Monday, March 22, 2010

"LKG ரௌடீஸ்"



முதல் பையன்:தல!! தல !! உங்க ஆளு கிட்ட எவனோ ரப்பர் வாங்குறான்....

ரெண்டாவது பையன்:எந்த கிளாஸ் டா அவன்??

முதல் பையன்: LKG "B" தல...

ரெண்டாவது பையன்: உடனே B செக்சன்
" பல்பம் பாஸ்கர் "
"செரலாக் சேகர்"
"பென்சில் குணா"
"huggis பாபு "
கிட்ட சொல்லி,அவனோட slate, பீடிங் பாட்டில் எல்லாத்தையும் தூக்க சொல்ரா....

அவன் அழுவட்டும்...!!!

நல்லா அழுவட்டும்.... இந்த ஹோர்லிக்ஸ் கார்த்திகிட்ட வெச்சிகிட்டா இதுதான் நிலைமை அப்படின்னு புரியட்டும்....
----------------------------------------
குறும்புக்கார சிறுவர்கள்....





இது என் மெயிலில் வந்த ஒரு சின்ன கதை...



அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக்கு அவர்கள் famous ..அவர்களின் குறும்பை பொறுக்க முடியாத அவர்களின் தாய் நேரே அவர்கள் இருவரையும் கிராமத்திற்கு புதுசாக வந்திருந்த பாதிரியாரிடம் கொண்டு போய் விட்டாள்...அவர் முதலில் பெரியவனை மட்டும் அழைத்து இருக்க சொல்லி விட்டு சிறியவனை வீட்டுக்கு போக சொன்னார்,

பாதிரியார் பெரியவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்...

பாதிரியார்:my son,Where is God?

அதற்கு அந்த சிறுவன் ஏதும் சொல்லாமல் நிற்க,சற்றே கோப பட்ட பாதிரியார் மீண்டும், உரத்த குரலில்...
"Where is God"என்றார்..

இந்த முறை சிறுவனின் முகத்தில் லேசான கலவரம் எட்டி பார்த்தது...ஆனாலும் அமைதியாகவே இருக்க, இன்னும் கோப பட்ட பாதிரியார்,
"Where is God "என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த,

சடாரென வேகம் எடுத்த சிறுவன் நேரே ஓடினான் ஓடினான்,அவனின் தம்பியிடம் ஓடினான்,சென்று சொன்னான் ,

"டேய் இந்த தடவை நாம் உண்மையிலேயே பெரிய பிரச்சினையில் மாட்டி கொண்டோம் என்றான்"

என்ன என்று மற்றொருவன் அமைதியாக கேற்க,அவன் சொன்னான்....

"இந்த தடவை கடவுள் காணோமாம் எல்லோரும் நாம் தான் எடுத்து இருப்போம் என்று சந்தேக படுகிறார்கள்"



Be Cool....

Stay Cool...

7 comments:

Vijay Anand said...

both are super Karthi..Hahaha

இராகவன் நைஜிரியா said...

கலக்கல் கார்த்திக் என்று பெயர் மாற்றம் செஞ்சுடலாம்.

Krishna said...

ele kiri 2nd 1 is superb......

Unknown said...

so sweet...2nd joke is superb

சீனு said...

எல்.கே.ஜி லாஸ்ட் பெஞ்ச் டெரர் Guys

Guy 1: மச்சான். நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்டா...

Guy 2: ஏன்டா? வீட்டுல எதுனா ப்ராப்ளமா?

Guy 1: இல்லடா. நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்ஸர் போயிருந்தேன். அங்க, ஒரு செம ஃபிகர். சுமார் ஒன்றரை வயசு இருக்கும். அவங்க அம்மா மடியில படுத்து வாயில விரலு வெச்சுட்டு என்ன பாத்து ஒரு லூக் விட்டுச்சு பாரு...ஐயோ...

Guy 2: அப்புறம் என்ன ஆச்சு?

Guy 1: அப்புறம் என்ன? எங்க அப்பன் அத பாத்துட்டு பொறாமையில என் தலையில நறுக்குன்னு ஒரு கொட்டு வெச்சான், கோவத்துல ரெண்டு நாளா நான் 'செரலாக்' கூட சாப்பிடுறது இல்ல...

Guy 2: இந்த அப்பனுங்களே இப்படித்தான் பொறாமையில அலைவானுங்க. நீ டோன்ட் வொர்ரி மச்சான். நாளைக்கு அந்த பொன்ன தொட்டிலோட தூக்குறோம்...

சீனு said...
This comment has been removed by the author.
Anonymous said...

:)

Blog Widget by LinkWithin