சென்ற பதிவில் சேலத்து உணவுகளில் சிறிது மட்டுமே சொன்னேன் என்று பலர் கோபித்து கொண்டார்கள்(சும்மா, தோராயமா ரெண்டு பேர் இருக்கும்)
அதிகம் எழுதினால் போர் அடிக்கும் என்பதால் அவ்வாறு செய்தேன்,இதோ அதன் தொடர்ச்சி.....
சேலம் பற்றி சொல்லி விட்டு தட்டுவடை செட் பற்றி மட்டும் சொல்லாவிட்டால் , சேலம் என்னை மன்னிக்காது.....
ஆஹா தட்டுவடை செட்
(c) சேலம் தள்ளுவண்டி காரர்...
இது வேறு எங்கும் காண முடியாததொரு வஸ்து....
அட அட அடா...கேரட் ,பீட்ரூட் ,சிறிது பெரிய வெங்காயம் அனைத்தும் நன்கு செரவி,ஒவ்வொரு தட்டுவடையிலும் (சில இடங்களில் நிப்பட் என்பார்கள்)சிறிது கார சட்னி,புதினா சட்னி வைத்து ,இரண்டு தட்டுவடைகளின் நடுவே கேரட் and கோ வைத்து வாயில் வைத்தால்,நல்ல ருசி.....
இதன் பரிணாம வளர்ச்சி தான் நொறுவல் , செல்லமாக நொறுக்ஸ் ....
தக்காளி வைத்து கேரட் and கோ வைத்து ,தட்டுவடையை நன்றாக பொடித்து விட்டு,நில கடலை போட்டு ,சிறிது நல்லெண்ணெய் இட்டு சாப்பிட்டால்,அது சத்தான பாஸ்ட் food....
நொறுக்ஸ்.....
(c) ஆண்கள் உயர்நிலை பள்ளியின் எதிரே இருக்கும் தட்டுவடை காரர்...
நெல்லை லாலா ஸ்வீட்ஸ் இன் அல்வா,வாயில் வைத்ததும் உருகும்... ...இருட்டு கடை அல்வாவின் பிம்பம்,
தேர் முட்டி செல்பவர்...
ராஜ கணபதியை வணங்கி விட்டு நேரே வரும் இடம் இதுதான்....
அடுத்தது சிப்பி காளான் வைத்து ஒருவர் creative ஆக செய்யும் ஒருவித காளான் பாஸ்ட் food....இதுவும் நல்ல சுவையுடன் இருக்கும்
(c) மகளிர் உயர் நிலை பள்ளி முன்னால் விக்கும் தள்ளுவண்டிகாரர்....
கொள்ளு ரசம் அனைத்து இடங்களிலும் தெரிந்திருந்தாலும் இங்கு வித்தியாச சுவையுடன் இருக்கும்....காரணம் பச்சை கொள்(வேக வைக்காதது)....சளிக்கு நல்ல இதம் தரும்....
சென்ற முறை விட்டு போனது போவோண்டோ.....
ஒரு முறை நான் ,என் அப்பா மற்றும் சித்தப்பா மூவரும் வெளியே கோயம்பத்தூரில் என்று நினைக்கிறேன்...ஒரு ஓட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்ட ஏககாலத்தில் ,திடும் என மாறி மாறி பார்த்துகொண்டோம்....
நேரே பரோட்டா மாஸ்டரிடம் சென்று நீங்கள் அம்மாபேட்டை தானே என்று கேட்டோம் அவருக்கு ஆச்சர்யம்..... கொத்து பரோட்டா சேலத்தின் மற்றுமொரு முத்திரை....டம்ளரை வைத்து கொத்தி எடுக்கும் ஓசையும் ,கொத்து பரோட்டாவின் மனமும்.....ஆஹா!
கொத்து பாரோட்டவுககென்றே தனியாக குருமா செய்வார்கள் என்றால் பாருங்கள்....
இவை அனைத்தையும் சாப்பிட்டு பழகி விட்ட நான் சென்னையில் படும் பாடு.....
பிற இடங்களில் பண்டிகை சமயங்களில் கூட்டம் ,மற்றும் அதிக கடைகள் இருக்கும் என்றால்,இங்கு?
என்னை போன்ற bachelors பாடு திண்டாட்டம் தான்,பொங்கலுக்கு ,ப்ராஜெக்ட் விசயமாக ஊருக்கு போகாததால்,நான்கு நாட்கள் எங்கள் ஏரியா வில் (ஆதம்பாக்கம் ,ngo colony)ஒரு டீ கடை கூட இல்லை,கொடுமை....
நான்கு நாட்க்களும் பிஸ்கட் மற்றும் பன் உண்டு வாழ்ந்தோம்....ஒரு நாள் ஒரு வேலை தான் சாப்பிடுவோம்...ஒரு சலிப்பு வந்து விடும்....
சென்ற இதழில்..ச்சே சென்ற போஸ்டில் ,
ஆம்பூரான் கடை போண்டா,சில்லி சிக்கன்(நான் சைவம் என்பதால் சொல்லவில்லை) இன்னும் சிலவற்றை சொன்னவர்களுக்கு நன்றிகள்....
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.....
நன்றி கூல் கார்த்தி....
»


