இது "மெயின் ஹூன் நா"(நான் இருக்கிறேன்) என்கின்ற ஹிந்தி படத்தின் விமர்சனம்....கொஞ்சம் இருங்க ஹிந்தி படத்தின் விமர்சனம் நமக்கு எதுக்கு என்று போக வேண்டாம்,ஏனென்றால் இது தான் ஏகனின் மூல கதை........
ஒரு வரியில். கதையை. சொல்வது. என்றால்....பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அமைதி ஏற்படுவதை விரும்பாதவர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களை எப்படி நம் ஹீரோ தடுத்துஅமைதியை ஏற்படுதிகிறார் என்பதை. எக்கச்சக்க மசாலா,கார கொழம்பு என்று, கமர்ஷியல் குருமா, ஆக்கியிருக்கிறார்கள்...ஆனாலும் கொஞ்சம் ரசிக்கும் படியாகவே உள்ளது....
Cast:
1.Sharukh
2.Sushmitha Sen
தமிழில் : sharukkhin கேரக்டரில் அஜித்,
Sushmitha Sen கேரக்டரில் நயன்தாரா ,
sharukkin தம்பியாக பண்ணியவரின் கேரக்டரில் "அறிந்தும் அறியாமலும் "புகழ் நவ்தீப். இதில் என்ன பிரச்சினை என்றால் ஹிந்தி படத்தில் sharukkhin தம்பியாக நடித்தவர் செம freaky மற்றும், நல்ல மாடர்ன் லுக்காக இருப்பார்.... சிம்ப்ளி dream boy and play boy ஆக இருப்பார். ஆனால் நவ்தீப்பை அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை ... சரி கதை இதுதான்.....
சிறு வயதிலேயே தன் தாயை இழந்த ராம் தன் தந்தையை தேடி போகிறார் அங்கே அவருக்கு ஒரு சித்தி இருப்பதை இவர் அறிந்து கொள்வது போல,அந்த சித்தி தன் கணவருக்கு இன்னொரு மனைவி இருக்கிறார் (இருந்திருக்கிறார்)என்பதை அறிந்து கொண்டு தன் மகன் "லக்ஸ்மன்"உடன் கிளம்பி விடுகிறார்...ராமின் தந்தை ஒரு உயர் ராணுவ வீரர்...
ராம் தன் தந்தையுடன் இருந்து ராணுவத்தில் மேஜர் ஆகிறார்...
இதனிடையே ராணுவ கருத்தரங்கில் கலந்து கொள்ளும் chief கமாண்டர் இன் உயிரை காப்பாற்ற,ராமின் தந்தை பலியாகிறார்...
இதனால் மனம் விரக்தி அடையும் ஷாருக் ஐ கமாண்டர் கூப்பிட்டு,அவருக்கு ஒரு change ஆக இருக்கட்டும் என்று,தன் மகள் படிக்கும் காலேஜ்(டார்ஜீலிங்) அனுப்பி அவளை கண்காணிக்கும் பொறுப்பை முன் வைக்கிறார்,முதலில் மறுக்கும் ஷாருக் பின்பு அங்கே தான் தன் தம்பியும் படிக்கிறார் என்று அறிந்து கிளம்புகிறார் மாணவனாக, வாத்தியாராக அல்ல(என்ன கொடுமை சார் இது).அங்கே உள்ளவர்கள் அனைவரும் அங்கிள் அங்கிள் என்றே இவரை கூப்பிடுகிறார்கள் ...ஒரு கட்டத்தில் அங்கே இருக்கும் ஒரு freaky மாணவனை ஷாருக் காப்பாத்தி விட அனைவரும் நல்ல நண்பர்களாகிறார்கள் ,பின்புதான்அந்த freaky நண்பன் தன் தம்பி தான் என்பதை ஷாருக் அறிகிறார்,
தன் தாயுடன் (சித்தி)சமரசமாக போனாரா? தம்பி அவரை ஏற்று கொண்டானா? என்பது எல்லாம் பாச போராட்டமாக சொல்லி உள்ளனர்...
பின்பு அங்கயே வில்லன் குரூப் வந்து,முழு காலேஜ் ஐயும் சிறை வைத்து விட ஷாருக் மேற்கொள்ளும் தந்திரங்கள் தான் கதை....
கடைசியில் எப்படி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான பேச்சு வார்த்தை மற்றும் மக்கள் சந்திப்பு போன்றவற்றை தடுக்கும் முன்னாள் இந்திய ராணுவத்தை சேர்ந்த சில பாகிஸ்தான் எதிர்ப்பு வீரர்கள் கம் வில்லன்களை ஷாருக் எப்படி முறியடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...
அட கடவுளே சொல்ல மறந்து விட்டேன், இதில் நயன் சாரி சுஷ்மிதாவின் பங்கு...chemistry மேடம் ...
அவர் வரும் போது எல்லாம் ஷாருக் இரண்டு கைகளும் கட்டி அணைக்கும் போசுக்கு தானே செல்ல அதை அவர் அடக்க படும் பாடும்,அவருக்கு பின்னால் பலர் வந்து இசை கச்சேரி நடத்துவதும் சரியான அலும்பு...இதில் குறிப்பிட வேண்டிய மற்றவர்கள்...
"மழை professor "(பேசும் பொது முன்னாள் இருப்பவர் தொப்பலாக நனைந்து விடுவதால்)மற்றும் பிரின்சிபால் அவர் ஒருவருக்கு தான் ராம் ஸ்டுடென்ட் இல்லை என்றும் அவர் ஒரு மேஜர் என்பதும் தெரியும்...இதனால் அவர் பல இடங்களில் salute அடித்து மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்று தன்னை மறைக்கும் இடங்கள் நல்ல காமெடி...
படத்தை பற்றி ஒருவரிடம் இந்த படத்தில் இருந்து என்ன தெரிகிறது என்று கேட்டேன்(இந்தியாவிலும் பாகிஸ்தானுடன் சமாதானத்தை விரும்பாதவர்கள்(தீவிரவாதிகள்) இருக்கிறார்கள் என்று சொல்வார் என்று எதிர்பார்த்து)
அவர் சொன்னார்,
"எப்போ ஒருத்தன் அவனுடைய பையனுக்கு லக்ஸ்மன் என்று பெயர் வைக்கிறானோ அவனுக்கு ஏற்கெனவே ஒரு பையன்
இருக்கிறான்(ஒரு முன்னாள் wife கூட ) என்று அறிந்து கொள்ளலாம் என்றார்"
படம் நல்ல கமர்ஷியல் ஹிட்....
ஏகனை எதிர்நோக்கி....எதிர்பார்ப்புகளை
பூர்த்தி செய்வார்களா?ராஜு சுந்தரம் மற்றும் அஜித்...
இந்த தீபாவளி
வெறும் புஸ்வானமா அல்லது,
"தல தீபாவளி"யா?
பொறுங்கள் இன்னும் இரண்டு வாரங்கள்...
»
No comments:
Post a Comment