Thursday, August 28, 2008

யார் அறிவாளி?

நான் அப்பொழுது 1st ஸ்டாண்டர்ட் படித்து கொண்டிருந்தேன்...வீட்டில் வெட்டியாய் இருக்கிறேனே என்று என்னை கடைக்கு (என்னை?)shampoo வாங்கி வர அனுப்பினார்கள்... என் போதாத காலம்,போகும் வழியில் எங்கேயோ காசை போட்டு தொலைத்தேன்.... அது இரவு என்பதால் சரியாக தெரியவில்லை நான் காசு விழுந்த இடத்தை ஒரு வட்டம் வரைந்து நடுவே ஒரு கல்லை வைத்துவிட்டு வீட்டில் வந்து இங்குதான் அது விழுந்தது என்று அறிவாளித்தனமாக (அப்போவே)சொன்னேன்...வீட்டில் என்னை பாராட்டி விட்டு காசை கண்டுபிடித்து எடுத்து கொண்டார்கள்...
இது நடந்து சரியாக இரண்டு வருடம் கழித்து என் தம்பிக்கும் இப்படி ஒரு சூழ்நிலை...அவனையும் shampoo வாங்கி வர சொல்லி அனுப்பினார்கள்...அவன் கடையில் பார்த்தான், பல வித balloon இருக்க அதில் இரண்டை வாங்கி விட்டு வீட்டில் நேரே வந்து காசு தொலைந்து விட்டது என்றான்..எங்கே என்று கேட்டதற்கு தெரியாது என்று சாதாரணமாக பதில் சொல்லி நின்றான்..அப்பொழுது என்னை பற்றி சொல்லி என் அறிவை அவனிடம் சொன்னார்கள்..அவனிடம் ஒரு நமுட்டு சிரிப்பு பிறக்க...அவன் சென்று விட்டான்....நான் அவனிடம் மெதுவாக டேய் வாடா போய் தேடலாம்,என்று சொல்ல அவன் இங்கே தான் அது இருக்கு என்று எனக்கும் ஒரு balloon தந்தான்,இப்பொழுது சொல்லுங்கள் யார் அறிவாளி என்று?

1 comment:

Gunasekaran said...

poda Dubukku. nee oru aalu, Unakku oru Blogu.. Enna koduma Sir ithu..

Blog Widget by LinkWithin