Wednesday, September 30, 2009

மென்பொருள் ஆசாமியின் கல்யாண பத்திரிக்கை....

நல்ல creativity.....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க......








நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Monday, September 21, 2009

கொஞ்சம் சிரிங்க.....

கொஞ்சம் சிரிங்க டென்ஷன் ப்ரீ ஆகுங்க........




கொஞ்சம் சிரிங்க டென்ஷன் ப்ரீ ஆகுங்க........
நன்றி நண்பர்களே....

SMILE PLEASE.......


Be Cool...
Stay Cool...

Friday, September 18, 2009

உன்னைப்போல் ஒருவன்......விமர்சனம்



உன்னைப்போல் ஒருவன்......

வழக்கமான கமலின்
"One Man Show"
இதில் மிஸ்ஸிங்...

பளிச் பளிச் வசனங்கள் கமல் பட டச் தெரிகிறது,

கதை சாது மிரண்டா ரகம்...
"The stupid common people" என்ன செய்ய முடியும் என்பதே படத்தின் பிரதானம்....
நம் தமிழ் நாட்டில் நடந்தால் அது அழிவு வட நாட்டில் நடந்தால் அது செய்தி,
வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை என்று கமல் முத்திரை தெரிகிறது....

முதலில் அர்ஜுன்,கேப்டன் பாணியிலான ஹை tech தேச பற்று படமோ என்று தோன்ற ஆரம்பிக்கும் போது, வரும் ட்விஸ்ட் இது வேறு என்று உணர்த்துகிறது....

கதை இதுதான்:(தீவிரவாதத்துக்கு எதிராக தீவிரவாதம் தான் சரி)

ஒரு காவல் நிலையத்தில் தன் purse பிக் பாக்கெட் அடிக்கப்பட்டதை தெரிவிக்க வரும் கமல் , அனாமத்தாக ஒரு பையை அருகே இருக்கும் பாத்ரூம் அருகே வைத்து விட்டு செல்ல ,அதில் இருந்து படம் சூடு பிடிக்க
தொடங்குகிறது ,


IG மாறார்க்கு (மோகன்லால்) வரும் போன் கால்,சிட்டி இல் ஐந்து இடங்களில் பாம் வைத்து இருப்பதாக மிரட்ட,
மொத்த போலீஸ் அலெர்ட் செய்ய படுகிறது,
ஒரு மொட்டை மாடியின் மீது இருந்து இதை எல்லாம் செய்யும் கமல்,டிவி ரிப்போர்ட்டர் மூலம் நடப்பவை அனைத்தையும் கண்காணிக்கிறார், லேப்டாப் மற்றும் பல சிம்கள் மூலம் சேட்டைகள் தொடர,சமிபத்தில் கைதான நான்கு தீவிரவாதிகளை விடுவிக்குமாறு மிரட்ட,திறமையான இரண்டு போலீஸ் அதிகாரிகளை மோகன்லால் இந்த ஆபரேஷன் க்கு நியமிக்கிறார்,அவர்கள் தீவிரவாதி தலைவன் போல் செயல் படும் கமலிடம் ஒப்படைத்தனரா?அவர்கள் தப்பினாரா?கமல் பிடிபட்டாரா,அந்த தீவிரவாதிகளுக்கு என்ன ஆனது என்பதை நல்ல ட்விஸ்ட் உடன் கதை முடியும், நல்ல திருப்புமுனை என்று படம் நம்மை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது,இருவரின் நடிப்பும்(மோகன்லால் கமல்) அபாரம்,ஆனால் கமல் அழுவதற்கு பல படங்களில் ஒரே expression காட்டுகிறாரோ என்று தோன்றுகிறது,

"I'm the new face of terror "என்னும் வசனத்துடன் படம் முடிவடைகிறது ....

டிட் பிட்ஸ்:


அனைவரும் சாம்சுங் கைபேசியே பயன்படுத்துகின்றனர்...(விளம்பரம்?)

treatment அறையில் குற்றவாளி முன் பேசும் பொது,என்ன அந்த லத்தியையும் சேத்து பொதச்சிட்டீங்களா என்று கேட்பதில் ஆகட்டும்,விறைப்பு காட்டும் போலீஸ் தனம் என்று அந்த அதிரடி போலீஸ் கலக்கி இருக்கிறார்....

IG அந்த பெண் நிருபருக்கு சிகரட் பற்ற வைப்பது போன்ற காட்சியை தவிர்த்து இருக்கலாம்...(மருத்துவர் and co கவனிக்க)

IIT drop அவுட் மாணவன் மற்றும் ஆரம்பத்தில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அனைவரும் தங்கள் பங்கை நன்று முடித்து இருக்கிறார்கள்....


படத்தில் குறை என்றால்,

lighting சில இடங்களில் சரி இல்லை,(ஹாலிவுட் தரம் இருந்தாலும் கூட நன்றாக தெரிய வேண்டிய காட்சிகள் சில மிஸ் ஆகி விடுகிறது)

Background மியூசிக் படுத்துகிறது,சுருதி கமல் முயன்ற வரை நன்கு செய்ய முயற்சித்துள்ளார்,ஆனாலும் பல இடங்களில் Background மியூசிக் பளிச் வசனங்களை மறைத்து விடுகிறது,ஹெலிகாப்டர் உள்ளே ரயில் ஓடும் சத்தம், இயற்கையாய் இருக்கட்டும் என்று பேசும் போது வண்டி குலுங்கும் சத்தம்,container குலுங்கும் சத்தம் அதிகம் போட்டு ,அவர்கள் பேசுவது சரியாக கேட்காமல் போய் விடுகிறது......

நான் இதன் மூலமான A Wednesday படத்தை மூன்று முறை பார்த்து நசீருதின் ஷா
வின் நடிப்பை வியந்தேன் ,அவரின் முகம் அந்த கேரக்டர் செய்ய இயல்பாய் பொருந்தி இருக்கும்,ஆனால் கமலின் முகம் கொஞ்சம் அந்த கேரக்டர் க்கு பொருந்தாமல் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது,

நசீருதின் ஷா சற்றே கிழ தோற்றம் காட்டி இருப்பார்,கமல் மறுத்து விட்டாரா அல்லது இதுவே போதும் என்று நினைத்து விட்டாரா தெரியவில்லை,

மோகன் லால் கிடைக்கும் கேப் களில் எல்லாம் கோல் அடித்து விடுகிறார்,அவரின் முரட்டு தனமும்,தலைமை செயலராக வரும் லட்சுமி அவர்களை மிரட்டுவது என்று பளிச்சிடுகிறார்....

கமலின் ஒன் man ஷோ மிஸ்ஸிங்....

ஹிந்தியில் தோன்றும் அதே நாடகத்தனம் இதிலும் எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை....

நீங்கள் படத்தை ஏற்கனவே ஹிந்தியில் பார்த்து இருந்தால் வேஸ்ட்,
படம் அப்படியே டிட்டோ.....

நான் கூட புதிதாக எதாவது சேர்த்து இருப்பார்கள் என்று எண்ணி போனேன்....
புதிதாக ஏதும் இல்லை...

ஏதோ ஒரு பேப்பரில் படம் 40 கோடி பட்ஜெட் என்று படித்ததாக ஞயாபகம்,எனக்கு அப்படி தெரியவில்லை......


படம் நல்ல படம்...

ஹிந்தியில் பார்க்காதவர்கள் கண்டிப்பாக இதை பார்க்கவும்.....

உன்னை போல் ஒருவன்...நாம் அனைவரும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஒருவன்....
"A stupid Common man"
"I'm the new face of terror"


நன்றி உங்கள் கார்த்தி ....

Be Cool...
Stay Cool...

Wednesday, September 16, 2009

விஜய் fans அனுமதியில்லை பாகம்-4 +காணொளி போனஸ்




(இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே.....விருப்பம் இல்லாதவர்கள் வெளியேரிடவும்)....

ஹைய்யோ ஹைய்யோ முடியலிங்க......எங்க பாத்தாலும் இளைய தளபதி அடிவாங்கராறு,எனக்கு வர sms ல பல அவர ரணகள படுத்தற மாதிரியே வருது....
sms மட்டும் இல்லாம அப்பப்ப மேல இருக்குற மாதிரி வீடியோ பலவும் மெயில் வழியா வருது...
சரி கொஞ்சம் சாம்பிள்....கடவுள் :பக்தா!உனது வரத்தை மெச்சினோம்,என்ன வரம் வேண்டும் கேள்.....
பக்தன்:எங்கள் வீட்டில் இருந்து நேரா சொர்கத்துக்கு ஒரு ரோடு போட்டு கொடு.....
கடவுள்:சாரி dude,அது முடியாது,நெறைய ரிஸ்க்...வேறு கேள்....
பக்தன்:எங்கள் இளயதளபதியை சூப்பர் ஸ்டார் ஆக்கு....

கடவுள்:சிமெண்ட் ரோடு வேண்டுமா அல்லது தார் ரோடு வேண்டுமா?
-----------------------------------------
பத்திரிக்கையாளன்:நீங்க நடிக்க வரலைன்னா என்னா ஆகியிருப்பீங்க?

டாக்டர் விஜய்:MBBS படிச்சிட்டு பெரிய lawer ஆகி ரெண்டு மூணு மேம்பாலம் கட்டி இருப்பேன்....

பத்திரிக்கையாளன்:!!!!??????!!!! முடியல....

---------------------------------------------

சர்தார் 1:இப்போ எல்லாம் நம்மள பத்தி நக்கல் msg வரது இல்ல பாத்தியா?

சர்தார் 2:ஆமாம் யாரோ டாக்டர் விஜயாம் பயபுள்ள அவன் பண்ற காமெடி நாம பன்றதோட பயங்கர அதிகமாம்....ஹைய்யோ ஹைய்யோ....

------------------------------------------
அரசாங்கத்தின் புதிய தண்டனைகள்:

சிறு திருட்டு:
கண் முன் விஜய் போட்டோவை காமித்தல்.....

கொள்ளை:
விஜய் பட trailer....

கொலை:
முழு விஜய் படத்தையும் பார்க்க வைத்தல்....

தீவிரவாதம்:எல்லா விஜய் படங்களும்....

---------------------------------------------

கடைசியில் நம் இந்திய டாக்டர்கள் பன்றி காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டனர்......

மருந்து:சமிபத்திய டாக்டர் விஜய் படம்,
ஹ்ம்ம்ம்ம்ம்,மனுசனே சாவறான் தம்மாதுண்டு வைரஸ் சாகாதா?
------------------------------------------------

வருடம் 2209:

குழந்தை:அப்பா பயங்கர த்ரில்லிங்கா ஒரு பேய் படம் சொல்லு....

அப்பா:அந்த காலத்துல்ல,dr.விஜய் அப்படின்னு ஒருத்தர்....

குழந்தை:அப்பா வேணாம்ப்பா,பயங்கர பயமா இருக்கு....

----------------------------------------------------ஹைய்யோ ஹைய்யோ.....
ஒன்னும் முடியல.....

(அனைத்தும் நகைச்சுவைக்கே)

நன்றி நண்பர்களே.....

Be Cool...
Stay Cool...

Sunday, September 13, 2009

ட்ரெட்மில் டான்ஸ்....



நண்பர்களே,இந்த காணொளி பாருங்களேன்,உண்மையில் செம கூல்....

Be Cool...
Stay Cool...

Thursday, September 10, 2009

செலவை குறைக்க கம்பெனிகளுக்கு ஒரு யோசனை..(ஹி ஹி ஹி)

இந்த படம் பாருங்க தெளிவா சொல்லும்....

ஹி ஹி ஹி....

Be Cool...
Stay Cool...

Sunday, September 6, 2009

முடியுமா உங்களால் பதிலளியுங்கள் பார்க்கலாம் பார்ட்-8

இவை சற்றே எளிய ரகம் தான் ஆனாலும் எனக்கு பிடித்து இருந்தது.....


1.நீங்கள் ஒரு ஓட்ட பந்தயத்தில் இரண்டாவதாக ஓடி கொண்டு இருப்பவரை முந்தி கொண்டு சென்றால் எத்தனையாவது இடத்தில் இருப்பீர்கள்?

2.அதே போல் ஒரு ஓட்ட பந்தயத்தில் கடைசியாக ஓடி கொண்டு இருப்பவனை முந்தி சென்றால் எத்தனையாவது இடத்தில் இருப்பீர்கள்?

3.நான் கொடுக்கும் இந்த எளிய கணக்கை மனதில் போட்டு பாருங்களேன்,

1000+40+1000+30+1000+20+1000+10=?

4.ஊமை ஒருவர் ஒரு கடைக்கு சென்று தனக்கு டூத் brush வேண்டும் என்பதை ஒருவாறு சைகையில் ,விரல்களால் பல்லை தேய்த்து காட்டி வாங்கி செல்கிறார்,

இதே ஒரு குருடர் தனக்கு சன் கிளாஸ் வாங்க வருகிறார்,எவ்வாறு அவர் வாங்கி செல்வார்?

5.ஒரு கெட்ட பையன் இருக்கிறான்,அவனுக்கு நான்கு சிகரட் துண்டுகள் இருந்தால் போதும்,அதில் இருக்கும் பஞ்சுகளை எடுத்து முழு சிகரட் தயாரித்து குடிப்பான்,

அவன் ஒருவாறு அங்கே இங்கே பொறுக்கி 28 சிகரட் துண்டுகள் சேர்த்தான் என்றால்,அதை வைத்து எத்தனை சிகரெட்கள் தயாரித்து குடிப்பான்?

(statuary warning:சிகரட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்)


நன்றி நண்பர்களே.....விடைகள் நாளை மறுமொழியில்....
comment moderation enable பண்ணி உள்ளேன்.....


Be Cool...
Stay Cool...

சில சோக்குகள்.....


ஹி ஹி ஹி....
இவை நான் மிகவே ரசித்த ஜோக்குகள்...
நீங்களும் பாருங்களேன்......

ஒருவன் டீ ஷாப் விட்டு வெளியே வரும் போது மிகப்பெரிய சவ ஊர்வலம் ஒன்றை பார்க்கிறான்....
முன்னாள் இரண்டு சவபெட்டிகள் இருக்க,அதன் பின்னே ஒருவன் பெரிய நாய் ஒன்றை பிடித்தவாறு செல்ல,அவனை இருநூறு பேர் தொடர்ந்தனர்,
இது இந்த ஆசாமிக்கு சற்றே ஆச்சரியமாக பட,அந்த நாய் வைத்திருக்கும் ஆசாமியிடம் சென்ற இவன்,


"சார் நான் இவ்வளவு பெரிய ஊர்வலம் பாத்ததே இல்ல,யார் சார் இறந்தது? பெரிய தலைவரா"

நாய் வைத்திருப்பவர்:இல்ல சார்,முன்னாடி இருக்குற சவபெட்டியில என்னோட மனைவியும்,பின்னாடி அவளோட அம்மாவும் அதாவது என்னோட மாமியாரும் போறாங்க....

மற்றவர்:அப்படியா?சாரி சார்,எப்படி இறந்தாங்க?.

நாய் வைத்திருப்பவர்:சார் என்னோட மனைவி என்ன அடிக்க வரும் பொது,இதோ இந்த நாய் அவல கடிச்சு கொன்னுடுச்சு,தடுக்க போன என்னோட மாமியாரையும் கொன்னுடுச்சு....

மற்றவர்:
(சிறிது யோசனைக்கு பின்.....)
ஹ்ம்ம்ம்ம்ம்....
சார் எனக்கு அந்த நாய ஒரு ரெண்டு நாள் கொடுக்கிறீங்களா?

நாய் வைத்திருப்பவர்:


சரி, கியூ போய் நில்லுங்க.....

-------------------------------------
இத உலகின் மிக சிறந்த ஜோக் என்று ஒரு வலையில் படித்தேன் பாருங்களேன்
அப்படி தெரிகிறதா என்று.....

இரண்டு பேர் போரில் தீவிரமாக இருக்க,
அவர்கள் நின்று இருக்கும் பக்கத்தில் ஒரு பாம் விழ ,ஒருவன் சரிந்து விழுகிறான்,
மற்றொருவன்,உடனே control ரூமுக்கு கால் பண்ணி,
"சார்,இவன் விழுந்துட்டான்,உடனே backup அனுப்புங்க,"
control room:முதல்ல அவன் உண்மையிலயே செத்துட்டானா அப்படின்னு உறுதி பண்ணுங்க......

மறுமுனையில் டுமீல் என்று சத்தம் வர,

"சார் அவன் செத்துட்டான்".....



நன்றி நண்பர்களே......

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin