Thursday, December 11, 2008

புதியது:முடியுமா உங்களால்.(விடை அளியுங்கள் பார்க்கலாம்)பார்ட்-2

சென்ற இதழில்,சாரி சென்ற போஸ்டில் கொடுத்த கேள்விகள் வகை, வெற்றி பெற்றதை தொடர்ந்து...அதன் தொடர்ச்சி....
* நீங்கள் ஒரு காரை ஓட்டி கொண்டு செல்கிறீர்கள்,அப்பொழுது இரண்டு ஜோடிகள்(couples) லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார்கள்,
அதில் முதல் ஜோடியில் கணவனின் வயது (22+17-1*5+20/5)
மனைவியின் வயது (21+16-1*4+16/4)
இரண்டாம் ஜோடியில் கணவனின் வயது, (20+15-1*3+12/3),
மனைவியின் வயது ,(19+14-1*2+8/2) எனில்
அந்த காரின் ஓட்டுனரின் வயது என்னவாக இருக்கும்.?..... (தெளிவாக எப்படி என்று விளக்கவும்)

* இது situation handling வகையறாவை சார்ந்தது,
நீங்கள் ஒரு interview இல் உள்ளீர்கள்...நீங்கள் சொல்லிய பதில் நிச்சயம் சரி என்று உங்களுக்கு தோன்றுகிறது,ஆனால் interviewer தவறு என்கிறார் ...
இந்த சமயத்தில் நீங்கள் சரியான விடையை கேட்பீர்களா அல்லது வேறு என்ன கேட்பீர்கள்?
* உங்களிடத்தில் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் கொடுக்க படுகிறது,அப்பொழுது உங்களுக்கு CBI இருந்து போன் ,நீங்கள் வைத்து இருக்கும் ஒன்பது நாணயங்களில் ஒன்று போலி என்றும் அது மற்றவற்றை விட சற்று எடை குறைவானது என்கிறார்கள்,அது எது என்று நீங்கள் கண்டு பிடித்து தூக்கி போடா விட்டால் பிரச்சனை...அனைத்தையும் தூக்கி போட முடியாது உங்களுக்கு எட்டு ரூபாய் அவசியம்,பக்கத்தில் ஒரு தராசு உள்ளது ஆனால் அது இரண்டு முறை மட்டுமே எடை காட்டும் பின்பு அறுந்து விடும் என்னும் நிலையில் எப்படி போலியை கண்டு பிடிப்பிர்கள்?
*இது சும்மா லாஜிக்,
if,
1=5
2=6
3=7
4=8 எனில்,
5=?
* மாவீரன் நெபோலியன் சிறையில் இருக்கும் போது எழுதப்பட்டதாக சொல்லப்படும் இந்த வாக்கியத்தின் சிறப்பு?
"Able was I Ere I saw Elba"

நான் ஒவ்வொரு வாரமும் இது போன்று கேள்விகள் நிறைந்த post இரண்டு போடலாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்,உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க படுகிறது....
comment கண்டு பலர் விடை அளிக்காமல் சென்று விடுவதால் comment moderation enable பண்ணி உள்ளேன்.....
நன்றி கார்த்தி.....
விடைகளை எதிர்பார்த்து.....

18 comments:

பரிசல்காரன் said...

நல்லாயிருக்கு.

ஒவ்வொரு கேள்விகளுக்கு இடையிலும் இடைவெளி அவசியம்.

கேள்விகளுக்கு நெம்பர் கொடுங்கள்.

க்ரேட்!

Anonymous said...

1)என் வயது 30

2)அவர் தவறு என்று சொல்வதால் நிச்சியம் எனக்கு வேலை கிடைகபோவதில்லை எனவே என் விடை சரியானது என்பதை மீண்டும் அறிவுறுத்துவேன்

gsr

அர டிக்கெட்டு ! said...

//நீங்கள் ஒரு காரை ஓட்டி கொண்டு செல்கிறீர்கள்,//
//அந்த காரின் ஓட்டுனரின் வயது என்னவாக இருக்கும்.//
இப்படி ப்பளிக்கா வயசகேட்டா எப்படி?

//நீங்கள் ஒரு interview இல் உள்ளீர்கள்...நீங்கள் சரியான விடையை கேட்பீர்களா அல்லது வேறு என்ன கேட்பீர்கள்?//

இன்டர்வியூவுல நான் கேள்வி கேட்ட அடிக்கமாட்டாங்களா?

if,
1=5
எனில்,
5=1

//"Able was I Ere I saw Elba"//

இது பாலின்டுரோம் வகையை சேர்ந்த்து. முன்னாடியும் படிக்கலாம் பின்னானியும் படிக்கலாம்...அப்பு துப்பாக்கி மாதிரி...இந்த வகையில் நமக்கு நெருக்கமான வார்த்தை 'malayalam'
டிஸ்கி: நெப்போலியன் இதை சொல்லியிருக்கவே முடியாது ஏனென்றால் நெப்போலியனுக்கு ஆங்கிலம் தெறியாது! blink blink எப்பவோ படித்த்து.

//* உங்களிடத்தில் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் கொடுக்க படுகிறது//

//ஒன்று போலி என்றும் அது மற்றவற்றை விட சற்று எடை குறைவானது//

//எட்டு ரூபாய் அவசியம்//

//பக்கத்தில் ஒரு தராசு உள்ளது ஆனால் அது மூன்று முறை மட்டுமே எடை காட்டும் பின்பு அறுந்து விடும் என்னும் நிலையில் எப்படி போலியை கண்டு பிடிப்பிர்கள்?//

கேள்வியில் சந்து இல்லையெனபதால் உண்மெயன நம்பி என்னுடைய விடையை சமர்ப்பிக்கிறேன்
1) முதலில் 4+4 என் வைத்தால்
scenario 1 - சம்மாக இருந்தால் -
9ஆவது காயினை விட்டெறியுங்கள்
scenario 2 - ஒரு பக்கம் உயர்ந்திருந்தால் அதில்தான் போலி உள்ளது...அதிலுள்ள நான்கை மீண்டும் 2+2 என தராசில் போடவும்
ஒரு பக்கம் உயந்திருந்தால் அதில்தான் போலி உள்ளது...மூன்றாம் முறையாக தராசில் 1+1 என போடுங்கள் என்த பகுதி லேசாக இருக்கிறதோ அதுதான் போலி என அறிவாய்......
ஏதாவது மொக்கை பதிலாக இல்லாமல் இருப்பதற்காக நமது பிளாகுலத்தோரின் இஷ்ட தெய்வமான டிரைவ்கார்ட் மூனீஸ்வரனை கும்பிட்டு விடைபெருகிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

1) நான் வண்டியை ஓட்டுவதால் எனது வயதுதான் வண்டியை ஓட்டுபவர் வயது;
2)கேட்கமாட்டேன். சரியான விடை தானே எனக்குத் தெரியும்
3) முதல் தரம் 4 ;4 ஆக இடுவேன். இந்த எட்டுள்ளும் இருந்தால் 9 தாவது செல்லாது; இதில் ஒன்று
தாழ்ந்தால் அடுத்ததில் செல்லாதது உள்ளது.பின் 2, 2 ஆகப் போட்டால்; உயர்வதில் 1 ; 1 ஆகப் போட்டால் 3 தரத்தினுள் தராசைப் பாவித்துக் கண்டுபிடிக்கலாம்.
4) 5=1
5) இந்த வாக்கியம் மறுபக்கத்தால் வாசித்தாலும் அதே போல் வரும்

வாக்காளன் said...

1. my age... cos am driving the car


2. depends on the situation, if i decide that am not going to get that job based on the answers i gave to other questions, i would certainly argue that i am right and ask him for his answer and will try to prove am right.
on the other hand if i feel i may get through.. i will keep myself quite :)


3. keep 1 coin away and put 4 coins in each plate (plate A and pate B) and weigh it, if both plates show same weight, then the 1 coin kept away is the light weight coin


If plate A shows heavier than plate B , split the coins in plate B in to 2 each and weight those (Plate A and B). If plate A shows heavier than plate B, spilt 2 coins in plate B in to 1 each weigh them for the last time (3rd chance). u will know which is lighter ..

do it vice - versa if plate B shows heavier than plate A in both the cases..

this kind of weight comparions will help you do identify the coin in less than or equal to 3 times of scale usage



4. 5 = 1


5. palindrome sentence, gives the same meaning even if u read it the other side

சுரேகா.. said...

1. டிரைவர் வயது 33. (நாந்தானே டிரைவர்)

2. அவர் சொன்னதுதான் சரின்னு சொல்லிட்டு, அப்புறமா ஆப்படிக்க வேண்டியதுதான்.

3. முதல் முறை ஏதாவது 4 காயினை இரண்டு பக்கமும் வச்சுப்பாத்தாலே எந்தப்பக்கம் எடை குறையுதோ, அதில்தான் அந்த காயின் இருக்குன்னு தெரிஞ்சுடும்.
அப்புறம் ஒரு பக்கம் உள்ளதை எடுத்து வச்சுக்கிட்டு...2 , 2 காயினா போட்டுப்பாத்தா..அடுத்த ரவுண்டு...இப்போ இரண்டில் ஒண்ணை மூன்றாம் முறையில் கண்டுபிடிச்சிடலாம்.
4. 5=1 தான்

5. திருப்பிப்படித்தாலும் அதே வார்த்தைதான் வரும்.

நன்றி!

Anonymous said...

பார்ட் 1 - க்கு விடை கொடுக்காமல், பார்ட் - 2 போடுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

Anonymous said...

ஓட்டு தானே போட்டாச்சுப்பா..!! -:)

Anonymous said...

பதில்கள்..
1. வண்டி ஓட்டுவது நான் என்பதால், என்வயசு என்னவோ அதைத்தான் சொல்ல வேண்டும்.
2. சரியான பதில் என்ன அவருக்கு புரிய வைக முயற்சி செய்வேன்
3. தெரியவில்லை
4. 5 = 9 தான் என் லாஜிக் படி வரும்.
5. தெரியாது.

ஒவ்வொரு வாரமும் கேள்வி கேட்பது தப்பில்லை, ஆனால் அதற்கு முன்பு முந்தைய வாரத்தின் பதிலை சொல்ல வேண்டும்.

Anonymous said...

தமிழ்மணம், தமிழிழ் இரண்டிலும் ஓட்டு போட்டு இருக்கேன். மேலும் புக்மார்க் பண்ணி வைச்சுருக்கேன்.

என் பின்னூட்டம் போடலன்னா, இனிமே ஓட்டு போடமாட்டேன்.

எல்லாம் சும்மா ஒரு தமாஷ்தான்...

Anonymous said...

1. I am the driver, my age X
2. There could be many answers depending on how desperate you need the job...
Thank the interviewer politely and tell him the source of your answer and also follow it up to say you are ready to update based on interviewer's knowledge..
3. You can find the duplicate coin in 2 attempts itself.
divide the coins into three sets with 3 coins in each set. A,B C
First weigh: compare A and B, and find out which set weighs least. both are equal then C set has the duplicate coin.
second weigh: take any 2 coins in the "least weighing" set (say A) again duplicate coin will weigh less and you can find it. if these coins weigh equal the third coin in this set of A is the duplicate coin.
4. 5 = 1
5. palindrome sentence. read backwards and you will read exactly as in forward/
thyagarajan

பாபு said...

நான்தான் ஓட்டுனர் ,ஆகவே என்னோட வயது

முதலில் நான்கு காசுகள் ஒரு பக்கம் ,நான்கு காசுகள் மறுபக்கம் தராசில் போட வேண்டும்.இரண்டு சமமாக இருந்தால் மீதியுள்ள காசுதான் எடை குறைவானது.
சமமாக இல்லை என்றால் ,எந்த பக்கம் தாழ்ந்ததோ அந்த தராசில் இருக்கும் நான்கு காசுகளை இரண்டு இரண்டாக தராசில் போட வேண்டும்.மீண்டும் தாழ்ந்த தராசில் இருந்து ஒன்று ஒன்றாக போட்டு கண்டுபிடித்து விடலாம்

5=1

coolzkarthi said...

நன்றி நண்பர்களே....அனைவரும் கலக்கி விட்டீர்கள்.....

coolzkarthi said...

பரிசல்காரன் அவர்களின் அறிவுரைக்கு நன்றி.....

coolzkarthi said...

நன்றி ராகவன் அவர்களே....என்னுடையதை கூட புக் மார்க் செய்துள்ளீர்கள் என்று என்னும் போது,புல்லரிக்கிறது....(ஹி ஹி )

coolzkarthi said...

ச்சே அந்த coin கேள்விக்கு தவறாக மூன்று முறை என்று கொடுத்து விட்டேன்....இரண்டு முறை என்பது தான் சரி...
சுட்டி காட்டிய அனானி அவர்களுக்கு நன்றி...இப்பொழுது மாற்றி விடுகிறேன்.....

coolzkarthi said...

ராகவன் அவர்களே,அந்த கேள்வியின் comment இல் நான் விடைகளை கொடுத்து விட்டேன்.....

coolzkarthi said...

மற்ற கேள்விகளுக்கான விடைகள்......
* நம்முடைய வயது தான்.....

* don't ask for correct answer,ask for the alternate answer.....
இது என்னுடைய interview இல் கேட்டார்கள்,உணமையிலயே இந்த பதிலை தான் சொல்லி (அட நம்புங்கப்பா)செலக்ட் ஆனேன்....(campus interview)....

* You can find the duplicate coin in 2 attempts itself.divide the coins into three sets with 3 coins in each set. A,B C First weigh: compare A and B, and find out which set weighs least. both are equal then C set has the duplicate coin.second weigh: take any 2 coins in the "least weighing" set (say A) again duplicate coin will weigh less and you can find it. if these coins weigh equal the third coin in this set of A is the duplicate coin.
* 5=1 தான் சரி

* அது palindrome வகையறாவை சார்ந்தது....
இன்னும் கொஞ்சம்....
malayalam
murder for a jar of red rum
.....
நன்றி

Blog Widget by LinkWithin