"நான் உங்கள் அறை பீரோவை சுத்தம் செய்யும் போது இது தென்பட்டது..."
-இது நந்தினி
அந்த கடிதம் ஒரு காதல் கடிதம் என்று அறிய இரண்டு வரிகளுக்கு மேல் போக தேவை இல்லை,
"அன்பு ப்ரியா,
நான் உன்னை காதலிக்கிறேனோ என்று பயப்படுகிறேன், உன் கன்னங்களை பார்த்து பூக்களே பொறாமை படும்போது,என்னால் எப்படி உன்னை பார்க்காமல் இருக்க முடியும், எனக்கு நீ வேண்டும்,உன் அன்பு வேண்டும்,நான் தனித்து விடப்பட்ட போது ஆறுதல் தந்த உன் குரல் வேண்டும், என்னை விரும்புவாயா?"
இப்படிக்கு குணாளன் ....
என்று அந்த கடிதத்தை படித்த குணாளன் முகம் இருண்டது,
சட்டென்று,
"நந்தினி இந்த ப்ரியா யாரென்றே எனக்கு தெரியாது,என்னை நம்பு நந்தினி அது நான் இல்ல..." என்று அலற
நந்தினி சிரித்து கொண்டே,
"அடேங்கப்பா எம்பத்தைந்து வயசு ஆகியும் இன்னும் அந்த குறும்பு போகல பாரு,
என் பேரு காலேஜ் ல ப்ரியான்னு தெரியாதா..."என்று சொல்லி விட்டு சிரித்தாள்....
கடிதத்தில் இருந்த பூக்களும் பொறாமைப்பட்ட கன்னம் சுருக்கத்திலும் அழகாக சிரித்தது "
அவர்கள் இருவரின் கண்ணிலும் திரண்ட அந்த ஒரு துளி கண்ணீர் அறுபது வருட காதலின் சாட்சி...
வாங்களேன் அவர்களை தனியாக விட்டு விட்டு செல்வோம்...
நன்றி கார்த்தி....
Be Cool...
Stay Cool...
4 comments:
நல்லா இருக்கு தல..,
வயதானபின் எல்லாமே ஜாலிதான்
ரொம்பவும் சின்னக் கதை
சின்னக் கதையா இருந்தாலும் அருமையாச் சொல்லியிருக்கீங்க
வாழ்த்துகள்
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
Post a Comment