Saturday, August 30, 2008

பனியாரமும் நானும்

நிச்சயம் பலருக்கு கடலை(வறுத்த கடலை.)பிடித்தமான தீனியாக இருக்கும்,நானும் விதிவிலக்கல்ல....எங்கள் வீட்டில் கடலையை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று கண்டறியவே நான் பல SHERLOCK HOLMES வழிமுறைகளை கையாள்வேன்....அப்படி பட்ட கடலையை வறுக்க சீ சீ வெறுக்க வைத்த நிகழ்வு,அந்த பழம் புளிக்கும் என்று பட வைத்த நிகழ்வு நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது ...

அன்றும் அப்படித்தான் வயிற்றில் அமிலம் சுரக்க, நம நம என்று இருக்க நேரே கடலையை தேடி நான் ஓட விதி என்னை தேடி ஓடி வந்தது...கடலையை சற்றே உயரமான இடத்தில் ஒளித்துவைத்து இருந்தார்கள்,தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் ,சீ சீ நான் பார்த்தேன் கீழே ,அங்கு சரியாக ஒரு பனியாரம் சுடும் கல் இருந்தது பனியார கல்லையே ஸ்டூல் ஆக்கி அதன் மீது ஏறி நின்றேன்....சிறிது நேரத்தில் ஏதோ பொசுங்கும் வாடை வர...அப்பொழுது பார்த்து என் அம்மா டேய் பனியாரம் ரெடி சாப்பிட வா என்று சொல்ல...நான் குய்யோ முரையோ என்று கத்தி கொண்டு தண்ணீரில் கால் வைத்து உட்கார்ந்து விட்டேன்...உண்மையில் என் பொன்னான கால்கள் பொன் போல் இரண்டு நாட்கள் சிவந்து இருந்தது....அன்றில் இருந்து கடலையை பார்த்தாலே சீ சீ என்று சென்றுவிடுவேன்.இன்றும் இதை என் வீட்டில் சொல்லி சிரிப்பது உண்டு...

Thursday, August 28, 2008

சிரிப்பை கட்டுப்படுத்த முடிகிறதா பாருங்கள்.

இது என்னுடைய சித்தப்பா சொன்னது..அவருடைய நண்பர் ஒருவர் இருந்தார் அவர் பண்ணிய காமெடிகள் தான் இவை..
1.ஒரு நாள் அவரிடம்(hostel மாணவன் ) ஒரு மாணவன் வந்து சார் எனக்கு lighta நெஞ்சு வலிப்பது போல இருக்கு சார் என்றான்...
உடனே அவர் ஆரம்பித்தார்...தம்பி இந்த வயசிலேயே நெஞ்சு வலியெல்லாம் வர கூடாது,உடம்பை பாத்துக்கோ என்று அறை மணி நேரம் lecture கொடுத்தவர் கடைசியாக சொன்னதுதான் highlight ...
அவர் சொன்னார்....
நீ எதுக்கும் ஒரு முறை டாக்டர் கிட்ட்போய் xerox (x-ray வை தான் அப்படி சொல்கிறார்)எடுத்து பார்த்துக்கோ என்றாரே பார்க்கலாம் அந்த பையன் அங்கேயே மயங்கி விழுந்தான்...

யார் அறிவாளி?

நான் அப்பொழுது 1st ஸ்டாண்டர்ட் படித்து கொண்டிருந்தேன்...வீட்டில் வெட்டியாய் இருக்கிறேனே என்று என்னை கடைக்கு (என்னை?)shampoo வாங்கி வர அனுப்பினார்கள்... என் போதாத காலம்,போகும் வழியில் எங்கேயோ காசை போட்டு தொலைத்தேன்.... அது இரவு என்பதால் சரியாக தெரியவில்லை நான் காசு விழுந்த இடத்தை ஒரு வட்டம் வரைந்து நடுவே ஒரு கல்லை வைத்துவிட்டு வீட்டில் வந்து இங்குதான் அது விழுந்தது என்று அறிவாளித்தனமாக (அப்போவே)சொன்னேன்...வீட்டில் என்னை பாராட்டி விட்டு காசை கண்டுபிடித்து எடுத்து கொண்டார்கள்...
இது நடந்து சரியாக இரண்டு வருடம் கழித்து என் தம்பிக்கும் இப்படி ஒரு சூழ்நிலை...அவனையும் shampoo வாங்கி வர சொல்லி அனுப்பினார்கள்...அவன் கடையில் பார்த்தான், பல வித balloon இருக்க அதில் இரண்டை வாங்கி விட்டு வீட்டில் நேரே வந்து காசு தொலைந்து விட்டது என்றான்..எங்கே என்று கேட்டதற்கு தெரியாது என்று சாதாரணமாக பதில் சொல்லி நின்றான்..அப்பொழுது என்னை பற்றி சொல்லி என் அறிவை அவனிடம் சொன்னார்கள்..அவனிடம் ஒரு நமுட்டு சிரிப்பு பிறக்க...அவன் சென்று விட்டான்....நான் அவனிடம் மெதுவாக டேய் வாடா போய் தேடலாம்,என்று சொல்ல அவன் இங்கே தான் அது இருக்கு என்று எனக்கும் ஒரு balloon தந்தான்,இப்பொழுது சொல்லுங்கள் யார் அறிவாளி என்று?

coolzkarthi: சாரி அது எங்களோட?

coolzkarthi: சாரி அது எங்களோட?

Wednesday, August 27, 2008

சாரி அது எங்களோட?

பூமியில் பற்பல நன்மைகளை(அவனா நீ ?)செய்த அந்த பெரியவர் இறந்த பின் ஸ்வர்க்கம் செல்கிறார்...
அங்கு வேலா வேலைக்கு tiffen சுட சுட காப்பி என அனைத்தும் கிடைக்க ஒரு நாள் அவர் காலார வாக்கிங் செல்கிறார் ...அப்பொழுது ஒரு வேலிக்கு மறுபக்கம் நரகம் என்று எழுதிய போர்டு தொங்குகிறது அதன் அருகில் பலர் ஒரே குஜாலாக இருக்கிறார்கள்...ராக் மியூசிக்,மது,கிதார் என சந்தோசமாக இருக்க இவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகிறார்... நேராக இன்சார்ஜ் இடம் சென்று நரகத்திற்கு மாற்றலாகி வருகிறார்...அவரை காணும் நரக இன்சார்ஜ், அவனை கட்டி எண்ணெய் கொப்பரையில் போடுங்கடா என்கிறார்..இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பெரியவர்..சற்று முன் நீங்கள் அனைவரும் படு குஜாலாக இருந்தீர்களே என்று கேட்கிறார் அதற்கு இன்சார்ஜ்..."சாரி அது எங்க விளம்பரம் சார்"..... இது எப்படி இருக்கு?
Blog Widget by LinkWithin