
"வந்தாரை வாழவைக்கும் சிங்கார பூமி சென்னை" என்றொரு பெயர் உண்டு,அந்த சென்னைக்கு ,அடையாளம் தேடி கொள்ளும் பொருட்டு வரும் எண்ணற்ற இளைஞர்களின் முகவரியாக அன்று முதல் இன்று வரை இருப்பது "triplicane"என்று செல்லம்மாக அழைக்கப்படும் "திருவல்லிகேணி".
வேலை,கல்யாணம் என்று ஆகி சென்னையின் இன்ன பிற இடங்களில் செட்டில் ஆகும் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிடித்த இடம் triplicane.
திருவல்லிகேணி ஒவ்வொரு காலையும் செல்வ விநாயகர் கோயிலின் முன் ஒரு ஹாய் வகை உபத்திரவமில்லாத கும்பிடு மூலம் ஆரம்பிக்கும் ,சில இன்று interview ,இன்று எனக்கு பரீட்சை
போன்ற சில வினோத பேச்சலர்களுக்கே உரிய பிரார்த்தனைகளுடன்..எதை சொன்னாலும்,சின்ன சிரிப்புடன்,மறுத்து பேசாத பிள்ளையாரின் முகத்தை பார்த்தது ஏதோ பாதி வேலை முடிந்து விட்டது போன்றதொரு திருப்தி,பின்பு நேரே மோனிஷா மெஸ், அங்கே சில இட்லி மற்றும் தோசையுடன் காலையின் simple breakfast முடியும்,விடுமுறை நாட்கள் எனில் மதியம் காசி விநாயகா மெச்சின் கலந்து கட்டி அடிக்கும் super meals,கலர் கலரான கார்டுகளுடன் ,ஒவ்வொரு கார்டுக்கும் தகுந்த ,வகை வகையான பொரியல் ,,நல்ல பதமான சாதம் ஆஹா அருமை. அந்த உன்னதமான சுவையை எந்த five ஸ்டார் ஹோட்டலிலும் கூட சுவைக்க முடியாது ,மாலை நேரத்தில் ,அப்படியே மெரினாவின் ஓரம் நடக்கும் பொது ,காதோடு ரகசியம் பேசி ,உறவாடிவிட்டு ,தழுவி போகும் கடல் காற்றும் ,காதலியின் மடியில் உலகம் மறந்து கிடக்கும் காதலனை பார்த்து ,ஒரு சின்ன பெருமூச்சு விட்டுவிட்டு,சூரியனின் குட் நைட் ஐ ஏற்று விட்டு,முருகன் இட்லி கடையில்,இட்லியின் பல்வேறு பரிணாமங்களையும் பார்த்து விட்டு(ஹி ஹி பார்க்க மட்டும்,எல்லாம் சாப்பிட்டால் கட்டு படி ஆகாது)வழக்கமான இரண்டு மல்லி பூ இட்லியுடன் அந்த கொதி சாம்பார்,ஆஹா அது சுகானுபவம், அல்லது வழக்கமான மோனிஷா மெஸ் போய் ,நல்ல full கட்டு கட்டிவிட்டு ,ஒரு புள்ளி வாழை,ஒரு ஆவின் பாலோடு,பிள்ளையாரிடம் இதோ வந்து விட்டேன் என்பதோடு பொழுது முடியும்,நண்பர்களின் உடன் அடிக்கும் லூட்டிகளும்,அருகே இருக்கும் மொக்கை தியேட்டரில் மொக்கை படமும் நண்பர்களுடன் காணும் போது நன்றாகத்தான் இருந்தது,திருவல்லிகேணி தன்னிடம் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் ஒரு ஆச்சரியமும்,சுவாரசியமும் கொண்டிருந்தது,
ஒரு புறம் முழவதும் பேச்சளர்களின் கும்மாளம் என்றால் திருவல்லிகேனியின் இன்னொரு முகம் அப்படியே எதிர்மாறானது ,அங்கே "bachelors not allowed"
இரு வேறு துருவங்களாக ,அங்கே ஐயங்கார்களும் பார்த்தசாரதி கோயிலும்,சனிக்கிழமைகளில் அங்கே கூடும் கூட்டமும்,என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,என்றைக்குமே பெருமாள் பிரசாதம் பிரசித்தமானது,
எல்லாம் சொல்லிவிட்டு சீட்டு கட்டு அறைகளை பற்றி சொல்லாவிட்டால்?திருவல்லிகேணி கோபித்துவிடும்,அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற அறைகளுக்கு திருவல்லிகேணியில் பஞ்சம் இல்லை,ஒருவர் படுக்க கூடிய இடத்தில் இருவர் என அமர்க்கள படுத்தும்,சில சமயங்களில் வரும் நண்பனின் தூரத்து உறவினர்,நண்பன் என்று varuvorukku இடம் தரும் மனம் அன்று(?)இருந்தது,சற்றே பணம் இருந்தால் attached bathroom ரூம்கள் ....எல்லோரும் உனக்கு பிடித்த இடம் எது என்று கேட்டால் அமெரிக்காவோ,ஆப்ரிக்காவோ ,ஆட்டுகுட்டியோ என்று சொன்னால் ,எனக்கு பிடித்தது தன்னுள் எண்ணற்றவர்களின் ரகசியங்களையும்,சலிக்காத ஆச்சர்யத்தையும் வைத்திருக்கும் சொர்க்க பூமி,
திருவல்லிகேணி....தான்..
கல்யாணமாகி மனைவியுடன் ,திருவல்லிகேணி வரும் ஆண்களின் முகத்தில்,ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் அப்பட்டமாக தெரியும்,
அது தான் திருவல்லிகேணி...
"The Paradise of Bachelors"
28 comments:
:):):)
//என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,//
அது ஏன் அப்டி ஒரு சந்தோஷம்?:):):)
என்னமோ நீங்கல்லாம் இப்டி புகழ்ந்தாலும் எனக்கு அவ்ளோ பிடிக்காது, ஒருவேளை திருவல்லிகேணியில் நல்ல ஹோட்டல் எங்காவது சாப்பிட்டிருந்தால் பிடிச்சிருக்கும்:):):)
இங்க இருக்க பழைய புத்தகக் கடைகள் ரொம்ப பேமசாச்சே, அதை விட்டுட்டீங்களே.
நன்றி ராப் ,அக்கா....
அதானே எப்படி பழைய புத்தகங்களை நான் மறந்தேன்...
/*//என்னதான் கூட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும்,அங்கே நிற்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷம்,//
அது ஏன் அப்டி ஒரு சந்தோஷம்?:):):)*/ஹி ஹி ..அதான் இனம் புரியாத சந்தோஷம் அப்படின்னு சொல்லிடேன்ல
ஐந்தாண்டு காலம் அங்கே (மு.நா.மேன்ஷன், தி.ஹை.ரோடு) தங்கிய காரணத்தினால், தாங்கள் சொல்லியதனைத்தையும் வழிமொழிகிறேன். கட்டுரை சுவையாக இருந்ததுடன் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்ல தவறவில்லை.
காசி வினாயகா மெஸ்சைப் பத்தி தனியா ஒரு பதிவே போடலாமே.
//
கல்யாணமாகி மனைவியுடன் ,திருவல்லிகேணி வரும் ஆண்களின் முகத்தில்,ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் அப்பட்டமாக தெரியும்,
அது தான் திருவல்லிகேணி...
"The Paradise of Bachelors"
//
சேம் ப்ளட்:((
u forgot ambal mess...
நன்றி மன்மதன் அவர்களே....திருவல்லிகேணி அனுபவங்கள் மறக்க முடியாதவை....
தங்கள் வருகைக்கு நன்றி மன்மதன்
//
கல்யாணமாகி மனைவியுடன் ,திருவல்லிகேணி வரும் ஆண்களின் முகத்தில்,ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகம் அப்பட்டமாக தெரியும்,
அது தான் திருவல்லிகேணி...
"The Paradise of Bachelors"
சேம் ப்ளட்:((
//
ஹா ஹா ஹா...
தங்கள் வருகைக்கும்,பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி இளையபல்லவன்
அட ச்சே அம்பாள் மெஸ்,எப்படி தவறவிட்டேன்....நன்றி அனானி...
அம்பாள் மெஸ்ஸில் கலக்கின்னு ஒரு அய்ட்டம் முட்டையில் செய்தது கிடைக்கும். நாமக்கல் பகுதியில் மட்டுமே கிடைக்கும் அது நான் அறிந்தவரை சென்னையில் அம்பாள் மெஸ்ஸில் மட்டுமே கிடைக்கும்.
:))
நன்றி அப்துல்லா அவர்களே,என்னையும் அந்த கலக்கி மிகவும் கவர்ந்தது...ஆனால் நான் சைவம் என்பதால் கொத்து,மற்றும் சப்பாத்தியுடன் முடித்து கொள்வேன்,சிறு வயதில் ஒரு ஆட்டை உயிருடன் உரிப்பதை,கொன்று அதை வெட்டுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பார்த்ததால் நான் முதலில் ஆட்டு கரி உண்பதையும்,பிறகு மீன்,முட்டை உண்பதையும் விட்டு சைவம் ஆனேன்....நன்றி...
அமெரிக்காவோ,ஆப்ரிக்காவோ ,ஆட்டுகுட்டியோ என்று சொன்னால் ,எனக்கு பிடித்தது தன்னுள் எண்ணற்றவர்களின் ரகசியங்களையும்,சலிக்காத ஆச்சர்யத்தையும் வைத்திருக்கும் சொர்க்க பூமி,
திருவல்லிகேணி....தான்..
//
ஆமாங்க ரொம்பச்சரி,
முன்னால் சரவணா மேன்சன் வாசி.
rapp said...
இங்க இருக்க பழைய புத்தகக் கடைகள் ரொம்ப பேமசாச்சே, அதை விட்டுட்டீங்களே.
//
எங்களுக்கு எதுக்கு இதெல்லாம்.
பேச்சிலர்ஸ் பேரடைஸ் - திருவல்லிக்கேணி
அடடே! வங்க சகாக்களா! காசி விநாயகா மெஸ் பக்கத்தில் ஒட்டியபடி இருக்கும் முத்து மேன்ஷன்ல் தான் இருந்தேன். ஆனால், ஒரு முறை காசி விநாயகா சென்று க்யூவில் நிற்க வைத்து திருப்பி அனுப்பிவிட்டதால், ஒரு கோபத்துடன் திரும்பி வந்து அங்கு ஒரு தடவை கூட சென்றதில்லை.
எங்கள் வாசம் எல்லாம் அம்பாள் மெஸ் தான்.
ஒரு முறை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, பழைய (திருச்சி) நண்பனை திரும்ப கொண்டு வந்த மெஸ். பின் அவன் இருப்பிடம் தெரிந்து கொண்டு அவனுடன் லூட்டி அடித்தது மறக்காதே!!!
அப்புறம், கலக்கி இப்பொழுது எல்லோரும் போட அரம்பித்து விட்டனர்.
தங்கள் வருகைக்கு நன்றி ,
வருங்கால முதல்வர் அவர்களே,
சீனு அவர்களே
எனக்கு பிடிக்கலை, என்னை ஊரை விட்டு அடிச்சு விரட்டுன இடம்
//நன்றி அப்துல்லா அவர்களே,என்னையும் அந்த கலக்கி மிகவும் கவர்ந்தது...ஆனால் நான் சைவம் என்பதால் கொத்து,மற்றும் சப்பாத்தியுடன் முடித்து கொள்வேன்,சிறு வயதில் ஒரு ஆட்டை உயிருடன் உரிப்பதை,கொன்று அதை வெட்டுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பார்த்ததால் நான் முதலில் ஆட்டு கரி உண்பதையும்,பிறகு மீன்,முட்டை உண்பதையும் விட்டு சைவம் ஆனேன்....நன்றி...//
ஜாம்பஜார் ரோட்டில் உள்ளடங்கியுள்ள ஒரு ரோடு (எப்பொதும் வாழைக்காய் போட்டு அந்த ரோடே சகதிகாடாக சந்தாக மாறியிருக்கும்; அதற்க்கு எதிர்புரம் மெயின்ரோட்டில் உரித்த கோழி நாள் முழுக்க தொங்கி ஈ மொய்த்து கொண்டிருப்பதாலும்) அங்கே புழங்கிய பின்னர் தான் வாழை பழம் மற்றும் கோழி எனக்கு அருவெருக்கும்படியானது. ஆனாலும் அந்த சேரும் சகதியும் தாண்டி மெஸ்ஸுக்குள் சென்று விட்டால் நல்ல அனுசரணையான வீட்டு கவனிப்பு. பஞ்சு போன்ற இட்லி என்ன அதற்க்கு ஈலான சட்னியென்ன. Home away from home.
அனுபவித்து எழுதியுள்ளிர்கள் மன்மதன்...cmkarthikeya1986
நன்றி நசரேயன்....
Home away from home....உண்மை தான் நண்பரே....
திருவல்லிக்கேணி புரோட்டா சால்னா வெங்காயத்தை மறந்துட்டிங்களே
Post a Comment