
ஹி ஹி ஹி....
இவை நான் மிகவே ரசித்த ஜோக்குகள்...
நீங்களும் பாருங்களேன்......
ஒருவன் டீ ஷாப் விட்டு வெளியே வரும் போது மிகப்பெரிய சவ ஊர்வலம் ஒன்றை பார்க்கிறான்....
முன்னாள் இரண்டு சவபெட்டிகள் இருக்க,அதன் பின்னே ஒருவன் பெரிய நாய் ஒன்றை பிடித்தவாறு செல்ல,அவனை இருநூறு பேர் தொடர்ந்தனர்,
இது இந்த ஆசாமிக்கு சற்றே ஆச்சரியமாக பட,அந்த நாய் வைத்திருக்கும் ஆசாமியிடம் சென்ற இவன்,
"சார் நான் இவ்வளவு பெரிய ஊர்வலம் பாத்ததே இல்ல,யார் சார் இறந்தது? பெரிய தலைவரா"
நாய் வைத்திருப்பவர்:இல்ல சார்,முன்னாடி இருக்குற சவபெட்டியில என்னோட மனைவியும்,பின்னாடி அவளோட அம்மாவும் அதாவது என்னோட மாமியாரும் போறாங்க....
மற்றவர்:அப்படியா?சாரி சார்,எப்படி இறந்தாங்க?.
நாய் வைத்திருப்பவர்:சார் என்னோட மனைவி என்ன அடிக்க வரும் பொது,இதோ இந்த நாய் அவல கடிச்சு கொன்னுடுச்சு,தடுக்க போன என்னோட மாமியாரையும் கொன்னுடுச்சு....
மற்றவர்:
(சிறிது யோசனைக்கு பின்.....)
ஹ்ம்ம்ம்ம்ம்....
சார் எனக்கு அந்த நாய ஒரு ரெண்டு நாள் கொடுக்கிறீங்களா?
நாய் வைத்திருப்பவர்:
சரி, கியூ ல போய் நில்லுங்க.....
-------------------------------------
இத உலகின் மிக சிறந்த ஜோக் என்று ஒரு வலையில் படித்தேன் பாருங்களேன்
அப்படி தெரிகிறதா என்று.....
இரண்டு பேர் போரில் தீவிரமாக இருக்க,
அவர்கள் நின்று இருக்கும் பக்கத்தில் ஒரு பாம் விழ ,ஒருவன் சரிந்து விழுகிறான்,
மற்றொருவன்,உடனே control ரூமுக்கு கால் பண்ணி,
"சார்,இவன் விழுந்துட்டான்,உடனே backup அனுப்புங்க,"
control room:முதல்ல அவன் உண்மையிலயே செத்துட்டானா அப்படின்னு உறுதி பண்ணுங்க......
மறுமுனையில் டுமீல் என்று சத்தம் வர,
"சார் அவன் செத்துட்டான்".....
நன்றி நண்பர்களே......
Be Cool...
Stay Cool...
2 comments:
கூல் கூல்
வேண்டாம் , நான் அழுதுடுவேன் ...
Post a Comment