Saturday, September 27, 2008

சக்கரகட்டி விமர்சனம்...(தயவு செய்து படத்தில் சம்பந்தம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்)

எனக்கு சற்றே இளகிய மனம் என்பதால் தான் சொன்னேன் படத்தில் தொடர்பு உள்ள நண்பர்கள் கண்டு மனம் நொந்து கொள்ள வேண்டாம்.

வேறு யாராவது இதற்க்கு விமர்சனம் எழுதியுள்ளார்களா என்று பார்த்த போது,
ஒருவர் ,
டாக்ஸி பாடல் ஹிட் ஆனதால் அதை reshoot செய்தார்களாம் அதே போல் படத்தையும் reshoot செய்திருக்கலாம். என்று சிம்பிள் ஆக முடித்து இருந்தார்...
நான் பார்த்த படங்களிலேயே சூர மொக்கையான படம் இதுவாக தான் இருக்கும்,
பேரரசு படங்களை கூட பார்த்து விடலாம் என்று பேரரசுவை நல்லவர் ஆக்கி விட்டார்கள்,படம் ஆரம்பித்த வுடன் american pie யை எடுக்க நினைக்கிறார்களோ என்று நினைதேன் ,ஆனால் அதையே எடுத்திருந்தால் படம் நன்றாக இருந்து இருக்கும்.இவ்வளவு கேவலமான,நாடகம் போல் சை இன்று நாடகங்கள் கூட பல twist உடன் ,குறைந்த பட்சம் பெண்களையாவது பார்க்க வைக்கிறது,இயக்குனர் எதை எடுக்க நினைத்தார் என்பது கடைசி வரை தெரிய வில்லை.ரஹ்மான் தன் பாடல்களை வீண் ஆக்கியதற்கு நஷ்ட ஈடு கோர வேண்டும்...படத்தில் காமெடி பண்ணுகிறேன் என்று ஹீரோவின் நண்பர் பேசும் dialogues படு பயங்கர கடுப்பு...சத்யம் தியேட்டரில் போய் நன்றாக ac இல் தூங்கி விட்டு வரலாம்,நிச்சயம் பக்கத்தில் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்...
நல்ல அனுபவம் வாய்ந்த producer கூட எப்படி சறுக்கினார் என்பது தெறியவில்லை (மகன் என்னும் போது இன்னும் கதையை உன்னிப்பாக கேட்டு விட்டு ஒத்துக்கொண்டிருக்க வேண்டும்).
உங்களுக்கு நான் தரும் ஒரே அட்வைஸ்,தயவு செய்து போய் விடாதிர்கள்...பாட்டு இன்னும் கொஞ்ச நாளில் எல்லா மியூசிக் சேனல் களில் வந்து விடும்.ஓ மறந்து விட்டேன் படத்தில் வரும் பாடல்கள் மட்டுமே பார்க்கும்படி மற்றும் கேட்க முடியும் படி உள்ளது (இல்லை நன்றாகவே உள்ளது)...
இனி படம் நடக்கும் பொது கேட்ட comments,
1.இவனுக தமிழ் எப்போபேசுவானுக .
2.மச்சி தமிழ் பேசுராண்டா,
3.டேய் வெளில எங்க கைல சிக்குனிங்க ...
4. பத்து தடவ டாக்ஸி டாக்ஸி பாட்ட போட்டாலும் கூட பார்த்து இருக்கலாம்(அடியேன் சொன்னது).
இன்னும் பல..

மொத்தத்தில் சக்கரகட்டி
.
.
.

..
.
.
நாமகட்டி

No comments:

Blog Widget by LinkWithin