வாழ்வின் சில உன்னத தருணங்கள்......
பிறந்த குழந்தையின் கையை விரல் கொண்டு தொடும் போது அது விரலை இறுக மூடும் தருணம்....
மழை பெய்து ஓய்ந்த யாருமற்ற சாலையில் ஒரு பைக் பயணம்....
முதல் மாத சம்பளத்தை தாய் தந்தையின் காலடியில் சமர்ப்பிக்கும் தருணம்.....
காலையில் சுட சுட உங்கள் அன்பானவரிடம் இருந்து கிடைக்கும் முத்தம்....
மிக நாள் கழித்து பார்க்கும் நண்பனின் தோளில் கை போட்டு கதை பேசும் நிமிடம்....
சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வரும் கணம்....
பௌர்ணமி நிலவின் குளிர்ச்சியில் சுட சுட குடும்பத்தினரோடு நிலா சோறு...
மெழுகுவர்த்தியின் ஒலி வெள்ளத்தில் கதைத்து கொண்டு சாப்பிடும் நேரம்....
நம்மவரின் கைகளை இறுக்கமாக மூடி கொண்டு அவர்களின் பயத்தினூடே நான் இருக்கிறேன் என்று சொல்லி அனுபவிக்கும் கடற் குளியல்...
மனமுடையும் தருணத்தில் தந்தையின் தோளில் சாயும் நேரம்...
இனியன என்பேன் நண்பர்களே.....
வாழ்க்கை ஆசிர்வாதங்களும்,அற்புதங்களும்,ஆச்சர்யங்களும் கொண்டது அனுபவிப்போம் ஆராயாமல்..........
நீங்கள் அனுபவித்த உன்னத தருணங்கள்?சொல்லுங்களேன்.....
Be Cool...
Stay Cool...
5 comments:
நிஜமாவே நீங்க சொன்ன அனைத்துமே மிக உன்னதமான தருணங்கள்தான் கார்த்தி.
நான் 7 போராடி டிகிரி வாங்கிய நேரம்
ஹைய்ய்.... சேம் ஃபீலிங்ஸ். இதையும் படிங்க http://mudhalezhuthu.blogspot.com/2009/06/blog-post.html
காதலை சொன்ன பின்பு நம்மவர் ஒத்துக் கொள்கிற தருணம்...
இதை விட்டுட்டீங்களே பாஸு..
நல்ல இடுகை...வாழ்த்துகள்...
நல்ல திரும்பிப்பார்க்க வைக்கும் தருணங்கள்
Post a Comment