Showing posts with label கொலை வெறி புதிர். Show all posts
Showing posts with label கொலை வெறி புதிர். Show all posts

Saturday, July 11, 2009

ஒரு சின்ன புதிர்.....


உங்களை அதிவேகமாக துரத்தி கொண்டு ஒரு சிங்கம் வருகிறது, அப்பொழுது நீங்கள் அருகே இருக்கும் மரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் கயிற்றில் ஏறி மரக்கிளையை பற்றி கொள்ளுகிறீர்கள் உங்கள் துரதிஷ்டம்,கிளையில் எக்கு தப்பாக கால் வைக்க கயிற்றில் கால் மாட்டி தொங்குகிறீர்கள்.... ....


பின்பு தான் பார்க்கிறீர்கள் கீழே கயிற்றின் அருகில் ஒரு candle ஏற்றி வைக்க பட்டு உள்ளது..(எரிந்து கொண்டுதான்)
(அதாவது படத்தில் உள்ளது போல்)
கயிற்றை மேலே தூக்கவும் முடியாது,இன்னும் கொஞ்சம் நேரம் போனால் கயிற்றில் நெருப்பு பற்றி கொள்ளும் பின்பு நீங்கள் கீழே விழுந்து சிங்கத்துக்கு இறை ஆவது தான்....
இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்?


நன்றாக யோசித்து பதில் சொல்லவும்........

பதில் கீழே.........
ஹி ஹி ஹி.....அது ஒன்னும் இல்லைங்கண்ணா, சந்தோசமா

"Happy Birthday To You

Happy Birthday To you Lion "

அப்படின்னு பாடுங்க போதும் சிங்கம் மெழுகுவத்திய ஊதி அணைச்சு பர்த்டே கொண்டாடிடும்......

ஹைய்யோ ஹைய்யோ...ரொம்ப யோசிச்சிங்களோ.....

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin