Sunday, January 4, 2009

கொஞ்சம் சோக்கு கதைகள்....+கொஞ்சம் சோக்கு



எனக்கு மிகவும் பிடித்தவை இவை.......

இந்த கதைகள் அனைத்தும் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டவை....


போதகரும் காரோட்டியும்....

போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு தாங்கள் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இதைக்கேட்ட போதகர் கடும் கோபம் அடைகிறார்."எனக்கு முன்னர் உள்ளே சென்றவன் ஒரு சாதாரண காரோட்டி.அவனுக்கு தங்க அங்கி, ஆண்டுக்கணக்காக மக்களுக்கு நல்லதை போதனை செய்த எனக்கு வெறும் பருத்தி அங்கியா?" என்று சத்தம் போடுகிறார். அதைக்கேட்ட காவலாளி புன்னகையுடன் சொல்கிறான், "ஐயா! தாங்கள் வருடக்கணக்காக கடவுளைப்பற்றி போதனை செய்தாலும் , மக்கள் உங்கள் போதனையைக் கேட்காமல் தூங்கி வழிந்தார்கள்.ஆனால், அந்த காரோட்டியின் காரில் பயணம் செய்த ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்தார்கள்.என்வே, அவன் தான் உங்களைவிட மக்களை கடவுள் பால் திருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறான்.அதனால் தான் அவனுக்கு தங்க அங்கி தரப்பட்டது"
---------------------------------------
கிணற்றில் போட்ட காசு...

ஒருமுறை எங்கள் உறவினர்களுடன் பக்தி சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது ஒரு கோவிலில் இருந்த கிணற்றில் சிலர் காசு போட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் என்ன என்று கேட்டதற்கு மனதில் ஏதாவது விருப்பத்தை நினைத்து கொண்டு அதில் காசு போடவேண்டும் என்றும் , அப்படி போட்ட காசு நீரில் மூழ்காமல் கிணற்று திட்டில் நின்றுவிட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் சொன்னார்கள்.ஆசை யாரைவிட்டது.எனவே நாங்களும் ஒவ்வொருவராக முயற்சி செய்தோம்.ஒன்றும் பலனில்லை.கடைசியாக எனது மதினி காசு போட்டார். அந்த காசு சரியாக திட்டில் நின்றுவிட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அப்பாடா ஒருவரது ஆசையாவது நிறைவேறப்போகிறது என்று.உடனே அனைவரும் "நீ மனதில் என்ன நினைத்து காசு போட்டாய்" என்று அவரை கேட்டார்கள். அவர் ரொம்ப நிதானமாக சொன்னார்."கடவுளே எப்படியாவது இந்த காசை திட்டில் நிற்கசெய்" என்று வேண்டிக்கொண்டேன்.
-------------------
பள்ளியில் டீச்சர் ஒருநாள் மாணவர்களை ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை சொல்லுமாறு கேட்டார். முதலில் ராமை சொல்ல சொன்னார்.அவன் சொன்னான்,"Taurus the Bull".
இரண்டாவதாக குமாரை கேட்டார்.அவன் சொன்னான்,"Cancer the crab".
அடுத்து ராஜாவை கேட்டார்.அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்,
"Mickey the mouse".
-------------------------
மைனாவும் நைனாவும்.....

சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்றான்.அவன் தாய் குழம்பிப் போய்," ஏன்டா! நாந்தான் மதியமே சொன்னனே! அப்ப எதுவும் சொல்லாம இப்ப அழுகிற?" என்றாள். ராமு சொன்னான்,"அம்மா, மதியம் நீ சொல்லும்போது நைனாவுக்கு கால் உடஞ்சு போச்சுனு என் காதுல விழுந்தது.அதான் அமைதியா இருந்துட்டேன்" என்றான்.
------------------------------------

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.
அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.
பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.
ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.
----------------------------------------------
நன்றி உங்களுக்கும் பிடித்ததா?

4 comments:

நட்புடன் ஜமால் said...

ஹையோ ஹையோ

ஒரே ஜிரிப்புதான் ...

இல்ல இல்ல

நிறைய ஜிரிப்புதான் ...

coolzkarthi said...

நன்றி ஜமால்.....

இராகவன் நைஜிரியா said...

ஜோக்கெல்லாம் அருமை.

வாழ்க வளர்க.

மாமா இன்ஸ்பிரேஷன் உங்ககிட்ட நிறைய இருக்கு..

coolzkarthi said...

நன்றி ராகவன் சார்....cmkarthikeya1986

Blog Widget by LinkWithin