நான் "மெயின் ஹூ நா"படத்தை பார்த்த ஆவலில்(நான் ஏற்கெனவே விமர்சித்தது இங்கே-மெயின் ஹூ நா )ஏகனை பார்த்தேன்,முதலில் ஏகப்பட்ட build up களுடன் அஜித் வருவதும்,வில்லனிடம் இருந்து வில்லனின் நண்பன் கம் partner பியாவின் அப்பா பிரிவதும் போன்ற காட்சிகள் கடுப்பை கிளப்பியதும் ,கதைப்படி பியாவின் அப்பா அப்ரூவேர் ஆக மாறி வில்லனை போட்டுக்கொடுக்கும் வேலை செய்ய முயல வில்லனின் ஆட்கள் போலீஸ் இடம் இருந்து அவனை கொன்று தப்பிக்கலாம் என்று முயல ஆனால் அவனோ இருவருக்கும் கம்பி நீட்டி விட்டு மறைந்து வாழ்கிறான்,அப்பொழுது commisioner(நாசர் )ஊட்டி அருகே உள்ள காலேஜ் இல் அப்ரூவரின் மகள் படிக்கும் இடத்திற்கு வில்லன் மற்றும் அப்ரூவர் வருவான் என்பதால் ஒரு officer ஆக இருக்கும் அஜித்தை ஸ்டுடென்ட் ஆக அனுப்பி வைக்கிறார்,ஸ்டுடென்ட் அஜித் எப்படி வில்லனை ஒழித்து விட்டு அந்த அப்ரூவரை மீட்டார் என்பதே கதை,முதலில் ஆயாசமாக இருக்கவே ,ஒரு பிடிப்பே இல்லாமல் உட்கார்ந்து இருந்தேன்,ஆனால் அஜித் காலேஜ் உள் மாணவனாக நுழைந்ததும் இது என்ன கேலிகூத்து என்று எண்ணும்போது நல்லவேளையாக மாணவர்கள் அங்கிள் என்று கூப்பிட்டு லாஜிக் ஓட்டை இல்லாமல் பார்த்து கொண்டார்கள்,அஜித் சில இடங்களில் காமெடி பண்ண முயற்சித்து சில இடங்களில் சிறு புன்னகை வர வைத்து விடுகிறார்..ஆனாலும் ஜெயராம் and co செய்யும் லூசுதனங்கள் சகிக்கவில்லை,ஜெயராம் என்னும் நல்ல நடிகரை இப்படி வீனடித்ததில் எனக்கு வருத்தமே,பல இடங்களில் மசாலாத்தனம் மிகையாக காறுகிறது, காலேஜ் கெமிஸ்ட்ரி டீச்சர் நயன்தாரா நச்....அவர் வாங்கும் சம்பளத்துக்கு சரியானபடி காட்டி விட்டு சாரி நடித்து விட்டு போயிருக்கிறார்,அஜித் அவரை பார்த்து பாடும் "உன்னை பார்த்த பின்பு நான்" பாடும் போது குறும்பு,.வில்லன் சுமன் ,சிரிப்பு வில்லன் ஆகி விடுகிறார்,எனவே அவர் வில்லத்தனம் செய்யும் இடங்களில் நம்மால் ஒன்ற முடியவில்லை....சில லாஜிக் ஓட்டைகள் என்றால் படம் பார்த்தவர்கள் கோவித்து கொள்வார்கள் படத்தில் பல லாஜிக் ஓட்டைகள் ,படத்தில் இன்னும் இடியாப்ப சிக்கலாக வளர்ப்பு தாய் என்று சுகாசினியை கொண்டு வருவது என்று இலக்கே இல்லாத திரைக்கதையை உடனடியாக முடிக்க வேறு வழியில்லாமல் கடைசியில் ஹீரோ வில்லன் சண்டையை எப்படியோ புகுத்தி முடித்துவிட்டார் இயக்குனர்...படத்தில் இன்னும் கொஞ்சம் தென்படும் முகங்கள்,பியா ,நவ்தீப் ,லிவிங்க்ஸ்டன் இவர்கள் மட்டுமே கொஞ்சம் மனத்தில் நிற்கிறார்கள்.... படம் சரியான மசாலா வகை,ஆனாலும் அதில் வகை தொகை தெரியாமல் மசாலாக்களை சேர்த்துவிட்டதால் படம் நசத்து விட்டது....
மொத்தத்தில் படம் ,அஜித்க்கு "தல தீபாவளியும் இல்லை புஸ்வானமும் இல்லை" ஊசி வெடியை விட சற்றே மிக சற்றே பெரிய வெடி...
ஏகன்...
ஏகமாய் கவிழ்ந்தவன்....
அஜித்க்கு:எப்பொழுதுதான் நீங்கள் கதையை கேட்டுவிட்டு நடிப்பிர்களோ,முடிந்த வரை புதிய இயக்குனர்களை தவிர்க்கவும்....
நன்றி கார்த்தி.....
»
No comments:
Post a Comment