Tuesday, July 28, 2009

டிட் பிட்ஸ்......


என்னுடைய வலையில் நான் எழுதிய சில மொக்கை மற்றும் சில தத்துவங்களை வெளியிட்ட குங்குமத்துக்கு நன்றிகள் பல....
அந்த post இன் லிங்க் இங்கே...

சில சோக்குகள்+ பிடித்த வரிகள்+ஒரு மொக்கை


குங்குமம்,வலையில் இருந்து எடுத்து வெளியிட்ட பின்போ அல்லது எடுக்கும் பொழுதோ சம்பந்தப்பட்டவருக்கு ஒரு சின்ன comment மூலம் அல்லது மெயிலுக்கு தெரியபடுத்தினால் நன்று.....
----------------------------------------

ஒரு சோக்கு கவிதை ....

"துடிப்பது என் இதயம் தான்,
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ...
வலித்தால் சொல்லி விடு...
நிறுத்திவிடுகிறேன்,
துடிப்பை அல்ல,
இப்படி லூசு தனமாய் ரீலு விடுவதை...."
----------------
ஒரு கதை....

இருபதாவது மாடியில் இருக்கும் பிரிட்டிஷ் காரன் ஒருவன் வடை ஆர்டர் பண்ணி சாப்பிட தொடங்க,திடீர் என்று அரக்க பறக்க வரும் பியூன்,
"பீட்டர் சார் உங்க பைய்யன் accident ல செத்துட்டான்".....

சடாரென இருபதாவது மாடியில் இருந்து குதிக்கும் அவன்(பிரிட்டிஷ் காரன்),
பதினைந்தாவது மாடியை நெருங்கும் போதுதான் தோன்றுகிறது,
"ச்சே நமக்கு மகனே இல்லையே"

பின்பு பத்தாவது மாடி வரும் பொது,
"ச்சே நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே"

ஐந்தாவது மாடி அருகே,
"my god யாரு அந்த பீட்டர்?"

MORAL:வடை போச்சே....

ஹி ஹி ஹி....
------------------------------------------


ச்சே இந்த "no dues " என்று காலேஜ் இல் ஒவ்வொரு இடமாக சென்று அதை வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விட்டது,மொத்தம் இருபது இடங்களில் வாங்க வேண்டும்,எங்கள் department இல் இருக்கும் நான்கு தளங்களில் ஒவ்வொன்றிலும் ஒருவரிடம்,பின்பு லைப்ரரி (ச்சே இந்த எடம் எங்க இருக்குன்னு அன்னைக்கு தான் தெரிஞ்சது), நாங்க எல்லாம் NCC பக்கம் ஒதுங்க கூட இல்ல அங்கயும் கையெழுத்து...முடியல...
போய் ஒரே நாளில் அனைத்து இடங்களிலும் வாங்கி ஒரு வழியாக
course completion certificate வாங்கியாகிவிட்டது,அதை ஒரு xerox எடுத்து caution deposit சேம்பரில் கொடுத்த பின்பே நிம்மதி...
அப்பொழுது தான் deposit 9000 ரூபாயை அனுப்புவார்களாம்...
அதற்கு ஒரு revenue ஸ்டாம்ப் ஒட்டி,இருபத்தி ஐந்து ரூபாய்க்கு சாதா ஸ்டாம்ப் ஒட்டி,பின்பு ஒரு கவர வாங்கி கொடுத்து....
ஒரு சின்ன ஏக்கத்துடன் அண்ணா பல்கலைகழகத்துக்கு bye சொல்லி கிளம்பி மாங்கனி மாநகரமாம் சேலத்துக்கு இதோ வந்தாகி விட்டது.....
ஹாப்பி இன்று முதல் ஹாப்பி....
ஹோம் ஸ்வீட் ஹோம்.....
இன்னும் ஆறு மாசத்த வெட்டியா கழிக்கணும்....
---------------------------------------------------

நன்றி நண்பர்களே...

Be Cool...
Stay Cool...

20 comments:

தமிழ்நெஞ்சம் said...

Vow. Congrats.

coolzkarthi said...

thank you தமிழ்நெஞ்சம் sir..

S.A. நவாஸுதீன் said...

குங்குமத்தில் உங்களின் பதிவு - வாழ்த்துக்கள் கார்த்தி.

S.A. நவாஸுதீன் said...

ஒரு சோக்கு கவிதை .... - Super

S.A. நவாஸுதீன் said...

ஒரு கதை.... - ஒரு சோக்கு கதை

S.A. நவாஸுதீன் said...

ஹாப்பி இன்று முதல் ஹாப்பி....
ஹோம் ஸ்வீட் ஹோம்.....

இன்னும் ஆறு மாசத்த வெட்டியா கழிக்கணும்.... - ஆறு மாசத்துக்கப்புறம் அதுவே பழகிடும்

ஜெகநாதன் said...

No dues உங்களுக்கு No tearsஆ முடிஞ்சதுக்கு வாழ்த்துக்களப்பா!! அப்ப இன்னும் 6 மாசம் ​மொக்கைகளால எங்களுக்கு முழி பிதுங்கப்​போவுது??

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள்...

அபுஅஃப்ஸர் said...

அப்போ 6 மாசத்துக்கு நிறைய மொக்கைகள் காணக்கிடைக்கும் ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோர்ஸ் கப்ளீஸனுக்கு வாழ்த்துக்கள்

ரிசல்ட் எப்போ?

coolzkarthi said...

நன்றி S.A. நவாஸுதீன் அண்ணே...

coolzkarthi said...

நன்றி ஜெகநாதன்...

coolzkarthi said...

நன்றி வழிப்போக்கன்...

coolzkarthi said...

நன்றி அபுஅஃப்ஸர் அண்ணே

தமிழ் வெங்கட் said...

கதை கவிதை கலக்குறியே கார்த்தி

தமிழ் வெங்கட் said...

போன மாசம் என் ஜோக்கு குங்குமத்தில
இப்ப உன்னுது..பத்திரிக்கை பிளாக்குல
பூந்து விளையாடுது போல..!

தமிழ் வெங்கட் said...

காதல் கவிதை பலமா இருக்கு
பார்த்து வீட்டுலே சொல்லிடடுமா..!
எங்க வச்சிருந்த இந்த கற்பனையல்லாம்

தமிழ் வெங்கட் said...

தமிழிஸில் ஓட்டு போடலாமுன்னு
பாத்தா பக்கமே திறக்கலே..என்ன
ஆச்சு தொழில்நுட்ப கோளாறா..?

sasi said...

I got ur blog from kungkumam.. its so good.. keep it up

coolzkarthi said...

ஆஹா தமிழ் வெங்கட் மாம்ஸ்...நன்றி....

coolzkarthi said...

நன்றி சசி....

Blog Widget by LinkWithin