இந்த கதைகள் நான் எங்கேயோ படித்தவை...உங்களுக்காக இங்கே...
கிண்டி ரேஸ் கோர்ஸ்.....
எந்த குதிரை மீது பணம் கட்டலாம் என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான் கணேஷ்....
அவன் மெதுவாக தன் பிறந்த தேதியை யோசித்தான்,25...கூட்டி பார்த்தான் 7,
அவன் தான் குடும்பத்தில் ஏழாவது பையன்,
அவன் அப்பாவும் குடும்பத்தில் ஏழாவது பையன்,
அவனுடைய கம்பெனியில் அவனுக்கு கீழே ஏழு பேர் வேலை செய்கிறார்கள்...
அப்பொழுது மணியும் ஏழு...
இப்படி அவனுக்கும் ஏழுக்கும் பொது முதல் அந்தரங்கமாக பல விசயங்களில் ஒத்துபோவதால்,
அங்கிருந்த ஏழாம் எண் குதிரையின் மேல் சுமார் ஒரு லச்சம் கட்டினான்...
போட்டி தொடங்கியது....
அவன் குதிரை,அதான் அந்த ஏழாம் எண் குதிரை,
சரியாக
கரெக்ட் ஆக
ஏழாவதாக வந்தது....
----------------------------------------------------------------------
அந்த அமெரிக்க சிறு படையில் இருந்த அனைத்து ஆண்களுக்கும் ஒரே ஒரு ஆசை இருந்தது....
அது என்னவென்றால்,அந்த பகுதியிலேயே அழகாக இருந்த ஒரு விலை மகளிடம் ஒரு இரவை கழிக்க வேண்டும் என்பதுதான்...
ஆனால் அவளிடம் பிரபுக்களும்,மந்திரிகளும் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலைமை...அவ்வளவு பணம் கேட்பாள்...
இதனால் அங்குள்ளவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்,அதன்படி அனைவரும் இரண்டு டாலர் தருவது என்பதும்,அனைவரின் பேரும் எழுதி குலுக்கல் முறையில் யார் பெயர் வருகிறதோ அவர் போகலாம் என்று முடிவானது..
அதன்படி ஒரு இளைஞன் தேர்ந்தெடுக்க பட்டான்,
அந்த பெண்ணிடம் அவன்...
அவனை கண்டதும் அவன் சாதாரண ஒருவன் என்பதை அறிந்து கொண்ட அவள் அவனிடம் விவரம் கேட்டு அறிந்து கொண்டாள்..
அவளுக்கு வெளியே இருக்கும் grace புளகாங்கிதம் அடைய வைத்தது...
அவள் அவனிடம்,"நீ சொன்ன செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,அதனால் உனக்கு மட்டும் நான் இலவசமாக,எனக்கு உன் பணம் வேண்டாம்" என்றாள்....
அந்த இளைஞனுக்கு மேலும் மகிழ்ச்சி ஆனது... அவ்வளவு பணமும் நமக்கு தான் என்று எண்ணி கொண்டிருந்த போது...
அவள் அவனிடம்,
அவனுடைய இரண்டு டாலரை மட்டும் தந்தாள்....(unexpected?)
----------------------------------------------------------------------------
இது நானே எழுதியது...
(C) coolzkarthi(பி.கு)
ரமேஷ் அந்த பெண்ணை பார்த்த உடன்,அவன் மட்டுமின்றி அவனுடைய காரும் இயங்க மறுத்தது...
அவள்,அவன் எங்கேயோ பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் பார்த்தவளின் அழகிய கண்களுடனும்,பக்கத்து வீட்டு ரேகாவின் அழகிய கூந்தலுடனும்...சத்யம் தியேட்டரில் தன் boy friend உடன் வந்தவளின் நளினம் என்று ஒரு கலந்து கட்டிய தாஜ் மகால் போல் இருந்தாள்,அவளிடம் சென்ற ரமேஷ்...நீங்க 'சுந்தரி' தானே என்று ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசினான்,
டக் என்று திரும்பினால் கழுத்து உடைந்து விடுமோ என்னமோ என்று அவள் மெதுவாக ஒரு தேர்ந்த நளினத்தோடு திரும்பி...
"நான் சுந்தரி இல்லைங்க சுந்தர் இப்பதான் பாம்பே ஆபரேஷேன் ... என்று முடிப்பதுக்குள்,ரமேஷின் கார் speedometer இல்
ஐம்பதை தாண்டி தலைதெறிக்க ஓடி கொண்டிருந்தது....(கூடவே ரமேஷ் உம் தான்)...(unexpexted too?)
-----------------------------------------------------------------------------------
உங்களுக்கு பிடித்த கதை?post comment ...
நன்றி.....
»
No comments:
Post a Comment