Wednesday, November 19, 2008
(விஜய் fans not allowed) இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே....
என்னுடைய sms களில் வரும் காமெடிகளில் அதிகம் அடிபடுபவர் விஜயாக தான் இருக்கும்,சில சமயங்களில் அஜித்தும் அடி படுவார்,நான் இரண்டையுமே ரசிப்பேன்,நேற்று முன் தினம் விஜயின் வில்லு படத்தின் கதை என்று வந்த sms இல் இருந்து,இது....
உம்மனா மூஞ்சிகள் வெளியேரிடவும் .....
இனி வில்லு கதை,
கதைப்படி ,ஹீரோ விஜய் வெளிநாட்டில் வசிப்பவர்,அவருடைய காதலி நயன தாராவோ ,இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ,வசிப்பவர்,
பல நாட்கள் சென்று விட்ட நிலையில்,தன் காதலியை காண வேண்டும் என்பதற்காக,இந்தியா திரும்புகிறார் விஜய் ,நயனின் வீட்டுக்கு அவர் ஆவலாக சென்று உள்ளே காலடி எடுத்து வைக்க யத்தநிக்கிறார் , அங்கே நயன் ரத்த வெள்ளத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்,இதை காண சகிக்காத விஜய்,அவரின் அருகே இருக்கும் ஒரு காகிதத்தை எடுக்கிறார்,அது நயனே தன் கைப்பட எழுதிய கடிதம்,
"என் சாவுக்கு காரணம் குருவி"
என்று ஒத்தை வரியில் இருக்கும் அதை படிக்கும் விஜய்,ஆக்ரோஷமாக விஸ்வரூபம் எடுத்து கண்ணில் படும் அனைத்து குருவிகளையும் கொன்று குவிக்கிறார்,இந்த தருணத்தில் படத்தில் CBI அதிகாரியாக ஜெயராம் திடீர் என்ட்ரி,
கேசை அவர் பக்காவாக நடத்த ,முதலில் நயனின் வீட்டை மீண்டும் சோதனை செய்கிறார், பல இடங்களில் சோதனை செய்யும் அவர் கடைசியாக டிவி அருகே செல்கிறார்,
அங்கே .....
"குருவி படத்தின் DVD யை கை பற்றுகிறார்,"
"The Case was Closed"
"விஜய் ROCKS"
சுலபமான கேள்விகள்....(நான்கு எடுத்தால் பாஸ்)
நினைவிருக்கட்டும்,நீங்கள் பாஸ் செய்ய குறைந்த பட்சம் நான்கு கேள்விகளுக்காவது,சரியான பதில் சொல்ல வேண்டும்....
கேள்விகள் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதினால் அதன் originality போய் விடுமோ என்ற பயத்தில் ஆங்கிலத்திலேயே கொடுத்துஉள்ளேன்....
கேள்விகள்:
1) How long did the Hundred Years' War last?
2) Which country makes Panama hats?
3) From which animal do we get catgut?
4) In which month do Russians celebrate the October Revolution?
5) What is a camel's hair brush made of?
6) The Canary Islands in the Pacific are named after what animal?
7) What was King George VI's first name?
8) What color is a purple finch?
9) Where are Chinese Gooseberries from?
10) What is the color of the black box in a commercial airplane?
விடைகள்:
1) How long did the Hundred Years War last? 116 years
2) Which country makes Panama hats? Ecuador
3) From which animal do we get cat gut? Sheep and Horses
4) In which month do Russians celebrate the October Revolution? November
5) What is a camel's hair brush made of? Squirrel fur
6) The Canary Islands in the Pacific are named after what animal? Dogs
7) What was King George VI's first name? Albert
8) What color is a purple finch? Crimson
9) Where are Chinese gooseberries from? New Zealand
10) What is the color of the black box in a commercial airplane? Orange , of course.
முதலில்் நானும் சப்பை கேள்விகள் என்று தான்நினைத்தேன்,முடிவில் சுபமாய் மூன்றுகேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில் அளித்து ஒரு ஜஸ்ட் ஒருமார்க்கில் பெயில்ஆனேன்....நீங்கள்?
Monday, November 17, 2008
திருவல்லிகேணி-பேச்சலரின் சொர்க்க பூமி
"வந்தாரை வாழவைக்கும் சிங்கார பூமி சென்னை" என்றொரு பெயர் உண்டு,அந்த சென்னைக்கு ,அடையாளம் தேடி கொள்ளும் பொருட்டு வரும் எண்ணற்ற இளைஞர்களின் முகவரியாக அன்று முதல் இன்று வரை இருப்பது "triplicane"என்று செல்லம்மாக அழைக்கப்படும் "திருவல்லிகேணி".
வேலை,கல்யாணம் என்று ஆகி சென்னையின் இன்ன பிற இடங்களில் செட்டில் ஆகும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடித்த இடம் triplicane.
திருவல்லிகேணி ஒவ்வொரு காலையும் செல்வ விநாயகர் கோயிலின் முன் ஒரு ஹாய் வகை உபத்திரவமில்லாத கும்பிடு மூலம் ஆரம்பிக்கும் ,சில இன்று interview ,இன்று எனக்கு பரீட்சை
போன்ற சில வினோத பேச்சலர்களுக்கே உரிய பிரார்த்தனைகளுடன்..எதை சொன்னாலும்,சின்ன சிரிப்புடன்,மறுத்து பேசாத பிள்ளையாரின் முகத்தை பார்த்தது ஏதோ பாதி வேலை முடிந்து விட்டது போன்றதொரு திருப்தி,பின்பு நேரே மோனிஷா மெஸ், அங்கே சில இட்லி மற்றும் தோசையுடன் காலையின் simple breakfast முடியும்,விடுமுறை நாட்கள் எனில் மதியம் காசி விநாயகா மெச்சின் கலந்து கட்டி அடிக்கும் super meals,கலர் கலரான கார்டுகளுடன் ,ஒவ்வொரு கார்டுக்கும் தகுந்த ,வகை வகையான பொரியல் ,,நல்ல பதமான சாதம் ஆஹா அருமை. அந்த உன்னதமான சுவையை எந்த five ஸ்டார் ஹோட்டலிலும் கூட சுவைக்க முடியாது ,மாலை நேரத்தில் ,அப்படியே மெரினாவின் ஓரம் நடக்கும் பொது ,காதோடு ரகசியம் பேசி ,உறவாடிவிட்டு ,தழுவி போகும் கடல் காற்றும் ,காதலியின் மடியில் உலகம் மறந்து கிடக்கும் காதலனை பார்த்து ,ஒரு சின்ன பெருமூச்சு விட்டுவிட்டு,சூரியனின் குட் நைட் ஐ ஏற்று விட்டு,முருகன் இட்லி கடையில்,இட்லியின் பல்வேறு பரிணாமங்களையும் பார்த்து விட்டு(ஹி ஹி பார்க்க மட்டும்,எல்லாம் சாப்பிட்டால் கட்டு படி ஆகாது)வழக்கமான இரண்டு மல்லி பூ இட்லியுடன் அந்த கொதி சாம்பார்,ஆஹா அது சுகானுபவம், அல்லது வழக்கமான மோனிஷா மெஸ் போய் ,நல்ல full கட்டு கட்டிவிட்டு ,ஒரு புள்ளி வாழை,ஒரு ஆவின் பாலோடு,பிள்ளையாரிடம் இதோ வந்து விட்டேன் என்பதோடு பொழுது முடியும்,நண்பர்களின் உடன் அடிக்கும் லூட்டிகளும்,அருகே இருக்கும் மொக்கை தியேட்டரில் மொக்கை படமும் நண்பர்களுடன் காணும் போது நன்றாகத்தான் இருந்தது,திருவல்லிகேணி தன்னிடம் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு ஆச்சரியமும்,சுவாரசியமும் கொண்டிருந்தது,
ஒரு புறம் முழவதும் பேச்சளர்களின் கும்மாளம் என்றால் திருவல்லிகேனியின் இன்னொரு முகம் அப்படியே எதிர்மாறானது ,அங்கே "bachelors not allowed"
இரு வேறு துருவங்களாக ,அங்கே ஐயங்கார்களும் பார்த்தசாரதி கோயிலும்,சனிக்கிழமைகளில் அங்கே கூடும் கூட்டமும்,என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,என்றைக்குமே பெருமாள் பிரசாதம் பிரசித்தமானது,
எல்லாம் சொல்லிவிட்டு சீட்டு கட்டு அறைகளை பற்றி சொல்லாவிட்டால்?திருவல்லிகேணி கோபித்துவிடும்,அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற அறைகளுக்கு திருவல்லிகேணியில் பஞ்சம் இல்லை,ஒருவர் படுக்க கூடிய இடத்தில் இருவர் என அமர்க்கள படுத்தும்,சில சமயங்களில் வரும் நண்பனின் தூரத்து உறவினர்,நண்பன் என்று varuvorukku இடம் தரும் மனம் அன்று(?)இருந்தது,சற்றே பணம் இருந்தால் attached bathroom ரூம்கள் ....எல்லோரும் உனக்கு பிடித்த இடம் எது என்று கேட்டால் அமெரிக்காவோ,ஆப்ரிக்காவோ ,ஆட்டுகுட்டியோ என்று சொன்னால் ,எனக்கு பிடித்தது தன்னுள் எண்ணற்றவர்களின் ரகசியங்களையும்,சலிக்காத ஆச்சர்யத்தையும் வைத்திருக்கும் சொர்க்க பூமி,
திருவல்லிகேணி....தான்..
கல்யாணமாகி மனைவியுடன் ,திருவல்லிகேணி வரும் ஆண்களின் முகத்தில்,ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் அப்பட்டமாக தெரியும்,
அது தான் திருவல்லிகேணி...
"The Paradise of Bachelors"
Saturday, November 15, 2008
தமிழன் எப்பொழுது தமிழனாகிறான்..
இது என்ன கேள்வி என்கிறீர்களா,இல்லை விஷயம் இருக்கிறது...நாம் காணும் பல விஷயங்கள்,அரசியல் தகிடுதத்தங்கள் , நம்மில் பலருக்கு அசுவாரசியமான மனநிலைக்கு இட்டு சென்று விடுகிறது,எப்போதுடா ஏதாவது விஷயம் கிடைக்கும் என்று கண்கொத்தி பாம்பாக இருக்கும் அரசியல் வியாதிகள் (வாதிகள்)தமிழன் என்ற உணர்வுக்குள்ளும் அரசியலை புகுத்தி விட,ஒருவர் ஆதரிப்பதும் மற்றவர் எதிர்ப்பதும் என்கின்ற கீழ்நிலை அரசியலையே காணும் தொண்டனும் வலு கட்டாயமாக இரு வேறு அணிக்கு கீழ் செல்ல வேண்டியுள்ளது,சிறிது நாட்களுக்கு முன்பு பீகார் இளைஞர் மும்பையில் சுட்டு கொல்ல பட ,பீகார் தலைகள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்து அசத்தியதை பார்த்தாவது நம்மவர்கள் திருந்துவார்களா?
நமக்குள் இருக்கும் அந்த தமிழன் என்கிற குணம் பல சமயங்களில் இன்முகத்தோடும் அவனுக்கு ஏதேனும் ஒரு இழிவு என்றால் அதுவே கர்ஜிக்கவும் செய்கிறது...ஆனால் பல சமயங்களில் கர்ஜித்தலோடு நின்றும் போகிறது...சில நாட்களுக்கு முன்பு ஒரு வார இதழில் நான் கண்டது,வந்தது நையாண்டி பகுதியில் தான் என்றாலும் அதுவே சிந்திக்கவும் செய்தது,ஒரு அரசியல் தலைவர் கேட்பார் ,இலங்கையில் நடப்பது உள் நாட்டு போர் அதில் நாம் எப்படி மூக்கை நுழைப்பது என்பார் ,அதற்கு பதில் சொல்வார் மற்றவர்(சாமானியர்),அப்படியானால் இங்கே அந்நாட்டினர் அகதிகளாக வருவதில் நமக்கு சம்பந்தம் இல்லையா ,அது நம் நாட்டு விஷயம் இல்லையா என்று போகும்,சரி நான் ஏன் இதற்கெல்லாம் போகிறேன்,நான் சொல்ல வந்ததே வேறு...சில நாட்களுக்கு முன்பு உளவு படை ஒரு அறிக்கை சமர்பித்துள்ளது அதில் இந்த முறை முன்பு போல் மக்களிடம் தமிழர் இன அலை அடிக்க வில்லை என்றனர் ..இதனால் சம்பந்தப்பட்டவர் கடுப்பானதாக சொல்லப்பட்டது, ..இது அவருக்கு அரசியல் ரீதியாக கடுப்பானதாக இருந்தாலும்,.நமக்கு இது வேதனை பட வேண்டிய விஷயம்,தமிழர் என்ற உணர்வு கீழே உள்ளவையோடு நின்று விடுவதாக நான் அஞ்சுகிறேன்,நாம் எப்போது தமிழராகிறோம் என்று நான் யோசித்தபோது தோன்றியவை இவை...(தவறு இருப்பின் மன்னிக்கவும்)உள்ளூர் ஆட்கள் யாரும் இல்லாத போது,வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருக்கும் போது"நீங்கள் தமிழா?என்று யாராவது கூப்பிட்டால் வரும் இன மான உணர்வு ஆஹா..."அதனால் தானோ என்னவோ உள்ளூர் ஆட்களை விட வெளி நாட்டில் வாழ் தமிழர்களுக்கு உணர்ச்சி அதிகம் போல...அதற்கு அடுத்து எப்போது நான் தமிழன் என்ற உணர்வு தலை தூக்கும் என்றால்,"நீ கறுப்பு" என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் உடனே நான் திராவிடன்,தமிழன் என்று உணர்வு பொங்கிவிடுகிறது,இன்னும் இது போல் பல...அதற்கு காரணமாக நான் நினைப்பது நாம் அனைவரும் ஏதோ ஒரு அசுவாரசியமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு விட்டோம் என்ற உணர்வு,இன்று நாம் காணும் பல விசயங்களில் வன்முறையே இருப்பதால்,பத்திரிக்கைகளில் காணும் அனைத்தும் வன்முறை பற்றியே இருப்பதால்,நாம் பக்கத்து நாட்டில் வன்முறையை காணும் போதும் அதுவும் ஏதோ தினப்படியான நிகழ்வு தானே என்று போய் விட தோன்றுகிறது...மேலும் இன்று அனைவரும் நிறைவான வாழ்வும் ,நமக்கு என்ன, என்ற போக்கும் வளர்ந்து விட்டது...
"இன்று யாரும் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது ,யார் இருக்கிறார்கள்,என்று கூட அறிந்துக்கொள்ள ,தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாத நிலையில் இருக்கும் போது "பக்கத்து நாட்டில் என்ன நடந்தால் என்ன என்று இருப்பதில் என்ன பெரிய விஷயம் இருந்து விட முடியும்?"
"பிழை இருப்பின் அல்லது கருத்து தவறு இருப்பின் comment இல் தயை கூர்ந்து தெரிவிக்கவும்"நன்றி உங்கள் கார்த்தி....
Thursday, November 13, 2008
சின்ன magic....
முதலில் இங்கு இருக்கும் ஆறு கார்டுகளில் ஒன்றை மனதில் இருத்தி கொள்ளுங்கள்...
இவரின் கண்களையே இமை கொட்டாமல் பாருங்கள்....
இப்பொழுது உங்களுடைய கார்ட் இங்கே இருக்குதா என்று பாருங்கள்...
இது எப்படி இருக்கு?
Tuesday, November 11, 2008
கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும்...
சில கணவன் மனைவி typical ஜோக்ஸ் மற்றும் "Quotes"
---
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
-------------------
கல்யாண வீட்டில் மணமகள் தன் தந்தையிடம் எதயோ கொடுப்பதை அனைவரும் கண்டு என்னவென்று பார்க்க....
புரிந்து கொண்ட மணப்பெண்ணின் தந்தை சொன்னார்,
"என்னோட பொண்ணு இன்னைக்கு தான் என்னோட "கிரெடிட் கார்டை "தந்தால் என்று சொல்ல...
அந்தப்பக்கம் பரிதாபமாக மணமகன்....
------------
முன்னாடி கதவை உங்கள் மனைவியும் ,பின் புற கதவை திறக்கும் மாறு உங்கள் நாயும் குறைத்து கொண்டு இருந்தால் நீங்கள் எதை முதலில் திறப்பிர்கள்?
கண்டிப்பாக பின் புற கதவை தான்,நாய் ஆவது உள்ளே வந்தவுடன் அமைதியாகிவிடும்..
--------
கணவன் மனைவி இருவரும் ஒரு கிணற்றருகே சென்றார்கள்,அது வித்தியாசமான கிணறு என்றும் அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று எழுதியிருந்ததை கண்ட கணவன்,ஒரு ரூபாயை போட்டு விட்டு மனதுக்குள் வேண்டினான்,
இதை கண்ட மனைவி,என்ன வேண்டுநிங்க என்று கேட்டவாறு,கிணற்றை பார்த்தாள்,அப்பொழுது கால் இடறி கிணற்றில் விழுந்து விட,
கணவன் சொன்னான்,
"அட உண்மையிலேயே நினைத்தது நடக்குதே"
----------
"எல்லோரும் கண்டிப்பாக கல்யாணம் பண்ணியே ஆகணும் ஏனென்றால் சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை அல்ல..."
-------
"பணத்துக்காக கல்யாணம் பண்ணாதிர்கள்,ஏனென்றால் நீங்கள் அதைவிட கம்மியான விலையில் கடன் வாங்கி கொள்ளலாம்...."
------
"புதிதாக கல்யாணம் ஆனவர்கள் சிரித்தால் அர்த்தம் புரியும்,ஆனால் கல்யாணம் ஆகி பத்து பன்னிரண்டு வருடம் ஆனவர்கள் சிரித்தால்?அதிசயம்...."
------
"காதலுக்கு கண்ணில்லை,ஆனால் கல்யாணம்?
கண்ணை திறக்கும் கருவி"
-------
"கார் நின்றவுடன் ,தன் மனைவிக்காக ஒருவன் கதவை திறக்கிறானா?
அப்படியானால்,ஒன்று கார் புதியதாக இருக்கும் அல்லது,மனைவி புதியவளாக இருப்பாள்...."
-------
"மனைவி:என்னங்க இன்னைக்கு நம்மோட கல்யாண நாள்,என்னிக்கும் போகாத எடமா பாத்து கூட்டிட்டு போங்க....
கணவன்:சரி வா கிட்சென்னுக்கு (சமையலறைக்கு)போகலாம்"
--------
நண்பர் 1 :நாங்கள் கணவன் மனைவி இருவரும் எப்போதும் கைகோர்த்து கொண்டுதான் வெளியே போவோம்....
நண்பர் 2 :அப்படியா?
நண்பர் 1 :ஆமாம் இல்லன்னா purchase பண்ண ஓடி விடுவாள்...
---------
குப்பை லாரியை கண்டு மனைவி,இன்னைக்கு குப்பைக்கு நான் லேட்டா?
பின்னாடி இருந்து கணவன்:அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படியே உள்ள குதுச்சிடு....
---------
உங்களுக்கு பிடித்ததா?கூல்....
->கார்த்தி...
Monday, November 10, 2008
முடிந்த வரை சிரியுங்களேன்....
அந்த சிரிப்பிலேயே நாம் ஒரு சிறந்த விருந்தோம்பலை கொடுத்து விட்டோம் என்று சொல்லலாம்..நினைத்து பாருங்கள் நாம் ஒரு நண்பரின் வீட்டுக்கு போகிறோம் அவர் சிரிக்காமல் வா என்று மட்டும் சொல்லிவிட்டு அறுசுவை உணவை வழங்கினாலும் நம் மனதில் அவர் முகமே உறுத்தும்...
நண்பர்களையோ,தெரிந்தவர்களையோ வழியில் பார்க்கிறீர்களா,பேச விருப்பம் இல்லையா,முகத்தை மறைக்காமல் சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு செல்லுங்கள் அது உங்களுக்கு நல்ல மனநிலையை மட்டுமல்ல எந்த ஒரு இறுக்கமும் இல்லாத சூழ்நிலையை தரும் ,அந்த நண்பரின் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் அதை விட்டு இவன் எங்கே வந்தான் என்று என்னும் வண்ணம் முகத்தை இறுக்கமாக வைத்து கடக்காதிர்கள்.
இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரயில் பயணம் செல்ல வேண்டி இருந்தது,வண்டியில் ஏறிய உடன் பக்கத்திலே கதவோரம் இருந்த ஒருவன் அவன் பாட்டுக்கு சிரித்து கொண்டே இருந்தான்..முதலில் பைத்தியம் என்று நாங்கள் இருந்தோம்,சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் முகத்திலும் எனது முகத்திலும் கூட அவன் சிரிக்கும் நேரங்களில் சின்ன புன்னகை...மனம் அவ்வளவு நேரம் யோசித்து வந்த அனைத்தையும் மறந்து அமைதியானது போன்ற ஒரு உணர்வு,நான் அருகில் இருந்தவரை பார்த்து சிரிக்க அவரும் என்னை போன்று ஏதோ பல நாள் பழக்கம் போல என்னிடம் சிரித்து பேசினார்,அருகில் அமர்ந்திருந்த ஒரு வட நாட்டு பெண் எங்கள் பேச்சு புரியாவிட்டலும் கண்களால் எங்களை விட அதிகமாக சிரித்தாள்,இள நகை புரிந்த வண்ணம் இருந்தாள்...அந்த பைத்திய (சாரி) கதவருகே இருந்த அந்த சிரிப்பு மனிதர் இறங்கி போக எங்களிடம் அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு மிச்சம் இருந்தது..எனது ஊரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்,அருகே யாரோ நடந்து செல்ல,அவர்கள் முன் என் சிரிப்பை விருந்தோம்பல் ஆக்கினேன்..முதலில் தயங்கிய அவர் மீண்டும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்...
நிஜமாகவே சிரிப்பு ஒரு மிக பெரிய தொற்று -------?தயவு செய்து முடித்து கொடுங்களேன்....
Sunday, November 9, 2008
கடலையும் நானும்....
அன்றும் அப்படித்தான் வயிற்றில் அமிலம் சுரக்க, நம நம என்று இருக்க நேரே கடலையை தேடி நான் ஓட விதி என்னை தேடி ஓடி வந்தது...கடலையை சற்றே உயரமான இடத்தில் ஒளித்துவைத்து இருந்தார்கள்,தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் ,சீ சீ நான் பார்த்தேன் கீழே ,அங்கு சரியாக ஒரு பனியாரம் சுடும் கல் இருந்தது பனியார கல்லையே ஸ்டூல் ஆக்கி அதன் மீது ஏறி நின்றேன்....சிறிது நேரத்தில் ஏதோ பொசுங்கும் வாடை வர...அப்பொழுது பார்த்து என் அம்மா டேய் பனியாரம் ரெடி சாப்பிட வா என்று சொல்ல...நான் குய்யோ முரையோ என்று கத்தி கொண்டு தண்ணீரில் கால் வைத்து உட்கார்ந்து விட்டேன்...உண்மையில் என் பொன்னான கால்கள் பொன் போல் இரண்டு நாட்கள் சிவந்து இருந்தது....அன்றில் இருந்து கடலையை பார்த்தாலே சீ சீ என்று சென்றுவிடுவேன்.இன்றும் இதை என் வீட்டில் சொல்லி சிரிப்பது உண்டு...
Friday, November 7, 2008
IT நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டிய சத்திய பிரமாணம்..
நான் ஓய்வை வெறுக்கிறேன்...
நான் ஏற்கனவே கல்லூரியிலும் ,பள்ளியிலும் என் வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவிட்டேன்...
நான் டென்ஷன் ஐ விரும்புகின்றேன்(விரும்புவேன்)
நான் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பொழுதை கழிக்க மாட்டேன்...
நான் sundays மட்டுமல்ல அனைத்து விடுமுறை நாட்களிலும் உழைப்பேன்..
என்னை நானே பழி வாங்கி கொள்வேன்.....
என்ன கொடும சார் இது....
----------------
இன்று படித்ததில் எனக்கு பிடித்த ஒரு வரி...
"If You cry in tears,It will hide a beautiful thing in front of you"
நன்றி கார்த்தி....
சில மகா மொக்கைகள்....
What happens to Arctic ocean when an ant fells into it?
answer:it becomes Antarctic ocean...
பால் பாக்கெட்ல பால் இருக்கும்,
தண்ணி பாக்கெட்ல தண்ணி இருக்கும் ,ஆனா
சட்ட பாக்கெட்ல சட்ட இருக்குமா?
பஸ் போய்ட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயே தான் இருக்கும்,ஆனா சைக்கிள் போனா சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகுதே ஏன்?
யார் மனசுல யார்?
பால் மனசுல தயிர்,
தயிர் மனசுல மோர்,
மோர் மனசுல யார்?
நீ தாண்ட வெண்ணை...
(உங்களை இல்ல ,எனக்கு வந்த மெசேஜ் இது....(அதுக்காக நான் வென்னையான்னு கேக்க கூடாது))
----------------------------------------------------------------------
சரி இனி வழக்கமான ஜோக்ஸ்....
Salesman:சார் நீங்க என்ன சோப்பு use பண்ணுரிங்க?
நம்ம ஆளு:பாபா சோப்பு...
Salesman:என்ன பேஸ்ட்?
நம்ம ஆளு:பாபா பேஸ்ட்...
Salesman:என்ன brush?
நம்ம ஆளு:பாபா brush..
Salesman:பாபா பெரிய international பிராண்டோ?
நம்ம ஆளு:இல்லை என் ரூம் மேட் பேரு...
-----------
மனைவி:ஏங்க அந்த லாரி காரன் பின்னாடி figure உக்காந்துட்டு வந்தா கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவியான்னு கேட்கறான்,நீங்க போய் சிரிச்சிகிட்டு வரிங்களே..
கணவன்:இல்லை அவனுக்கு தான் கண்ணு மண்ணு தெரியலேன்னு நினைக்கிறேன்...
மனைவி:ஏன்?
கணவன்:உன்னை போய் figure அப்படின்னு சொன்னான் பார்,அதான்...
----------------------
எங்கே கொஞ்சம் சிரிங்க...டென்ஷன் ப்ரீ ஆகுங்க...
நன்றி,கார்த்தி
இன்றைய சிரிப்பு படம்....
சிரிப்பை விட சிறந்த மருந்து இருக்காது என்பது என்னுடைய அபிப்பிராயம்...
"There is no great scientist performing better than your puppy licking your face"
-->யாரோ சொன்னது,
என்ன உண்மைதானே...
Thursday, November 6, 2008
About IT company Situations
Wednesday, November 5, 2008
வளர்ப்பு பிராணிகள் ....
எனக்கு அப்பொழுது சிறு வயது(இப்பொழுது என்ன கிழவனா என்று கேட்காதிர்கள்)இருக்கும்,வீட்டில் அவ்வபோது வந்து போய் பின்பு எங்கள் வீட்டு பூனையாக மாறிய எங்கள் புஸ்ஸி cat அன்று ஹாயாக படுத்து தூங்கி கொண்டு இருந்தது...நீங்களே சொல்லுங்களேன்,பூனை மேல் உட்கார்ந்து கொண்டு சின்ன பையன் நான்(அப்போ)சவாரி செய்ய நினைத்ததுஎன்ன பெரிய தப்பா?அது மரண பயத்தில் திரும்பி என் கால்களில் வவ் என்று ஒரு கடி கடித்து விட்டு ஓடிபோனது,அப்பொழுது இருந்து பூனைகளிடம் எனக்கு இருந்த உயர்ந்த மதிப்பு போய் விட்டது.அதே போல் நாய்.தெரிந்தவர்கள் ஒருவர் பெரிய அல்சேசன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள்,அவர்கள் வீட்டுக்கு போகும் போதெல்லாம் சரியாக என்னை பார்த்து ஒரு முறை முறைத்து குறைத்து விட்டு அதன் நேசத்தை காட்டும்,நானும் சளைக்காமல் போகும் போதெல்லாம் அதை தாஜா பண்ணுவதற்காக பிஸ்கட் ,பால்(ச்சே ச்சே லஞ்சம் இல்லை)எல்லாம் என் கையாலையே வைப்பேன்.
ஒரு நாள் என் அம்மா அன்றைக்குத்தான் ஏதோ ஸ்பெஷல் mushroom பிரியாணி செய்ய வேண்டுமா,செய்தது பத்தாது என்று தெரிந்தவர்கள் அனைவரிடமும் போய் அதை கொடுக்க வேண்டும் (எனக்கும் mushroom பிரியாணி செய்ய தெரியும்?) என்று என்னை அனுப்பினார்கள் .சரியாக அந்த வீடு வந்தது வீட்டின் முன்பு நம் அல்சேசன் இல்லாததால் நானும் தைரியமாக போய் கதவை தட்டி விட்டு நின்றேன்.அவ்வளவு நேரம் எங்கு தான் இருந்ததோ தெரியவில்லை பாய்ந்து வந்து என் அழகிய கணுக்காலில் ஒரு கடி,பிரியாணி வேண்டும் என்றால் என்னிடம் கேட்டு இருக்கலாமே நான் அலறி கீழே போட்ட பிரியாணியை சுவைத்து விட்டு கடித்ததுக்கு ஒரு சாரி கூட கேட்காமல் போய் விட்டது.இவ்வாறு நானும் நாயும் கௌரவமாக பிரிந்து விட்டோம்.என்னை ஒரு சிறு அணில் கூட விட்டது இல்லை தேடி வந்து கடித்து விட்டு போய் உள்ளது. ஒவ்வொரு முறையும் பல ஊசி குத்தியும் சளைக்காமல் ஏதாவது ஒன்றிடம் குறைந்த பட்சம் சிறு கீரலாவது வாங்கி வருவேன்.பொறுங்கள் நான் சொல்வதை வைத்து வளர்ப்பு பிராணிகளே கூடாது என்று முடிவுக்கு வந்து விடாதிர்கள்,இதையும் படியுங்கள்.
என்னை அவை எத்தனையோ பாடு படுத்தியிருக்கலாம்,ஆனால் இன்று நான் பலர் வீட்டில் நாய் மற்றும் பூனைகளை வளர்ப்பு பிராணிகளாய் பார்ப்பது இல்லை மகளும் மகனும் எங்கோ தொலைவில் வேலை பார்த்து வசிக்க,இவர்களின் தனிமையை அவைகளை தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு போக்க முடியாது.சிறு வயதில் நாம் நாயை என்ன பாடு படுத்துவோமா அதை போலவே அதை கொஞ்சி மகிழ்ந்து அவர்கள் தங்கள் மகனை மகளை கொஞ்ச முடியாத முறையில் கூட அவைகளை கொஞ்சுவதை பார்த்து உள்ளேன்.அவைகள் அவர்களிடம் ஒரு முறை கூட கோபபட்டு , கோபித்து நான் பார்த்தது இல்லை கேவலம் அவை வளர்ப்பு பிராணிகள் தானே,ஒன்றும் மனிதர்கள் இல்லையே அம்மா அப்பாவிடம் கூட கோபபட கோபிக்க.
என்ன வளர்ப்பு பிராணிகளை வளர்க்கலாமா வேண்டாமா?
கொஞ்சம் சோக்கு ....
சர்தார் ஒரு முறை நடந்து போகும் போது கீழே கருப்பாக ஏதோ இருக்க,அதை தொட்டு நக்கி பார்த்து விட்டு சொன்னார்,
"சை சாணி நல்ல வேல மிதிக்கல"
இது எனக்கு மிகவும் பிடித்த ஜோக்,உங்களுக்கு?
சர்தார் interview வில்,
interviewer:மிஸ்டர் சர்தார் எலெக்ட்ரிக் மோட்டார் எவ்வாறு இயங்கும்?
சர்தார்: டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
interviewer:நிறுத்து ........................................
சர்தார்:டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப் தப் தப்.(நிறுத்திட்டார்)
இது எனக்கு பிடித்த மற்றொரு ஜோக்...
ஒரு சர்தார்,ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு இங்கிலீஷ்காரன் ஆகியோர் ஒரு கருவியின் முன் நிறுத்த படுகிறார்கள்,அது பொய் சொல்பவர்களை சுட்டுவிடும்,
முதலில்,
அமெரிக்கர்:I think,I can smoke 100 cigarettes a day....
டுமில்.......
அடுத்து
இங்கிலிஷ்காரன்,:I think,I can eat 20 chickens a day...
டுமில்......
அடுத்து நமது
சர்தார்:I think,
டுமில்.....
இது சரியான கேலி கூத்து...
ஒரு முறை சர்தாரின் ரேடியோ சரியாக பாடாததினால் அதை திறந்து பார்க்கிறார்,உள்ளே ஒரு எலி செத்து இருக்கிறது,உடனே சர்தார்,
"அடக் கடவுளே இத்தன்னை நாளா பாடிட்டு இருந்தவன்
பூட்டானே ...."
இது மற்றொரு classical ஜோக்...
ஒரு சர்தார் இடம் போலீஸ் விசாரணை,
"எப்படி இத்தனை சர்தார்கள் ரயிலில் அடிபட்டு இறந்தார்கள்?"
சர்தார்:அவங்கதான் ரயில் முதலாம் platform இல் வருகிறது என்றார்கள் அனைவரும் ரயில் வந்துவிடும் என்று தண்டவாளத்தில் இறங்கி விட்டார்கள்...
போலீஸ்:
"நீ மட்டும் எப்படி தப்பிச்ச?"
சர்தார்:"நான் தற்கொலை பண்ணிக்க வந்தேனுங்க..."
இது சரியான A ரகம்,
(பிகு:statuory warning:consumption of alcohol is injurious to health)
ஒரு அரசன் தன் மகளுக்கு சுயம்வரம் வைக்க விரும்பி ஒரு போட்டி
வைத்தான்,விதிமுறை இதுதான்,
போட்டியாளர் மூன்று அறைகளுக்கு செல்ல வேண்டும்,முதல் அறையில் இருக்கும் விஸ்கி,பிராண்டி போன்றவற்றை ராவாக அடிக்க வேண்டும்,இரண்டாம் அறையில் இருக்கும் புலியுடன்(சாதா புலி அல்ல அது சைபேரிய புலி)மோதி அதன் பல்லை பிடுங்க வேண்டும்,மூன்றாம் அறையில் இருக்கும் ஒரு மங்கோலியா பெண்ணை
அந்த மாதிரி விசையத்தில் திருப்தி படுத்த வேண்டும்(மங்கோலியா பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா என்று கேள்வி, அவ்வளவு அழகானவர்கள்).
முதலில் சென்றவர் ரம் விஸ்கி அடிப்பதற்குள் சுருண்டு விழுந்து விடுகிறார்,இரண்டாமவர் புலியுடன் வீரமாக போராடி சாவை அணைத்து விடுகிறார்,
அடுத்து நம் சர்தார்,விஸ்கி,ரம்,பிராண்டி என்று சகலத்தையும் அடித்து விட்டு புலி இருக்கும் அறைக்குள் நுழைகிறார் கதவு சாத்தபடுகிறது,ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வர வில்லை,அவ்வ போது புலியின் உறுமல் மட்டுமே கேட்கிறது,அடுத்த கால் மணி நேரத்தில் வெளியே வந்த சர்தார் கேட்டார்....
"எங்கே அந்த மங்கோலியா பெண் அவள் பல்லை பிடுங்க வேண்டும்......."
அடுத்து ஒரு ஜோக்...
இரவெல்லாம் ஒரே கொசு கடியில் அவதியுற்ற சர்தார் விஷத்தை மடக் மடக் என்று குடித்து விட்டு கொசுக்களை பார்த்து,இப்ப கடிங்க பார்க்கலாம்,கடிச்சா செத்துடுவிங்க ....
அடுத்து,
சர்தார் ஒரு ப்ரொவ்சிங் சென்டெரில் மற்றொருவரிடம்...
உங்கள் password என்னவென்று எனக்கு தெரியுமே...
மற்றொருவர் சந்தேகத்துடன் என்ன?
சர்தார்:"அஞ்சு ஸ்டார்(*)...."
மற்றொருவர்,போடா கிறுக்கா அது raman...
ஒரு சர்தார் accident ஆன இடத்தை தாண்டி செல்லும் போது ஒருவர்,ஐயோ என் கை போச்சே என் கை போச்சே...
சர்தார்:அங்கே ஒருத்தன் தலை போனதற்கே அழலையாம் நீ என்னடான்ன கை போனதற்கு போய்.....
சர்தார் ஒருவர் tourist guide ஆக ,அனைவருக்கும் ஒவ்வொரு இடமாக காட்டி வர,ஒருவர் ஒரு எலும்பு கூட்டை காட்டி யார் அது என்று கேட்க,சர்தார் பாபர் என்று சமாளித்தார்,மற்றொருவர்,அப்போ அந்த சின்ன எலும்பு கூடு?
சர்தார்:"அது பாபர் சின்ன வயசில்...."
Tuesday, November 4, 2008
இது மொக்கை அல்ல ..சூர மொக்கை...
அதில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே....
எப்படி நீங்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கியை ஒரு பிரிட்ஜ் க்குள் அடைப்பிர்கள்?
இந்த கேள்விக்கு விடை,பிரிட்ஜ் கதவை திறந்து,உள்ளே ஒட்டகச்சிவிங்கியை அடைக்கவும்....
எப்படி ஒரு யானையை பிரிட்ஜ் உள்ளே அடைப்பிர்கள்?
இதற்கும் விடை முதல் கேள்வி போல் சொன்னால் அது தப்பு,அதற்கான சரியான விடை,
கதவை திறக்கவும்,ஒட்டகச்சிவிங்கியை வெளியே அனுப்பி விட்டு பிறகு யானையை உள்ளே அடைக்க வேண்டும் என்பதே சரியான விடையாம்....
அடுத்த கேள்வி,சிங்க ராஜா ஒரு கூட்டம் போட்டார்,அதற்க்கு எல்லா மிருகங்களும் வந்து இருந்தன ஒன்றை தவற,அது?
அது யானை,ஏனா அது தான் பிரிட்ஜ் உள்ள இருக்கே....
நீங்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டும்,ஆனால் அதில் முதலை இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்,எப்படி கடப்பிர்கள்?
இதற்கான விடை,சிங்க ராஜா கூட்டிய கூட்டத்துக்கு தான் எல்லா மிருகங்களும் பொய் விட்டதே அப்புறம் என்ன...?
என்ன இப்பவே கண்ணு கட்டுதா?
எனக்கும் இப்படி தான் இருந்தது....
இதை விட அவன் கடைசியில் சொல்லி இருந்த விளக்கம் தான்,
இதை தொண்ணூறு சதவிகிதம் பேர் தப்பா சொன்னாங்களாம்,ஆனால் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்ப மாணவர்கள் சரியாக சொன்னார்களாம் ....இந்த கேள்விகள் அனைத்தும் நம் memory,IQ,critical thinking பற்றி தெரிந்து கொள்ள உதவுமாம் ....
எது எப்படியோ இதில் நான் மூன்றுக்கு சரியாக சொன்னேன்......
உக்காந்து யோசிப்பாகளோ?
Monday, November 3, 2008
சரியான நேரத்தில் சரியான கோணத்தில்....(Funny Images)
படா சோக்கா கீதுப்பா...(ஜோக்ஸ்)
சில நாட்க்களுக்கு முன் நான் படித்த ஜோக்ஸ் இவை,
சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...
முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...
ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,
மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
-------------
காதலி:நம் விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு...
காதலன்:ஐய்யோ என்ன சொன்னாங்க?
காதலி:இவனையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாங்க....
-------------
நம் சர்தார் இல்லாமல் ஜோக்ஸா ?
இது நான் படித்து ரொம்ப நேரம் சிரித்து மகிழ்ந்தது...
ஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு)மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,
"இங்க பாருங்க,இதில் aids கிருமி திரவம் இருக்கு,ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு தப்பிச்சி போய்டுங்க "என்றான்...
முதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,
பின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்...
ஆனால் எதற்கும் கவலை படாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி விட்டான்....
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க தப்பிப்பிங்க,aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார்,
"எனக்கு தான் aids வரதே,ஏனா நான் தான் காண்டம்(condom)போட்டு இருக்கேனே.."
என்று சொன்னார்...
-------------------------
சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்...
கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,
"யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது"என்ற படி சென்றுவிட்டார்...
------------------------
நன்றி கூல்....
உங்களுக்கு மிகவும் பிடித்தது?
Sunday, November 2, 2008
ஏகன் விமர்சனம்
மொத்தத்தில் படம் ,அஜித்க்கு "தல தீபாவளியும் இல்லை புஸ்வானமும் இல்லை" ஊசி வெடியை விட சற்றே மிக சற்றே பெரிய வெடி...
ஏகன்...
ஏகமாய் கவிழ்ந்தவன்....
அஜித்க்கு:எப்பொழுதுதான் நீங்கள் கதையை கேட்டுவிட்டு நடிப்பிர்களோ,முடிந்த வரை புதிய இயக்குனர்களை தவிர்க்கவும்....
நன்றி கார்த்தி.....
Saturday, November 1, 2008
பாட படாத கதாநாயகர்கள்...
இன்று நாம் காணும் பல முக்கிய புள்ளிகளின் பின்னால் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பலரின் பாட படாத பெயர்கள் இருக்கும்....
இது ஒரு துறை மட்டும் என்று இல்லாமல் அனைத்து துறையிலும் இருக்கும்...
இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் சமிபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முட்டி மோதி, திட்டி திட்டுவாங்கி(வாட்சனிடம்)டபுள் செஞ்சுரி அடித்த காம்பிரை காணும் போது எழுந்தது இது...
ட்வென்டி 20 உலக கோப்பையின் கடைசி ஆட்டத்தில் அவர் அடித்த அந்த வரலாற்று(?) சிறப்பு மிக்க 76 ரன்கள் ,என்று தொடர்ந்த மாட்ச்கள் அனைத்திலும் அவரின் குறைந்த பட்சம் 50 ரன்கள் என்று அதிரடி கிலப்பியபோதும் அவருக்கு முறையாக தரப்பட வேண்டிய அங்கீகாரம் கிடைக்க வில்லையோ என்று தோன்றியது,தோனியின் கேப்டன் ஷிப் அருமை என்றாலும் அவரை மொய்க்கும் மீடியா ஏன் காம்பிரை துரத்த வில்லை என்று எண்ணிய போது எனக்கு தோன்றிய இன்ன பிற "Unsung Heroes"
சினிமா:M.R.ராதா ,
சமிபத்தில் எப்படியோ எங்கள் அறைக்கு தப்பி தவறி "ரத்த கண்ணீர்"என்ற படம் எப்படியோ வந்து விட்டது ,முதலில் பழைய படம் அந்த காலத்தின் வசனம் காமெடி ஆக இருக்கும்
என்று போட்டோம் ஆனால் உண்மையில் அனைவரும் ஒன்றி விட்டோம் என்பதே உண்மை...
அவரின் நையாண்டி,கடவுள் மறுப்பு என்று ஆங்காங்கே பல ரத்தினங்களை படம் முழுவதும் தெளித்து இருந்தார்,
அடுத்து சொல்ல வேண்டிய முக்கியமானவர்,நம்பியார் இன்னும் அவரின் அந்த கை
உள்ளங்கையை தேய்த்து கொள்ளும் mannerism ,என்று பல படங்கள் வில்லதனத்துக்கும் பேச பட காரணமாக இருந்தவர்...
இப்படி பார்த்தால் கில்லி போன்ற மெகா ஹிட் படங்களுக்கும் வில்லன் (பிரகாஷ் ராஜ்)நடிகர்களின் பங்களிப்பு அதிகம்...
பாட்ஷாவில் ரகுவரன் என்று பாட படாதவர்கள் பலர்...
இவர்களை ,இவர்களின் நடிப்பை நாம்,தக்க படி பார்க்க வில்லையா அல்லது இவர்களாகவே தங்களை சுத்தி ஒரு வளையம் அமைத்து கொண்டார்களா என்று தெரியவில்லை...
இன்ன பிற துறைகளில் இருக்கும் "Unsung Heroes"விரைவில்...
இது மட்டுமின்றி சில "Unsung places"உம்(பாட படாத ஸ்தலங்கள்?) தொடர்ந்து...
நன்றி கார்த்தி...
என்ன கொடுமை சார் இது...
இதை creativity என்று மெச்சி கொள்வதா தலையில் அடித்து கொள்ளவா?ஆனாலும் ரசிக்கலாம்....
--------------------------
சரி வழக்கமான ஜோக்ஸ் இனி...
நர்ஸ்:சார் நான் மாசமா இருக்கேன் சம்பளம் தாங்க...
டாக்டர்:என்னம்மா சொல்லற நீ மாசமா இருக்கிறதுக்கு நான் ஏன் சம்பளம் தரனும்...
நர்ஸ்:நீங்கதானே டாக்டர் மாசமானா சம்பளம் தரேன்னு சொன்னிங்க.....
------------------------
Who is a good friend?
A good friend is one who don't let you to do stupid things .....alone...
------------------------
நன்றி.....கூல்