Friday, September 18, 2009

உன்னைப்போல் ஒருவன்......விமர்சனம்



உன்னைப்போல் ஒருவன்......

வழக்கமான கமலின்
"One Man Show"
இதில் மிஸ்ஸிங்...

பளிச் பளிச் வசனங்கள் கமல் பட டச் தெரிகிறது,

கதை சாது மிரண்டா ரகம்...
"The stupid common people" என்ன செய்ய முடியும் என்பதே படத்தின் பிரதானம்....
நம் தமிழ் நாட்டில் நடந்தால் அது அழிவு வட நாட்டில் நடந்தால் அது செய்தி,
வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை என்று கமல் முத்திரை தெரிகிறது....

முதலில் அர்ஜுன்,கேப்டன் பாணியிலான ஹை tech தேச பற்று படமோ என்று தோன்ற ஆரம்பிக்கும் போது, வரும் ட்விஸ்ட் இது வேறு என்று உணர்த்துகிறது....

கதை இதுதான்:(தீவிரவாதத்துக்கு எதிராக தீவிரவாதம் தான் சரி)

ஒரு காவல் நிலையத்தில் தன் purse பிக் பாக்கெட் அடிக்கப்பட்டதை தெரிவிக்க வரும் கமல் , அனாமத்தாக ஒரு பையை அருகே இருக்கும் பாத்ரூம் அருகே வைத்து விட்டு செல்ல ,அதில் இருந்து படம் சூடு பிடிக்க
தொடங்குகிறது ,


IG மாறார்க்கு (மோகன்லால்) வரும் போன் கால்,சிட்டி இல் ஐந்து இடங்களில் பாம் வைத்து இருப்பதாக மிரட்ட,
மொத்த போலீஸ் அலெர்ட் செய்ய படுகிறது,
ஒரு மொட்டை மாடியின் மீது இருந்து இதை எல்லாம் செய்யும் கமல்,டிவி ரிப்போர்ட்டர் மூலம் நடப்பவை அனைத்தையும் கண்காணிக்கிறார், லேப்டாப் மற்றும் பல சிம்கள் மூலம் சேட்டைகள் தொடர,சமிபத்தில் கைதான நான்கு தீவிரவாதிகளை விடுவிக்குமாறு மிரட்ட,திறமையான இரண்டு போலீஸ் அதிகாரிகளை மோகன்லால் இந்த ஆபரேஷன் க்கு நியமிக்கிறார்,அவர்கள் தீவிரவாதி தலைவன் போல் செயல் படும் கமலிடம் ஒப்படைத்தனரா?அவர்கள் தப்பினாரா?கமல் பிடிபட்டாரா,அந்த தீவிரவாதிகளுக்கு என்ன ஆனது என்பதை நல்ல ட்விஸ்ட் உடன் கதை முடியும், நல்ல திருப்புமுனை என்று படம் நம்மை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது,இருவரின் நடிப்பும்(மோகன்லால் கமல்) அபாரம்,ஆனால் கமல் அழுவதற்கு பல படங்களில் ஒரே expression காட்டுகிறாரோ என்று தோன்றுகிறது,

"I'm the new face of terror "என்னும் வசனத்துடன் படம் முடிவடைகிறது ....

டிட் பிட்ஸ்:


அனைவரும் சாம்சுங் கைபேசியே பயன்படுத்துகின்றனர்...(விளம்பரம்?)

treatment அறையில் குற்றவாளி முன் பேசும் பொது,என்ன அந்த லத்தியையும் சேத்து பொதச்சிட்டீங்களா என்று கேட்பதில் ஆகட்டும்,விறைப்பு காட்டும் போலீஸ் தனம் என்று அந்த அதிரடி போலீஸ் கலக்கி இருக்கிறார்....

IG அந்த பெண் நிருபருக்கு சிகரட் பற்ற வைப்பது போன்ற காட்சியை தவிர்த்து இருக்கலாம்...(மருத்துவர் and co கவனிக்க)

IIT drop அவுட் மாணவன் மற்றும் ஆரம்பத்தில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அனைவரும் தங்கள் பங்கை நன்று முடித்து இருக்கிறார்கள்....


படத்தில் குறை என்றால்,

lighting சில இடங்களில் சரி இல்லை,(ஹாலிவுட் தரம் இருந்தாலும் கூட நன்றாக தெரிய வேண்டிய காட்சிகள் சில மிஸ் ஆகி விடுகிறது)

Background மியூசிக் படுத்துகிறது,சுருதி கமல் முயன்ற வரை நன்கு செய்ய முயற்சித்துள்ளார்,ஆனாலும் பல இடங்களில் Background மியூசிக் பளிச் வசனங்களை மறைத்து விடுகிறது,ஹெலிகாப்டர் உள்ளே ரயில் ஓடும் சத்தம், இயற்கையாய் இருக்கட்டும் என்று பேசும் போது வண்டி குலுங்கும் சத்தம்,container குலுங்கும் சத்தம் அதிகம் போட்டு ,அவர்கள் பேசுவது சரியாக கேட்காமல் போய் விடுகிறது......

நான் இதன் மூலமான A Wednesday படத்தை மூன்று முறை பார்த்து நசீருதின் ஷா
வின் நடிப்பை வியந்தேன் ,அவரின் முகம் அந்த கேரக்டர் செய்ய இயல்பாய் பொருந்தி இருக்கும்,ஆனால் கமலின் முகம் கொஞ்சம் அந்த கேரக்டர் க்கு பொருந்தாமல் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது,

நசீருதின் ஷா சற்றே கிழ தோற்றம் காட்டி இருப்பார்,கமல் மறுத்து விட்டாரா அல்லது இதுவே போதும் என்று நினைத்து விட்டாரா தெரியவில்லை,

மோகன் லால் கிடைக்கும் கேப் களில் எல்லாம் கோல் அடித்து விடுகிறார்,அவரின் முரட்டு தனமும்,தலைமை செயலராக வரும் லட்சுமி அவர்களை மிரட்டுவது என்று பளிச்சிடுகிறார்....

கமலின் ஒன் man ஷோ மிஸ்ஸிங்....

ஹிந்தியில் தோன்றும் அதே நாடகத்தனம் இதிலும் எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை....

நீங்கள் படத்தை ஏற்கனவே ஹிந்தியில் பார்த்து இருந்தால் வேஸ்ட்,
படம் அப்படியே டிட்டோ.....

நான் கூட புதிதாக எதாவது சேர்த்து இருப்பார்கள் என்று எண்ணி போனேன்....
புதிதாக ஏதும் இல்லை...

ஏதோ ஒரு பேப்பரில் படம் 40 கோடி பட்ஜெட் என்று படித்ததாக ஞயாபகம்,எனக்கு அப்படி தெரியவில்லை......


படம் நல்ல படம்...

ஹிந்தியில் பார்க்காதவர்கள் கண்டிப்பாக இதை பார்க்கவும்.....

உன்னை போல் ஒருவன்...நாம் அனைவரும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஒருவன்....
"A stupid Common man"
"I'm the new face of terror"


நன்றி உங்கள் கார்த்தி ....

Be Cool...
Stay Cool...

10 comments:

Anonymous said...

read similar

ஜோ/Joe said...

//கமலின் ஒன் man ஷோ மிஸ்ஸிங்.//

கமல் அப்படி பண்ணியிருந்தா ..இவரே எல்லாம் பண்ணுறார் ..மத்தவங்களை அமுக்குறாருண்ணு சொல்ல வேண்டியது ..அப்படி பண்ணல்லைண்ணா ஒன் மேன் ஷோ மிஸ்ஸிங் -ற வேண்டியது ..ஸ்ப்பா ..முடியல :)

Anonymous said...

கார்த்தி இப்பொழுது தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆடுவது போல் ஒரு அயிட்டம் டான்ஸ் சேர்த்து உள்ளனர்.
நடனம் மிக கவர்ச்சியாக உள்ளது...

வெங்கட்ராமன்
கோவை.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் அருமை

very low budget படம் ..........
( 3 terrorist ஓட Jeep வெடிக்கும் காட்சிக்கு தான் அதிகப்படியான செலவுன்னு நினைக்கிறேன் )

வழிப்போக்கன் said...

என்ன திடீர்ன்னு விமர்சனமெல்லாம்???

நல்ல விமர்சனம்...

S.A. நவாஸுதீன் said...

ஹிந்தியில் செமையா இருந்தது. தமிழில் பார்க்கணும்.

SivaG said...

உங்களோட விமர்சனம் நல்லா இருக்கு. ஆனால் தெளிவா இல்லை.

///lighting சில இடங்களில் சரி இல்லை,(ஹாலிவுட் தரம் இருந்தாலும் கூட நன்றாக தெரிய வேண்டிய காட்சிகள் சில மிஸ் ஆகி விடுகிறது)

Background மியூசிக் படுத்துகிறது,சுருதி கமல் முயன்ற வரை நன்கு செய்ய முயற்சித்துள்ளார்,ஆனாலும் பல இடங்களில் Background மியூசிக் பளிச் வசனங்களை மறைத்து விடுகிறது,ஹெலிகாப்டர் உள்ளே ரயில் ஓடும் சத்தம், இயற்கையாய் இருக்கட்டும் என்று பேசும் போது வண்டி குலுங்கும் சத்தம்,container குலுங்கும் சத்தம் அதிகம் போட்டு ,அவர்கள் பேசுவது சரியாக கேட்காமல் போய் விடுகிறது///
அப்படியெல்லாம் இல்லை, நீங்க பார்குற தியேட்டர பொருத்து இருக்கு. ரயில் சீன்ல மட்டும் அந்த மாதிரி நீங்க FEEL பண்ணலாம்,
அதும் Live ரெகார்டிங் என்பதால் . மத்தபடி குறை சொல்லுற அளவுக்கு இல்லை. Background Score இன்னும் நல்லா பண்ணிருக்கலாம். அதே மாதிரி நீங்க சொன்ன Lighting, இது RED ONE CAMERA வில் எடுக்கப்பட்டது. அதனால "lighting சரியில்லை" அப்படின்னு சொல்லுவதற்கு வாய்ப்பு இல்லை. இதுவும் தியேட்டர் Problem தான். அப்படி நீங்க Feel பண்ண எதுன்னு mention பண்ணுங்க.
/// A Wednesday படத்தை மூன்று முறை பார்த்து நசீருதின் ஷா
வின் நடிப்பை வியந்தேன் ,அவரின் முகம் அந்த கேரக்டர் செய்ய இயல்பாய் பொருந்தி இருக்கும்,ஆனால் கமலின் முகம் கொஞ்சம் அந்த கேரக்டர் க்கு பொருந்தாமல் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது,

நசீருதின் ஷா சற்றே கிழ தோற்றம் காட்டி இருப்பார்,கமல் மறுத்து விட்டாரா அல்லது இதுவே போதும் என்று நினைத்து விட்டாரா தெரியவில்லை,///
Character க்கு தகுந்த மாதிரி நடிப்பு இருக்கா? இல்லையா?

///நீங்கள் படத்தை ஏற்கனவே ஹிந்தியில் பார்த்து இருந்தால் வேஸ்ட்,
படம் அப்படியே டிட்டோ.....

நான் கூட புதிதாக எதாவது சேர்த்து இருப்பார்கள் என்று எண்ணி போனேன்....
புதிதாக ஏதும் இல்லை...///
3 தடவை பார்த்ததா சொல்றீங்க, நீங்க பார்த்து கவனித்தது அவ்வளவுதான்னு நெனைக்குறேன்.
1. Mohanlal intro
2. Reporter intro, first interview
3. Music
4. Background song
5. வசனம்.
இதெல்லாம் தமிழுக்காக பண்ணப்பட்டது . தயவு செய்து சரியான தகவல் கொடுங்க, நான் கமல் ரசிகன் கிடையாது.

மோகன் லால் IG இல்லை, கமிஷனர்.

வெடிகுண்டு வெங்கட் said...

கார்த்தி , கலகிட்டீங்க.

ஆனால் இது கமலின் ஒன் மேன் ஷோ இல்லை என்பதே என் கருத்து. இதில் கமலை விட மோகன்லால் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்

RVRPhoto said...

Shoot on Sight நடித்தவர நசீருதின் ஷா?

shanthi vel said...

ரிப்போர்ட்டர் புகை பிடிக்கும் சீன் - மிடியாகளின் அலட்சியே போக்கு , மற்றும் அவர்களின் அகம்பாவம் ஆகியவற்றை காட்டுகிறது. எனவே, ரிப்போர்ட்டர் (நடாஷா) அந்த சீன் வைத்து ஒன்னும் பெரியே குறை இல்லையே.

Blog Widget by LinkWithin