நிச்சயம் பலருக்கு கடலை(வறுத்த கடலை.)பிடித்தமான தீனியாக இருக்கும்,நானும் விதிவிலக்கல்ல....எங்கள் வீட்டில் கடலையை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று கண்டறியவே நான் பல SHERLOCK HOLMES வழிமுறைகளை கையாள்வேன்....அப்படி பட்ட கடலையை வறுக்க சீ சீ வெறுக்க வைத்த நிகழ்வு,அந்த பழம் புளிக்கும் என்று பட வைத்த நிகழ்வு நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது ...
அன்றும் அப்படித்தான் வயிற்றில் அமிலம் சுரக்க, நம நம என்று இருக்க நேரே கடலையை தேடி நான் ஓட விதி என்னை தேடி ஓடி வந்தது...கடலையை சற்றே உயரமான இடத்தில் ஒளித்துவைத்து இருந்தார்கள்,தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் ,சீ சீ நான் பார்த்தேன் கீழே ,அங்கு சரியாக ஒரு பனியாரம் சுடும் கல் இருந்தது பனியார கல்லையே ஸ்டூல் ஆக்கி அதன் மீது ஏறி நின்றேன்....சிறிது நேரத்தில் ஏதோ பொசுங்கும் வாடை வர...அப்பொழுது பார்த்து என் அம்மா டேய் பனியாரம் ரெடி சாப்பிட வா என்று சொல்ல...நான் குய்யோ முரையோ என்று கத்தி கொண்டு தண்ணீரில் கால் வைத்து உட்கார்ந்து விட்டேன்...உண்மையில் என் பொன்னான கால்கள் பொன் போல் இரண்டு நாட்கள் சிவந்து இருந்தது....அன்றில் இருந்து கடலையை பார்த்தாலே சீ சீ என்று சென்றுவிடுவேன்.இன்றும் இதை என் வீட்டில் சொல்லி சிரிப்பது உண்டு...