இங்கு இருக்கும் சிறுகதைகள் அனைத்தும் நான் சொந்தமாக எழுத முயற்சித்தவை,உங்களுக்கு பிடித்ததா என்று சொல்லுங்களேன்.....
இது நான் முயற்சித்த சயின்ஸ் fiction வகை கதை....
அவரை காப்பாத்தனும்...
இந்த கதை நான் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது...எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...
அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல் ஒரு அவசர கதியில் இயங்கியது,டாக்டர்களின் குரலில் தெரிந்த அந்த பதட்டம் மற்றும் கவலை கண்கூடாக தெரிந்தது,நாம் சாப்பிடுவதை எல்லாம் இவரும் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ,இவர் தான் நம் முன் காலத்தின் மிக பெரிய பொக்கிஷம் என்றும் , வருத்தம் கலந்த தொனியில் டாக்டர்கள் பேசி கொண்டே நடந்தார்கள்....ஏற்கனவே செயற்கை இருதயம்,நுரை ஈரல் என்று பொருத்தப்பட்டும் ."gene riot"என்னும் மரபணு புரட்சி அவன் மூளைக்கு பரவஅந்த டாக்டர்களே மனம் தளந்தார்கள்.....
அந்த maarble களால் சூழ்ந்த அறையில் ,phenyl வாசம் காட்டமாக அடித்தும் அது அந்த டாக்டர்களை ஏதும் செய்ததாக தெரியவில்லை,அந்த நிசப்தமான அறையில் பல டாக்டர்கள் புடை சூழ,அவ்வளவு நேரம் பிடித்து வைத்த்ருந்த அந்த உயிர் என்னும் பறவைக்கு அந்த நபர் விடுதலை கொடுத்தார்...அடுத்த நாள் செய்திகளில்,"நம் உலகின் கடைசி மனிதனும் GENE RIOT என்னும் புது வியாதிர்க்கு பலியானான்,அவனை நமது ARTIFICIAL intelligence கொண்ட டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பற்ற முடியவில்லை..."
(இதோடும் முடிக்கலாம் ஆனால் கீழே உள்ளதை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?)
செய்திகளில் தொடர்ந்து வந்தது,"நம் நாட்டு வீரர்களுக்கும் பக்கத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடந்த எல்லை சண்டையில் இரு பக்கமும் இருவர் இறந்தனர் சாரி செயலிழந்தனர் "
"நம் மெரினாவில் கொட்டி கிடக்கும் தங்கத்தை அல்ல ஆள் இல்லை ஆனால் நமக்கு சக்தி தரும் வைக்கோலின் விலை ஒரு கிலோ 10,000 தாண்டியது,போகும் போக்கை பார்த்தால் solar இல் இயங்கும் நம்மவர்கள் மட்டுமே இனி வாழ இல்லை இயங்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது... "
"நம் நாட்டுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடந்த கிரிக்கெட் ஆட்டம் மழையால் தடை பட்டது"என்றுசெய்தி போய் கொண்டு இருந்தது...நன்றி,உங்களுக்கு பிடித்ததா?உங்கள் ->கார்த்தி cool.....நன்றி...
இன்னும் பல ...
நன்றி நண்பர்களே....
Be Cool...
Stay Cool...