Saturday, January 31, 2009

இது எப்படி இருக்கு?


சமிபத்தில் என் மெயிலில் வந்தது.....

Saturday, January 24, 2009

ஒரு cute பொய்.....+கொஞ்சம் சோக்கு..

இவை வழக்கம் போல் sms இல் வந்தவை,உங்களுக்காக......

A LKG student in phone:"sir my son is ill ,and he will not attend class today"

Principal:ok who is this speaking

LKG student:"My Daddy Speaking"
------------------------------------------

இனி கொஞ்சம் சோக்கு.....

காலேஜ் வாழ்க்கையில் கற்று கொண்டவை,
கண்ணை திறந்து கொண்டே தூங்குவது என்னும் அருட் பெரும் கலை....

வாயை மூடியபடியே பேசும் கலை....

மேட்டரே இல்லாமல் பக்க பக்கமாக எழுதி திருத்துபவரை வெறுப்பேற்றும் கலை....

மேட்டேரே இல்லாமல் கடலை,காசே இல்லாமல் கான்டீன் உணவு....
வாத்தி என்ன திட்டு திட்டினாலும் சிரித்து கொண்டே இருக்க....
ஆகா...இதுவல்லவோ வாழ்க்கை....

(ஹ்ம்ம்ம்ம் இந்த வருடத்துடன் என் இனிய காலேஜ் வாழ்க்கை முற்று பெறுகிறது....
பொறுப்புகள் கூடுமோ?)

------------ --------- --------- --------- --------- --------
ரயிலில் சர்தாரும் மற்றொருவரும்,,,,,
மற்றொருவர்:இது என்ன ஸ்டேஷன்?
சர்தார்:(சீரியஸ் ஆக வெளியே எட்டி பார்த்துவிட்டு,)ரயில்வே
ஸ்டேஷன்........
------------ --------- --------- --------- --
கணவன்:எனக்கு ஆபரேஷன் ல ஏதாவது ஆகிடுச்சுனா நீ அந்த டாக்டர் யே கல்யாணம் பண்ணிக்கணும்....
மனைவி:ஏன் அப்படி சொல்லுறீங்க?
கணவன்:அவர பழிவாங்க எனக்கு வேற வழி தெரியல அதான்.....
------------ --------- --------- --------- ---
சர்தார் காட்டு வழியே போகும் பொது தொங்கி கொண்டு இருக்கும் பாம்பிடம்.....
சர்தார்:இப்படி தொங்கினால் எல்லாம் வேலைக்கு ஆகாது அம்மாவ காம்ப்ளான் கொடுக்க சொல்லு.....
------------ --------- --------- --------- ----
இந்தியாவை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற மூன்று எளிய வழிகள்....
3. விஜயகாந்த் அவர்களை அனுப்பி border இல் உள்ள தீவிரவாதிகளிடம் பேச சொல்லலாம்....
2. பிடிபட்ட தீவிரவாதிக்கு அதிர்ச்சி வைத்தியமாக T.R படத்தை காட்டி ,தீவிரவாதிகள் மத்தியில் பயத்தை உண்டு பண்ணலாம்.....இது எதுவும் பயன் அளிக்க வில்லை என்றால்,
1. பயங்கரவாதிகளை அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் படிக்க சொல்லலாம்.... !...

Friday, January 16, 2009

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,பைக் என்றார் அமைதியாக...

-------------------------------------------------------------------------------------

அடுத்தது...ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தூங்க சென்று விட்டார்...அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",என்றார்...ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,அடுத்து சர்தார்:அது போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....

--------------------------------------------------------------

மறுபடியும் முட்டாள் சர்தார்....சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,

முதலாமவர்: நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?

இரண்டாமவர்: என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....

----------------------------------------------------------------------

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் சர்தாரின் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...

---------------------------------------

ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொல்வாய்?மற்றொருவன்,simple கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....

-----------------------------------------

நன்றி கூல்......

Saturday, January 10, 2009

நகைச்சுவை:புதிய கண்டுபிடிப்பு(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)

சமிபத்தில் ஒரு நிறுவனம்,இந்த அருட்பெரும் ,இந்த நூற்றாண்டின் அரியதொரு கண்டுபிடிப்பினை நிகழ்த்தி உள்ளது....இந்த உபகரனதோடு வண்டி ஓட்டும் பொழுது விபத்துக்கள் வெகுவாக குறைக்க பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது....(உபயம் விஜயகாந்த் இல்லை)
இந்த கண்டுபிடிப்புக்கு மற்றும் கண்டுபிடிப்பாலருக்கு அனைத்து கணவன் மார்களும் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்....
அந்த அறிய கண்டுபிடிப்பினை கீழே உள்ள படத்தில் காணலாம்....
|
|

|

|

|

||


இதெப்படி இருக்கு....
நன்றி கார்த்தி....

Tuesday, January 6, 2009

சர்தார் சோக்கு ஒன்று....

இது நான் படித்து ரொம்ப நேரம் சிரித்து மகிழ்ந்தது...
ஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு)மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,
"இங்க பாருங்க,இதில் aids கிருமி திரவம் இருக்கு,ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு தப்பிச்சி போய்டுங்க "என்றான்...
முதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,
பின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்...
ஆனால் எதற்கும் கவலை படாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி விட்டான்....

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க தப்பிப்பிங்க,aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார்,
"எனக்கு தான் aids வரதே,ஏனா நான் தான் காண்டம்(condom)போட்டு இருக்கேனே.."

ஹி ஹி ஹி ...உங்களுக்கு பிடித்ததா?

இன்னும் கொஞ்சம் சோக்கு..பார்ட்-3

இன்றைய சிரிப்பு படம்:

இதோ மீண்டும் சோக்குகளுடன்.....


சர்தார் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது,அருகிலிருப்பவர்,

"இது என்ன ஸ்டேஷன்"


சர்தார்:"ரயில்வே ஸ்டேஷன் அப்படின்னு நினைக்கிறேன் "
------------------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"

சொல்லி இருப்பாள் என்று...
--------------------------------
Flash News: தமிழகத்தில் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் என்று மாறியதில் இருந்து ஓட்டல்களில் அதிரடி விலை மாற்றம்.....
சாம்பார் அல்லது சட்னி =ரூபாய் 15
{சைடு டிஷ் :இட்லி முற்றிலும் இலவசம்}
சாம்பார்+ரசம்+மோர்=ரூபாய் 35
{side டிஷ் சாதம் ஆம் இலவசம்}
offer ஒன்லி இன் தமிழ்நாடு....
------------------------------

நம் சர்தார் இல்லாமலா ?
இதோ உங்கள் சர்தார்.....
மனைவி:என்னங்க உங்கள பார்க்க டாக்டர் வந்து இருக்கார் ...
சர்தார்:எனக்கு உடம்பு சரியில்லை யாரையும் பார்க்க முடியாது அப்படின்னு சொல்லி அனுப்பு......
-----------------------------
detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....
-----------------------------
கணவன் மனைவி இருவரும் ஒரு கிணற்றருகே சென்றார்கள்,அது வித்தியாசமான கிணறு என்றும் அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று எழுதியிருந்ததை கண்ட கணவன்,ஒரு ரூபாயை போட்டு விட்டு மனதுக்குள் வேண்டினான்,
இதை கண்ட மனைவி,என்ன வேண்டுநிங்க என்று கேட்டவாறு,கிணற்றை பார்த்தாள்,அப்பொழுது கால் இடறி கிணற்றில் விழுந்து விட,
கணவன் சொன்னான்,
"அட உண்மையிலேயே நினைத்தது நடக்குதே"
---------------------------
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
----------------------

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
-------------------------------
இவை எனக்கு மிகவும் பிடித்தவை....ஏற்க்கனவே கொஞ்சம் வேறு post இல் வந்து இருக்கலாம்....
---
உங்களுக்கு பிடித்தது?

இந்தியாவே என் கையில்-கொக்கரிக்கும் பிரபல பதிவர்...

பிரபல பதிவர் ஒருவர் இந்தியாவே என்னமோ அவர் கைகளில்தான் என்பது போல் எழுதியுள்ளார்,நீங்களே பாருங்களேன்......இந்திய மக்கள் தொகை தோராயமாக நூறு கோடி என்று எடுத்து கொள்வோம்,
அதன் படி ஒரு சின்ன கணக்கு....

நூறு கோடியில் ஒன்பது கோடி பேர் retired (ஓய்வு பெற்றவர்கள்),


முப்பது கோடி பேர் state Government இலும்

பதினேழு கோடி பேர் மத்திய அரசாங்கத்திலும் இருக்கிறார்களாம்,
(இவர்கள் ஒன்றும் செய்வதில்லை என்று கேள்வி)(அவ்வளவாக என்று சேர்த்து கொள்ளலாம்)

ஒரு கோடி பேர் IT professionals,

இவர்கள் நம் நாட்டுக்காக உழைப்பதில்லை.....

இருபத்தி ஐந்து கோடி பேர்,பள்ளிகளிலும்

ஐந்து வயதிற்கு உட்பட்டோர் ஒரு கோடியும் உள்ளனர்....


பதினைந்து கோடி பேர்,
வேலை வாய்ப்பு இன்றியும் உள்ளனர்....

எந்த நேரமும் 1.2 கோடி பேரை ஆஸ்பத்திரிக்களில் (hospital) காணலாம்....

சமிபத்திய கணக்கெடுப்பின் படி 79,99,998

பேர் ஜெயில்களில் உள்ளனர்...

(கணக்கெடுப்புகளை விஜயகாந்த் அவர்கள் கவனிக்க)

மீதி இருக்கும் இருவரில் நீங்களோ என்னுடைய இடுகையில் மூழ்கி உள்ளீர்கள்....

மீதி இருக்கும் நான் ஒருவனே இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.....
"ஜெய் ஹிந்த் "

சரி ஏதோ பிரபல பதிவர் என்றாயே என்கிறீர்களா?
ஏங்க இந்தியாவே என் கையில் இருக்கும் போது நான் பிரபல பதிவர் தானே நீங்களே சொல்லுங்கள்?

(இவை அனைத்தும் நகைச்சுவைக்கே-தயவு செய்து கோபிக்க வேண்டாம்)

Sunday, January 4, 2009

ஒரு சோக்கு கதை......+கொஞ்சம் சோக்கு

இதுவும் சுட்டது.....என் மாமாவின் blog இல் இருந்து ,

கதை எப்படி?

இது ஒரு சோக்கு.அதாவது நகைச்சுவை. மூன்று நண்பர்கள் ஒரு ஆயிரம் மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்கள்.அவர்களது வீடு 910வது தளத்தில் இருந்தது.லிப்ட் வசதி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. ஒரு நாள் மூவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர்.லிப்ட் பொத்தானை அழுத்திப் பார்த்தால் அது இயங்கவில்லை.அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.வேறு வழியேயில்லை, நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.அது என்னவென்றால் இத்தனை மாடிகளையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதாகும்.முதலில் ஒருவன் ஆரம்பித்தான்.அது மிகவும் சுவாரசியமான கதையாய் இருந்தது.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அது முதலாமவன் சொன்னதைவிட சுவாரசியமாக இருந்தது.கதையை முடிக்கும் போது 850 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை.இருவரும் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான்." நீங்கள் இருவரும் நல்ல கதை சொன்னீர்கள்.முதலாமவன் திகில் கதையும்,இரண்டாமவன் சிரிப்பு கதையும் சொன்னீர்கள். நான் இப்பொழுது சோகக் கதை சொல்ல போகிறேன்" என்றான்.சரி சொல் என்றதும் அவன் சொன்னான்,"வீட்டு சாவி கீழே காரிலேயே இருக்கிறது.அதை எடுக்க மறந்துவிட்டோம்".
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
மீண்டும் 850 மாடிகளை கடக்க வேண்டுமே? அதனால் திரும்பவும் அதே யோசனையை கடைபிடித்தார்கள்.முதலாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.வழக்கம்போல் நல்ல கதை சொன்னான்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 10வது மாடியில் அவர்கள் நின்றிருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை. அவன் சொனனான், "ஆகா! இருவரும் என்ன அழகான கதை சொன்னீர்கள்.வழக்கம்போல் இந்தமுறையும் நான் ஒரு சோகக்கதை சொல்ல போகிறேன்" என்றான். மற்ற இருவரும் பயந்துபோய் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான், " நாம்தான் ஒரு மாற்று சாவியை எதிர்வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறோமே.இந்த சாவிக்காக இவ்வளவு தூரம் வரத் தேவையே இல்லையே ".இதைக் கேட்ட மற்ற இருவரும் நொந்து நூலானார்கள்.
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
பிறகென்ன வழக்கம்போல் அதே ஒப்பந்தம்.முதலாமவன் இந்தமுறை மிகப் பிரமாதமான கதையை சொன்னான்.அவன் முடிக்கையில் 400 மாடி முடிந்திருந்தது. அடுத்து இரண்டாமவன் ஆரம்பித்தான். அவனும் நல்ல ஒரு கதையை சொல்லி முடித்தான்.800 மாடி முடிந்திருந்தது.மூன்றாமவன் இந்தமுறை ஓவென்று அழத் தொடங்கினான். மற்ற இருவரும் பதறி "ஏனடா அழுகிறாய்? சொல்லிவிட்டு அழுதுதொலை" என்றார்கள். அவன் சொன்னான்" கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை " என்றான். அவர்கள், "ஏன், என்ன ஆயிற்று " என்று கேட்டார்கள். அதற்கு அவன்," தொடர்ந்து என்னைமட்டும் சோகக்கதையாக சொல்லவைக்கிறாரே" என்றான்.இதைக்கேட்ட மற்ற இருவரும் பயந்து போனார்கள்."மீண்டும் சோகக்கதையா?சீக்கிரம் சொல்" என்றார்கள். அவன் சொன்னான்," நண்பர்களே, நாம் இவ்வளவு நேரமும் ஏறி,இறங்கிக் கொண்டு இருப்பது நமது குடியிருப்பில் அல்ல, பக்கத்து குடியிருப்பில்"
--------
பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.
அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.
பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.
ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.
---------
நன்றி......

கொஞ்சம் சோக்கு கதைகள்....+கொஞ்சம் சோக்குஎனக்கு மிகவும் பிடித்தவை இவை.......

இந்த கதைகள் அனைத்தும் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டவை....


போதகரும் காரோட்டியும்....

போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு தாங்கள் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இதைக்கேட்ட போதகர் கடும் கோபம் அடைகிறார்."எனக்கு முன்னர் உள்ளே சென்றவன் ஒரு சாதாரண காரோட்டி.அவனுக்கு தங்க அங்கி, ஆண்டுக்கணக்காக மக்களுக்கு நல்லதை போதனை செய்த எனக்கு வெறும் பருத்தி அங்கியா?" என்று சத்தம் போடுகிறார். அதைக்கேட்ட காவலாளி புன்னகையுடன் சொல்கிறான், "ஐயா! தாங்கள் வருடக்கணக்காக கடவுளைப்பற்றி போதனை செய்தாலும் , மக்கள் உங்கள் போதனையைக் கேட்காமல் தூங்கி வழிந்தார்கள்.ஆனால், அந்த காரோட்டியின் காரில் பயணம் செய்த ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்தார்கள்.என்வே, அவன் தான் உங்களைவிட மக்களை கடவுள் பால் திருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறான்.அதனால் தான் அவனுக்கு தங்க அங்கி தரப்பட்டது"
---------------------------------------
கிணற்றில் போட்ட காசு...

ஒருமுறை எங்கள் உறவினர்களுடன் பக்தி சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது ஒரு கோவிலில் இருந்த கிணற்றில் சிலர் காசு போட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் என்ன என்று கேட்டதற்கு மனதில் ஏதாவது விருப்பத்தை நினைத்து கொண்டு அதில் காசு போடவேண்டும் என்றும் , அப்படி போட்ட காசு நீரில் மூழ்காமல் கிணற்று திட்டில் நின்றுவிட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் சொன்னார்கள்.ஆசை யாரைவிட்டது.எனவே நாங்களும் ஒவ்வொருவராக முயற்சி செய்தோம்.ஒன்றும் பலனில்லை.கடைசியாக எனது மதினி காசு போட்டார். அந்த காசு சரியாக திட்டில் நின்றுவிட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அப்பாடா ஒருவரது ஆசையாவது நிறைவேறப்போகிறது என்று.உடனே அனைவரும் "நீ மனதில் என்ன நினைத்து காசு போட்டாய்" என்று அவரை கேட்டார்கள். அவர் ரொம்ப நிதானமாக சொன்னார்."கடவுளே எப்படியாவது இந்த காசை திட்டில் நிற்கசெய்" என்று வேண்டிக்கொண்டேன்.
-------------------
பள்ளியில் டீச்சர் ஒருநாள் மாணவர்களை ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை சொல்லுமாறு கேட்டார். முதலில் ராமை சொல்ல சொன்னார்.அவன் சொன்னான்,"Taurus the Bull".
இரண்டாவதாக குமாரை கேட்டார்.அவன் சொன்னான்,"Cancer the crab".
அடுத்து ராஜாவை கேட்டார்.அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்,
"Mickey the mouse".
-------------------------
மைனாவும் நைனாவும்.....

சிறுவன் ராமு ஒரு நாள் ஒரு மைனாவை வாங்கி வந்தான்.அதை மிகவும் பாசமாக வளர்த்து வந்தான்.மதியம் உணவு இடைவேளையின்போது வீட்டிற்கு ஓடி வந்து மைனாவை பார்த்துவிட்டு செல்வான்.ஒரு நாள் அவன் பள்ளிக்கு சென்றபிறகு அவன் தாய் மைனா கூண்டை சுத்தம் செய்ய திறந்தாள்.அப்பொழுது அது வெளியே வந்து கீழே விழுந்துவிட்டது.இதில் அதன் ஒருகால் உடைந்துவிட்டது.இதைப் பார்த்த அவள் மிகவும் கவலை கொண்டாள்.ராமுவிற்கு என்ன சமாதானம் செய்வது என்று யோசித்தாள்.அதற்குள் மதியம் வந்துவிட்ட ராமு, "அம்மா!பசிக்கிது சாப்பாடு போடுமா" என்றான்.அவன் தாய் மெதுவாக,"ராமு, மைனவுக்கு கால் உடைஞ்சிருச்சு" என்றாள்.உடனே ராமு,"அம்மா! நானே பயங்கர பசில வந்துருக்கேன், சீக்கிரம் சோறு போடுமா" என்றான்.அவன் தாய்க்கு ஒரே ஆச்சரியம், அதே சமயம் நிம்மதி.பிறகு ராமு பள்ளிக்கு திரும்பிவிட்டான்.மீண்டும் மாலை வீட்டிற்கு வந்தவன் மைனாவை பார்த்தான்.அதன் கால் உடைந்திருப்பதை பார்த்த அவன் ஓவென்று அழ ஆரம்பித்தான்.அவன் தாய் ஓடி வந்து "ஏன்டா அழற" என்றால்.ராமு, " அம்மா மைனாவிற்கு கால் உடைந்து இருக்கு. நீ ஏன் என்கிட்ட சொல்லல?" என்றான்.அவன் தாய் குழம்பிப் போய்," ஏன்டா! நாந்தான் மதியமே சொன்னனே! அப்ப எதுவும் சொல்லாம இப்ப அழுகிற?" என்றாள். ராமு சொன்னான்,"அம்மா, மதியம் நீ சொல்லும்போது நைனாவுக்கு கால் உடஞ்சு போச்சுனு என் காதுல விழுந்தது.அதான் அமைதியா இருந்துட்டேன்" என்றான்.
------------------------------------

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.
அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.
பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.
ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.
----------------------------------------------
நன்றி உங்களுக்கும் பிடித்ததா?

நகைச்சுவை கதை....+கொஞ்சம் சோக்கு

ஒரு சின்ன நகைச்சுவை கதை.....

ஒரு டிரைவர் காரை வேகமாக ஓட்டி கொண்டு போகும்போது வழியில் திடீரென்று ஒரு கிளி குறுக்கே பாய,சடாரென பிரேக் போட்டு நிறுத்த....கிளி அதிர்ச்சியில் அங்கயே மயங்கி விழுந்து விடுகிறது....
அதன் மேல்பரிதாபம் கொண்ட டிரைவர் அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்து ,அவன் வீட்டில் வைக்க,
முழித்து பார்த்த கிளி,தான் கம்பிகளின் பின்னால் இருப்பதை பார்த்து இப்படி புலம்பியதாம்,

"ஐயய்யோ நான் டிரைவர் ஐ ஏத்தி கொன்னுட்டேனே....."
-----------
சில குட்டி ஜோக்ஸ்,
இன்றே சிரித்து விடு ஏனென்றால் நீயும் காதலிக்கலாம்....
------
ஒரு புலி தன் காதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து வைத்த பார்ட்டி இல் ஒரு பூனையும் ஆடுவதை கண்டு அதை கேட்க்க....
பூனை:கொய்யால காதலிக்கரதுக்கு முன்னால நானும் புலிதான்.....
------
சர்தார்:ஹலோ யாரு பேசறது?
மறுமுனை:நான் செல்லம்மா பேசறேன்...
சர்தார்:ஏங்க சாதாரணமாவே பேசுங்க...

நன்றி...
கார்த்தி....

சிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)


எச்சரிக்கை இந்த கதை ஒரு மாய சுழல் என்னால் இரண்டு வருடங்களுக்கு முன்னாள் எழுதப்பட்ட இந்த கதையில் இருந்து என்னால் இன்னும் விடு பட முடியவில்லை,உங்களால் விடு பட முடிகிறதா பாருங்கள்.....விடு பட்டால் என்னையும் காப்பாற்றுங்கள்....

அந்த இரவின் நிசப்தத்தின் மீது ஒரு மிகப்பெரிய பாறாங்கல்லாய் அந்த வீறிடும் குரல் விழ "ராம் ஜெயந்த் ,திருவாளர் ராஜ் ஜெயிந்திற்கும் திருமதி சுசீலா ஜெயிந்திற்கும் மகனாக அந்த மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தான்"....
அதே சமயம் சிவ்குலாம் ,திருவாளர் ரகு குலாமிற்கும் ,திருமதி சுகுணா குலாமிற்கும் மகனாக அந்த மருத்துவ மனையில் பிறந்தான்...

நாட்கள் சுனாமியின் வேகத்தோடு நகர்ந்து,ராஜ் ஜெயிந்தின் காதோரத்தில் ஏற்பட்ட வெள்ளி முடிகளின் மூலம் இளமையை முதுமை ஆக்கிரமித்துவிட்டதை காட்டியது,
ராம்ஜெயிந்தும் சிவ்குலாமும் ஒரே வகுப்பில் ஒரே கல்லூரியில் பயோ டெக்னாலஜி வகுப்பில் மண்டையை பிய்த்து கொள்ளும் உதார் பார்டிகளில் முதன்மையாக விளங்கினர்,
ஒரு நாள் கைநெடிக் ஹோண்டா வில் இருவரும் பேசிக்கொண்டு போகும் பொது அவர்களின் பேச்சில் ஆவி புகுந்தது.....

நீ ஆவியை பார்த்திருக்கிறாயா ?----இது குலாம்
ஆவியாவது ஒன்னாவது?-----இது ஜெயின்
போடா மடையா ஆவிகள் இருக்கு என்பதோடு அவற்றுக்கு கால்களும் இல்லை என்பது உண்மை....இது குலாம்...
ஆமாடா நான் கூட பார்த்தேன் ஆனா ஆவி இட்லியை எடுத்ததும் வரவே இல்லை....இது ஜெயின்

இவ்வாறு அவர்களின் விவாதம் தொடர ,குலாம் ,நாம் நேரே இப்பொழுது ஆவியுலக mediator ராம்சேத் அவர்களை பார்ப்போம் என்று வண்டியின் வேகத்தை அறுபதில் இருந்து எண்பதுக்கு மாற்றினான்....அப்பொழுது அங்கு வந்த ஒரு மணல் லாரி அவர்களை திருவாளர் கொசுவை நசுக்குவது போல் நசுக்கி போனார்.....

அந்த உலகம் மிகவும் புதிதாக இருந்தது,அந்த பகல் பொழுதின் நிசப்தத்தின் மீது அந்த வீறிடும் குரல் பாறாங்கல்லாய் விழ, ராம் ஜெயந்த் ,ஆவியாளர். ராஜ் ஜெயந்திட்கும் ஆவிஸ்ரீ.சுசீலாவிற்கும் மகனாக அந்த ஆவிபேறு மருத்துவமனையில் பிறந்தான்...
அதே சமயம் சிவ்குலாம் ஆவியாளர் ரகு மற்றும் ஆவிஸ்ரீ .சுகுணாவிற்கும் மகனாக பிறந்தான்...நாட்கள் கினாமியின் வேகத்தோடு (ஆவியுலக சுனாமி)செல்ல,சிவ்குலாமின் காதோரத்தில் ஏற்பட்ட கருப்பு முடிகள் அவருக்கு வயதாவதை சொல்லியது...
விதியின் சதியால்...
இருவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் ஆவி டெக்னாலஜி இல் மண்டையை பிய்த்து கொள்ளும் உடான்ஸ் ஆவிகள் வரிசையில் முதலில் இருந்தனர்,
ஒரு நாள் அவர்கள் இருவரும் "ஹைனடிக் கோண்டா" வில் செல்லும் பொது அவர்களின் பேச்சில் மனிதன் வந்தான்....
"மனிதனை நீ பார்த்திருக்குரியா?---இது ராம்
"மனிதனாவது ஒன்னாவது?-----இது சிவ்...
போடா மனிதன் இருக்கிறான் என்பதோடு அவனுக்கு கால்களும் இருப்பது உண்மை.....

அவர்களின் பேச்சு இவ்வாறு போக,மனித உலக mediator ராம் சேத் ஐ பார்க்க வண்டியில் நூறை தொட ,அங்கு வந்த மனல்லாரி திருவாளர் ,சாரி ஆவியாளர் கொசுவை நசுக்குவது போல் அவர்கள் இருவரையும் நசுக்கி செல்ல....

மீண்டும் அந்த இரவின் நிசப்த்தத்தின் மீது ,என்னும் இரண்டாம் பாரா வில் இருந்து படிக்கவும்.....

குழப்பமுடன் கார்த்தி.....

நன்றி....முழுவதும் படித்தீர்களா?

Friday, January 2, 2009

கண்ணை நம்பாதே பார்ட்-2(வித்தியாச படங்கள்)

ஒரு படம் கோபமானது போன்றும் மற்றொன்று அமைதியாகவும் தோன்றுகிறதா?
எங்கே கொஞ்சம் தூரம் சென்று பார்க்கவும்....

இங்குள்ள பசுவின் படம் இரு வேறு நிறமாக பிரிக்க பட்டுள்ளது அல்லவாஇப்பொழுது பக்கத்திலுள்ள படத்தில் பூச்சியை கொஞ்சம் நேரம் பார்த்துவிட்டு பசு படத்தில் இருக்கும் பூச்சியை காணவும்....என்ன நிற வேறுபாடு தெரியவில்லை அல்லவா ...


உங்கள் கண்களுக்கான பயிற்சி இங்கே....

எங்கே இங்கு எங்கு B உள்ளது என்று கண்டறியுங்கள் பார்க்கலாம்...


RRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRRR
RRRRRRRRRRRBRRRRRRR RRRRRRRRRRRRR
RRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRRR
RRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRRR
RRRRRRRRRRBRRRRRRRR RRRRRRRRRRRRR
RRRRRRRRRRRRRRRRRRR RRRRRRRRRRRRR


போன படத்தில் இரண்டு B உள்ளது.....


இங்கு 1 எங்குள்ளது?


IIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIII1IIIIII
IIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIII
IIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIIIIIIIIIஇங்கு 6 எங்குள்ளது?9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999699999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999
9999999999999999999 999999999999999இங்கு N....


MMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMM
MMMMMMMNMMMMM
MMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMM

இங்கு O .... QQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQOQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQOQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ QQQQQQQQQQQQQQQQQ


என்ன பிடித்ததா?உங்களை மிகவும் கவர்ந்தது?
நன்றி மீண்டும் சந்திப்போம்.....
Blog Widget by LinkWithin