இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?
இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா.
கணேஷும் வசந்தும் இனி இல்லை என்று நினைக்க முடியவில்லை,நாம் பார்க்கும் பலரின் சாயல் அவர்களை போல் உள்ளதை நாம் காணலாம்,அதுதான் சுஜாதா,எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்.
என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?போன்ற கேள்விகள் முன் நிற்கிறது.மற்றும் அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?.
சரி இனி குட்டி கதைகள்,
1.கதையின் தலைப்பு:
சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.
கதை:பார்த்து concealed wiring தம்பி.
2.தலைப்பு:கரடி வேடமிட்டவனின் கடைசி வார்த்தை:
கதை:என்னை சுட்டுடாதிங்க
3.இந்த கதை நானே எழுதியது...(மெய்யாலுமே)
தலைப்பு:கடைசி மனிதன் டாக்டர்கள் புடைசூழ மரணபடுக்கையில்,
கதை:கைவிரித்தன ரோபோட்டுகள்.
4.தலைப்பு:காஸ் லீக் ஆகிறதா என்று பார்க்க சுவிட்ச் போட்டான்,
கதை:இருந்தது,வயது 24, கண்ணீர் அஞ்சலி மாலை ஐந்து மணிக்கு.
»
No comments:
Post a Comment