Monday, December 15, 2008

இந்தியா வெற்றி....


நேற்று சேவாக் ஆரம்பித்து வைத்ததை கச்சிதமாக லிட்டில் மாஸ்டர் மற்றும் யுவி முடிக்க சாதனை வெற்றியாக முடிந்தது இன்றைய ஆட்டம்....ஆரம்ப இணையான காம்பிர் மற்றும் சேவாக் இன் வெற்றி கூட்டணி மீண்டும் பலன் அளித்துள்ளது....ஒருவர் புயல் என்றால் மற்றவர் தென்றல்....ஆனால் இரண்டிலும் காற்று அடிக்கும் என்பதை கொள்க...
முதல் இரண்டு நாட்க்களில் கிடைத்த ஏமாற்றத்தை கண்டு கொஞ்சம் நொந்தாலும்,நேற்று சேவாக்கின் அற்புத ஆட்டம் அனைத்தையும் ஈடு செய்தது....
இரண்டாவது இன்னிங்க்சில் ,சேவாக்கின் ஆட்டம் மட்டும் இல்லை என்றால்,நாங்கள் defensive ஆட்டம் தான் ஆடி இருப்போம் என்று தோனியே ஒத்து கொண்டுள்ளார்....(அதாவது சமன் செய்ய)நம் ஆட்க்களின் பிரச்சினையே இது தான்...நம்மில் பலருக்கு மட்டை போடவே தெரியாது என்று தோன்றுகிறது(உம்ம்ம் சேவாக்,யுவராஜ் போன்றோர்)அப்படி இருக்க சமன் செய்வத...எனவே வீறு கொண்டு எழுந்த வீருவின் அடி அட்டகாசம்....அவர் அதை விரும்பினார்,மக்களும் தான்...அவரின் அதிவேக ரன் குவிப்பு முடிந்ததும் இனி என்ன ஆகுமோ என்ற பயம் தொற்றிகொண்டது....நம் ஆட்களை நம்பவே முடியாது....ஆனால் பொறுப்பாக ஆடிய காம்பிர்,சரியாக தன் பங்கை முடித்து வெளியேற...சச்சின் தன் கணக்கை தொடங்கினார்...அவரின் ஒவ்வொரு அடியும்(டிரைவ்)அற்புதமாக தேர்ந்த ஆட்டகாரருக்கே உரியதாக அமைந்தது,அவரின் சத்தம் அவருக்கு அவரின் மகுடத்தில் மற்றுமொரு மணிமுடி.......யுவராஜின் விஸ்வரூபம்(ஹி ஹி வழக்கமான அடி)இங்லாந்து மேல் விழுந்த மற்றொரு இடி....
குறிப்பாக இங்கிலாந்தினருக்கு ஒரு நாள் போட்டியாகட்டும் அல்லது டெஸ்ட் ஆகட்டும் அவர்களின் சிம்ம சொப்பனம் யுவி தான்(ட்வென்டி 20 யும் சேர்த்து கொள்க)
நடுவே லக்ஸ்மன் தன் பங்குக்கு செவ்வனே இருபத்தி ஆறு அடிக்க ...திராவிட் ஹ்ம்ம் சொல்ல ஒன்றும் இல்லை....அவரை சிறிது ஆட்டம் கழித்து விளையாட விடலாம்...அவர் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் அல்லது...அவர் அடுத்த தொடரில் இனி கிரிக்கட்டில் இருந்து ஓய்வு என்று அறிவிப்பு விடும் படி ஆகலாம்(அட நம்புங்கப்பா அவரே தான் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார்,என்னது,என்ன சொன்னிங்க? ஹலோ நீங்க சொல்றது என் காதுல விழவில்லை )
கன கச்சிதமான் ,எல்லோரும் சொல்வது போல் ஒரு வரலாற்று வெற்றி தான் அதில் சந்தேகம் இல்லை.... அனைத்திற்கும் பின்னால் சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விசயமும் உள்ளது...அது டோனி....

இதுவரை அவரின் தலைமையில் இந்தியா ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சமன் கூட அல்ல ..வெற்றியே பெற்றுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.....


Score card:


நன்றி cricinfo.....


R M B 4s 6s SR


G Gambhir c Collingwood b Anderson 66 201 139 7 0 47.48


V Sehwag lbw b Swann 83 102 68 11 4 122.0௫


R Dravid c Prior b Flintoff 4 31 19 0 0 21.0௫


SR Tendulkar not out 103 317 196 9 0 52.55


VVS Laxman c Bell b Swann 26 54 42 4 0 61.90


Yuvraj Singh not out 85 196 131 8 1 64.88


Extras (b 5, lb 11, nb 4) 20


Total (4 wickets; 98.3 overs; 453 mins) 387 (3.92 runs per over)

3 comments:

கணினி தேசம் said...

//டோனி....

இதுவரை அவரின் தலைமையில் இந்தியா ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சமன் கூட அல்ல ..வெற்றியே பெற்றுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.....//

தோனிக்கு எங்கயோ மச்சம் இருக்கு.. அதான் அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும், செய்யும் மாற்றங்களும்.. நன்மையாகாவே அமைகிறது, தோல்வியின் விளிம்பில் இருந்தாலும்..எப்படியாவது வெற்றிக்கனியை பறித்துவிடுகிறார்கள்.

சங்கரராம் said...

டெண்டுல்கர் அடிச்சி ஜெயிக்கவே இல்லை நாம அப்படி சொன்னவங்களுக்கு இந்த நூறு சமப்பணம்

One of yuour Blog Reader said...

your comment about dravid is not wise. I thing you are not watching cricket regularly.. Every batsman(including sachin,lara,sehwag,ponting,gavaskar,etc..) had tough times.. Dravid just needs a good match.. Once Gavaskar was not in good touch. He batted down the order to regain his form. It was possible because, he was the captain of India at that time. Noww the problem is Dhoni is not likely to change the batting order. He feels that it may lead to an inconsistant state in the middle order.. The solution for this problems is to shut the media.. Dravid will be backed like a strom soon..

Blog Widget by LinkWithin