Tuesday, January 6, 2009

இன்னும் கொஞ்சம் சோக்கு..பார்ட்-3

இன்றைய சிரிப்பு படம்:

இதோ மீண்டும் சோக்குகளுடன்.....


சர்தார் ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது,அருகிலிருப்பவர்,

"இது என்ன ஸ்டேஷன்"


சர்தார்:"ரயில்வே ஸ்டேஷன் அப்படின்னு நினைக்கிறேன் "
------------------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"

சொல்லி இருப்பாள் என்று...
--------------------------------
Flash News: தமிழகத்தில் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் என்று மாறியதில் இருந்து ஓட்டல்களில் அதிரடி விலை மாற்றம்.....
சாம்பார் அல்லது சட்னி =ரூபாய் 15
{சைடு டிஷ் :இட்லி முற்றிலும் இலவசம்}
சாம்பார்+ரசம்+மோர்=ரூபாய் 35
{side டிஷ் சாதம் ஆம் இலவசம்}
offer ஒன்லி இன் தமிழ்நாடு....
------------------------------

நம் சர்தார் இல்லாமலா ?
இதோ உங்கள் சர்தார்.....
மனைவி:என்னங்க உங்கள பார்க்க டாக்டர் வந்து இருக்கார் ...
சர்தார்:எனக்கு உடம்பு சரியில்லை யாரையும் பார்க்க முடியாது அப்படின்னு சொல்லி அனுப்பு......
-----------------------------
detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....
-----------------------------
கணவன் மனைவி இருவரும் ஒரு கிணற்றருகே சென்றார்கள்,அது வித்தியாசமான கிணறு என்றும் அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று எழுதியிருந்ததை கண்ட கணவன்,ஒரு ரூபாயை போட்டு விட்டு மனதுக்குள் வேண்டினான்,
இதை கண்ட மனைவி,என்ன வேண்டுநிங்க என்று கேட்டவாறு,கிணற்றை பார்த்தாள்,அப்பொழுது கால் இடறி கிணற்றில் விழுந்து விட,
கணவன் சொன்னான்,
"அட உண்மையிலேயே நினைத்தது நடக்குதே"
---------------------------
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
----------------------

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
-------------------------------
இவை எனக்கு மிகவும் பிடித்தவை....ஏற்க்கனவே கொஞ்சம் வேறு post இல் வந்து இருக்கலாம்....
---
உங்களுக்கு பிடித்தது?

2 comments:

Arnold Edwin said...

//"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"// சூப்பரோ சூப்பர்

coolzkarthi said...

நன்றி நண்பரே....

Blog Widget by LinkWithin