Sunday, January 4, 2009

சிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)


எச்சரிக்கை இந்த கதை ஒரு மாய சுழல் என்னால் இரண்டு வருடங்களுக்கு முன்னாள் எழுதப்பட்ட இந்த கதையில் இருந்து என்னால் இன்னும் விடு பட முடியவில்லை,உங்களால் விடு பட முடிகிறதா பாருங்கள்.....விடு பட்டால் என்னையும் காப்பாற்றுங்கள்....

அந்த இரவின் நிசப்தத்தின் மீது ஒரு மிகப்பெரிய பாறாங்கல்லாய் அந்த வீறிடும் குரல் விழ "ராம் ஜெயந்த் ,திருவாளர் ராஜ் ஜெயிந்திற்கும் திருமதி சுசீலா ஜெயிந்திற்கும் மகனாக அந்த மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தான்"....
அதே சமயம் சிவ்குலாம் ,திருவாளர் ரகு குலாமிற்கும் ,திருமதி சுகுணா குலாமிற்கும் மகனாக அந்த மருத்துவ மனையில் பிறந்தான்...

நாட்கள் சுனாமியின் வேகத்தோடு நகர்ந்து,ராஜ் ஜெயிந்தின் காதோரத்தில் ஏற்பட்ட வெள்ளி முடிகளின் மூலம் இளமையை முதுமை ஆக்கிரமித்துவிட்டதை காட்டியது,
ராம்ஜெயிந்தும் சிவ்குலாமும் ஒரே வகுப்பில் ஒரே கல்லூரியில் பயோ டெக்னாலஜி வகுப்பில் மண்டையை பிய்த்து கொள்ளும் உதார் பார்டிகளில் முதன்மையாக விளங்கினர்,
ஒரு நாள் கைநெடிக் ஹோண்டா வில் இருவரும் பேசிக்கொண்டு போகும் பொது அவர்களின் பேச்சில் ஆவி புகுந்தது.....

நீ ஆவியை பார்த்திருக்கிறாயா ?----இது குலாம்
ஆவியாவது ஒன்னாவது?-----இது ஜெயின்
போடா மடையா ஆவிகள் இருக்கு என்பதோடு அவற்றுக்கு கால்களும் இல்லை என்பது உண்மை....இது குலாம்...
ஆமாடா நான் கூட பார்த்தேன் ஆனா ஆவி இட்லியை எடுத்ததும் வரவே இல்லை....இது ஜெயின்

இவ்வாறு அவர்களின் விவாதம் தொடர ,குலாம் ,நாம் நேரே இப்பொழுது ஆவியுலக mediator ராம்சேத் அவர்களை பார்ப்போம் என்று வண்டியின் வேகத்தை அறுபதில் இருந்து எண்பதுக்கு மாற்றினான்....அப்பொழுது அங்கு வந்த ஒரு மணல் லாரி அவர்களை திருவாளர் கொசுவை நசுக்குவது போல் நசுக்கி போனார்.....

அந்த உலகம் மிகவும் புதிதாக இருந்தது,அந்த பகல் பொழுதின் நிசப்தத்தின் மீது அந்த வீறிடும் குரல் பாறாங்கல்லாய் விழ, ராம் ஜெயந்த் ,ஆவியாளர். ராஜ் ஜெயந்திட்கும் ஆவிஸ்ரீ.சுசீலாவிற்கும் மகனாக அந்த ஆவிபேறு மருத்துவமனையில் பிறந்தான்...
அதே சமயம் சிவ்குலாம் ஆவியாளர் ரகு மற்றும் ஆவிஸ்ரீ .சுகுணாவிற்கும் மகனாக பிறந்தான்...நாட்கள் கினாமியின் வேகத்தோடு (ஆவியுலக சுனாமி)செல்ல,சிவ்குலாமின் காதோரத்தில் ஏற்பட்ட கருப்பு முடிகள் அவருக்கு வயதாவதை சொல்லியது...
விதியின் சதியால்...
இருவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் ஆவி டெக்னாலஜி இல் மண்டையை பிய்த்து கொள்ளும் உடான்ஸ் ஆவிகள் வரிசையில் முதலில் இருந்தனர்,
ஒரு நாள் அவர்கள் இருவரும் "ஹைனடிக் கோண்டா" வில் செல்லும் பொது அவர்களின் பேச்சில் மனிதன் வந்தான்....
"மனிதனை நீ பார்த்திருக்குரியா?---இது ராம்
"மனிதனாவது ஒன்னாவது?-----இது சிவ்...
போடா மனிதன் இருக்கிறான் என்பதோடு அவனுக்கு கால்களும் இருப்பது உண்மை.....

அவர்களின் பேச்சு இவ்வாறு போக,மனித உலக mediator ராம் சேத் ஐ பார்க்க வண்டியில் நூறை தொட ,அங்கு வந்த மனல்லாரி திருவாளர் ,சாரி ஆவியாளர் கொசுவை நசுக்குவது போல் அவர்கள் இருவரையும் நசுக்கி செல்ல....

மீண்டும் அந்த இரவின் நிசப்த்தத்தின் மீது ,என்னும் இரண்டாம் பாரா வில் இருந்து படிக்கவும்.....

குழப்பமுடன் கார்த்தி.....

நன்றி....முழுவதும் படித்தீர்களா?

10 comments:

Unknown said...

oolzkarthi,

நல்லா இருக்கு.

ஆனால் எங்கோ ”சுட்ட” வாடை வருகிறது.

அடுத்து, கதையை விட உங்கள் “உதித் நாராயண்”(பருவாயில்லை/சிர்ப்பம்/மயிக்கம்) தமிழ் ரொம்ப திகிலாக இருக்கிறது.

தமிழ் திகிலாக இருப்பதால் இனிமேல் யாருக்கும் பிறக்கப் போவதில்லை.

இப்டிகுக்,(?)
ராம் ஜெயந்த் சிவ்குலாம்(ஆர்புவ
ச்கொர்தள்க)









"ராம் ஜெயந்த் சிவ்குலாம்

Unknown said...

Dear coolzkarthi,

கோவிச்சுக்கிடாதீங்க. சும்மா ஒரு விளையாட்டுதான்.

coolzkarthi said...

நன்றி நண்பரே....இது நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதியது என்பதாலும்,அப்பொழுது நான் ராஜேஷ் குமார் நாவல்கள் அதிகம் படிப்பேன் என்பதாலும் ஏற்பட்ட பெயர்கள் தான் இவை...இது என் சொந்த சரக்கு....சமிபத்தில்(ஒரு ஒன்னரை வருசத்துக்கு முன்னால்) சுஜாதாவின் சுழல் கதைகளை படித்தேன் அப்பொழுது,இதுவும் சுழல் கதை போல் பட,அவருக்கு அனுப்பினேன்,ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை....

coolzkarthi said...

நீங்கள் மொசில்லா வில் படித்தால்,இன்டர்நெட் explorer மாறி பாருங்கள்...மொசில்லா வில் இந்த குழப்பம் வரலாம்

நட்புடன் ஜமால் said...

\\சிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)\\

அம்மாடியோவ்

பயமாக்கீது ...

நட்புடன் ஜமால் said...

\\
நன்றி....முழுவதும் படித்தீர்களா?\\

படித்தேன் ...

நட்புடன் ஜமால் said...

கால் இல்லாத ஆவிகள் நடக்கும் போது கொலுசு சத்தம் கேட்க்குதே ஏன்

மல்லிகைப்பூவாசம் வருகிறதே ...

பெண் எல்லாம் பேய் என்று சொல்கிறார்களோ ...

சும்மா சும்மா - தோனுச்சு ...

coolzkarthi said...

நன்றி ஜமால் அவர்களே....

coolzkarthi said...

//கால் இல்லாத ஆவிகள் நடக்கும் போது கொலுசு சத்தம் கேட்க்குதே ஏன்

மல்லிகைப்பூவாசம் வருகிறதே ...

பெண் எல்லாம் பேய் என்று சொல்கிறார்களோ ...

சும்மா சும்மா - தோனுச்சு ...//நான் அப்படி எல்லாம் சொல்லல.....

Anonymous said...

did u wrote this story before u read sujathas suzhal stories. dont say lie. it is full of that kind..
u r fully imitating sujatha..
anyhow society need these kind of writers..

Blog Widget by LinkWithin