இன்று நாம் காணும் பல முக்கிய புள்ளிகளின் பின்னால் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பலரின் பாட படாத பெயர்கள் இருக்கும்....
இது ஒரு துறை மட்டும் என்று இல்லாமல் அனைத்து துறையிலும் இருக்கும்...
இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் சமிபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முட்டி மோதி, திட்டி திட்டுவாங்கி(வாட்சனிடம்)டபுள் செஞ்சுரி அடித்த காம்பிரை காணும் போது எழுந்தது இது...
ட்வென்டி 20 உலக கோப்பையின் கடைசி ஆட்டத்தில் அவர் அடித்த அந்த வரலாற்று(?) சிறப்பு மிக்க 76 ரன்கள் ,என்று தொடர்ந்த மாட்ச்கள் அனைத்திலும் அவரின் குறைந்த பட்சம் 50 ரன்கள் என்று அதிரடி கிலப்பியபோதும் அவருக்கு முறையாக தரப்பட வேண்டிய அங்கீகாரம் கிடைக்க வில்லையோ என்று தோன்றியது,தோனியின் கேப்டன் ஷிப் அருமை என்றாலும் அவரை மொய்க்கும் மீடியா ஏன் காம்பிரை துரத்த வில்லை என்று எண்ணிய போது எனக்கு தோன்றிய இன்ன பிற "Unsung Heroes"
சினிமா:M.R.ராதா ,
சமிபத்தில் எப்படியோ எங்கள் அறைக்கு தப்பி தவறி "ரத்த கண்ணீர்"என்ற படம் எப்படியோ வந்து விட்டது ,முதலில் பழைய படம் அந்த காலத்தின் வசனம் காமெடி ஆக இருக்கும்
என்று போட்டோம் ஆனால் உண்மையில் அனைவரும் ஒன்றி விட்டோம் என்பதே உண்மை...
அவரின் நையாண்டி,கடவுள் மறுப்பு என்று ஆங்காங்கே பல ரத்தினங்களை படம் முழுவதும் தெளித்து இருந்தார்,
அடுத்து சொல்ல வேண்டிய முக்கியமானவர்,நம்பியார் இன்னும் அவரின் அந்த கை
உள்ளங்கையை தேய்த்து கொள்ளும் mannerism ,என்று பல படங்கள் வில்லதனத்துக்கும் பேச பட காரணமாக இருந்தவர்...
இப்படி பார்த்தால் கில்லி போன்ற மெகா ஹிட் படங்களுக்கும் வில்லன் (பிரகாஷ் ராஜ்)நடிகர்களின் பங்களிப்பு அதிகம்...
பாட்ஷாவில் ரகுவரன் என்று பாட படாதவர்கள் பலர்...
இவர்களை ,இவர்களின் நடிப்பை நாம்,தக்க படி பார்க்க வில்லையா அல்லது இவர்களாகவே தங்களை சுத்தி ஒரு வளையம் அமைத்து கொண்டார்களா என்று தெரியவில்லை...
இன்ன பிற துறைகளில் இருக்கும் "Unsung Heroes"விரைவில்...
இது மட்டுமின்றி சில "Unsung places"உம்(பாட படாத ஸ்தலங்கள்?) தொடர்ந்து...
நன்றி கார்த்தி...
No comments:
Post a Comment