Saturday, February 28, 2009

சேலத்து உணவுகள்......


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும்,அதில் சேலத்துக்கு மாம்பழம் மட்டும் என்று சொன்னால் சாரி,

சேலத்தில் மட்டுமே கிடைக்கும் உணவு வகைகள் ஏராளம்.....
சேலம் நகரம்(என் சொந்த ஊர் சேலம் என்று சொல்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.....) தினமும் காலையில் நரசுஸ் காபியின் மனத்தில் தான் விழிக்கும்..,காலையில் பல் விளக்காமல் அந்த காப்பியை அருந்தினால் தான் பலருக்கு காலை கடன்களையே முடிக்க முடியும் என்றால் நம்புவீர்களா?
இவ்வாறாக காலை நேரம் மிக இனிதே தொடங்கும்...
மதியம்? சேலம் அம்மாபேட்டைக்கு தேசிய உணவு(ரொம்ப ஓவரோ?)என்று ஒன்று உண்டு என்றால் அது அவரை கொட்ட குழம்பு(மற்றுமொரு பெயர் முதலியார் கொழம்பு) நாங்கள் கொட்ட குழம்பு என்று செல்லமாக அழைப்போம்...கொண்ட கடலையுடனும் இருக்கும்,அது வேறு எங்கு காட்டிலும் அம்மாபேட்டையில் தான் சிறப்பு....கொட்ட குழம்பு இல்லாத காரணத்தினால் எத்தனையோ உள்ளூர் கல்யாணங்களில் ரகளை நடந்தது வேறு விஷயம்... எல்லா பண்டிகைகளிலும் தவறாது இடம் பிடிக்கும் ஒரு விஷயம் இந்த குழம்பு தான்....அதன் சுவை வாவ்!...

சேலத்துக்கு என்றே சில cool drink உள்ளது அவை பெரும்பாலும் பிற இடங்களில் கிடைப்பதில்லை,

" loveo"லவ் ஓ எனப்படும் இதை அருந்தும் சுகம் நிச்சயம் அந்த மண்ணாங்கட்டி கோக் மற்றும் பெப்சியில் கிடைக்காது....வயிறு இதமாக இருக்கும்....

அடுத்து ஒரோடோ (oroto) energy drink ...இது சேலம் அரசு குளிர் பான கடையின் பிரபலம்....நல்ல சுவை ,வயிற்று பிரச்சினை வராது...
அதே போல் இங்கு கிடைக்கும் பன்னீர் சோடாவும் பிரபலம்....

இன்னும் போவோண்டோ ,மசாலா சோடா போன்று எண்ணற்ற வகைகள்...இவை அனைத்தும் உள்ளூர் products என்பதாலையே பிரபலம் ஆகாதவை....(என்ன கொடும சார்)

காலையில் தென்னங்குருத்து ,அது முதலில் எனக்கு புதிராகவும் (தென்ன மரத்துல தேங்கா இளனி தானே வரும்?ம்ம்ம்ம் )பின்பு பிடித்தும் போனது....

சாயுங்காலம் சொர்க்க நேரம்....

இங்கு மல்லிகா கடை பஜ்ஜி செட் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்....
ச்சே நாலு பஜ்ஜிகளுடன் ,உருளைக்கிழங்கு மசாலா வைத்து (விலை அப்பொழுது 2 ரூ இப்பொழுது 3.50 ரூ ,அற்புதம்....பூரி மட்டும் மசாலாவுக்கு ஏற்றதல்ல என்று கண்டுபிடித்தவர்கள் அம்மாபேட்டை காரர்கள்...மல்லிகா and கோ வெளியே கிளைகள் தொடங்கியதாக கேள்வி...ஆனால் பஜ்ஜி செட் அவ்வளவாக வெளியில் பரவவில்லை....
வெளியில் எங்காவது அதிசயமாக் பஜ்ஜி செட் பார்த்தால் நான் கேட்க்கும் கேள்வி நீங்கள் அம்மாபேட்டையா ?பெரும்பாலும் பதில் ஆமா என்றே இருக்கும்.....



ஒரு முறை நான் ,என் அப்பா மற்றும் சித்தப்பா மூவரும் வெளியே கோயம்பத்தூரில் என்று நினைக்கிறேன்...ஒரு ஓட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்ட ஏககாலத்தில் ,திடும் என மாறி மாறி பார்த்துகொண்டோம்....

நேரே பரோட்டா மாஸ்டரிடம் சென்று நீங்கள் அம்மாபேட்டை தானே என்று கேட்டோம் அவருக்கு ஆச்சர்யம்..... கொத்து பரோட்டா சேலத்தின் மற்றுமொரு முத்திரை....டம்ளரை வைத்து கொத்தி எடுக்கும் ஓசையும் ,கொத்து பரோட்டாவின் மனமும்.....ஆஹா!
கொத்து பாரோட்டவுககென்றே தனியாக குருமா செய்வார்கள் என்றால் பாருங்கள்....

"இது போன்று தனித்துவ சுவை அம்மாபேட்டைக்கே உரித்தானது"


இன்னும் தட்டுவடை செட் ,நொறுக்ஸ்(நொறுவல்),லாலா அல்வா ,காளான் , கொள்ளு ரசம் இன்னும் பல அடுத்து அடுத்து பதிவுகளாக ....
(நான்,உயிருடன் ஆட்டை உரித்து கொல்வதை தற்செயலாக பார்த்ததினால் அசைவம் உண்பதில்லை,அசைவ உணவுகள் சிலவும் இங்கு பிரபலம்...)
உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகிறது....வேறு ஏதேனும் உணவுகள் விட்டு போயிருந்தால் சொல்லவும்....

என்ன முழுவதும் படித்தீர்களா?

20 comments:

இராகவன் நைஜிரியா said...

வாங்கோ... சாப்பாட்டு ராமரே...

எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிப்பீர் போல் இருக்கின்றதே...

சமையல் கலை மாதிரி, ரசித்து உண்பதுவும் ஒரு கலையே...

வடுவூர் குமார் said...

இப்படி சாப்பிட்டும் பலர் வெயிட் போடாததின் ரகசியம் என்னங்க?
நானும் சேலத்தில் சில காலம் சுத்தியிருக்கேன்.

Anonymous said...

AMMAPET-AMMURAN KADAI PONDA/ MARAKATHINGO....ALSO ..CHILLI CHIKEN OPPOSIT OF .. KALAYA MANDAPAM

Anonymous said...

I AM ALOS FROM AMMAPET.....ROMAPA NALAI KAPURAM..SELATHU KARAR....BLOG..NO NO...FISRT BLOG I AM READING

Anonymous said...

சேலம் --------- நானும்
SAM-BANGKOK

CA Venkatesh Krishnan said...

செட்டு தட்டுவடையைப் பற்றி சிறப்பாக எழுதுவீங்கன்னு பார்த்தா உட்டுட்டீங்களே.

சேலத்தில் எனக்கு மிகப் பிடித்த ஐட்டம் செட்டு தட்டு வடை. வேற எங்கயும் இத சாப்பிட்டதில்லை.

காஞ்சிபுரம் என் சொந்த ஊர் என்றாலும் சேலம்தான் எனக்குப் பிடித்த ஊர்...

பிரபாகரன் said...

அம்மாபேட்டை காரரா நீங்கள். நானும் தான். மிலிடரி ஹோட்டல் பத்தி எழுதல. மொச்சகொட்டை கொழம்பு, தட்டுவடை செட் பத்தி எழுதின நீங்க ஆம்புறான் கடை பூண்ட பத்தி எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்.

பிரபாகரன் said...

மனிக்கவும், ஆம்புறான் கடை போண்டா (பூண்ட இல்ல) பத்தி எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்.

coolzkarthi said...

// இராகவன் நைஜிரியா said...

வாங்கோ... சாப்பாட்டு ராமரே...

எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிப்பீர் போல் இருக்கின்றதே...

சமையல் கலை மாதிரி, ரசித்து உண்பதுவும் ஒரு கலையே...//சரியாக சொன்னீர்கள் ராகவன் அண்ணா....

coolzkarthi said...

// வடுவூர் குமார் said...

இப்படி சாப்பிட்டும் பலர் வெயிட் போடாததின் ரகசியம் என்னங்க?
நானும் சேலத்தில் சில காலம் சுத்தியிருக்கேன்.//
யார் சொன்னது நான் எல்லாம் 90 kg ல நின்னுட்டு இருக்கேன் sir .....

coolzkarthi said...

//Anonymous said...

AMMAPET-AMMURAN KADAI PONDA/ MARAKATHINGO....ALSO ..CHILLI CHIKEN OPPOSIT OF .. KALAYA MANDAPAM//
அப்படி சொல்லுங்க அனானி.......நம்மூரு ஆள இப்ப தான் நானும் இணையத்தில் பாக்குறேன்.....

coolzkarthi said...

//I AM ALOS FROM AMMAPET.....ROMAPA NALAI KAPURAM..SELATHU KARAR....BLOG..NO NO...FISRT BLOG I AM READING//அப்படி சொல்லுங்க அனானி.......நம்மூரு ஆள இப்ப தான் நானும் இணையத்தில் பாக்குறேன்.....

coolzkarthi said...

வாங்க SAM-BANGKOK

coolzkarthi said...

// இளைய பல்லவன் said...

செட்டு தட்டுவடையைப் பற்றி சிறப்பாக எழுதுவீங்கன்னு பார்த்தா உட்டுட்டீங்களே.

சேலத்தில் எனக்கு மிகப் பிடித்த ஐட்டம் செட்டு தட்டு வடை. வேற எங்கயும் இத சாப்பிட்டதில்லை.

காஞ்சிபுரம் என் சொந்த ஊர் என்றாலும் சேலம்தான் எனக்குப் பிடித்த ஊர்...//சார் நானாவது மறப்பதாவது....நல்லா பாருங்க அதை அடுத்த பதிவில் எழுதலாம்னு இருக்கேன்....

அதிகம் எழுதினா போர் அடிச்சிடும் அப்படின்னு விட்டு விட்டேன்.....

coolzkarthi said...

//பிரபாகரன் said...

அம்மாபேட்டை காரரா நீங்கள். நானும் தான். மிலிடரி ஹோட்டல் பத்தி எழுதல. மொச்சகொட்டை கொழம்பு, தட்டுவடை செட் பத்தி எழுதின நீங்க ஆம்புறான் கடை பூண்ட பத்தி எழுதாததை வன்மையாக கண்டிக்கிறேன். இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்.//எழுதிடலாம் சார்....

ராஜ நடராஜன் said...

அடுத்த தடவை சேலம் ஜங்சனைக் கடக்கும் போது பலகாரங்களை ருசி பார்த்துட வேண்டியதுதான்.

இதையெல்லாம் தொலைக்காட்சியில சேலம் சமையல் சமைப்பது எப்படின்னு காட்டமாட்டாங்களே!எப்ப பார்த்தாலும் வாலிப வயோதிகர்களுக்கு புத்திமதி சொல்லிகிட்டு!

coolzkarthi said...

ராஜ நடராசன் ....வாங்க சார்.....

Anonymous said...

கார்த்தி நானும் சேலம் தான்.

நம்ம ஊரு கொத்து பரோட்டா மாதிரி மத்த ஊருல கெடைக்காது.தட்டுவடை செட்டும் வேற எங்கயும் கெடைக்காது.

பவண்டோ விட்டுட்டீங்களே!

அப்படியே என் ப்ளாக் பக்கம் எட்டிப் பாருங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

அட இங்க பாருப்பா.. நம்ம ஊரு லவ் ஒ பத்தி எல்லாம் எழுதி இருக்கீங்க.. சந்தோசம்.. வாழ்த்துக்கள்..

Balamurali A said...

கார்த்தி அவர கொட்ட கொழம்பு நம்ம சேலம் மாவட்டத்துக்கே ஒரு ஸ்பெஷல், அம்மா பேட்டைக்கு அடுத்த படியா , தாரமங்கலம் அவர கொட்ட கொழம்புக்கு பேர் போன ஊரு, கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை இல்லேன்னா கூட ஒத்துக்குவாங்க ஆனா அவர கொட்ட இல்லேன்னா அங்க ஒரு கொலையே விழும்.(ஆமாம் இது எங்க முதலியார் ஸ்பெஷல்)

Blog Widget by LinkWithin