Showing posts with label மீண்டும் சர்தார்... Show all posts
Showing posts with label மீண்டும் சர்தார்... Show all posts

Wednesday, December 10, 2008

மீண்டும் மீண்டும் சர்தார்..


இதோ உங்கள் சர்தார் மறுபடியும்....

ஒரு முறை சர்தார் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று அங்கிருந்த பிரிட்ஜ்ஐ(fridge)எவ்வளவு என்று கேட்டார்...

அமைதியாக அந்த கடைக்காரர் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

இதனால் உசுப்ப பட்ட சர்தார் ,ஒரு சர்தாருக்கு அதை நீ விற்கத்தான் போகிறாய் என்று மனதுக்குள் சொல்லிய வாறு...

தன் தலை பாகையை எடுத்துவிட்டு போய் அந்த fridge என்ன விலை என்று கேட்டார்...அந்த கடைக்காரன் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

அதிர்ச்சி அடைந்தாலும் காட்டி கொள்ளாத சர்தார்...

அடுத்த முறை தாடி எல்லாம் எடுத்து விட்டு,வந்து கேட்டார் அப்பொழுதும் அதே பதிலையே கடைக்காரன் சொல்ல...
சற்றும் மனம் தளராத சர்தார் மொட்டை போட்டு விட்டு இரண்டு foreigners உடன் ஒரு வில்லனை போல் வந்து கேட்க மீண்டும் அந்த கடைக்காரன் அதே பதிலையே தந்தான்...

மனம் நொந்த சர்தார் அவனிடமே நேராக சென்று...தன் தோல்வியை ஒப்பு கொண்டு,எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டார்...

அதற்க்கு அந்த கடைக்காரன் ,"ஏன்னா சர்தார் மட்டும் தான் 'வாஷிங் மெஷின்'ஐ பார்த்து fridge அப்படின்னு சொல்வார்"என்றான் கூலாக..
Blog Widget by LinkWithin