Tuesday, November 4, 2008

இது மொக்கை அல்ல ..சூர மொக்கை...

நான் சமிபத்தில் IQ என்று தலைப்பிட்ட ஒரு பேஜ் உள் சென்று மண்டை காய்ந்த அனுபவம் இங்கே....

அதில் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே....

எப்படி நீங்கள் ஒரு ஒட்டகச்சிவிங்கியை ஒரு பிரிட்ஜ் க்குள் அடைப்பிர்கள்?











இந்த கேள்விக்கு விடை,பிரிட்ஜ் கதவை திறந்து,உள்ளே ஒட்டகச்சிவிங்கியை அடைக்கவும்....



எப்படி ஒரு யானையை பிரிட்ஜ் உள்ளே அடைப்பிர்கள்?







இதற்கும் விடை முதல் கேள்வி போல் சொன்னால் அது தப்பு,அதற்கான சரியான விடை,
கதவை திறக்கவும்,ஒட்டகச்சிவிங்கியை வெளியே அனுப்பி விட்டு பிறகு யானையை உள்ளே அடைக்க வேண்டும் என்பதே சரியான விடையாம்....


அடுத்த கேள்வி,சிங்க ராஜா ஒரு கூட்டம் போட்டார்,அதற்க்கு எல்லா மிருகங்களும் வந்து இருந்தன ஒன்றை தவற,அது?







அது யானை,ஏனா அது தான் பிரிட்ஜ் உள்ள இருக்கே....




நீங்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டும்,ஆனால் அதில் முதலை இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்,எப்படி கடப்பிர்கள்?









இதற்கான விடை,சிங்க ராஜா கூட்டிய கூட்டத்துக்கு தான் எல்லா மிருகங்களும் பொய் விட்டதே அப்புறம் என்ன...?


என்ன இப்பவே கண்ணு கட்டுதா?
எனக்கும் இப்படி தான் இருந்தது....
இதை விட அவன் கடைசியில் சொல்லி இருந்த விளக்கம் தான்,

இதை தொண்ணூறு சதவிகிதம் பேர் தப்பா சொன்னாங்களாம்,ஆனால் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்ப மாணவர்கள் சரியாக சொன்னார்களாம் ....இந்த கேள்விகள் அனைத்தும் நம் memory,IQ,critical thinking பற்றி தெரிந்து கொள்ள உதவுமாம் ....
எது எப்படியோ இதில் நான் மூன்றுக்கு சரியாக சொன்னேன்......

11 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அண்ணே....

சிரிப்பு தாங்கல....

எல்லாமே அருமையோ அருமை....

coolzkarthi said...

நன்றி நல்லவன்...

Anonymous said...

hi r u used my mail?

coolzkarthi said...

ஹி ஹி...அப்பப்ப

coolzkarthi said...

அனானி அவர்களே,உங்களுடையது என்றால்?

ஆட்காட்டி said...

நான் இன்னமும் சின்னப் பையன் தான்.

நசரேயன் said...

முடியலை...

VIKNESHWARAN ADAKKALAM said...

:)))

coolzkarthi said...

நன்றி நண்பர்களே,
நசரேயன்....
ஆட்காட்டி
VIKNESHWARAN

கபீஷ் said...

//
எது எப்படியோ இதில் நான் மூன்றுக்கு சரியாக சொன்னேன்
//

அப்படி சொன்னா வயசு கம்மின்னு நாங்க நம்பிடுவோமா?

யூர்கன் க்ருகியர் said...

மறுபடியும் நான் ஒண்ணாம் வகுப்பிலிருந்து படிக்கணும் போலேருக்கே!

Blog Widget by LinkWithin