Saturday, November 15, 2008

தமிழன் எப்பொழுது தமிழனாகிறான்..


இது என்ன கேள்வி என்கிறீர்களா,இல்லை விஷயம் இருக்கிறது...நாம் காணும் பல விஷயங்கள்,அரசியல் தகிடுதத்தங்கள் , நம்மில் பலருக்கு அசுவாரசியமான மனநிலைக்கு இட்டு சென்று விடுகிறது,எப்போதுடா ஏதாவது விஷயம் கிடைக்கும் என்று கண்கொத்தி பாம்பாக இருக்கும் அரசியல் வியாதிகள் (வாதிகள்)தமிழன் என்ற உணர்வுக்குள்ளும் அரசியலை புகுத்தி விட,ஒருவர் ஆதரிப்பதும் மற்றவர் எதிர்ப்பதும் என்கின்ற கீழ்நிலை அரசியலையே காணும் தொண்டனும் வலு கட்டாயமாக இரு வேறு அணிக்கு கீழ் செல்ல வேண்டியுள்ளது,சிறிது நாட்களுக்கு முன்பு பீகார் இளைஞர் மும்பையில் சுட்டு கொல்ல பட ,பீகார் தலைகள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்து அசத்தியதை பார்த்தாவது நம்மவர்கள் திருந்துவார்களா?

நமக்குள் இருக்கும் அந்த தமிழன் என்கிற குணம் பல சமயங்களில் இன்முகத்தோடும் அவனுக்கு ஏதேனும் ஒரு இழிவு என்றால் அதுவே கர்ஜிக்கவும் செய்கிறது...ஆனால் பல சமயங்களில் கர்ஜித்தலோடு நின்றும் போகிறது...சில நாட்களுக்கு முன்பு ஒரு வார இதழில் நான் கண்டது,வந்தது நையாண்டி பகுதியில் தான் என்றாலும் அதுவே சிந்திக்கவும் செய்தது,ஒரு அரசியல் தலைவர் கேட்பார் ,இலங்கையில் நடப்பது உள் நாட்டு போர் அதில் நாம் எப்படி மூக்கை நுழைப்பது என்பார் ,அதற்கு பதில் சொல்வார் மற்றவர்(சாமானியர்),அப்படியானால் இங்கே அந்நாட்டினர் அகதிகளாக வருவதில் நமக்கு சம்பந்தம் இல்லையா ,அது நம் நாட்டு விஷயம் இல்லையா என்று போகும்,சரி நான் ஏன் இதற்கெல்லாம் போகிறேன்,நான் சொல்ல வந்ததே வேறு...சில நாட்களுக்கு முன்பு உளவு படை ஒரு அறிக்கை சமர்பித்துள்ளது அதில் இந்த முறை முன்பு போல் மக்களிடம் தமிழர் இன அலை அடிக்க வில்லை என்றனர் ..இதனால் சம்பந்தப்பட்டவர் கடுப்பானதாக சொல்லப்பட்டது, ..இது அவருக்கு அரசியல் ரீதியாக கடுப்பானதாக இருந்தாலும்,.நமக்கு இது வேதனை பட வேண்டிய விஷயம்,தமிழர் என்ற உணர்வு கீழே உள்ளவையோடு நின்று விடுவதாக நான் அஞ்சுகிறேன்,நாம் எப்போது தமிழராகிறோம் என்று நான் யோசித்தபோது தோன்றியவை இவை...(தவறு இருப்பின் மன்னிக்கவும்)உள்ளூர் ஆட்கள் யாரும் இல்லாத போது,வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருக்கும் போது"நீங்கள் தமிழா?என்று யாராவது கூப்பிட்டால் வரும் இன மான உணர்வு ஆஹா..."அதனால் தானோ என்னவோ உள்ளூர் ஆட்களை விட வெளி நாட்டில் வாழ் தமிழர்களுக்கு உணர்ச்சி அதிகம் போல...அதற்கு அடுத்து எப்போது நான் தமிழன் என்ற உணர்வு தலை தூக்கும் என்றால்,"நீ கறுப்பு" என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் உடனே நான் திராவிடன்,தமிழன் என்று உணர்வு பொங்கிவிடுகிறது,இன்னும் இது போல் பல...அதற்கு காரணமாக நான் நினைப்பது நாம் அனைவரும் ஏதோ ஒரு அசுவாரசியமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு விட்டோம் என்ற உணர்வு,இன்று நாம் காணும் பல விசயங்களில் வன்முறையே இருப்பதால்,பத்திரிக்கைகளில் காணும் அனைத்தும் வன்முறை பற்றியே இருப்பதால்,நாம் பக்கத்து நாட்டில் வன்முறையை காணும் போதும் அதுவும் ஏதோ தினப்படியான நிகழ்வு தானே என்று போய் விட தோன்றுகிறது...மேலும் இன்று அனைவரும் நிறைவான வாழ்வும் ,நமக்கு என்ன, என்ற போக்கும் வளர்ந்து விட்டது...

"இன்று யாரும் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது ,யார் இருக்கிறார்கள்,என்று கூட அறிந்துக்கொள்ள ,தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாத நிலையில் இருக்கும் போது "பக்கத்து நாட்டில் என்ன நடந்தால் என்ன என்று இருப்பதில் என்ன பெரிய விஷயம் இருந்து விட முடியும்?"

"பிழை இருப்பின் அல்லது கருத்து தவறு இருப்பின் comment இல் தயை கூர்ந்து தெரிவிக்கவும்"நன்றி உங்கள் கார்த்தி....

1 comment:

rapp said...

:(:(:(

Blog Widget by LinkWithin