Monday, December 29, 2008

அற்புத கார்ட்டூன்கள்....



சமிபத்தில் நான் கண்டு ,சிறிது நேரம் அதன் அர்த்தத்தை

உணர்ந்து மௌனம் சாதிக்க வைத்த கார்ட்டூன்கள் இவை....

உங்களுக்கு பிடித்த அல்லது பாதித்த கார்ட்டூன் பற்றி கூறவும் .....




இதை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...


வறுமையின் விளிம்பு....இது என்னை மிகவே அசைத்து பார்த்தது....

மக்கள் தொகை பெருக்கம்....
இதை கண்டு நான் ஒரு நிமிடம் கண்ணை கசக்கி கொண்டேன்...இதன் உண்மை நம் கன்னத்தில் அறைவதை நம்மால் மறுக்க முடியாது...
இன்றைய உலகின் மாறிப்போன மனித நேயத்தை காட்டும் படம்...ஆறுதலுக்கு கூட ஒரு ரோபோ தான்....ஹ்ம்ம் இந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

இதன் அர்த்தம்?



ஒரே கோட்டில் சுதந்திரத்தை ,சுதந்திர பறவைகளை வேலிகள் ஆக்கி விட்டார் ஓவியர்....(கார்டூனிஸ்ட்)
உண்மையான தலைவர்....இது நன்று...



தற்கொலை முயற்சி....எனக்கு பிடித்த மற்றொன்று....

நன்றி நண்பர்களே.....மீண்டும் சந்திப்போம்....

Thursday, December 25, 2008

இது மொக்கை அல்ல சூர மொக்கை பார்ட்-2


பார்ட் -1
இன் வெற்றியை தொடர்ந்து.....
இதோ வழக்கம் போல என் மெயிலில் வந்த சூர மொக்கை உங்களுக்காக(?).....
இது "lateral thinking" வகையராவாம் (என்ன கொடும சார் இது)......
சரி சரி நீங்களும் ட்ரை பண்ணுங்க.......இதோ இங்கே கேள்விகள் ...பதில்கள் கடைசியில்.................
மண்டை குழம்பி போகிறவர்கள் அனைவரும் நல்ல டாக்டரை பார்க்க பரிந்துரைக்க படுகிறார்கள்.....(தேவா சார் கவனிக்க)



இனி கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.......
ஒவ்வொரு கேள்விகளையும் பாருங்கள் உங்களுக்கு தோன்றுவது என்ன என்று குறித்து கொள்ளுங்கள்....விடைகள் கடைசியில்....




This puzzle is called Lateral Thinking.
Scroll down slowly and be honest to yourself.



Think like a wizard . . .

man
Q1. ---------
board



stand
Q2. ------------
i




Q3. /r/e/a/d/i/n/ g/



Q4...r..........
road
a
d






Q5. cycle
cycle
cycle




0
Q6. ---------
M.D.
Ph.D.


knee
Q7. ------------
light


ground
Q8. ------------ ---
feet feet feet feet feet feet






Q9. he's X himself





Q10. ecnalg



Q11. death ..... life



Q12. THINK




And the last one is real fundoo - - -


Q13. ababaaabbbbaaaabbbb ababaabbaaabbbb. ..


சரி என்ன பார்த்து விட்டீர்களா,இனி விடைகள்...


1.man overboard
2.I understand

3.reading between the lines
4.cross road
5.tricycle

6.two degrees below zero
7.neon light

( knee - on - light )
8.feet underground
9.he's by himself
10.backward glance
11.life after death

12.think big ! !
13.long time no 'C'
என்ன கண்ண கட்டுதா?
எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு பாவி பசங்க இப்படியா ஒருத்தன சோதிப்பாங்க....
இருந்தாலும் நானும் இதில் ஏழு கேள்விக்கு சளைக்காமல் பதில் சொன்னேன்(அட கரெக்ட் ஆ தான்,அட நம்புங்கப்பா)....



சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்(மற்றொரு சூர மொக்கையுடன்)....




Wednesday, December 24, 2008

ஜீனியும் நானும்...



வீட்டில் நான் தனியே இருக்கும் நேரங்களை நான் மிகவே ரசிப்பது உண்டு,மனதில் பல எண்ணங்கள் நம்மை பற்றி நமக்கே அடையாளம் கண்டுகொள்ள உதவும்,சில சமயங்களில் டேய் பன்னாட நீ போக்கிரிடா என்றும் சில சமயங்களில் உத்தமபுத்திரனாகவும் பல சமயங்களில் வீழ்த்த முடியாத ஹீரோ ஆகவும் காட்டும்.

அன்றும் அப்படிதான் சிந்தனையினூடே, வீட்டில் இருந்து ஒரு அபயக்குரல்,சத்தியமாக கனவு இல்லை என்று மட்டும் தெரிகிறது,அந்த குரல் என் பேர் சொல்லி காப்பத்த சொல்ல,
வீட்டில் யாரும் இல்லை என்ற நிதர்சனமான உண்மை மட்டும் தெரிந்தது,
ஆனால் குரல் வந்த திக்கில் நான் கவனித்த போது,'கிட்டத்தட்ட சிலந்தி ஒன்று அந்த குழவியை நெருங்கி விட்டது தெரிந்தது',
ச்சே இது என்ன இப்படியும் இருக்குமா என்று நான் திரும்ப நினைக்கும் போது,
"போகாதே என்னை இதனிடம் இருந்து காப்பாத்து, நான் உண்மையிலே வரம் தரும் ஜீனி "என்றது அந்த குரல் ,
"நான் எப்படி நம்புவது?"(நான் அறிவாளி இல்ல),
"முட்டாளே நான் பேசுவதில் இருந்தே தெரியவில்லை நான் something special என்று?"இது ஜீனி

முட்டாளே என்றதில் என் தன்மானம் சற்றே உசுப்ப பட்டாலும்,அந்த கவர்ச்சிகரமான வரம் என்னை ஈர்த்தது,
மீண்டும் நான் அதனிடம் நீ something special என்றால் நீயே உன்னை காப்பாத்திகொள்ளலாமே என்றேன்(மீண்டும் நான் அறிவாளி என்று prove பண்ண)
அது மரண வாயில் இருந்து" டேய் ***^#" என்று திட்டி விட்டு "எனக்கு நானே பண்ண முடியாது என்பது தான் விதி" என்று மீண்டும் அபாய குரல் எழுப்பியது.
இந்த முறை உண்மையிலே இரண்டும் மோத தயாராக இருக்க,நான் ஜீனியை காப்பாற்றுவது என்று முடிவெடுத்தேன்,ஒரு அட்டையை எடுத்து குறி பார்த்து அந்த சிலந்தியை ஒரே அடியில் சட்னி ஆக்கினேன்,அந்த குழவியை கைகளில் ஏந்தினேன் ,என் மானசீக ஜீனியே வரம் தா என்று சொல்லுமுன் ....அவர் ஒரு கொட்டு கொட்டி விட்டு பறந்து விட்டார்,சுரீர் என்று கையில் வலியுடன்,நடந்ததை நினைத்து கொண்டு இருந்தேன், நடந்தது என்ன கனவா என்று யோசிக்கும் பொது...மூளையில் சுரீர் என்று ஏதோ உரைக்க encyclopaedia வில் சிலந்திகள் பற்றி பார்த்தேன்,

அதில் சிலந்தியின் முக்கிய எதிரிகள் என்ற இடத்தில்....... red wasp (குழவி)

(இது play boy பத்திரிக்கையில் இருந்து சுஜாதா அவர்கள் எடுத்தது ,கதை வடிவம் என்னுடையது(க்கும்)...)

Tuesday, December 23, 2008

காக்காயன் மற்றும் காக்காணி....


இது நான் நான்கு வருடங்கள் முன்பு எழுதிய கதை,
ஆர்வ கோளாறினால் குமுதத்திற்கு எழுதி போட்டு publish ஆகாததினால் ,விடா முயுற்சியுடன் ஆனந்த விகடனுக்கும் எழுதி போட்டு...ச்சே ச்சே publicity எல்லாம் எனக்கு பிடிக்காது ,அதனால் அதை publish பண்ணாதிர்கள் என்று கண்டிப்புடன்(?)
சொல்லிவிட்டேன்..
"இது காமெடி,romance மற்றும் tragedy "ஆகிய மூன்றும் கலந்து கட்டிய கலவை...
சரி இனி கதை....

காக்காயன் கருப்புதான்,அண்டங்காகம் தான் ஆனாலும் அவனோட கட்டுமஸ்தான உடம்போடு,ஒரு எவ்வு எவ்வி பறந்தால்,பக்கத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிக்கு செல்லும் காக்காநிகளின் பார்வை ஒரு முறை அவன் மேல் படிந்து விட்டு வெட்கத்துடன் திரும்பும்...

அன்றும் அப்படிதான்,காக்காயன் இரண்டே நிமிடத்தில் கீழே ஓடி கொண்டிருந்த எலியாரை ஸ்வாகா ஆக்கி தன் "பிரேக் பாஸ்ட்"முடிந்த திருப்தியில் அருகே இருந்த கரண்ட் கம்பத்தில்,ஒரு கம்பியின் மேல் போய் உட்கார்ந்து ஒரு நோட்டம் விட்டார்,சற்று தொலைவில் அவனையே பார்த்த வாறு காக்காணி...(நம் கதா நாயகி)...
காக்கானியின் மனதுக்குள் கற்பனை ஓடியது,"ஆள் அண்டங்காகம் தான் ஆனாலும் அம்சமாக இருக்கிறானே என்று"
அவள் வீட்டில் கலப்பு திருமணத்துக்கு ஒத்துக்கொள்வார்களா(இவள் சாதா காக்கை)என்று யோசித்தாள்...
சற்று நாட்களுக்கு முன் தன் தந்தை ஒரு கூட்டத்தில் பேசியது சாரி கரைந்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது...
"நாம் இன்று நம் பழைய வழிமுறைகளை கடை பிடிக்கிறோமா என்றால்,இல்லை என்றே சொல்ல வேண்டும்,இன்று யாராவது மனித பசங்கள் உணவு வைத்தால் நாம் பெயருக்கு மட்டுமே கரைந்து மற்றவர்களை கூப்பிடுவது போல் பாவ்லா செய்து விட்டு சாப்பாடை நாமே சாப்பிட்டு விடுகிறோம்,இது போல் மாறி வரும் பழக்கங்களுடன் நாம் இனி கலப்பு திருமணத்தையும் ஆதரிக்க வேண்டும்,இனி அண்டங்காகம் சாதா காகம் என்று பிரிவு இருக்க கூடாது "என்று அவர் பேசியது காக்கானியின் ஞாபகத்தில் வந்தாலும்,தன் மகள் என்றதும் தன் அப்பா என்ன சொல்வார்,என்று யோசித்தாள்..

அங்கே காக்காயன் மனதில்,"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ,"செல்லம்மா செல்லம்மா நில்லு நில்லு "என்று பல பாடல்கள் மனதிற்குள் கலந்து கட்டி ஆயிரம் வாட்ஸ் இல் அலறியது..
அங்கே அதற்கு சற்றே குறையாமல்,காகானியின் மனதில்"இவன் யாரோ இவன் யாரோ "என்ற பாடல் ஒளிபரப்பானது...

காக்காயனை நோக்கி ஜிவ்வென்று பறந்து வந்த காக்காணி எதிரே இருந்த கம்பியில் உட்கார்ந்தாள்...
மெதுவாக காக்காயனும் அவள் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு போனான்,அவர்களின் அலகு மெதுவாக slow motion இல் நெருங்கி..
நெருங்கி,ஒருவரின் அலகை மற்றவரின் அலகு தொட்டவுடன்,


"பளீர் என்ற வெளிச்சத்துடன்,படார் என்ற சத்தம் தொடர்ந்து வர,அங்கே இரண்டு உருவங்கள் புகைந்து கொண்டிருந்தது"

காரணம்,"+VE மற்றும் neutral கரண்ட் கம்பிகள்"
("இன்று இது ஆற்காட்டார் குறுக்கே வராமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்")

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ...அல்ல...அல்ல..."

------------------------
சரி இனி வழக்கமாக சோக்கு...(என் அப்பா எழுதி பத்திரிக்கையில் வந்தது)
"மனைவி:ஏங்க பக்கத்து வீட்டு நரசிம்மன் சார் உயிர் தூக்கத்திலேயே போயிருச்சாம்...
கணவன்:அட கடவுளே வா அவங்க வீட்டுக்கு போய் பார்க்கலாம்...
மனைவி:"கொஞ்சம் பொறுங்க பாடி இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையாம்"
-----------------------
titanic கப்பல் எப்படி முழுகியதுன்னு தெரியுமா?
தெரியாத சொல்றேன்...
"பொலக்,குபுக்,லுபுக் ,டுபுக்,புலுக்"அப்படின்னு...
ப்ளீஸ் சிரிக்காதிங்க,நானே சோகமா எழுதியது...
---
நன்றி...
உங்களுக்கு பிடித்ததா?
"do post your comment"
have fun,
-->கார்த்தி....cool

Monday, December 22, 2008

முடியுமா உங்களால் (பதிலளியுங்கள் பார்க்கலாம்)பார்ட்-4

இந்த முறை கொஞ்சம் கடினமான கேள்விகள் .....வழக்கம் போல் கலக்குங்க....


1. உங்கள் இனிப்பகத்தில் ,பத்து அட்டைபெட்டிகள் உள்ளது ,ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் பத்து மைசூர் பாகு (mysore
pak)உள்ளது ,ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது ,இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவல்
வருகிறது அதன் படி உங்கள் ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்
அளவுக்கு திருடிவிட்டான் என்று தெரியவருகிறது...துரதிஷ்ட வசமாக அந்த நேரத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் balance
இல் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடையை காண முடிகின்ற அளவுக்கு மட்டும் சார்ஜ் உள்ளது என்னும் நிலையில்,அந்த
அட்டை பெட்டி எது என்று நீங்கள் கண்டறிந்து அதை செய்தவனை நீக்க வேண்டும்...(ஒவ்வொரு அட்டை பெட்டியையும்
ஒருவன் pack செய்தான் என கொள்க)
(Hint:நீங்கள் ஒவ்வொரு அட்டை பெட்டியையும் திறந்து பார்க்கவும் ,தேவையென்றால் அதில் உள்ள இனிப்பை வெளியே எடுக்கவும் அனுமதி உண்டு(அதுக்காக நீங்களே சாப்பிட கூடாது))


2. இது situation handling வகையறா.....

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்து கொள்ளுங்கள் உங்களுடைய நோயாளி ஒருவர்க்கு இரண்டு வகையான மாத்திரைகளில்
இருந்து ஒவ்வொன்றிலும் ஒன்றை மட்டும் தர வேண்டும் என்னும் நிலையில் உங்கள் நர்ஸ் இரண்டு வகையான
மாத்திரைகளில் இருந்தும் இரண்டு இரண்டு எடுத்து வந்து விடுகிறார்,அதை பார்க்கும் உங்களுக்கு பயங்கர ஷாக் .ஏனெனில்
நான்கும் பார்க்க ஒரே மாதிரி தோற்றம் கொண்டவையாக உள்ளது,நோயாளிக்கு கண்டிப்பாக ஒரு வகையில் இருந்து ஒன்று
மட்டுமே கொடுக்க வேண்டும் ,ஒரே வகையில் இருந்து இரண்டு கொடுத்தாலோ அல்லது மாத்திரையே கொடுக்காமல்
போனாலோ நோயாளியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில் எப்படி இந்த நிலையை சமாளிப்பீர்கள்?
(மேலும் மாத்திரைகள் கைவசம் இல்லை )

3. நீங்கள் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில் ,ஒரு இருட்டு அறையில் உங்களுடைய சாக்ஸ்,ஐந்து
வெள்ளை சாக்ஸ் உம் ஏழு கருப்பு சாக்ஸ் உம் உள்ளது ,உங்களுக்கு ஏதோ ஒன்றிலாவது ஒரு ஜோடி சரியான ஜோடி யாக
அமைய வேண்டும் எனில் எத்தனை (ஜோடி அல்ல எண்ணிக்கை)சாக்ஸ் எடுப்பிர்கள்(உங்களால் பார்க்க முடியாது)

4. உங்களுடைய சட்டையை விட உங்களின் பாண்ட்(pant) இன் விலை நூறு ரூபாய் அதிகம்.....இரண்டும் சேர்த்தி 110 ரூபாய்
எனில் தனி தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்களேன்....

5. இது கொஞ்சம் டப்பா,சரி சரியான பதில் சொல்லுகிறீர்களா பார்ப்போம்,
இதற்கான பதிலை நீங்கள் முதலில் நினைத்ததை தான் சொல்ல வேண்டும்....

நான் சொல்லும் எண்களை எல்லாம் அப்படியே கூட்டி கொண்டு வாருங்கள்....

முதலில் பத்துடன் ஆயிரம் கூட்டவும்,

பின்பு அதனுடன் ஒரு அறுபதை கூட்டவும்...

இப்பொழுது வரும் விடையுடன் ஒரு இரண்டாயிரம் கூட்டவும்

அதனுடன் ஒரு இருபது கூட்டவும்....

அதனுடன் ஒரு ஆயிரம் கூட்டுங்கள் ...

இப்பொழுது ஒரு பத்தை மட்டும் கூட்டி விடை சொல்லுங்களேன்....
--------------------------------
(comment moderation enable பண்ணி உள்ளேன்)

----------------------------------------

Friday, December 19, 2008

பிடித்த சில வரிகள்...+சில ஜோக்ஸ் வழக்கம் போல்,


இந்த முறை,எனக்கு பிடித்த சில வரிகளை இங்கே தந்துள்ளேன்...
வழக்கம் போல் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட்டிடவும்...

"Defeat the defeat before the defeat defeats you"
-------------------
"There is no psychiatrist,performing better than your(a) puppy licking your face"(how true)...
-------------------
"This world may be a hell/heaven to some other world..."
------------------
"I'm not afraid of one who knows 10,000 kicks,but I'm really afraid of that one who practices a kick 10,000 times"
->Bruce Lee
-------------------
"The real goal of education is to train the mind to think"
------------------
ஒரு முறை ஐன்ஸ்டீன் இடம் ஒருவர் கேட்டார்,
"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும்"
ஐன்ஸ்டீன்:"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியாது,ஆனால் நான்காம் உலக போர் நிச்சயம் குச்சியாலும்,கற்களாலும் தான் நடக்கும்"
என்றார்...
------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"

சொல்லி இருப்பாள் என்று...
------------------
"Speak softly and carry a big stick; you will go far."
------------------
“To err is human; to blame it on somebody else is even more human.”
------------------
“You are educated. Your certification is in your degree. You may think of it as the ticket to the good life. Let me ask you to think of an alternative. Think of it as your ticket to change the world."
------------------
"If you don't like the rules in your company,try hard,work sincerely and go places in the positions and acquire the top,then change the rule..."
------------------

சில ஜோக்ஸ் வழக்கம் போல்,
------
சர்தார் தன் கேர்ள் friend இடம் :இன்று மாலை என் வீட்டுக்கு வா வீட்டில் யாரும் இருக்க மாட்டர்கள்...

சர்தாரின் வீட்டுக்கு செல்லும் அந்த பெண் அதிர்கிறார்....உண்மையில் வீட்டில் யாரும் இல்லை....
---------------

டீச்சர்:ஜானி சொல்லுங்கள்,நீங்கள் சாப்பிடும் முன் prayer பண்ணுவீர்களா?
ஜானி:"இல்லை,என்னோட அம்மா நன்றாகவே சமைப்பார்கள்"...
------------------
ஜானி,உன்கிட்ட ,நாய் பத்தி நான் எழுதிட்டு வர சொன்ன essay உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?....
ஜானி:"ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் டீச்சர் அதான்"
------------------
டீச்சர்:"அங்கே ஒரு அழகிய பெண் போகிறாள்",எங்கே ஜானி இதை ஆச்சர்ய வாக்கியமாக மாத்து...
ஜானி:"டேய் மச்சான் சூப்பர் பிகரு டா !"
------------------
நன்றி,-->கார்த்தி....cool

Thursday, December 18, 2008

Illusion......(கண்ணை நம்பாதே)

சில படங்கள் நம் கண்ணை ஏமாற்றி விடும் அந்த வகையை சார்ந்தது தான் இந்த படம்.....என்ன அலை அடித்ததா?
உண்மையில் அந்த இதழ்கள் அப்படியே தான் இருக்கின்றன நம் கண்கள் தான், அலை அடிப்பது போன்றதொரு பிம்பத்தை உருவாக்கி உள்ளது.....


இன்னும் சில வித்தியாச படங்கள்....

இங்கு எத்தனை தூண்கள் உள்ளது?


இங்கு

இங்கு உள்ளவர்களில் யார் உயரமானவர்?

இங்கு என்ன காண்கிறீர்கள்?


நடுவில் இருக்கும் புள்ளியை உத்து பார்த்து கொண்டு முன்னும் பின்னும் நகருங்கள்....


அருவியா,மக்களா?
impossible ring.....
எத்தனை பேர் ?
குதிரைகள் தெரிகிறதா?
கப்பல்களா அல்லது பாலமா?

Announcement(முக்கிய அறிவிப்பு)

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்,பங்குச்சந்தை வீழ்ச்சி,பண வீக்கம்,அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காண்பது,குண்டு வெடிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய அறிவிப்பாக நாளைய தினத்தை,

















வெள்ளி கிழமையாக அறிவித்துள்ளது......

என்ன கடுப்பாகுதுதானே,எனக்கும் இப்படி தான் இருந்தது....
இது கூட பரவாயில்லை கொஞ்சம் நாளைக்கு முன்னால் சென்னையை மிரட்டிய மழையின் போது ஒருத்தன் msg அனுப்பி இருந்தான்
"Due to heavy rains in Tamil Nadu Our government has announced tomorrow as
Friday"

அடுத்த நாள் எனக்கு செமஸ்டர் எக்ஸாம்,கிட்ட தட்ட எழுந்து குதிக்கலாம் என்று போனவன், கடைசி வார்த்தையை கண்டு பயங்கர கடுப்பு,அவனுக்கு சரியான மண்டகப்படி நடத்தி விட்டு தான் ஓய்ந்தேன்....
ஹி ஹி ஹி அதான் நாமும் அதை ட்ரை பண்ணால் என்ன என்று சும்மா பதிவாக போட்டேன்....
(இது நகைச்சுவைக்காகவே,இது எல்லாம் என்ன உனக்கு விளையாட்டாக போய் விட்டதா என்று யாரும் கேட்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்)
(இதை பார்த்து கடுப்பாவர்கள் மண்டகப்படி கொடுக்க வேண்டாம் என கேட்டு கொள்ள படுகிறார்கள்)

Wednesday, December 17, 2008

நகைச்சுவை:விஜய் fans Not allowed-பார்ட்-2 (நகைச்சுவைக்காக மட்டுமே)



இது நகைச்சுவைக்காகவே,நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் வெளியேரிடவும் ...
(நான் யாரோட fan உம் இல்லை ) டாக்டர் விஜய் பற்றி எனக்கு sms மற்றும் மெயிலில் வந்தவையின் தொகுப்பு தான் இவை....என்னை அவை கவர்ந்ததால் மட்டுமே இங்கே....
நான் ஏற்கனவே எழுதிய விஜய் fans Not allowed வெற்றி பெற்றதை தொடர்ந்து இவை.... எப்பொழுது டாக்டர் விஜய் படங்கள் ரிலீஸ் ஆனாலும் எனக்கு sms குவிந்துவிடும்,அதில் என்னை கவர்ந்தவை...


---------------------------
நண்பர்:நான் elevator ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....
டாக்டர் விஜய் :நீங்களாவது பரவாஇல்லை,நான் மூன்று மணி நேரம் escalator ல நிக்க வேண்டியதாயிடுச்சு...


---------------------


விஜய் fan:தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....


இளயதளபதி:நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....


---------------------


கின்னஸ் புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,


"யார் அந்த குருவி விஜய்"


----------------------


ஒருவர்:அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?


மற்றொருவர்:யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...


------------------------


ரசிகர்:ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....


உமா:கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...


-------------------------


போலீஸ்:இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?


கைதி:பில்லா படம் பார்க்கணும்...


போலீஸ்:அங்க கூட்டமா இருக்கும் குருவி போகலாமா?


கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...


---------------------------

விஜய் rocks.....
---------
திரும்ப சொல்லிடறேன் நான் யாரோட fan உம் இல்ல....
----

Tuesday, December 16, 2008

அப்பாக்களின் மேற்பார்வையில் குழந்தைகள்(funny images)

அப்பாக்களின் மேற்பார்வையில் குழந்தைகளை விட்டு விட்டு சென்றால் என்னாகும்?

நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்....

டேய் தம்பி எடுரா பைன்....
(கோர்ட் போனாஆயிரம் இங்கேயேன்னா ஐநூறு ....எப்படி வசதி?)

சுகமான குளியல்....


நான் பெரிய ஆர்டிஸ்ட்....



how is it?



நம்ம நாய் தானே....





எங்கே என்னோட ஐஸ் கிரீம்?







அப்பா தான் ரொம்ப சூட இருக்குதுன்னு சொன்னார் அதான் ஆத்தலாம்னு....



ஏவ்......(சூப்பர் சாப்பாடு)
கல்யாண சமையல் சாதம்...இதுவே எனக்கு போதும்....

















Monday, December 15, 2008

நகைச்சுவை:இன்னும்கொஞ்சம் சோக்கு பார்ட்-2

இந்த முறையும் சில பல சோக்குகள்.....சில மட்டுமே சொந்த சரக்கு.....
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் உண்டு....
அது ink பெண்ணாகவோ அல்லது refill பெண்ணாகவோ ,பால் பாயிண்ட் பெண்ணாகவோ,ஜெல் பெண்ணாகவோ இருக்கலாம்...

------------
பொண்ணு 1:ஹனீ மூன் போயிட்டு வந்ததுல இருந்து ஏன் உன் கணவர் ரொம்ப கோவமா இருக்கார்?

பொண்ணு 2:அது ஒன்னும் இல்ல அவர கூட்டிட்டு போகல அப்படின்ற வருத்தம்....
-----------
பாகிஸ்தானில் மாணவர்கள் படிக்கும் சில படிப்புகள்....
BE -Bomb Engineering

M.B.B.S-Mastering Bomb Blast Skills

IIT-Islamabad Institute of Terrorism

CAT-Career in Alqueda and Taliban

MTech-Masters in Terror Technology

LLB-Learning Licence of Bomb Blasting
BSc-Bio-Weapon Science
----------------
நீங்கள் காதலில் விழுந்தவரா?
அதற்கான சில அறிகுறிகள்....

1.நீங்கள் மெலடி பாட்டுக்களையே விரும்புவீர்...

2.உங்கள் அவரின் பெயரை எங்கு பார்த்தாலும் உள்ளுக்குள் சரேல் என்று ஒரு மின்னல் பாயும் ,அந்த இடத்திலயே நின்று சிறிது சிரித்து விட்டு எக்கச்சக்கமாக அசடு வழிவீர்கள்....

3.நண்பர்கள் ஓட்டும் போது,சிறிதும் சொரணை இல்லாமல் புத்தர் போல் சிரிப்பு ஒன்றை உதிர்ப்பீர்கள்....

4.ஏதோ ஷெல்லி ,பைரன்,வைர முத்து போல் டகால்ட்டி காட்டி ,கவிதா அவதாரம் எடுப்பீர்கள்...(கவிதை எழுதும் சக பிளாக்கர்கள் கவனிக்க)

6.ரோட்டில் நடக்கும் போது குப்பையை கூட ரசித்தவாறு,கொஞ்சம் குப்பை நிறையா சுத்தம் என்று கன்னா பின்னாவென்று உளறி கொட்டுவீர்கள்...

7.நீங்கள் இதில் ஐந்தாவது பாயிண்ட் மிஸ் ஆனதை கண்டிருக்க மாட்டீர்கள்...

என்ன சரியா?
சரி யார் சார் அந்த பிகரு?
-----------
மூன்று சர்தார்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது,traaffic போலீஸ் கை காட்ட ,மூவரும் கோரசாக....
சாரி சார் எடம் இல்ல.....
-----------
டீச்சர்:ஏண்டா லேட்?

நம்ம ஸ்டுடென்ட்:ஒரு ஆள் வர வழியில நூறு ரூபாயை காணாம தேடிட்டு இருந்தார்...

டீச்சர்:குட் எடுத்து கொடுத்தியா?

நம்ம ஸ்டுடென்ட்:இல்ல டீச்சர் அவரு போற வரைக்கும் அது மேல நின்னுட்டு இருந்தேன்....
-------
கணவன்:
குழந்தை அழறது கூட தெரியாம அப்படி என்ன சீரியல் பாக்கற?

மனைவி:சும்மா இருங்கள் குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுது...
--------
நன்றி உங்களுக்கு பிடித்ததா?பிடித்ததை சொல்லவும்....
நன்றி கார்த்தி....

முடியுமா உங்களால்(பதிலளியுங்கள் )பார்ட்-3


இந்த முறை சற்று வித்தியாசமாக உங்களுக்கு கேள்விகள்....

சென்ற முறை அனைவரும் பின்னி பெடலேடுத்து இருந்தீர்கள்....எனவே இந்த முறை சற்று கஷ்டமாக.....


கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியை தொடர்ந்து முதல் கேள்வி....


1.ஒரு ஆட்டத்தில் இரண்டு batsmen, இருவரும் 96 இல் உள்ளார்கள் இன்னும் ஆட்டம் முடிய இரண்டே பந்துகள் உள்ளன என்னும் நிலையிலும்,இன்னும் ஆறு ரன்கள் எடுத்தால் ஆட்டம் வெற்றி என்றும் உள்ளது,இந்நிலையில் இருவரும் சதம் கடக்க வாய்ப்பு உள்ளதா?உள்ளது என்றால் எப்படி.....



2. இது வித்தியாசமான ,clue மூலம் வார்த்தையை கண்டு பிடிக்கும் வகை...

இது ஆங்கில வார்த்தை...

a.I'm kept secret by everyone.

b.my 2 3 4 is an animal..

c.my 3 5 6 7 8 is a fighting weapon

d.my 1 2 8 is used for writing...(not in system)

e.my 3 4 are the same.....


find me.....


3. அது ஒரு இரவு,ஒரு பாலம் உள்ளது அந்த பாலத்தை கடக்க நால்வர் உள்ளனர்,அவர்களில் முதலாமவன் ஒரு நிமிடத்திலும்,இரண்டமாவன் இரண்டு நிமிடத்திலும் மூன்றாமவன் ஐந்து நிமிடத்திலும் கடக்க கூடியவர்கள்,நான்காமவர் ஒன்போது நிமிடத்திலும் கடக்க கூடியவர்,இந்த நிலையில் அந்த பாலத்தை லாந்தர் இன்றி கடக்க முடியாது,மற்றும் ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையும்,கையில் ஒரே ஒரு லாந்தர் மட்டுமே உள்ளது என்னும் நிலையில்,இருவர் அந்தபுரம்(அந்த பக்கம்...ஹி ஹி )சென்றால் மற்றவர் பயன் பாட்டுக்கு லாந்தரை கொடுக்க வேண்டும் என்பதால் ஒருவர் மீண்டும் இந்த புறம் வர வேண்டும்......

என்னும் நிலையில் ஐந்து பேரும் எவ்வளவு குறைந்த நேரத்தில் அந்த பாலத்தை கடப்பார்கள்?
(குறிப்பு:முதலாமவரும் ,நான்காமவரும் செல்கிறார்கள் என்றால் இருவரும் போய் சேர ஆகும் நேரம் 9 நிமிடங்கள்)


4. இது கொஞ்சம் பழசு என்றாலும்,திறமையை சோதிக்க வல்லது, ஓரு ஊரில் இரண்டே இரண்டு முடி திருத்துபவர்கள் தான் உள்ளார்கள் ,அதில் ஒருவனின் தலை முடி கந்தர கோலமாக,சரியான படி வெட்டப்படாமல்,அசிங்கமாக உள்ளது ஆனால் மற்றவனின் தலைமுடியோ அழகாக ,ஒழுங்காக உள்ளது என்னும் நிலையில் நீங்கள் யாரிடம் முடி வெட்டி கொள்ள செல்வீர்கள்....


5. இது situation handling வகையறாவை சார்ந்தது....

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களை வேலையை விட்டு தூக்க நினைத்து உங்களுக்கு ஓரு வாய்ப்பாக,சீட்டு குலுக்க முடிவு செய்கிறது ...இரண்டு சீட்டுகள் உங்கள் முன் போட படும்,ஒன்றில் தொடரலாம் என்றும் மற்றதில் வெளியே போடா என்றும் எழுதியிருக்கும் ,நீங்கள் எதை எடுக்குரீர்களோ அதன் படி முடிவு எடுக்கப்படும் என்கிறது நிர்வாகம்,

இந்நிலையில் CBI (கொஞ்சம் ஓவர் தான்)மூலம் நீங்கள் அறிந்து கொள்வது என்னவென்றால்,இரண்டிலும் ஒன்றே தான் ,அதாவது வெளியே போ என்று தான் எழுதியுள்ளது என்று அறிகிரிர்கள்...உங்கள் முன் சீட்டுகள் போட பட்டு விட்ட நிலையில்...நீங்கள் எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள்?


நன்றி கூல்....உங்கள் கார்த்தி...

இந்தியா வெற்றி....


நேற்று சேவாக் ஆரம்பித்து வைத்ததை கச்சிதமாக லிட்டில் மாஸ்டர் மற்றும் யுவி முடிக்க சாதனை வெற்றியாக முடிந்தது இன்றைய ஆட்டம்....ஆரம்ப இணையான காம்பிர் மற்றும் சேவாக் இன் வெற்றி கூட்டணி மீண்டும் பலன் அளித்துள்ளது....ஒருவர் புயல் என்றால் மற்றவர் தென்றல்....ஆனால் இரண்டிலும் காற்று அடிக்கும் என்பதை கொள்க...
முதல் இரண்டு நாட்க்களில் கிடைத்த ஏமாற்றத்தை கண்டு கொஞ்சம் நொந்தாலும்,நேற்று சேவாக்கின் அற்புத ஆட்டம் அனைத்தையும் ஈடு செய்தது....
இரண்டாவது இன்னிங்க்சில் ,சேவாக்கின் ஆட்டம் மட்டும் இல்லை என்றால்,நாங்கள் defensive ஆட்டம் தான் ஆடி இருப்போம் என்று தோனியே ஒத்து கொண்டுள்ளார்....(அதாவது சமன் செய்ய)நம் ஆட்க்களின் பிரச்சினையே இது தான்...நம்மில் பலருக்கு மட்டை போடவே தெரியாது என்று தோன்றுகிறது(உம்ம்ம் சேவாக்,யுவராஜ் போன்றோர்)அப்படி இருக்க சமன் செய்வத...எனவே வீறு கொண்டு எழுந்த வீருவின் அடி அட்டகாசம்....அவர் அதை விரும்பினார்,மக்களும் தான்...அவரின் அதிவேக ரன் குவிப்பு முடிந்ததும் இனி என்ன ஆகுமோ என்ற பயம் தொற்றிகொண்டது....நம் ஆட்களை நம்பவே முடியாது....ஆனால் பொறுப்பாக ஆடிய காம்பிர்,சரியாக தன் பங்கை முடித்து வெளியேற...சச்சின் தன் கணக்கை தொடங்கினார்...அவரின் ஒவ்வொரு அடியும்(டிரைவ்)அற்புதமாக தேர்ந்த ஆட்டகாரருக்கே உரியதாக அமைந்தது,அவரின் சத்தம் அவருக்கு அவரின் மகுடத்தில் மற்றுமொரு மணிமுடி.......யுவராஜின் விஸ்வரூபம்(ஹி ஹி வழக்கமான அடி)இங்லாந்து மேல் விழுந்த மற்றொரு இடி....
குறிப்பாக இங்கிலாந்தினருக்கு ஒரு நாள் போட்டியாகட்டும் அல்லது டெஸ்ட் ஆகட்டும் அவர்களின் சிம்ம சொப்பனம் யுவி தான்(ட்வென்டி 20 யும் சேர்த்து கொள்க)
நடுவே லக்ஸ்மன் தன் பங்குக்கு செவ்வனே இருபத்தி ஆறு அடிக்க ...திராவிட் ஹ்ம்ம் சொல்ல ஒன்றும் இல்லை....அவரை சிறிது ஆட்டம் கழித்து விளையாட விடலாம்...அவர் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் அல்லது...அவர் அடுத்த தொடரில் இனி கிரிக்கட்டில் இருந்து ஓய்வு என்று அறிவிப்பு விடும் படி ஆகலாம்(அட நம்புங்கப்பா அவரே தான் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார்,என்னது,என்ன சொன்னிங்க? ஹலோ நீங்க சொல்றது என் காதுல விழவில்லை )
கன கச்சிதமான் ,எல்லோரும் சொல்வது போல் ஒரு வரலாற்று வெற்றி தான் அதில் சந்தேகம் இல்லை.... அனைத்திற்கும் பின்னால் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விசயமும் உள்ளது...அது டோனி....

இதுவரை அவரின் தலைமையில் இந்தியா ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சமன் கூட அல்ல ..வெற்றியே பெற்றுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.....


Score card:


நன்றி cricinfo.....


R M B 4s 6s SR


G Gambhir c Collingwood b Anderson 66 201 139 7 0 47.48


V Sehwag lbw b Swann 83 102 68 11 4 122.0௫


R Dravid c Prior b Flintoff 4 31 19 0 0 21.0௫


SR Tendulkar not out 103 317 196 9 0 52.55


VVS Laxman c Bell b Swann 26 54 42 4 0 61.90


Yuvraj Singh not out 85 196 131 8 1 64.88


Extras (b 5, lb 11, nb 4) 20


Total (4 wickets; 98.3 overs; 453 mins) 387 (3.92 runs per over)

Saturday, December 13, 2008

sms இல் வந்த சில சோக்கு...

இவை எனக்கு sms இல் வந்த சில குறிப்பிடும் படியான வித்தியாச சோக்குகள்......
நைட்ல தூக்கம் வரலியா,கவலை படாதிங்க,கஷ்ட படாதிங்க,
நான் சொல்ற படி கேளுங்க ,நேரா போங்க ஒரு கண்ணாடிய எடுங்க உங்க முகத்த பாருங்க தூக்கம் என்ன மயக்கமே வரும் .....
----------------
எனக்கு நீங்கள் அதிகப்படியான comment எழுதி ,tamilish மற்றும் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டால் நீங்கள் ஜெயிக்கலாம்,
1. ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள காரின் போட்டோ

2. 29 இன்ச் கலர் டிவி யோட அட்ட பெட்டி.....

3. சிங்கப்பூர் செல்லும் விமானத்துக்கு டாட்டா காட்டும் அரிய வாய்ப்பு......

4. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பம்பர் பரிசாக உங்கள் அபிமான கார்த்தியுடன்(நாந்தேன்)breakfast /lunch /dinner அதுவும் உங்கள் செலவில் ....
முந்துங்கள் இச்சலுகை குறைந்த காலம் மட்டுமே....
-------------------
Flash News: தமிழகத்தில் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் என்று மாறியதில் இருந்து ஓட்டல்களில் அதிரடி விலை மாற்றம்.....
சாம்பார் அல்லது சட்னி =ரூபாய் 15
{சைடு டிஷ் :இட்லி முற்றிலும் இலவசம்}
சாம்பார்+ரசம்+மோர்=ரூபாய் 35
{side டிஷ் சாதம் ஆம் இலவசம்}
offer ஒன்லி இன் தமிழ்நாடு....
---------------------
நம் சர்தார் இல்லாமலா ?
இதோ உங்கள் சர்தார்.....
மனைவி:என்னங்க உங்கள பார்க்க டாக்டர் வந்து இருக்கார் ...
சர்தார்:எனக்கு உடம்பு சரியில்லை யாரையும் பார்க்க முடியாது அப்படின்னு சொல்லி அனுப்பு......
----------------------
சென்னையை கலக்கிய நிஷா புயலுக்காக நினைவு பாடல்.....
"நிஷா நிஷா ஓடி வா
working days ல ஓடி வா
மலை மேகம் கொண்டு வா
தங்கச்சி உஷாவையும் கூட்டி வா"
இதை பலருக்கும் அனுப்பி இன்னும் ஒரு வாரம் லீவ் பெறுங்கள்....
------------------------
என்ன உங்களுக்கு பிடித்ததா......have fun நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்......
கூல் கார்த்தி.....

Thursday, December 11, 2008

Technology: நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் CTRL +C மூலம் செலக்ட் செய்வது இங்கே....



நீங்கள் அடிக்கடி மற்ற தளங்களுக்கு செல்பவரா?
அப்படி செல்லும் போது பாஸ் வார்த்தைகள்,இன்ன பிற முக்கிய சமாச்சாரங்களை copy செய்து வைத்து இருந்தால்,அதை மாற்றி விடுங்கள்.....
ஏனெனில் உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் copy செய்ததை extract செய்து விட முடியும்.....(clipboard இல் உள்ளதை clipboard extracter என்னும் javascript மூலம் )
என்ன நம்பமுடியவில்லையா?இதை முயற்சி செய்யுங்கள்.....
முதலில் ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்டை copy செய்து கொள்ளவும்....
பின்பு இங்கு க்ளிக்கவும் அல்லது(வர வில்லை என்றால்)உங்கள் இன்டர்நெட் explorer இல் இருந்து இந்த அட்ரஸ் கொடுக்கவும்...http://www.sourcecodesworld.com/special/clipboard.asp

இது ஏனோ firefox வெப் ப்ரோவ்செரில் காட்டவில்லை,எனவே நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் இன்டர்நெட் explorer பயன்படுத்தவும்.....
உங்களுடைய password மற்றும் copy பண்ணிய சில முக்கிய வார்த்தைகள் திருடப்படும் பயம் இருந்தால் firefox இல் உலவவும்....

hack பண்ணுவதற்கான code:


நன்றி....உபயோகமாக இருந்ததா?

புதியது:முடியுமா உங்களால்.(விடை அளியுங்கள் பார்க்கலாம்)பார்ட்-2

சென்ற இதழில்,சாரி சென்ற போஸ்டில் கொடுத்த கேள்விகள் வகை, வெற்றி பெற்றதை தொடர்ந்து...அதன் தொடர்ச்சி....
* நீங்கள் ஒரு காரை ஓட்டி கொண்டு செல்கிறீர்கள்,அப்பொழுது இரண்டு ஜோடிகள்(couples) லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார்கள்,
அதில் முதல் ஜோடியில் கணவனின் வயது (22+17-1*5+20/5)
மனைவியின் வயது (21+16-1*4+16/4)
இரண்டாம் ஜோடியில் கணவனின் வயது, (20+15-1*3+12/3),
மனைவியின் வயது ,(19+14-1*2+8/2) எனில்
அந்த காரின் ஓட்டுனரின் வயது என்னவாக இருக்கும்.?..... (தெளிவாக எப்படி என்று விளக்கவும்)

* இது situation handling வகையறாவை சார்ந்தது,
நீங்கள் ஒரு interview இல் உள்ளீர்கள்...நீங்கள் சொல்லிய பதில் நிச்சயம் சரி என்று உங்களுக்கு தோன்றுகிறது,ஆனால் interviewer தவறு என்கிறார் ...
இந்த சமயத்தில் நீங்கள் சரியான விடையை கேட்பீர்களா அல்லது வேறு என்ன கேட்பீர்கள்?
* உங்களிடத்தில் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் கொடுக்க படுகிறது,அப்பொழுது உங்களுக்கு CBI இருந்து போன் ,நீங்கள் வைத்து இருக்கும் ஒன்பது நாணயங்களில் ஒன்று போலி என்றும் அது மற்றவற்றை விட சற்று எடை குறைவானது என்கிறார்கள்,அது எது என்று நீங்கள் கண்டு பிடித்து தூக்கி போடா விட்டால் பிரச்சனை...அனைத்தையும் தூக்கி போட முடியாது உங்களுக்கு எட்டு ரூபாய் அவசியம்,பக்கத்தில் ஒரு தராசு உள்ளது ஆனால் அது இரண்டு முறை மட்டுமே எடை காட்டும் பின்பு அறுந்து விடும் என்னும் நிலையில் எப்படி போலியை கண்டு பிடிப்பிர்கள்?
*இது சும்மா லாஜிக்,
if,
1=5
2=6
3=7
4=8 எனில்,
5=?
* மாவீரன் நெபோலியன் சிறையில் இருக்கும் போது எழுதப்பட்டதாக சொல்லப்படும் இந்த வாக்கியத்தின் சிறப்பு?
"Able was I Ere I saw Elba"

நான் ஒவ்வொரு வாரமும் இது போன்று கேள்விகள் நிறைந்த post இரண்டு போடலாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்,உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க படுகிறது....
comment கண்டு பலர் விடை அளிக்காமல் சென்று விடுவதால் comment moderation enable பண்ணி உள்ளேன்.....
நன்றி கார்த்தி.....
விடைகளை எதிர்பார்த்து.....

Wednesday, December 10, 2008

இன்னும் கொஞ்சம் சோக்கு....


இது நல்ல காமெடி,சற்றே பழசு என்றாலும் நிச்சயம் சிரிக்க வைக்கும்....

Bond Meets an andhra guy,

BOND:hai I'm bond, James Bond....

Andhra Guy:Hey I'm Naidu,
venkata naidu,
siva venkata naidu,
lakshmi narayana sivavenkata naidu,
srinivasalu lakshmi narayana siva venkata naidu,
rajasekara srinivasulu lakshmi narayana siva venkata naidu,


Bond Committed suicide.....

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...

ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,

பைக் என்றார் அமைதியாக...


அடுத்தது...

ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தொங்க சென்று விட்டார்...
அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",
என்றார்...
ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,
அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,

முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?
ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,
அடுத்து சர்தார்:அது போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....

மறுபடியும் முட்டாள் சர்தார்....

சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,முதலாமவர் நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?
இரண்டாமவர் என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,

"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...

ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொள்வாய்?
மற்றொருவன்,சிம்பிள் கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....


detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....

மீண்டும் சந்திப்போம்.....

மீண்டும் மீண்டும் சர்தார்..


இதோ உங்கள் சர்தார் மறுபடியும்....

ஒரு முறை சர்தார் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று அங்கிருந்த பிரிட்ஜ்ஐ(fridge)எவ்வளவு என்று கேட்டார்...

அமைதியாக அந்த கடைக்காரர் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

இதனால் உசுப்ப பட்ட சர்தார் ,ஒரு சர்தாருக்கு அதை நீ விற்கத்தான் போகிறாய் என்று மனதுக்குள் சொல்லிய வாறு...

தன் தலை பாகையை எடுத்துவிட்டு போய் அந்த fridge என்ன விலை என்று கேட்டார்...அந்த கடைக்காரன் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

அதிர்ச்சி அடைந்தாலும் காட்டி கொள்ளாத சர்தார்...

அடுத்த முறை தாடி எல்லாம் எடுத்து விட்டு,வந்து கேட்டார் அப்பொழுதும் அதே பதிலையே கடைக்காரன் சொல்ல...
சற்றும் மனம் தளராத சர்தார் மொட்டை போட்டு விட்டு இரண்டு foreigners உடன் ஒரு வில்லனை போல் வந்து கேட்க மீண்டும் அந்த கடைக்காரன் அதே பதிலையே தந்தான்...

மனம் நொந்த சர்தார் அவனிடமே நேராக சென்று...தன் தோல்வியை ஒப்பு கொண்டு,எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டார்...

அதற்க்கு அந்த கடைக்காரன் ,"ஏன்னா சர்தார் மட்டும் தான் 'வாஷிங் மெஷின்'ஐ பார்த்து fridge அப்படின்னு சொல்வார்"என்றான் கூலாக..

Tuesday, December 9, 2008

முடியுமா உங்களால்.(விடை அளியுங்கள்)


சில கேள்விகள் பார்க்க ஒன்றும் இல்லாதவை போல் தோன்றினாலும்,அதன் ஆழம் நம்மை வியக்க வைக்கும்,பிறகு தான் நம் தவறு நமக்கு புரியும்,அவற்றில் சில,

1.மேரி இன் அப்பாவிற்கு நான்கு குழந்தைகள்,
முதல் குழந்தையின் பெயர் AIBQ


இராண்டாவது குழந்தையின் பெயர் BJCR


மூன்றாவது குழந்தையின் பெயர் CKDS


எனில் நான்காம் குழந்தையின் பெயர்?

2.இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,

நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...
3.typical classical question இது,
ஒரு வித்தியாசமான அல்லி செடி ஒரு நாளில் இரண்டு மடங்காக பெருகும்,அந்த செடிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குளத்தை மூட நூறு நாட்கள் எடுத்து கொண்டன எனில்,அந்த குளத்தில் பாதியை மூட எத்தனை நாட்கள் எடுத்து கொண்டிருக்கும்?
4.நீங்கள் ஒரு சிறிய குளத்தில் ஒரு படகில் போகும் போது கடுமையான மழை வந்து விடுகிறது,உங்கள் படகில் இருந்து ஒரு கயிறு 50 cm கீழே நீட்டி கொண்டிருக்கிறது,அதில் குளத்தில் 25 cm உள்ளது எனில் முழு 50 cm குளத்தில் மூழ்க எவ்வளவு நேரம் ஆகும்?மழை குளத்தை நிமிடத்திற்கு இரண்டு cm என்ற நிலையில் நிரப்பி கொண்டு வருகிறது....
5.ஒரு physics question,ஒரு பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன படகு போன்ற பொருளை மிதக்க விடுகிறிர்கள்,அந்த படகில் ஒரு கல்,இரண்டு இரும்பு துண்டு உள்ளது,அந்த படகு கஷ்ட பட்டு மிதக்கிறது,இப்பொழுது நீங்கள் அந்த கல்லையும் இரும்பையும் படகில் இருந்து எடுத்து அது மிதக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுகிரிர்கள் இப்பொழுது அந்த பாத்திரத்தை நிரம்பி இருந்த தண்ணீரின் level குறையுமா கூடுமா?



பதில்களை comment மூலம் சொல்லலாம்.

விடை காண முடியாத கேள்விகளுக்கு பின்னால் விடை தரப்படும்.

சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள்


இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?
இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா.
கணேஷும் வசந்தும் இனி இல்லை என்று நினைக்க முடியவில்லை,நாம் பார்க்கும் பலரின் சாயல் அவர்களை போல் உள்ளதை நாம் காணலாம்,அதுதான் சுஜாதா,எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்.
என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?போன்ற கேள்விகள் முன் நிற்கிறது.மற்றும் அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?.

சரி இனி குட்டி கதைகள்,
1.கதையின் தலைப்பு:
சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.
கதை:பார்த்து concealed wiring தம்பி.
2.தலைப்பு:கரடி வேடமிட்டவனின் கடைசி வார்த்தை:
கதை:என்னை சுட்டுடாதிங்க
3.இந்த கதை நானே எழுதியது...(மெய்யாலுமே)
தலைப்பு:கடைசி மனிதன் டாக்டர்கள் புடைசூழ மரணபடுக்கையில்,
கதை:கைவிரித்தன ரோபோட்டுகள்.
4.தலைப்பு:காஸ் லீக் ஆகிறதா என்று பார்க்க சுவிட்ச் போட்டான்,
கதை:இருந்தது,வயது 24, கண்ணீர் அஞ்சலி மாலை ஐந்து மணிக்கு.

நான் ரசித்த கவிதைகள்....

இவை அனைத்தும் கடைசி வரியில் ஒரு சின்ன ட்விஸ்ட் கொண்டுள்ள வகையை சார்ந்தவை எனக்கு பிடித்தது....உங்களுக்கு?

1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்.
2. பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை,
தினமும் தன் கணவன் படத்திற்கு.
3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா?
தீக்குச்சி
4.அம்மண சிறுவன் கீழே,
வெட்கமின்றி காற்றில் பறக்கும் கொடி.
5.வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்
நிலவை அசைத்தான் குளத்தில்.

Saturday, December 6, 2008

நகைச்சுவை (funny images)அதிர்ச்சி + சிரிப்பு...

சமிபத்தில் என்னுடைய மெயிலில் வந்த படங்கள் இவை....இது ஒரு பான்டா (panda)கரடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் காட்டுவதாக இருந்தது..
முதலில் அனைத்தையும் ஒரு வித ஆர்வத்தோடு கண்டு வந்த நான்,கடைசி படத்தை பார்த்ததும் சின்ன அதிர்ச்சி,பின்பு சுதாரித்து கொண்டு வெகு நேரம் சிரித்தேன் ...நீங்களும் பாருங்க சிரிங்க.....(don't miss the last one)...

warning: இது நகைச்சுவைக்காகவே ,யாருடைய மனத்தையும் புண் படுத்தும் நோக்கத்தோடு வெளியிட்டது அன்று....(நகைச்சுவை உணர்வு அற்றவர்கள் மற்றும் சிடு மூஞ்சிகள் அனைவரும் வெளியேரிடவும்)




இது பான்டா பிறந்தவுடன்....






இங்கு தான் இது பான்டா என்பதே தெரியவரும்....


















ஹலோ இங்கேயே நின்னுட்டா எப்படி,இன்னும் கொஞ்சம் கீழே வாங்க....
|
|
|
|
|
|
|
|
|

இன்னும் வாங்க....













இப்பொழுது அந்த பான்டா ஒரு தமிழ் சூப்பர் அடுக்கு மொழி நடிகர்....

எனக்கு முதலில் பார்த்தவுடன் ஒன்றும் புரியவில்லை,புரிந்தவுடன் சற்று அதிர்ச்சி,பின்பு சிரிப்பு தான்....
ஆனாலும் அதிகம் மீடியாக்களில் அடிபடுபவர் நம்முடைய T .R தான்....
உங்களுடைய கருத்தை தெரிவிக்க மறக்காதிர்கள்...
நன்றி cool...கார்த்தி
Blog Widget by LinkWithin