Wednesday, February 18, 2009

தேவதைகளின் தேவதை.....


இது நான் நான்கு வருடங்கள் முன்பு நாமும் ஒரு காதல் கதை (காதல் கதை தான் காதல் அல்ல)செய்தால் என்ன என்ற நினைப்பில் எழுதியது,உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.....
-------------------------------------------------------
எச்சரிக்கை இது கதை சொல்லும் காதல் கவிதை....

வானவில் வண்ணங்களில் வழுக்கி விளையாடும் வாலிபனாக வாளிப்போடு வளைய வந்த என்னை நங்கூரம் இட்டு நிற்க வைத்த நீ நின்றாலும் நடந்தாலும் உண்மையில் விபத்துக்கள் ஓராயிரம் ....

தேவதையையே காணாத நான் தேவதைகளின் தேவதையை கண்டதும்,


இயற்பியல் மாணவன் என்னுள்

வேதியியல் மாற்றங்கள் கொணர்ந்து

உயிரியல் உடலை உலுக்கி

பூகோலவியலின் உலகம் மறந்து

வரலாற்று கிளியோபாட்ராவை மறக்க வைத்து

கணக்கு செய்யும் கல்வி போதித்து

உயிர் நுட்ப இயலின் ஜீன்கள் புரட்ச்சி செய்ய
என்று என் அனைத்து இயல்களையும் திண்டாட வைத்த பெருமை உன்னையே சாரும்.....

ஒற்றை காலில் தவம் கிடக்கும் முனிவர்களுக்கு இறைவனின் ஆசி போன்று,
நீ இங்கே இருபத்தி ஓராம் வீடு எங்கே என்று என்னை கேட்க....

உன் வாயில் இருந்து வந்த கவிதைகள் என்னை திக்கு முக்காட வைத்தது....

நான் நேரே என் வீட்டுக்கு அருகில் இருக்கும் 21 ஆம் வீட்டுக்கு பறந்து ச்சே நடந்து சென்று வழி காண்பிக்க,சொர்க்கம் என் வீட்டருகே குடி பெயர்ந்தது....

உன் அழகை வருணிக்க தமிழிலேயே வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்க,கனாவிலும் கண்டிராத கன்னி உன் அழகை வருணிக்க வார்த்தை இன்றி உன் பெயரை எழுதி ஆறுதல் கொண்டேன்....

சொர்க்கத்தின் இவ்வளவு அருகிலா நரகம் இருக்கும்,என் வீடு உன் வீட்டருகே(சொர்க்கம்) நரகமாய் தகிக்க,நொடியில் என் வீடும் சொர்க்கமானது உன் வரவால்....
எங்கள் வீட்டில் உள்ளோரை நீ கிரஹ பிரவேசத்திற்கு அழைக்க...பாவம் உனக்கு தெரியவா போகிறது என் மனம் என்றோ உன் வீட்டில் குடியேறியது....

மறுநாள் உன் வீட்டுக்கு வந்த என்னை நோக்கி நீ உதிர்த்த சிரிப்புக்கு லிப்கோ முதல் oxford வரை அனைத்து dictionary களும் அர்த்தம் தெரியாமல் பல்லிளித்தன...உன் சிரிப்புகளுக்கு அர்த்தம் தேட முயன்று நான் தொலைத்த இரவுகள் ஏராளம்....என்றால்
காலையில் கோலமே கோலமிடும் கோலம் காண,பூமிக்கு இரண்டு நிலவ என்று சூரியனை போல் நானும் குழம்பி மெல்ல எட்டி பார்க்கும் பொது எனக்கு பூபாளமே உன் கொலுசொலி தான்....சேவலுக்கு விடிந்து விட்டது என்று சொல்லி மயிலை நீ நடனமாடி உள்ளே செல்லும் பொது என்னை பார்த்த பார்வை,....

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று கவிதை பாட முயன்று உன் பெயரை சொல்லி ஜென்ம சாபல்யம் கொண்டேன்....

என் உடை அழகானது,
என் நடை,
என் தலைஎழுத்து போன்ற கையெழுத்து இவற்றுடன்
நானும் அழகானேன்....

உன்னை நினைக்கும் நேரதிற்கு அடுத்து கண்ணாடி முன் நிற்கும் நேரம் அதிகமானது..

பூக்களும் சொர்க்கம் அடைகின்றன என்னவளின் கூந்தலை சேரும் பொது என்று என்னும் பொது,ஒரு வன்று உன்னையும் பூ என்று எண்ணி அருகே வர,மானை மருண்ட நீ ஓடி வந்து என் மேல் மோத....பூ மோதி என்னுள் பூகம்பம்....
உன் முகத்தில் தெரிந்தது வெக்கமா ?பயமா?என்று நான் குழம்ப...மறுநாள் நீ உதிர்த்த சிரிப்பில் நான் அர்த்தம் தேடி ,கைகள் தனிச்சையாக இயங்க ஒரு காதல் கடிதத்துடன் உன்னை தேடி.....
நீ குட்டி நிலாவாக ஒலி வழங்கி கொண்டிருக்க,நிலா உன்னில் இருந்து ஒலி பெற்றதா அல்லது நீ நிலவிடம் பெற்றாயா என்று உன்னை சுற்றும் விட்டில் பூச்சியை நான் வர,அங்கே இன்னொரு விட்டில் பூச்சி கையில் காகிதத்துடன்....

நீ அவன் கொடுத்த காகிதத்தை கிழித்து விட்டு கோபமாக பார்க்க,முதல் முறை இன்னொருவன் தோல்வியில் எனக்கு சந்தோஷம்...

என் காகிதம் குப்பை தொட்டிக்கு போக ,உன் நினைவுகளை புதைத்து அதன் மேல் தாஜ் மகாலை காட்டிலும் பெரிய மஹால் கட்டியது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

மறுநாள் நான் கல்லூரி போய் வரும் போது அதிர்ச்சி....

என் அறை என்றும் இல்லாமல் இன்று சுத்தமாய்....!!!!!

என் அம்மாவுக்கு ஒத்தாசையை நீ வீட்டில் வேலை செய்தாய் என்று அறிந்து குப்பை கூடையை பார்த்தேன் அது பல்லிளித்தது.....

யோசனையில் நிலா வெளிச்சத்தில் வெளியே வந்தேன்...என் கண்களை யாரோ மூடுவது தெரிந்தது...நான் திரும்ப நீ நின்றிருந்தாய்....அடேய் திருடா என்று நீ திட்ட,திரு திருவென நான்......

நீயே சொன்னாய்,"மடையா உன்மேல் கொண்ட காதலால் தான் நான் அவன் கொடுத்த கடிதத்தை கிழித்தேன்"

இன்னும் என்னால் மீள முடியவில்லை.....

நீயே தொடர்ந்தாய்,

"அடேய் என் இதயத்தை கொடுடா என்றாய்"

"கொடுத்தால் செத்து விடுவேன்"என்று நான் பரிதாபமாக சொல்ல

ஏன்?

என் இதயம் உன்னிடம்.....

என் முன் நான் குப்பை கூடையில் எறிந்த காகிதத்தை காண்பித்து நீ சிரிக்க...
எந்த அகராதியும் இன்றி நான் அர்த்தம் கண்டேன்....


"ஐயோ பிரம்மனே போதும் போதும்...
பிற பெண்களிடம் பார்வையையே திருப்பமாட்டாத எனக்கு ,

"காதலால் ,
காதலுக்காக,
காதலுக்கென்றே "
செதுக்கியவளை பரிசளித்தமைக்கு நன்றி"

->காதலுடன் கார்த்தி....


-----------------------------------------
ரொம்ப பெரிதோ....

உங்கள் கருத்துக்களை கூறவும்....

நன்றி கார்த்தி.....

12 comments:

ரமேஷ் வைத்யா said...

நல்லாயிருக்கு. ஓவராக மோனை தேவையில்லை.

coolzkarthi said...

நன்றி ரமேஷ் வைத்யா அவர்களே.....
இது நான் Ug படிக்கும் போது எழுதியதால்,அந்த மோனைகளின் தாக்கம் அதிகம்,அப்பொழுது அவ்வளவு ஞானம் இல்லை.....

கார்க்கிபவா said...

ம்ம்.. நல்லாயிருக்குப்பா..

சுபானு said...

// நீ உதிர்த்த சிரிப்புக்கு லிப்கோ முதல் oxford வரை அனைத்து dictionary களும் அர்த்தம் தெரியாமல் பல்லிளித்தன...உன் சிரிப்புகளுக்கு அர்த்தம் தேட முயன்று நான் தொலைத்த இரவுகள் ஏராளம்.

கவிதையில் ஒரு காதல் கதை அருமை...
:)

சுபானு said...

இது சொந்த அனுபவமா... ?

Anbu said...

நன்றாக இருந்தது அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

எப்போதும் உங்கள் பதிவில் ஜோக்குகள் மட்டும் படித்த எனக்கு, இந்த பதிவு ஒரு வித்யாசத்தை உணர்த்தியது.

வித்யாசமான நடை, வித்யாசமான கரு...

புரிந்தது தம்பி, புரிந்தது...

காதல் உன்னை நல்லாவே எழுத வச்சு இருக்கு...

வாழ்க வளர்க

coolzkarthi said...

நன்றி கார்க்கி.....வருகையை தொடரவும்....

coolzkarthi said...

நன்றி சுபானு....இது சொந்த கதை அல்ல.....சும்மா மனதுக்குள் ஒரு பெண்ணை கற்பனை செய்து எழுதியது.....அவ்வளவே.....

coolzkarthi said...

ஐயய்யோ அண்ணா....உங்க தம்பிய பத்தி இப்படி நீங்களே நினச்சா எப்படி....?இது சும்மா பொழுது போகாம இளங்கலை ஆண்டுகளில் கற்பனை பெண்ணோடு எழுதியது நன்றி அண்ணா.....
(அட நம்புங்க).

coolzkarthi said...

நன்றி அன்பு தம்பி ....

Anonymous said...

very nice but luks like lots of tabu shankar influenced.....

Blog Widget by LinkWithin