Tuesday, December 23, 2008

காக்காயன் மற்றும் காக்காணி....


இது நான் நான்கு வருடங்கள் முன்பு எழுதிய கதை,
ஆர்வ கோளாறினால் குமுதத்திற்கு எழுதி போட்டு publish ஆகாததினால் ,விடா முயுற்சியுடன் ஆனந்த விகடனுக்கும் எழுதி போட்டு...ச்சே ச்சே publicity எல்லாம் எனக்கு பிடிக்காது ,அதனால் அதை publish பண்ணாதிர்கள் என்று கண்டிப்புடன்(?)
சொல்லிவிட்டேன்..
"இது காமெடி,romance மற்றும் tragedy "ஆகிய மூன்றும் கலந்து கட்டிய கலவை...
சரி இனி கதை....

காக்காயன் கருப்புதான்,அண்டங்காகம் தான் ஆனாலும் அவனோட கட்டுமஸ்தான உடம்போடு,ஒரு எவ்வு எவ்வி பறந்தால்,பக்கத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிக்கு செல்லும் காக்காநிகளின் பார்வை ஒரு முறை அவன் மேல் படிந்து விட்டு வெட்கத்துடன் திரும்பும்...

அன்றும் அப்படிதான்,காக்காயன் இரண்டே நிமிடத்தில் கீழே ஓடி கொண்டிருந்த எலியாரை ஸ்வாகா ஆக்கி தன் "பிரேக் பாஸ்ட்"முடிந்த திருப்தியில் அருகே இருந்த கரண்ட் கம்பத்தில்,ஒரு கம்பியின் மேல் போய் உட்கார்ந்து ஒரு நோட்டம் விட்டார்,சற்று தொலைவில் அவனையே பார்த்த வாறு காக்காணி...(நம் கதா நாயகி)...
காக்கானியின் மனதுக்குள் கற்பனை ஓடியது,"ஆள் அண்டங்காகம் தான் ஆனாலும் அம்சமாக இருக்கிறானே என்று"
அவள் வீட்டில் கலப்பு திருமணத்துக்கு ஒத்துக்கொள்வார்களா(இவள் சாதா காக்கை)என்று யோசித்தாள்...
சற்று நாட்களுக்கு முன் தன் தந்தை ஒரு கூட்டத்தில் பேசியது சாரி கரைந்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது...
"நாம் இன்று நம் பழைய வழிமுறைகளை கடை பிடிக்கிறோமா என்றால்,இல்லை என்றே சொல்ல வேண்டும்,இன்று யாராவது மனித பசங்கள் உணவு வைத்தால் நாம் பெயருக்கு மட்டுமே கரைந்து மற்றவர்களை கூப்பிடுவது போல் பாவ்லா செய்து விட்டு சாப்பாடை நாமே சாப்பிட்டு விடுகிறோம்,இது போல் மாறி வரும் பழக்கங்களுடன் நாம் இனி கலப்பு திருமணத்தையும் ஆதரிக்க வேண்டும்,இனி அண்டங்காகம் சாதா காகம் என்று பிரிவு இருக்க கூடாது "என்று அவர் பேசியது காக்கானியின் ஞாபகத்தில் வந்தாலும்,தன் மகள் என்றதும் தன் அப்பா என்ன சொல்வார்,என்று யோசித்தாள்..

அங்கே காக்காயன் மனதில்,"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ,"செல்லம்மா செல்லம்மா நில்லு நில்லு "என்று பல பாடல்கள் மனதிற்குள் கலந்து கட்டி ஆயிரம் வாட்ஸ் இல் அலறியது..
அங்கே அதற்கு சற்றே குறையாமல்,காகானியின் மனதில்"இவன் யாரோ இவன் யாரோ "என்ற பாடல் ஒளிபரப்பானது...

காக்காயனை நோக்கி ஜிவ்வென்று பறந்து வந்த காக்காணி எதிரே இருந்த கம்பியில் உட்கார்ந்தாள்...
மெதுவாக காக்காயனும் அவள் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு போனான்,அவர்களின் அலகு மெதுவாக slow motion இல் நெருங்கி..
நெருங்கி,ஒருவரின் அலகை மற்றவரின் அலகு தொட்டவுடன்,


"பளீர் என்ற வெளிச்சத்துடன்,படார் என்ற சத்தம் தொடர்ந்து வர,அங்கே இரண்டு உருவங்கள் புகைந்து கொண்டிருந்தது"

காரணம்,"+VE மற்றும் neutral கரண்ட் கம்பிகள்"
("இன்று இது ஆற்காட்டார் குறுக்கே வராமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்")

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ...அல்ல...அல்ல..."

------------------------
சரி இனி வழக்கமாக சோக்கு...(என் அப்பா எழுதி பத்திரிக்கையில் வந்தது)
"மனைவி:ஏங்க பக்கத்து வீட்டு நரசிம்மன் சார் உயிர் தூக்கத்திலேயே போயிருச்சாம்...
கணவன்:அட கடவுளே வா அவங்க வீட்டுக்கு போய் பார்க்கலாம்...
மனைவி:"கொஞ்சம் பொறுங்க பாடி இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையாம்"
-----------------------
titanic கப்பல் எப்படி முழுகியதுன்னு தெரியுமா?
தெரியாத சொல்றேன்...
"பொலக்,குபுக்,லுபுக் ,டுபுக்,புலுக்"அப்படின்னு...
ப்ளீஸ் சிரிக்காதிங்க,நானே சோகமா எழுதியது...
---
நன்றி...
உங்களுக்கு பிடித்ததா?
"do post your comment"
have fun,
-->கார்த்தி....cool

5 comments:

இராகவன், நைஜிரியா said...

காக்கா கதைக்கெல்லாம் கமெண்ட் போடணும்.. அவ்வளவுதானே..

”கமெண்ட்...”

போட்டாச்சுப்பா.. இப்போ சந்தோஷமா?

ஜோக்குகெல்லாம் சிரிச்சாச்சு...

வேற என்ன பண்ணனும் சொல்லுங்க..

coolzkarthi said...

மிக்க நன்றி ராகவன் சார்.....

SUREஷ் said...

//
காரணம்,"+VE மற்றும் neutral கரண்ட் கம்பிகள்"//


சே.. வெவ்வேர ஸ்டேட்டெஸ்ல இருக்கறவங்கள சேரவே விட மாட்டீங்களா

ஜுர்கேன் க்ருகேர் said...

கார்த்தி....பேக்கிரவுண்டு பாட்டு ரொம்ப நல்லாருக்கு !

கபீஷ் said...

காக்கா கதை நல்லாருக்கு! :-)

ஜோக்ஸ் பரவாயில்ல:-)

Blog Widget by LinkWithin