Wednesday, May 13, 2009

தேர்தல் எனும் டுபாக்கூர்...

தேர்தல் களம் மிக விசித்திரமானது.....

இங்கு மட்டுமே A, B, C கூட தெரியாதவன் பெரிய "C"க்களில் பேரம் நடத்தும் அற்புதம் நிகழும் இடம்.....


ஓய்வு பெற்ற ரவுடிகள் பொது பணியாற்றும் உன்னத தளம் ....


உங்களுக்கு முன் வைக்க படும் வாய்ப்புகளில் ஒன்று உன் இடது காலை எடுப்பேன் என்கிறது,மற்றொன்று உன் வலது காலை எடுக்க என்னை அமுத்து என்கிறது,

இன்னொன்றோ உன் சொந்தங்களின் உயிரை எடுப்பேன் என்கிறது , இன்னொன்றோ உன் சொந்தங்களை காப்பாற்ற உன் இரண்டு கைகளை மட்டும் தா என்கிறது,

ஆக மொத்தம் ஜனநாயக கடமை என்கிற பெயரில் ஜனநாயக கயமை நடைபெறுகிறது....


மாயை என்பதற்கு வேறு உதாரணமே தேவை இல்லை,

இந்த தேர்தல் ஒன்றையே சிறந்த உதாரணமாக கொள்ளலாம்,


இந்த கட்சியும் உருப்படியானது அல்ல, மற்றொன்றும் அற்புதமானது அல்ல...ஆனால் நமக்கு முன் வைக்க படும் options இவை இரண்டு மட்டுமே என்னும் போது ஒன்றை நோக்கி நாம் வலு கட்டாயமாக தள்ள படுகிறோம்.....

எவனும் உத்தமன் இல்லாத போது ,இவன் அவனை காட்டிலும் கொஞ்சம் நல்லவன் என்று ஓட்டு போடுவதும்,இதே அடுத்த தேர்தலில் இவன் அவனை விட கொஞ்சம் கெட்டவனாக மாறுவதும் இந்த அற்புத களத்தின் விந்தை.....


இதில்,தங்க தலைவி என்றும்,தாத்தா என்றும் தமிழின காவலாளி என்றும் புலம்பும் முட்டாள் தொண்டனின் வார்த்தைகளும், அபிமானிகளாக காட்டி கொள்ளும், " வானர படைகளுடன் தனி ஈழம் அமைப்போம்" என்று ஒரு சாராரும் , அதை நாங்கள் நான்கு மணி நேர உண்ணா நிலையிலையே சாதிப்போம் எனும் இன்னொரு சாராரும் எங்கு வந்தார்கள் என்று புரியவில்லை,
நண்பர்களே,
தேர்தல் என்பதே நாடக மேடை,அதில் அரசியல் வியாதிகள் நடிகர்கள், நாம் பார்வையாளர்களாக மட்டும் இருப்போமே....

"இதோ ஜனநாயக கடமை அழைக்கிறது,நான் திண்ணையில் அமர்ந்து, ஓட்டுக்கு ஐந்நூறு கேட்கலாமா என்று யோசித்து கொண்டுள்ளேன்...
பருப்பு விலை ஏறி போய் விட்டது என்றோ , அரிசி விலை ஏறி விட்டது என்றோ ஏதாவது சொல்லி வாங்கி விடுவேன்,விலை ஏற்றத்திலா குறைச்சல்....."

இப்படிக்கு சராசரி குடிமகன்...

நன்றி நண்பர்களே ....

2 comments:

seik mohamed said...

என்ன‌ ஆச்சு கார்த்திக்

கலையரசன் said...

பருப்பு விலை , அரிசி விலை சொல்றீங்க, டாஸ்மாக்கை விட்டுடீங்களே...குடிமகன்!

-பதிவை பதிந்து
உனர்வை பகிர்ந்ததற்க்கு

நன்றி! நன்றி!! நன்றி!!!

Blog Widget by LinkWithin