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை சொல்லுமாறு கேட்டார். முதலில் ராமை சொல்ல சொன்னார்.அவன் சொன்னான்,"Taurus the Bull".
இரண்டாவதாக குமாரை கேட்டார்.அவன் சொன்னான்,"Cancer the crab".
அடுத்து ராஜாவை கேட்டார்.அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்,
"Mickey the mouse".
-------------------------
மைனாவும் நைனாவும்.....

சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்றான்.அவன் தாய் குழம்பிப் போய்," ஏன்டா! நாந்தான் மதியமே சொன்னனே! அப்ப எதுவும் சொல்லாம இப்ப அழுகிற?" என்றாள். ராமு சொன்னான்,"அம்மா, மதியம் நீ சொல்லும்போது நைனாவுக்கு கால் உடஞ்சு போச்சுனு என் காதுல விழுந்தது.அதான் அமைதியா இருந்துட்டேன்" என்றான்.
------------------------------------

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.
அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.
பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.
ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.
----------------------------------------------
நன்றி உங்களுக்கும் பிடித்ததா?

நகைச்சுவை கதை....+கொஞ்சம் சோக்கு

ஒரு சின்ன நகைச்சுவை கதை.....

ஒரு டிரைவர் காரை வேகமாக ஓட்டி கொண்டு போகும்போது வழியில் திடீரென்று ஒரு கிளி குறுக்கே பாய,சடாரென பிரேக் போட்டு நிறுத்த....கிளி அதிர்ச்சியில் அங்கயே மயங்கி விழுந்து விடுகிறது....
அதன் மேல்பரிதாபம் கொண்ட டிரைவர் அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்து ,அவன் வீட்டில் வைக்க,
முழித்து பார்த்த கிளி,தான் கம்பிகளின் பின்னால் இருப்பதை பார்த்து இப்படி புலம்பியதாம்,

"ஐயய்யோ நான் டிரைவர் ஐ ஏத்தி கொன்னுட்டேனே....."
-----------
சில குட்டி ஜோக்ஸ்,
இன்றே சிரித்து விடு ஏனென்றால் நீயும் காதலிக்கலாம்....
------
ஒரு புலி தன் காதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து வைத்த பார்ட்டி இல் ஒரு பூனையும் ஆடுவதை கண்டு அதை கேட்க்க....
பூனை:கொய்யால காதலிக்கரதுக்கு முன்னால நானும் புலிதான்.....
------
சர்தார்:ஹலோ யாரு பேசறது?
மறுமுனை:நான் செல்லம்மா பேசறேன்...
சர்தார்:ஏங்க சாதாரணமாவே பேசுங்க...

நன்றி...
கார்த்தி....

Friday, December 19, 2008

பிடித்த சில வரிகள்...+சில ஜோக்ஸ் வழக்கம் போல்,


இந்த முறை,எனக்கு பிடித்த சில வரிகளை இங்கே தந்துள்ளேன்...
வழக்கம் போல் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட்டிடவும்...

"Defeat the defeat before the defeat defeats you"
-------------------
"There is no psychiatrist,performing better than your(a) puppy licking your face"(how true)...
-------------------
"This world may be a hell/heaven to some other world..."
------------------
"I'm not afraid of one who knows 10,000 kicks,but I'm really afraid of that one who practices a kick 10,000 times"
->Bruce Lee
-------------------
"The real goal of education is to train the mind to think"
------------------
ஒரு முறை ஐன்ஸ்டீன் இடம் ஒருவர் கேட்டார்,
"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும்"
ஐன்ஸ்டீன்:"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியாது,ஆனால் நான்காம் உலக போர் நிச்சயம் குச்சியாலும்,கற்களாலும் தான் நடக்கும்"
என்றார்...
------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"

சொல்லி இருப்பாள் என்று...
------------------
"Speak softly and carry a big stick; you will go far."
------------------
“To err is human; to blame it on somebody else is even more human.”
------------------
“You are educated. Your certification is in your degree. You may think of it as the ticket to the good life. Let me ask you to think of an alternative. Think of it as your ticket to change the world."
------------------
"If you don't like the rules in your company,try hard,work sincerely and go places in the positions and acquire the top,then change the rule..."
------------------

சில ஜோக்ஸ் வழக்கம் போல்,
------
சர்தார் தன் கேர்ள் friend இடம் :இன்று மாலை என் வீட்டுக்கு வா வீட்டில் யாரும் இருக்க மாட்டர்கள்...

சர்தாரின் வீட்டுக்கு செல்லும் அந்த பெண் அதிர்கிறார்....உண்மையில் வீட்டில் யாரும் இல்லை....
---------------

டீச்சர்:ஜானி சொல்லுங்கள்,நீங்கள் சாப்பிடும் முன் prayer பண்ணுவீர்களா?
ஜானி:"இல்லை,என்னோட அம்மா நன்றாகவே சமைப்பார்கள்"...
------------------
ஜானி,உன்கிட்ட ,நாய் பத்தி நான் எழுதிட்டு வர சொன்ன essay உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?....
ஜானி:"ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் டீச்சர் அதான்"
------------------
டீச்சர்:"அங்கே ஒரு அழகிய பெண் போகிறாள்",எங்கே ஜானி இதை ஆச்சர்ய வாக்கியமாக மாத்து...
ஜானி:"டேய் மச்சான் சூப்பர் பிகரு டா !"
------------------
நன்றி,-->கார்த்தி....cool

Monday, December 15, 2008

நகைச்சுவை:இன்னும்கொஞ்சம் சோக்கு பார்ட்-2

இந்த முறையும் சில பல சோக்குகள்.....சில மட்டுமே சொந்த சரக்கு.....
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் உண்டு....
அது ink பெண்ணாகவோ அல்லது refill பெண்ணாகவோ ,பால் பாயிண்ட் பெண்ணாகவோ,ஜெல் பெண்ணாகவோ இருக்கலாம்...

------------
பொண்ணு 1:ஹனீ மூன் போயிட்டு வந்ததுல இருந்து ஏன் உன் கணவர் ரொம்ப கோவமா இருக்கார்?

பொண்ணு 2:அது ஒன்னும் இல்ல அவர கூட்டிட்டு போகல அப்படின்ற வருத்தம்....
-----------
பாகிஸ்தானில் மாணவர்கள் படிக்கும் சில படிப்புகள்....
BE -Bomb Engineering

M.B.B.S-Mastering Bomb Blast Skills

IIT-Islamabad Institute of Terrorism

CAT-Career in Alqueda and Taliban

MTech-Masters in Terror Technology

LLB-Learning Licence of Bomb Blasting
BSc-Bio-Weapon Science
----------------
நீங்கள் காதலில் விழுந்தவரா?
அதற்கான சில அறிகுறிகள்....

1.நீங்கள் மெலடி பாட்டுக்களையே விரும்புவீர்...

2.உங்கள் அவரின் பெயரை எங்கு பார்த்தாலும் உள்ளுக்குள் சரேல் என்று ஒரு மின்னல் பாயும் ,அந்த இடத்திலயே நின்று சிறிது சிரித்து விட்டு எக்கச்சக்கமாக அசடு வழிவீர்கள்....

3.நண்பர்கள் ஓட்டும் போது,சிறிதும் சொரணை இல்லாமல் புத்தர் போல் சிரிப்பு ஒன்றை உதிர்ப்பீர்கள்....

4.ஏதோ ஷெல்லி ,பைரன்,வைர முத்து போல் டகால்ட்டி காட்டி ,கவிதா அவதாரம் எடுப்பீர்கள்...(கவிதை எழுதும் சக பிளாக்கர்கள் கவனிக்க)

6.ரோட்டில் நடக்கும் போது குப்பையை கூட ரசித்தவாறு,கொஞ்சம் குப்பை நிறையா சுத்தம் என்று கன்னா பின்னாவென்று உளறி கொட்டுவீர்கள்...

7.நீங்கள் இதில் ஐந்தாவது பாயிண்ட் மிஸ் ஆனதை கண்டிருக்க மாட்டீர்கள்...

என்ன சரியா?
சரி யார் சார் அந்த பிகரு?
-----------
மூன்று சர்தார்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது,traaffic போலீஸ் கை காட்ட ,மூவரும் கோரசாக....
சாரி சார் எடம் இல்ல.....
-----------
டீச்சர்:ஏண்டா லேட்?

நம்ம ஸ்டுடென்ட்:ஒரு ஆள் வர வழியில நூறு ரூபாயை காணாம தேடிட்டு இருந்தார்...

டீச்சர்:குட் எடுத்து கொடுத்தியா?

நம்ம ஸ்டுடென்ட்:இல்ல டீச்சர் அவரு போற வரைக்கும் அது மேல நின்னுட்டு இருந்தேன்....
-------
கணவன்:
குழந்தை அழறது கூட தெரியாம அப்படி என்ன சீரியல் பாக்கற?

மனைவி:சும்மா இருங்கள் குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுது...
--------
நன்றி உங்களுக்கு பிடித்ததா?பிடித்ததை சொல்லவும்....
நன்றி கார்த்தி....

Monday, November 3, 2008

படா சோக்கா கீதுப்பா...(ஜோக்ஸ்)



சில நாட்க்களுக்கு முன் நான் படித்த ஜோக்ஸ் இவை,

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
-------------
காதலி:நம் விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு...
காதலன்:ஐய்யோ என்ன சொன்னாங்க?
காதலி:இவனையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாங்க....
-------------
நம் சர்தார் இல்லாமல் ஜோக்ஸா ?

இது நான் படித்து ரொம்ப நேரம் சிரித்து மகிழ்ந்தது...
ஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு)மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,
"இங்க பாருங்க,இதில் aids கிருமி திரவம் இருக்கு,ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு தப்பிச்சி போய்டுங்க "என்றான்...
முதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,
பின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்...
ஆனால் எதற்கும் கவலை படாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி விட்டான்....

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க தப்பிப்பிங்க,aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார்,
"எனக்கு தான் aids வரதே,ஏனா நான் தான் காண்டம்(condom)போட்டு இருக்கேனே.."

என்று சொன்னார்...
-------------------------
சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்...
கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,
"யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது"என்ற படி சென்றுவிட்டார்...
------------------------
நன்றி கூல்....
உங்களுக்கு மிகவும் பிடித்தது?
Blog Widget by LinkWithin