Monday, March 29, 2010

உங்களின் ரோல் மாடல் யார்????


சின்ன உளவியல் ரீதியான கணக்கு மூலம் உங்களின் ரோல் மாடல் யார் என்று கண்டு பிடிக்கலாம்.....


இதோ இந்த கணக்குக்கு என்ன விடை என்று சொல்லுங்கள்,(கால்குலேட்டர் எடுத்துக் கொள்ளலாம்)
1 to 9 க்குள் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளவும்
அதை மூன்றால் பெருக்கவும்
பின்பு மூன்றை அந்த விடையுடன் கூட்டவும்
பின்பு மீண்டும் மூன்றால் பெருக்கவும்,(பரவாஇல்லை நீங்கள் கூட்டும் வரை எனக்கு எந்த அவசரமும் இல்லை)
இப்பொழுது கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று இலக்க எண்ணில் உள்ள எண்களை கூட்டவும் (எ.கா 36=3+6=9)உங்கள் எண்ணை கீழே உள்ள லிஸ்டில் பொருத்தி பார்க்கவும்....
இப்பொழுது கிடைக்கும் எண்ணுக்கான தலைவர் தான் உங்கள் ரோல் மாடல்.....

1. Einstein
2. Nelson Mandela
3. Abraham Lincoln
4. Helen Keller
5. Bill Gates
6. Gandhi
7. George Clooney
8. Thomas எடிசன்
9. Coolzkarthi
10. Abraham Lincoln
அடடே நான் தானா அது....
பரவாஇல்லை,நான் உங்களை அந்த அளவுக்கு இம்ப்ரெஸ் பண்ணி இருக்கிறேன் என்று நினைக்கும் போது உண்மையில் புல்லரிக்குது நண்பரே....
(இன்று மொக்கை போதுமா)
ஹி ஹி ஹி....
Be Cool...
Stay Cool...

Monday, March 22, 2010

"LKG ரௌடீஸ்"



முதல் பையன்:தல!! தல !! உங்க ஆளு கிட்ட எவனோ ரப்பர் வாங்குறான்....

ரெண்டாவது பையன்:எந்த கிளாஸ் டா அவன்??

முதல் பையன்: LKG "B" தல...

ரெண்டாவது பையன்: உடனே B செக்சன்
" பல்பம் பாஸ்கர் "
"செரலாக் சேகர்"
"பென்சில் குணா"
"huggis பாபு "
கிட்ட சொல்லி,அவனோட slate, பீடிங் பாட்டில் எல்லாத்தையும் தூக்க சொல்ரா....

அவன் அழுவட்டும்...!!!

நல்லா அழுவட்டும்.... இந்த ஹோர்லிக்ஸ் கார்த்திகிட்ட வெச்சிகிட்டா இதுதான் நிலைமை அப்படின்னு புரியட்டும்....
----------------------------------------
குறும்புக்கார சிறுவர்கள்....





இது என் மெயிலில் வந்த ஒரு சின்ன கதை...



அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக்கு அவர்கள் famous ..அவர்களின் குறும்பை பொறுக்க முடியாத அவர்களின் தாய் நேரே அவர்கள் இருவரையும் கிராமத்திற்கு புதுசாக வந்திருந்த பாதிரியாரிடம் கொண்டு போய் விட்டாள்...அவர் முதலில் பெரியவனை மட்டும் அழைத்து இருக்க சொல்லி விட்டு சிறியவனை வீட்டுக்கு போக சொன்னார்,

பாதிரியார் பெரியவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்...

பாதிரியார்:my son,Where is God?

அதற்கு அந்த சிறுவன் ஏதும் சொல்லாமல் நிற்க,சற்றே கோப பட்ட பாதிரியார் மீண்டும், உரத்த குரலில்...
"Where is God"என்றார்..

இந்த முறை சிறுவனின் முகத்தில் லேசான கலவரம் எட்டி பார்த்தது...ஆனாலும் அமைதியாகவே இருக்க, இன்னும் கோப பட்ட பாதிரியார்,
"Where is God "என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த,

சடாரென வேகம் எடுத்த சிறுவன் நேரே ஓடினான் ஓடினான்,அவனின் தம்பியிடம் ஓடினான்,சென்று சொன்னான் ,

"டேய் இந்த தடவை நாம் உண்மையிலேயே பெரிய பிரச்சினையில் மாட்டி கொண்டோம் என்றான்"

என்ன என்று மற்றொருவன் அமைதியாக கேற்க,அவன் சொன்னான்....

"இந்த தடவை கடவுள் காணோமாம் எல்லோரும் நாம் தான் எடுத்து இருப்போம் என்று சந்தேக படுகிறார்கள்"



Be Cool....

Stay Cool...

Sunday, March 21, 2010

சிறு கதைகள்.....

இங்கு இருக்கும் சிறுகதைகள் அனைத்தும் நான் சொந்தமாக எழுத முயற்சித்தவை,உங்களுக்கு பிடித்ததா என்று சொல்லுங்களேன்.....



இது நான் முயற்சித்த சயின்ஸ் fiction வகை கதை....

அவரை காப்பாத்தனும்...



இந்த கதை நான் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது...எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...
அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல் ஒரு அவசர கதியில் இயங்கியது,டாக்டர்களின் குரலில் தெரிந்த அந்த பதட்டம் மற்றும் கவலை கண்கூடாக தெரிந்தது,நாம் சாப்பிடுவதை எல்லாம் இவரும் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ,இவர் தான் நம் முன் காலத்தின் மிக பெரிய பொக்கிஷம் என்றும் , வருத்தம் கலந்த தொனியில் டாக்டர்கள் பேசி கொண்டே நடந்தார்கள்....ஏற்கனவே செயற்கை இருதயம்,நுரை ஈரல் என்று பொருத்தப்பட்டும் ."gene riot"என்னும் மரபணு புரட்சி அவன் மூளைக்கு பரவஅந்த டாக்டர்களே மனம் தளந்தார்கள்.....

அந்த maarble களால் சூழ்ந்த அறையில் ,phenyl வாசம் காட்டமாக அடித்தும் அது அந்த டாக்டர்களை ஏதும் செய்ததாக தெரியவில்லை,அந்த நிசப்தமான அறையில் பல டாக்டர்கள் புடை சூழ,அவ்வளவு நேரம் பிடித்து வைத்த்ருந்த அந்த உயிர் என்னும் பறவைக்கு அந்த நபர் விடுதலை கொடுத்தார்...அடுத்த நாள் செய்திகளில்,"நம் உலகின் கடைசி மனிதனும் GENE RIOT என்னும் புது வியாதிர்க்கு பலியானான்,அவனை நமது ARTIFICIAL intelligence கொண்ட டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பற்ற முடியவில்லை..."



(இதோடும் முடிக்கலாம் ஆனால் கீழே உள்ளதை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?)


செய்திகளில் தொடர்ந்து வந்தது,"நம் நாட்டு வீரர்களுக்கும் பக்கத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடந்த எல்லை சண்டையில் இரு பக்கமும் இருவர் இறந்தனர் சாரி செயலிழந்தனர் "
"நம் மெரினாவில் கொட்டி கிடக்கும் தங்கத்தை அல்ல ஆள் இல்லை ஆனால் நமக்கு சக்தி தரும் வைக்கோலின் விலை ஒரு கிலோ 10,000 தாண்டியது,போகும் போக்கை பார்த்தால் solar இல் இயங்கும் நம்மவர்கள் மட்டுமே இனி வாழ இல்லை இயங்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது... "

"நம் நாட்டுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடந்த கிரிக்கெட் ஆட்டம் மழையால் தடை பட்டது"என்றுசெய்தி போய் கொண்டு இருந்தது...நன்றி,உங்களுக்கு பிடித்ததா?உங்கள் ->கார்த்தி cool.....நன்றி...

இன்னும் பல ...

ருத்ரன்...

எழுத்தாளனின் உணர்ச்சிகள்......



ஜீனியும் நானும்...


காக்காயன் மற்றும் காக்காணி....



சேலத்து உணவுகள்......


தேவதைகளின் தேவதை.....


சிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)


சேலத்து உணவுகள் -2


வளர்ப்பு பிராணிகள் ....


நான் ரசித்த சிறு கதைகள்...



(கட்டுரை)பேச்சலரின் சொர்க்க பூமி(திருவல்லிக்கேணி)

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Tuesday, March 16, 2010

இதைப் பார்த்தாவது திருந்துங்க.....(காணொளி)



இதைக்காட்டிலும் நச் என்று யாராலும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்....

"QUIT SMOKING"

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin