பெண்:டேய் டுபுக்கு, நீ பைக்ல வந்த ஸ்பீட்ல என் மேல மோதி இருந்தா என்ன ஆகியிருக்கும்....
பைக் நபர்(நண்பர்): நீ இவ்வளவு பேசி இருக்க மாட்ட....
ஹி ஹி ஹி....
---------------------------------------------------------
பரீட்சைக்கு முன்தினம் ஒரு ஒரு உண்மையான மாணவனின் நினைவுகள் ,
காலை ஆறு மணி:எப்படியாவது centum எடுக்கணும்.....
காலை பத்து மணி(சிற்றுண்டிக்கு பிறகு):ச்சே எப்படியாவது ஒரு தொண்ணூறு மார்க் வந்தா போதும்....
மதியம் ஒன்று: எப்படியாவது ஒரு எம்பதாவது வருணும்....
இரவு: கொய்யால இதோ இத படிச்சிட்டா அறுபது வந்துடும்....
காலை:கடவுளே நீ தான் எப்படியாவது என்னை பாஸ் பண்ண வைக்கணும்.....
என்ன நண்பர்களே நான் இப்படித்தான் யோசிப்பேன், நீங்க?
-----------------------------------------------
ஒரு முறை ஒரு டாக்டர் மற்றும் ஒரு வாஸ்த்து நிபுணர் இடையே சண்டை,
வாஸ்த்து:இதயம் வலப்பக்கம் தான் இருக்கணும்...
டாக்டர்:யோவ் இடது பக்கம் தான் யா இருக்கும்...
வாஸ்த்து :இல்லை இடது
டாக்டர்:(அருகிலிருக்கும் பிணத்தின் நெஞ்சை அறுத்து),பாருய்யா இடது பக்கம் தானே இருக்கு....
வாஸ்த்து: இங்க பாருங்க சார்,அது இடது பக்கம் இருந்ததால தான் அவன் செத்துட்டான்....
டாக்டர்: முடியல......!!!!
---------------------------------------------------------------
கண்டக்டர் படியில் நிற்பவனிடம்....
கண்டக்டர்:யோவ் உள்ள தா கடல் மாதிரி இடம் இருக்கே,உள்ள வரது....
படியில் நிற்பவர்:சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது நான் கரையிலயே நின்னுக்குறேன்....
---------------------------------------------------------------
நன்றி நண்பர்களே.....
Be Cool...
Stay Cool...
»
1 comment:
ஹா ஹா ஹா
கலக்கல்
சிரிச்சி வயிறு வலி வந்துடுச்சி
Post a Comment