Showing posts with label சோக்கு. Show all posts
Showing posts with label சோக்கு. Show all posts

Sunday, September 6, 2009

சில சோக்குகள்.....


ஹி ஹி ஹி....
இவை நான் மிகவே ரசித்த ஜோக்குகள்...
நீங்களும் பாருங்களேன்......

ஒருவன் டீ ஷாப் விட்டு வெளியே வரும் போது மிகப்பெரிய சவ ஊர்வலம் ஒன்றை பார்க்கிறான்....
முன்னாள் இரண்டு சவபெட்டிகள் இருக்க,அதன் பின்னே ஒருவன் பெரிய நாய் ஒன்றை பிடித்தவாறு செல்ல,அவனை இருநூறு பேர் தொடர்ந்தனர்,
இது இந்த ஆசாமிக்கு சற்றே ஆச்சரியமாக பட,அந்த நாய் வைத்திருக்கும் ஆசாமியிடம் சென்ற இவன்,


"சார் நான் இவ்வளவு பெரிய ஊர்வலம் பாத்ததே இல்ல,யார் சார் இறந்தது? பெரிய தலைவரா"

நாய் வைத்திருப்பவர்:இல்ல சார்,முன்னாடி இருக்குற சவபெட்டியில என்னோட மனைவியும்,பின்னாடி அவளோட அம்மாவும் அதாவது என்னோட மாமியாரும் போறாங்க....

மற்றவர்:அப்படியா?சாரி சார்,எப்படி இறந்தாங்க?.

நாய் வைத்திருப்பவர்:சார் என்னோட மனைவி என்ன அடிக்க வரும் பொது,இதோ இந்த நாய் அவல கடிச்சு கொன்னுடுச்சு,தடுக்க போன என்னோட மாமியாரையும் கொன்னுடுச்சு....

மற்றவர்:
(சிறிது யோசனைக்கு பின்.....)
ஹ்ம்ம்ம்ம்ம்....
சார் எனக்கு அந்த நாய ஒரு ரெண்டு நாள் கொடுக்கிறீங்களா?

நாய் வைத்திருப்பவர்:


சரி, கியூ போய் நில்லுங்க.....

-------------------------------------
இத உலகின் மிக சிறந்த ஜோக் என்று ஒரு வலையில் படித்தேன் பாருங்களேன்
அப்படி தெரிகிறதா என்று.....

இரண்டு பேர் போரில் தீவிரமாக இருக்க,
அவர்கள் நின்று இருக்கும் பக்கத்தில் ஒரு பாம் விழ ,ஒருவன் சரிந்து விழுகிறான்,
மற்றொருவன்,உடனே control ரூமுக்கு கால் பண்ணி,
"சார்,இவன் விழுந்துட்டான்,உடனே backup அனுப்புங்க,"
control room:முதல்ல அவன் உண்மையிலயே செத்துட்டானா அப்படின்னு உறுதி பண்ணுங்க......

மறுமுனையில் டுமீல் என்று சத்தம் வர,

"சார் அவன் செத்துட்டான்".....



நன்றி நண்பர்களே......

Be Cool...
Stay Cool...

Saturday, July 11, 2009

ஹைய்யோ ஹைய்யோ(சில நகைச்சுவைகள்)


உங்க லவர் உங்களுக்கு அனுப்புற ரொமான்டிக் மெசேஜ் பாத்து எல்லாம் பூரிச்சு போகாதிங்க...அத அவங்களுக்கு யார் அனுபிச்சு இருப்பாங்க அப்படின்னு யோசிங்க....
(அப்பாடி ஏதோ என்னால முடிஞ்ச கலகம்)
-----------------------------


மைகேல் ஜாக்சன் எவ்வளவு பெரிய நடன கலைஞர் ஆனாலும் அவரோட சாவுக்கு அவராலயே ஆட முடியலயே....

இது தான் வாழ்க்கை.......(எப்படி தத்துவம்)

------------------------------
திருடன்:பாப்பா உங்க வீட்ல நகை எல்லாம் எங்க வெச்சு இருக்கீங்க?

பாப்பா:ஐஸ் கிரீம் வாங்கி தா சொல்றேன்....

திருடன்:இந்தா,இப்ப சொல்லு.....

பாப்பா:எல்லாம் அடகு கடையில இருக்கு....

(ஹைய்யோ ஹைய்யோ,நாங்க எல்லாம் LKG கடைசி பெஞ்ச் ரௌடிங்க.....)


----------------------------------------------
Health டிப்:

பானி பூரி ,
pizza
பர்கர்
puffs


ஐஸ் கிரீம்
பிஸ்கட்
ஜாம்
பூரி மசால் இவை அனைத்தையும்,
{}
{}
{}
{}
என்னை விட்டு சாபிட்டால் வயிறு வலிக்கும் ஆமா.....(ஹி ஹி ஹி)
------------------------


Be Cool...
Stay Cool...

Friday, July 3, 2009

SMS இல் வந்த சில சோக்குகள்...


உங்கள் வாழ்க்கை இருளில் இருப்பதாக உணர்கிறீர்களா?

ஒரே புழுக்கமாக இருக்கிறதா?

கடவுளிடம் வெளிச்சம் வேண்டுங்கள்,ஒளிமயமான வாழ்க்கை கேளுங்கள்....

அப்படியும் இருளாக உள்ளதா.....?????

யோவ் போய் ஒழுங்கா கரண்ட் பில் கட்டிட்டு வாயா.....!!!!!

-------------------------------------

குடிப்பதை குறைக்க சரியான வழி....

கல்யானத்திற்கு முன் துன்பம் வரும் போது மட்டும் குடி.....

கல்யாணத்திற்கு பிறகு, இன்பம் வரும் போது மட்டும் குடி....

-------------------------------------

Three fastest way of communication....

Telephone
Television'
Tell a woman.....

need more faster tell her not to tell anyone....

ஹி ஹி ஹி....

---------------------------------------

ஒரே நேரத்தில் உங்களுக்கு எப்பொழுது சந்தோசமாகவும் துக்கமாகவும் இருக்கும் தெரியுமா....????

எப்பொழுது உங்கள் கேர்ள் friend உங்களிடம்,

"You are the best kisser among your friends" என்று சொல்லும் போது......

---------------------------------------
எறும்பின் இரக்க குணம்........

நான்கு எறும்புகள் நடந்து செல்லும் போது எதிரே வரும் யானையை பார்த்து விட்டு நண்பர்களிடம்....

மக்கா நாம அத போட்டுடலாம்டா அத கொன்னுடலாம்......

இரண்டாவது ,வேணாம் அதோட கால மட்டும் எடுத்துடலாம் ......

மூன்றாவது எறும்பு...கூடவே அந்த தும்பிக்கையையும் கடிச்சி துப்பிடனும்......

நான்காம் எறும்பு....விடுங்கடா நாம நாலு பேர் அவன் ஒருத்தன் தானே இருக்கான் பாவம் விட்டுடலாம்....(என்ன இரக்க குணம்)


------------------

நன்றி நண்பர்களே.......

Be cool...
Stay Cool...

Thursday, March 26, 2009

சில சோக்கு........

விவாத மன்றத்தில்,சர்தாரிடம் ஒருவர்,
விவாகரத்திற்கு முக்கிய காரணமாக நீங்கள் நினைப்பது?
சர்தார்:"கல்யாணம்"
---------------------------------
அமெரிக்காவில் ஒரு புதிய,குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் கருவியை ஒவ்வொரு நாடாக சோதித்து பார்க்க கொண்டு சென்றனர்,இங்கிலாந்தில் பதினைந்தே நிமிடத்தில் நாற்பது குற்றவாளிகளை கண்டு பிடித்தது,ஸ்காட்லாந்தில்,ஸ்காட்லாந்து போலீசாருக்கே சவால் விடும் வண்ணம்,பதினைந்தே நிமிடத்தில் எழுபத்தி ஐந்து குற்றவாளிகளை கண்டு பிடித்தது,ஆஸ்திரேலியாவில் பதினைந்தே நிமிடத்தில் நூறு குற்றவாளிகளை கண்டு பிடித்தது...எல்லாம் முடிந்து இந்தியாவில்,பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்தி வந்தது,"அமெரிக்க மெஷின் ஐ காணவில்லை""India Rocks"......
---------------------------------------------------
நாயுடன் வாக்கிங் செல்பவரின் அருகில் வந்த ஒருவர்,என்ன எருமையோட வாக்கிங்கா?மற்றவர்:இது நாய்ங்க...முதலாமவர்:நான் நாய்கிட்டே கேட்டேன்....
----------------------------------------------------
தரகரிடம் பெண்ணின் தந்தை,நான் வேலையில இருக்க பையனா பார்க்க சொன்னேனே பார்த்தீங்கள?தரகர்:பார்த்தேங்க பையன் E.B ல என்ஜிநியர் ஆ இருக்கான்....பெண்ணின் அப்பா:"யோவ் நான் வேலைல இருக்கிற பையனா கேட்டேன்"(ஹி ஹி ஹி இது தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்)
-------------------------------------------------------சர்தார் வெளி நாட்டு பயணம் முடித்து விட்டு தன் மனைவியிடம்,என்னை பார்த்தா "foreigner"மாதிரி தெரியுதா?மனைவி:இல்லையே...ஏன்?சர்தார்:லண்டன்ல ஒரு பொம்பள என்ன பார்த்து...நீங்க "foreigner"ஆ அப்படின்னு கேட்டா...அதான்..
----------------------------------------------------------சர்தாரிடம் வெளி நாட்டு நபர்,"Any great man born in this state"சர்தார்:இல்லையே எல்லாம் குழந்தைங்க தான்....
----------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் சீன நண்பனை காண சென்ற சர்தாரிடம்,அந்த நபர் ஏதோ சர்தாரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்...அதன் அர்த்தம் தேடி சீனா செல்லும் சர்தாரிடம்...மொழி பெயர்ப்பாளர் சொன்னார்..."யோவ் நீ என்னோட ஆக்ஸிஜன் சிலிண்டர் tube மேல நின்னுட்டு இருக்க"....
----------------------------------------------------------
சர்தார் தவளையை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்....
முதலில் தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு jump என்றார்,அந்த தவளையும் எப்படியோ தத்தி எகிறியது...
சர்தார் எழுதினார்,
"தவளையின் ஒரு காலை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"
பிறகு இரண்டாம் காலையும் வெட்டி விட்டு jump என்றார்,இம்முறையும் தவளை எகிறியது...சர்தார் எழுதினார்,
"தவளையின் இரண்டு கால்களை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"
பிறகு மூன்றாவது காலை வெட்டி விட்டு jump என்றார்...தவளை எப்படியோ ஒரு காலில் கடைசியாக ஒரு துள்ளு துள்ளியது...
சர்தார் எழுதினார்,
"தவளையின் மூன்று கால்களை வெட்டினாலும் ,அதனால் தாவ முடியும்"பிறகு தவளையின் நான்கு கால்களையும் வெட்டி விட்டு,jump என்றார்...தவளை ஆடாமல்,அசையாமல் அங்கேயே இருக்க....ஒரு துள்ளு துள்ளிய சர்தார் எழுதினார்,
"தவளையின் நான்கு கால்களையும் வெட்டினால்,'அதற்கு காது கேக்காது' "
-----------------------------------------------------------------------
ஒரு சர்தார் மற்றொரு சர்தாரிடம்,"ஏங்க அது சூரியனா நிலாவா?"மற்றொரு சர்தார்:"சாரிங்க நான் ஊருக்கு புதுசு"
----------------------------------------------------------
உங்களுக்கு மிகவும் பிடித்தது?

do post your comment...->கார்த்தி

Be Cool...
Stay Cool...

Sunday, February 1, 2009

SMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்கள்)

ஆமையும் முயலும் நுழைவு தேர்வில் முறையே 80% மற்றும் 81 % பெற்று இருந்தனர்,தேர்வு பெற 84% தேவை,இன்னும் மூன்று இருந்தால் முயல் நுழைந்து விடும்,ஆயினும் ஆமையே தேர்வானது....காரணம்?

ஹி ஹி ஹி நாம் தான் இரண்டாம் வகுப்பில் பார்த்தோமே,ஆமை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றதை ...அதான் "ஸ்போர்ட்ஸ் கோட்டா".....
------------------------------------------------

பொண்ணுங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,
"யார் அந்த பரதேசி நாய்"

பசங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,
"பரதேசி எங்கே போய் குடிச்சிட்டு வந்த, இப்படி வாந்தி எடுக்கற "

மக்களே என்ன உலகம் இது யார் வாந்தி எடுத்தாலும் பசங்களுக்கு தான் கெட்ட பேர்....
"wat a funny world"
------------------------------------------------
இது நல்ல கருத்து,
"If Everyone is Happy with U ,Surely u have made a lot of COMPROMISES in ur life"
-----------------------------------------------

படுக்க போகும் முன் ,
"Stop ur work....
Relax ur mind....
Pray to God....
Think Today's activities,Finally u came to know that",

இன்னைக்கும் வெட்டியா தான் போச்சு....
-----------------------------------------------

குங்குமம் இந்த வாரம்,
"அர்ரியர் வைக்கும் மாணவ செல்வங்களுக்கு பல்சர் பைக் கலைஞர் அறிவிப்பு"

"அர்ரியர் தான்டா life அது இல்லாத உனக்கு எதுக்கு wife "T.R ஆவேசம்....

"இந்த செம்மில் (sem)அர்ரியர் வைக்காதவர்களுக்கு வில்லு பட dvd விஜய் கொலை மிரட்டல்...."

இப்போது விற்பனையில் குங்குமம்.....

-------------------------------------------

2009 மொபைல் ராசி பலன்.....

சிக்னல் கிடைக்காமல் லோ லோன்னு அலையும் aircel ராசியாளர்களே இந்த ஆண்டு பத்து ரூபாய் top up இருப்பதால் வெட்டி பந்தா காண்பீர்கள்.....

airtel ராசியாளர்களே double validity க்கு ஆசைப்பட்டு ஒரு காலுக்கு இரண்டு ரூபாய் தண்டம் அழுவீர்கள்....

கால் பண்ணாமலே தண்டமாக காசு கட்டும் BSNL காரர்களே ,missed கால் கொடுத்து பிறர் வயிற்று எரிச்சலுக்கு ஆளாவிர்கள்.....

நாயை காட்டி பொழப்பு நடத்தும் vodafone ராசியாளர்களே ,காசை கால் செய்தே ஒழிப்பீர்கள்.....

நானும் மொபைல் வைத்து இருக்கேன் என்ற பெயருக்கு போன் வைத்து இருக்கும் டாட்டா இண்டிகாம் ஆலர்களே,உங்கள் நெட்வொர்க் உள் ப்ரீ என்ற போதிலும் இந்த முறையும் ஈ ஓட்டுவீர்கள்.....

எப்படியோ எல்லாம் நல்ல இருந்த சரி தான்....
-----------------------------------------------
Beautiful Words:"But I Like You"

Painful Words:"I like You but..."
words are the same but where they placed matters....
-----------------------------------------------

One of the small poems....
"ice melts when heated"
"eyes melts when hurted"
-------------------------
A Life time thought ,
"Always try your best to get whatever you love ,otherwise u will be forced to love whatever you get"
நன்றி.....உங்கள் coolzkarthi .......

உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது .....

Friday, January 16, 2009

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,பைக் என்றார் அமைதியாக...

-------------------------------------------------------------------------------------

அடுத்தது...ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தூங்க சென்று விட்டார்...அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",என்றார்...ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,அடுத்து சர்தார்:அது போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....

--------------------------------------------------------------

மறுபடியும் முட்டாள் சர்தார்....சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,

முதலாமவர்: நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?

இரண்டாமவர்: என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....

----------------------------------------------------------------------

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...

---------------------------------------

ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொல்வாய்?மற்றொருவன்,simple கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....

-----------------------------------------

நன்றி கூல்......

Tuesday, January 6, 2009

இன்னும் கொஞ்சம் சோக்கு..பார்ட்-3

இன்றைய சிரிப்பு படம்:

இதோ மீண்டும் சோக்குகளுடன்.....


சர்தார் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது,அருகிலிருப்பவர்,

"இது என்ன ஸ்டேஷன்"


சர்தார்:"ரயில்வே ஸ்டேஷன் அப்படின்னு நினைக்கிறேன் "
------------------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"

சொல்லி இருப்பாள் என்று...
--------------------------------
Flash News: தமிழகத்தில் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் என்று மாறியதில் இருந்து ஓட்டல்களில் அதிரடி விலை மாற்றம்.....
சாம்பார் அல்லது சட்னி =ரூபாய் 15
{சைடு டிஷ் :இட்லி முற்றிலும் இலவசம்}
சாம்பார்+ரசம்+மோர்=ரூபாய் 35
{side டிஷ் சாதம் ஆம் இலவசம்}
offer ஒன்லி இன் தமிழ்நாடு....
------------------------------

நம் சர்தார் இல்லாமலா ?
இதோ உங்கள் சர்தார்.....
மனைவி:என்னங்க உங்கள பார்க்க டாக்டர் வந்து இருக்கார் ...
சர்தார்:எனக்கு உடம்பு சரியில்லை யாரையும் பார்க்க முடியாது அப்படின்னு சொல்லி அனுப்பு......
-----------------------------
detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....
-----------------------------
கணவன் மனைவி இருவரும் ஒரு கிணற்றருகே சென்றார்கள்,அது வித்தியாசமான கிணறு என்றும் அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று எழுதியிருந்ததை கண்ட கணவன்,ஒரு ரூபாயை போட்டு விட்டு மனதுக்குள் வேண்டினான்,
இதை கண்ட மனைவி,என்ன வேண்டுநிங்க என்று கேட்டவாறு,கிணற்றை பார்த்தாள்,அப்பொழுது கால் இடறி கிணற்றில் விழுந்து விட,
கணவன் சொன்னான்,
"அட உண்மையிலேயே நினைத்தது நடக்குதே"
---------------------------
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
----------------------

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
-------------------------------
இவை எனக்கு மிகவும் பிடித்தவை....ஏற்க்கனவே கொஞ்சம் வேறு post இல் வந்து இருக்கலாம்....
---
உங்களுக்கு பிடித்தது?

Sunday, January 4, 2009

ஒரு சோக்கு கதை......+கொஞ்சம் சோக்கு

இதுவும் சுட்டது.....என் மாமாவின் blog இல் இருந்து ,

கதை எப்படி?

இது ஒரு சோக்கு.அதாவது நகைச்சுவை. மூன்று நண்பர்கள் ஒரு ஆயிரம் மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்கள்.அவர்களது வீடு 910வது தளத்தில் இருந்தது.லிப்ட் வசதி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. ஒரு நாள் மூவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர்.லிப்ட் பொத்தானை அழுத்திப் பார்த்தால் அது இயங்கவில்லை.அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.வேறு வழியேயில்லை, நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.அது என்னவென்றால் இத்தனை மாடிகளையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதாகும்.முதலில் ஒருவன் ஆரம்பித்தான்.அது மிகவும் சுவாரசியமான கதையாய் இருந்தது.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அது முதலாமவன் சொன்னதைவிட சுவாரசியமாக இருந்தது.கதையை முடிக்கும் போது 850 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை.இருவரும் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான்." நீங்கள் இருவரும் நல்ல கதை சொன்னீர்கள்.முதலாமவன் திகில் கதையும்,இரண்டாமவன் சிரிப்பு கதையும் சொன்னீர்கள். நான் இப்பொழுது சோகக் கதை சொல்ல போகிறேன்" என்றான்.சரி சொல் என்றதும் அவன் சொன்னான்,"வீட்டு சாவி கீழே காரிலேயே இருக்கிறது.அதை எடுக்க மறந்துவிட்டோம்".
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
மீண்டும் 850 மாடிகளை கடக்க வேண்டுமே? அதனால் திரும்பவும் அதே யோசனையை கடைபிடித்தார்கள்.முதலாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.வழக்கம்போல் நல்ல கதை சொன்னான்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 10வது மாடியில் அவர்கள் நின்றிருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை. அவன் சொனனான், "ஆகா! இருவரும் என்ன அழகான கதை சொன்னீர்கள்.வழக்கம்போல் இந்தமுறையும் நான் ஒரு சோகக்கதை சொல்ல போகிறேன்" என்றான். மற்ற இருவரும் பயந்துபோய் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான், " நாம்தான் ஒரு மாற்று சாவியை எதிர்வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறோமே.இந்த சாவிக்காக இவ்வளவு தூரம் வரத் தேவையே இல்லையே ".இதைக் கேட்ட மற்ற இருவரும் நொந்து நூலானார்கள்.
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
பிறகென்ன வழக்கம்போல் அதே ஒப்பந்தம்.முதலாமவன் இந்தமுறை மிகப் பிரமாதமான கதையை சொன்னான்.அவன் முடிக்கையில் 400 மாடி முடிந்திருந்தது. அடுத்து இரண்டாமவன் ஆரம்பித்தான். அவனும் நல்ல ஒரு கதையை சொல்லி முடித்தான்.800 மாடி முடிந்திருந்தது.மூன்றாமவன் இந்தமுறை ஓவென்று அழத் தொடங்கினான். மற்ற இருவரும் பதறி "ஏனடா அழுகிறாய்? சொல்லிவிட்டு அழுதுதொலை" என்றார்கள். அவன் சொன்னான்" கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை " என்றான். அவர்கள், "ஏன், என்ன ஆயிற்று " என்று கேட்டார்கள். அதற்கு அவன்," தொடர்ந்து என்னைமட்டும் சோகக்கதையாக சொல்லவைக்கிறாரே" என்றான்.இதைக்கேட்ட மற்ற இருவரும் பயந்து போனார்கள்."மீண்டும் சோகக்கதையா?சீக்கிரம் சொல்" என்றார்கள். அவன் சொன்னான்," நண்பர்களே, நாம் இவ்வளவு நேரமும் ஏறி,இறங்கிக் கொண்டு இருப்பது நமது குடியிருப்பில் அல்ல, பக்கத்து குடியிருப்பில்"
--------
பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.
அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.
பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.
ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.
---------
நன்றி......

கொஞ்சம் சோக்கு கதைகள்....+கொஞ்சம் சோக்கு



எனக்கு மிகவும் பிடித்தவை இவை.......

இந்த கதைகள் அனைத்தும் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டவை....


போதகரும் காரோட்டியும்....

போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு தாங்கள் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இதைக்கேட்ட போதகர் கடும் கோபம் அடைகிறார்."எனக்கு முன்னர் உள்ளே சென்றவன் ஒரு சாதாரண காரோட்டி.அவனுக்கு தங்க அங்கி, ஆண்டுக்கணக்காக மக்களுக்கு நல்லதை போதனை செய்த எனக்கு வெறும் பருத்தி அங்கியா?" என்று சத்தம் போடுகிறார். அதைக்கேட்ட காவலாளி புன்னகையுடன் சொல்கிறான், "ஐயா! தாங்கள் வருடக்கணக்காக கடவுளைப்பற்றி போதனை செய்தாலும் , மக்கள் உங்கள் போதனையைக் கேட்காமல் தூங்கி வழிந்தார்கள்.ஆனால், அந்த காரோட்டியின் காரில் பயணம் செய்த ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்தார்கள்.என்வே, அவன் தான் உங்களைவிட மக்களை கடவுள் பால் திருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறான்.அதனால் தான் அவனுக்கு தங்க அங்கி தரப்பட்டது"
---------------------------------------
கிணற்றில் போட்ட காசு...

ஒருமுறை எங்கள் உறவினர்களுடன் பக்தி சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது ஒரு கோவிலில் இருந்த கிணற்றில் சிலர் காசு போட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் என்ன என்று கேட்டதற்கு மனதில் ஏதாவது விருப்பத்தை நினைத்து கொண்டு அதில் காசு போடவேண்டும் என்றும் , அப்படி போட்ட காசு நீரில் மூழ்காமல் கிணற்று திட்டில் நின்றுவிட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் சொன்னார்கள்.ஆசை யாரைவிட்டது.எனவே நாங்களும் ஒவ்வொருவராக முயற்சி செய்தோம்.ஒன்றும் பலனில்லை.கடைசியாக எனது மதினி காசு போட்டார். அந்த காசு சரியாக திட்டில் நின்றுவிட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அப்பாடா ஒருவரது ஆசையாவது நிறைவேறப்போகிறது என்று.உடனே அனைவரும் "நீ மனதில் என்ன நினைத்து காசு போட்டாய்" என்று அவரை கேட்டார்கள். அவர் ரொம்ப நிதானமாக சொன்னார்."கடவுளே எப்படியாவது இந்த காசை திட்டில் நிற்கசெய்" என்று வேண்டிக்கொண்டேன்.
-------------------
பள்ளியில் டீச்சர் ஒருநாள் மாணவர்களை ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை சொல்லுமாறு கேட்டார். முதலில் ராமை சொல்ல சொன்னார்.அவன் சொன்னான்,"Taurus the Bull".
இரண்டாவதாக குமாரை கேட்டார்.அவன் சொன்னான்,"Cancer the crab".
அடுத்து ராஜாவை கேட்டார்.அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்,
"Mickey the mouse".
-------------------------
மைனாவும் நைனாவும்.....

சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்றான்.அவன் தாய் குழம்பிப் போய்," ஏன்டா! நாந்தான் மதியமே சொன்னனே! அப்ப எதுவும் சொல்லாம இப்ப அழுகிற?" என்றாள். ராமு சொன்னான்,"அம்மா, மதியம் நீ சொல்லும்போது நைனாவுக்கு கால் உடஞ்சு போச்சுனு என் காதுல விழுந்தது.அதான் அமைதியா இருந்துட்டேன்" என்றான்.
------------------------------------

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.
அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.
பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.
ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.
----------------------------------------------
நன்றி உங்களுக்கும் பிடித்ததா?

Saturday, December 13, 2008

sms இல் வந்த சில சோக்கு...

இவை எனக்கு sms இல் வந்த சில குறிப்பிடும் படியான வித்தியாச சோக்குகள்......
நைட்ல தூக்கம் வரலியா,கவலை படாதிங்க,கஷ்ட படாதிங்க,
நான் சொல்ற படி கேளுங்க ,நேரா போங்க ஒரு கண்ணாடிய எடுங்க உங்க முகத்த பாருங்க தூக்கம் என்ன மயக்கமே வரும் .....
----------------
எனக்கு நீங்கள் அதிகப்படியான comment எழுதி ,tamilish மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டால் நீங்கள் ஜெயிக்கலாம்,
1. ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள காரின் போட்டோ

2. 29 இன்ச் கலர் டிவி யோட அட்ட பெட்டி.....

3. சிங்கப்பூர் செல்லும் விமானத்துக்கு டாட்டா காட்டும் அரிய வாய்ப்பு......

4. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பம்பர் பரிசாக உங்கள் அபிமான கார்த்தியுடன்(நாந்தேன்)breakfast /lunch /dinner அதுவும் உங்கள் செலவில் ....
முந்துங்கள் இச்சலுகை குறைந்த காலம் மட்டுமே....
-------------------
Flash News: தமிழகத்தில் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் என்று மாறியதில் இருந்து ஓட்டல்களில் அதிரடி விலை மாற்றம்.....
சாம்பார் அல்லது சட்னி =ரூபாய் 15
{சைடு டிஷ் :இட்லி முற்றிலும் இலவசம்}
சாம்பார்+ரசம்+மோர்=ரூபாய் 35
{side டிஷ் சாதம் ஆம் இலவசம்}
offer ஒன்லி இன் தமிழ்நாடு....
---------------------
நம் சர்தார் இல்லாமலா ?
இதோ உங்கள் சர்தார்.....
மனைவி:என்னங்க உங்கள பார்க்க டாக்டர் வந்து இருக்கார் ...
சர்தார்:எனக்கு உடம்பு சரியில்லை யாரையும் பார்க்க முடியாது அப்படின்னு சொல்லி அனுப்பு......
----------------------
சென்னையை கலக்கிய நிஷா புயலுக்காக நினைவு பாடல்.....
"நிஷா நிஷா ஓடி வா
working days ல ஓடி வா
மலை மேகம் கொண்டு வா
தங்கச்சி உஷாவையும் கூட்டி வா"
இதை பலருக்கும் அனுப்பி இன்னும் ஒரு வாரம் லீவ் பெறுங்கள்....
------------------------
என்ன உங்களுக்கு பிடித்ததா......have fun நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்......
கூல் கார்த்தி.....

Wednesday, December 10, 2008

இன்னும் கொஞ்சம் சோக்கு....


இது நல்ல காமெடி,சற்றே பழசு என்றாலும் நிச்சயம் சிரிக்க வைக்கும்....

Bond Meets an andhra guy,

BOND:hai I'm bond, James Bond....

Andhra Guy:Hey I'm Naidu,
venkata naidu,
siva venkata naidu,
lakshmi narayana sivavenkata naidu,
srinivasalu lakshmi narayana siva venkata naidu,
rajasekara srinivasulu lakshmi narayana siva venkata naidu,


Bond Committed suicide.....

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...

ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,

பைக் என்றார் அமைதியாக...


அடுத்தது...

ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தொங்க சென்று விட்டார்...
அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",
என்றார்...
ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,
அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,

முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?
ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,
அடுத்து சர்தார்:அது போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....

மறுபடியும் முட்டாள் சர்தார்....

சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,முதலாமவர் நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?
இரண்டாமவர் என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,

"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...

ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொள்வாய்?
மற்றொருவன்,சிம்பிள் கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....


detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....

மீண்டும் சந்திப்போம்.....

Wednesday, November 5, 2008

கொஞ்சம் சோக்கு ....

எனக்கு பிடித்த சில சர்தார்ஜி ஜோக்ஸ் இங்கே,

சர்தார் ஒரு முறை நடந்து போகும் போது கீழே கருப்பாக ஏதோ இருக்க,அதை தொட்டு நக்கி பார்த்து விட்டு சொன்னார்,

"சை சாணி நல்ல வேல மிதிக்கல"


இது எனக்கு மிகவும் பிடித்த ஜோக்,உங்களுக்கு?

சர்தார் interview வில்,
interviewer:மிஸ்டர் சர்தார் எலெக்ட்ரிக் மோட்டார் எவ்வாறு இயங்கும்?
சர்தார்: டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
interviewer:நிறுத்து ........................................
சர்தார்:டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப் தப் தப்.(நிறுத்திட்டார்)

இது எனக்கு பிடித்த மற்றொரு ஜோக்...

ஒரு சர்தார்,ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு இங்கிலீஷ்காரன் ஆகியோர் ஒரு கருவியின் முன் நிறுத்த படுகிறார்கள்,அது பொய் சொல்பவர்களை சுட்டுவிடும்,

முதலில்,
அமெரிக்கர்:I think,I can smoke 100 cigarettes a day....

டுமில்.......

அடுத்து
இங்கிலிஷ்காரன்,:I think,I can eat 20 chickens a day...

டுமில்......

அடுத்து நமது
சர்தார்:I think,

டுமில்.....

இது சரியான கேலி கூத்து...

ஒரு முறை சர்தாரின் ரேடியோ சரியாக பாடாததினால் அதை திறந்து பார்க்கிறார்,உள்ளே ஒரு எலி செத்து இருக்கிறது,உடனே சர்தார்,

"அடக் கடவுளே இத்தன்னை நாளா பாடிட்டு இருந்தவன்
பூட்டானே ...."

இது மற்றொரு classical ஜோக்...

ஒரு சர்தார் இடம் போலீஸ் விசாரணை,
"எப்படி இத்தனை சர்தார்கள் ரயிலில் அடிபட்டு இறந்தார்கள்?"
சர்தார்:அவங்கதான் ரயில் முதலாம் platform இல் வருகிறது என்றார்கள் அனைவரும் ரயில் வந்துவிடும் என்று தண்டவாளத்தில் இறங்கி விட்டார்கள்...

போலீஸ்:
"நீ மட்டும் எப்படி தப்பிச்ச?"

சர்தார்:"நான் தற்கொலை பண்ணிக்க வந்தேனுங்க..."


இது சரியான A ரகம்,
(பிகு:statuory warning:consumption of alcohol is injurious to health)
ஒரு அரசன் தன் மகளுக்கு சுயம்வரம் வைக்க விரும்பி ஒரு போட்டி
வைத்தான்,விதிமுறை இதுதான்,
போட்டியாளர் மூன்று அறைகளுக்கு செல்ல வேண்டும்,முதல் அறையில் இருக்கும் விஸ்கி,பிராண்டி போன்றவற்றை ராவாக அடிக்க வேண்டும்,இரண்டாம் அறையில் இருக்கும் புலியுடன்(சாதா புலி அல்ல அது சைபேரிய புலி)மோதி அதன் பல்லை பிடுங்க வேண்டும்,மூன்றாம் அறையில் இருக்கும் ஒரு மங்கோலியா பெண்ணை
அந்த மாதிரி விசையத்தில் திருப்தி படுத்த வேண்டும்(மங்கோலியா பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா என்று கேள்வி, அவ்வளவு அழகானவர்கள்).

முதலில் சென்றவர் ரம் விஸ்கி அடிப்பதற்குள் சுருண்டு விழுந்து விடுகிறார்,இரண்டாமவர் புலியுடன் வீரமாக போராடி சாவை அணைத்து விடுகிறார்,
அடுத்து நம் சர்தார்,விஸ்கி,ரம்,பிராண்டி என்று சகலத்தையும் அடித்து விட்டு புலி இருக்கும் அறைக்குள் நுழைகிறார் கதவு சாத்தபடுகிறது,ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வர வில்லை,அவ்வ போது புலியின் உறுமல் மட்டுமே கேட்கிறது,அடுத்த கால் மணி நேரத்தில் வெளியே வந்த சர்தார் கேட்டார்....

"எங்கே அந்த மங்கோலியா பெண் அவள் பல்லை பிடுங்க வேண்டும்......."

அடுத்து ஒரு ஜோக்...

இரவெல்லாம் ஒரே கொசு கடியில் அவதியுற்ற சர்தார் விஷத்தை மடக் மடக் என்று குடித்து விட்டு கொசுக்களை பார்த்து,இப்ப கடிங்க பார்க்கலாம்,கடிச்சா செத்துடுவிங்க ....

அடுத்து,

சர்தார் ஒரு ப்ரொவ்சிங் சென்டெரில் மற்றொருவரிடம்...
உங்கள் password என்னவென்று எனக்கு தெரியுமே...
மற்றொருவர் சந்தேகத்துடன் என்ன?
சர்தார்:"அஞ்சு ஸ்டார்(*)...."
மற்றொருவர்,போடா கிறுக்கா அது raman...

ஒரு சர்தார் accident ஆன இடத்தை தாண்டி செல்லும் போது ஒருவர்,ஐயோ என் கை போச்சே என் கை போச்சே...

சர்தார்:அங்கே ஒருத்தன் தலை போனதற்கே அழலையாம் நீ என்னடான்ன கை போனதற்கு போய்.....

சர்தார் ஒருவர் tourist guide ஆக ,அனைவருக்கும் ஒவ்வொரு இடமாக காட்டி வர,ஒருவர் ஒரு எலும்பு கூட்டை காட்டி யார் அது என்று கேட்க,சர்தார் பாபர் என்று சமாளித்தார்,மற்றொருவர்,அப்போ அந்த சின்ன எலும்பு கூடு?
சர்தார்:"அது பாபர் சின்ன வயசில்...."

Wednesday, October 22, 2008

சில சோக்கு........

விவாத மன்றத்தில்,
சர்தாரிடம் ஒருவர்,

விவாகரத்திற்கு முக்கிய காரணமாக நீங்கள் நினைப்பது?


சர்தார்:"கல்யாணம்"
---------------------------------
அமெரிக்காவில் ஒரு புதிய,குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் கருவியை சிது ஒவ்வொரு நாடாக சோதித்து பார்க்க கொண்டு சென்றனர்,

இங்கிலாந்தில் பதினைந்தே நிமிடத்தில் நாற்பது குற்றவாளிகளை கண்டு பிடித்தது,

ஸ்காட்லாந்தில்,ஸ்காட்லாந்து போலீசாருக்கே சவால் விடும் வண்ணம்,பதினைந்தே நிமிடத்தில் எழுபத்தி ஐந்து குற்றவாளிகளை கண்டு பிடித்தது,

ஆஸ்திரேலியாவில் பதினைந்தே நிமிடத்தில் நூறு குற்றவாளிகளை கண்டு பிடித்தது...

எல்லாம் முடிந்து இந்தியாவில்,பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்தி வந்தது,

"அமெரிக்க மெஷின் ஐ காணவில்லை"


"India Rocks"......
---------------------------------------------------
நாயுடன் வாக்கிங் செல்பவரின் அருகில் வந்த ஒருவர்,

என்ன எருமையோட வாக்கிங்கா?

மற்றவர்:இது நாய்ங்க...

முதலாமவர்:
நான் நாய்கிட்டே கேட்டேன்....

----------------------------------------------------
தரகரிடம் பெண்ணின் தந்தை,நான் வேலையில இருக்க பையனா பார்க்க சொன்னேனே பார்த்தீங்கள?

தரகர்:
பார்த்தேங்க பையன் E.B ல என்ஜிநியர் ஆ இருக்கான்....

பெண்ணின் அப்பா:
"யோவ் நான் வேலைல இருக்கிற பையனா கேட்டேன்"
-------------------------------------------------------
சர்தார் வெளி நாட்டு பயணம் முடித்து விட்டு தன் மனைவியிடம்,

என்னை பார்த்தா "foreigner"மாதிரி தெரியுதா?

மனைவி:இல்லையே...ஏன்?

சர்தார்:லண்டன்ல ஒரு பொம்பள என்ன பார்த்து...நீங்க "foreigner"ஆ அப்படின்னு கேட்டா...அதான்..
----------------------------------------------------------
சர்தாரிடம் வெளி நாட்டு நபர்,
"Any great man born in this state"
சர்தார்:இல்லையே எல்லாம் குழந்தைங்க தான்....
----------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் சீன நண்பனை காண சென்ற சர்தாரிடம்,அந்த நபர் ஏதோ சர்தாரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்...

அதன் அர்த்தம் தேடி சீனா செல்லும் சர்தாரிடம்...மொழி பெயர்ப்பாளர் சொன்னார்...
"யோவ் நீ என்னோட ஆக்ஸிஜன் சிலிண்டர் tube மேல நின்னுட்டு இருக்க"....
----------------------------------------------------------
சர்தார் தவளையை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்....
முதலில் தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு jump என்றார்,அந்த தவளையும் எப்படியோ தத்தி எகிறியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் ஒரு காலை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"

பிறகு இரண்டம் காலையும் வெட்டி விட்டு jump என்றார்,இம்முறையும் தவளை எகிறியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் இரண்டு கால்களை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"


பிறகு மூன்றாவது காலை வெட்டி விட்டு jump என்றார்...
தவளை எப்படியோ ஒரு காலில் கடைசியாக ஒரு துள்ளு துள்ளியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் மூன்று கால்களை வெட்டினாலும் ,அதனால் தாவ முடியும்"

பிறகு தவளையின் நான்கு கால்களையும் வெட்டி விட்டு,jump என்றார்...

தவளை ஆடாமல்,அசையாமல் அங்கேயே இருக்க....
ஒரு துள்ளு துள்ளிய சர்தார் எழுதினார்,

"தவளையின் நான்கு கால்களையும் வெட்டினால்,'அதற்கு காது கேக்காது' "
-----------------------------------------------------------------------
ஒரு சர்தார் மற்றொரு சர்தாரிடம்,
"ஏங்க அது சூரியனா நிலாவா?"
மற்றொரு சர்தார்:
"சாரிங்க நான் ஊருக்கு புதுசு"
----------------------------------------------------------

உங்களுக்கு மிகவும் பிடித்தது?
do post your comment...
->karthi
Blog Widget by LinkWithin