Monday, December 22, 2008

முடியுமா உங்களால் (பதிலளியுங்கள் பார்க்கலாம்)பார்ட்-4

இந்த முறை கொஞ்சம் கடினமான கேள்விகள் .....வழக்கம் போல் கலக்குங்க....


1. உங்கள் இனிப்பகத்தில் ,பத்து அட்டைபெட்டிகள் உள்ளது ,ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் பத்து மைசூர் பாகு (mysore
pak)உள்ளது ,ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது ,இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவல்
வருகிறது அதன் படி உங்கள் ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்
அளவுக்கு திருடிவிட்டான் என்று தெரியவருகிறது...துரதிஷ்ட வசமாக அந்த நேரத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் balance
இல் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடையை காண முடிகின்ற அளவுக்கு மட்டும் சார்ஜ் உள்ளது என்னும் நிலையில்,அந்த
அட்டை பெட்டி எது என்று நீங்கள் கண்டறிந்து அதை செய்தவனை நீக்க வேண்டும்...(ஒவ்வொரு அட்டை பெட்டியையும்
ஒருவன் pack செய்தான் என கொள்க)
(Hint:நீங்கள் ஒவ்வொரு அட்டை பெட்டியையும் திறந்து பார்க்கவும் ,தேவையென்றால் அதில் உள்ள இனிப்பை வெளியே எடுக்கவும் அனுமதி உண்டு(அதுக்காக நீங்களே சாப்பிட கூடாது))


2. இது situation handling வகையறா.....

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்து கொள்ளுங்கள் உங்களுடைய நோயாளி ஒருவர்க்கு இரண்டு வகையான மாத்திரைகளில்
இருந்து ஒவ்வொன்றிலும் ஒன்றை மட்டும் தர வேண்டும் என்னும் நிலையில் உங்கள் நர்ஸ் இரண்டு வகையான
மாத்திரைகளில் இருந்தும் இரண்டு இரண்டு எடுத்து வந்து விடுகிறார்,அதை பார்க்கும் உங்களுக்கு பயங்கர ஷாக் .ஏனெனில்
நான்கும் பார்க்க ஒரே மாதிரி தோற்றம் கொண்டவையாக உள்ளது,நோயாளிக்கு கண்டிப்பாக ஒரு வகையில் இருந்து ஒன்று
மட்டுமே கொடுக்க வேண்டும் ,ஒரே வகையில் இருந்து இரண்டு கொடுத்தாலோ அல்லது மாத்திரையே கொடுக்காமல்
போனாலோ நோயாளியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில் எப்படி இந்த நிலையை சமாளிப்பீர்கள்?
(மேலும் மாத்திரைகள் கைவசம் இல்லை )

3. நீங்கள் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில் ,ஒரு இருட்டு அறையில் உங்களுடைய சாக்ஸ்,ஐந்து
வெள்ளை சாக்ஸ் உம் ஏழு கருப்பு சாக்ஸ் உம் உள்ளது ,உங்களுக்கு ஏதோ ஒன்றிலாவது ஒரு ஜோடி சரியான ஜோடி யாக
அமைய வேண்டும் எனில் எத்தனை (ஜோடி அல்ல எண்ணிக்கை)சாக்ஸ் எடுப்பிர்கள்(உங்களால் பார்க்க முடியாது)

4. உங்களுடைய சட்டையை விட உங்களின் பாண்ட்(pant) இன் விலை நூறு ரூபாய் அதிகம்.....இரண்டும் சேர்த்தி 110 ரூபாய்
எனில் தனி தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்களேன்....

5. இது கொஞ்சம் டப்பா,சரி சரியான பதில் சொல்லுகிறீர்களா பார்ப்போம்,
இதற்கான பதிலை நீங்கள் முதலில் நினைத்ததை தான் சொல்ல வேண்டும்....

நான் சொல்லும் எண்களை எல்லாம் அப்படியே கூட்டி கொண்டு வாருங்கள்....

முதலில் பத்துடன் ஆயிரம் கூட்டவும்,

பின்பு அதனுடன் ஒரு அறுபதை கூட்டவும்...

இப்பொழுது வரும் விடையுடன் ஒரு இரண்டாயிரம் கூட்டவும்

அதனுடன் ஒரு இருபது கூட்டவும்....

அதனுடன் ஒரு ஆயிரம் கூட்டுங்கள் ...

இப்பொழுது ஒரு பத்தை மட்டும் கூட்டி விடை சொல்லுங்களேன்....
--------------------------------
(comment moderation enable பண்ணி உள்ளேன்)

----------------------------------------

9 comments:

அனுஜன்யா said...

1. முதல் பெட்டியில் இருந்து ஒரு மைசூர் பாக். இரண்டாவதிலிருந்து இரண்டு என்று... பத்தாவது பெட்டியில் இருந்து பத்து. மொத்தம் 55 மைசூர் பாக் துண்டுகள். மொத்த எடை (55 x 10 = 550 g) இருக்க வேண்டும். எவ்வளவு கிராம் குறைகிறதோ, அந்த என்ன உள்ள அட்டப் பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாக் உள்ளது. உதாரணம்: மொத்த எடை 545 கிராம் என்றால், ஐந்தாவது பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாக் உள்ளது.

2. ஒவ்வொரு மாத்திரையையும் பாதி ஆக்கி, ஒரு பாதி மட்டும் நோயாளிக்குக் கொடுக்க வேண்டும். முதல் மாதிரியில் பாதி; இரண்டாவதில் பாதி; இப்படி.

3. மூன்று

4. சட்டை - 5 ரூபாய் (என்னய்யா கணக்கு இது? - எந்தக் காலத்தில்?)
பாண்ட் - 105 ரூபாய்

5. 4100

அனுஜன்யா

indep said...

1. take 1 from first box, 2 from second box, 3 from third... and weigh them together. If the result is xx90 gms, then the first box is the required one. If the result is xx80gms, then the second box is the required one....and so on....

2. Take half from all the four tablets.

3. 3 socks.

4. shirt 5 rupees and pant 105 rupees

5. 4100

Thanks,
Indepen

Anonymous said...

1. Open the boxes and take one mysore pak from each box and start weighing it. Don’t put all the sweets at the same time. Add one at a time and watch the weight in the machine. [This is amounting to one weigh only0 .keep adding the sweet from each box till you see a differential of 9 gms, you can identify the box.
2. Split each tablet to half and give the entire half” tablets…. Equivalent to 2 tablets. (won’t work for a capsule).!
3. 3 socks (2 same colors guaranteed!)
4. 105, 5
5. 4100
-thyagarajan

Balaji Thirumurthy said...

பதில்கள் எங்கே ?
௧. எல்லா பெட்டிகளையும் எடை இயத்திரத்தில் வைத்து ஒவ்வொன்றாக எடுத்து பார்க்கும் போது ஒரு பெட்டி எடை குறைவாக இருக்கும்
௨. எல்லா மாதிரிகளையும் பொடியாக்கி அதில் பாதியளவு நோயாளிக்கு குடுக்கவும்
௩. எட்டு காலுறைகளை எடுக்க வேண்டும்
௪. நூற்றி ஐந்து மற்றும் ஐந்து
௫. நான்காயிரத்து நூறு

Ammu said...

last q kku 4100

Socks 3

Shirt pant ...5,105

Power Bala said...

1. Don't know

2. 4 மாத்திரைகளையும் நுணுக்கி ஒண்ணா கலந்து, பாதியா பிரிச்சி கொடுக்கனும்.

3. 9

4. Rs.5, Rs.105

5. 4,100

coolzkarthi said...

// அனுஜன்யா said...

1. முதல் பெட்டியில் இருந்து ஒரு மைசூர் பாக். இரண்டாவதிலிருந்து இரண்டு என்று... பத்தாவது பெட்டியில் இருந்து பத்து. மொத்தம் 55 மைசூர் பாக் துண்டுகள். மொத்த எடை (55 x 10 = 550 g) இருக்க வேண்டும். எவ்வளவு கிராம் குறைகிறதோ, அந்த என்ன உள்ள அட்டப் பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாக் உள்ளது. உதாரணம்: மொத்த எடை 545 கிராம் என்றால், ஐந்தாவது பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாக் உள்ளது.

2. ஒவ்வொரு மாத்திரையையும் பாதி ஆக்கி, ஒரு பாதி மட்டும் நோயாளிக்குக் கொடுக்க வேண்டும். முதல் மாதிரியில் பாதி; இரண்டாவதில் பாதி; இப்படி.

3. மூன்று

4. சட்டை - 5 ரூபாய் (என்னய்யா கணக்கு இது? - எந்தக் காலத்தில்?)
பாண்ட் - 105 ரூபாய் //
மிக்க சரி அனுஜன்யா அவர்களே.....

coolzkarthi said...

// indep said...

1. take 1 from first box, 2 from second box, 3 from third... and weigh them together. If the result is xx90 gms, then the first box is the required one. If the result is xx80gms, then the second box is the required one....and so on....

2. Take half from all the four tablets.

3. 3 socks.

4. shirt 5 rupees and pant 105 rupees

5. 4100

Thanks,
Indepen//
மிக்க சரி

coolzkarthi said...

பதிலளித்தமைக்கு நன்றி நண்பர்களே.....

Blog Widget by LinkWithin