Tuesday, November 11, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும்...

நீங்கள் கல்யாணம் ஆகாதவரா?அப்ப இது உங்களுக்கு தான்....பாருங்க நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
சில கணவன் மனைவி typical ஜோக்ஸ் மற்றும் "Quotes"
---
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
-------------------
கல்யாண வீட்டில் மணமகள் தன் தந்தையிடம் எதயோ கொடுப்பதை அனைவரும் கண்டு என்னவென்று பார்க்க....
புரிந்து கொண்ட மணப்பெண்ணின் தந்தை சொன்னார்,
"என்னோட பொண்ணு இன்னைக்கு தான் என்னோட "கிரெடிட் கார்டை "தந்தால் என்று சொல்ல...
அந்தப்பக்கம் பரிதாபமாக மணமகன்....
------------
முன்னாடி கதவை உங்கள் மனைவியும் ,பின் புற கதவை திறக்கும் மாறு உங்கள் நாயும் குறைத்து கொண்டு இருந்தால் நீங்கள் எதை முதலில் திறப்பிர்கள்?
கண்டிப்பாக பின் புற கதவை தான்,நாய் ஆவது உள்ளே வந்தவுடன் அமைதியாகிவிடும்..
--------
கணவன் மனைவி இருவரும் ஒரு கிணற்றருகே சென்றார்கள்,அது வித்தியாசமான கிணறு என்றும் அதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வேண்டினால் நினைத்தது நடக்கும் என்று எழுதியிருந்ததை கண்ட கணவன்,ஒரு ரூபாயை போட்டு விட்டு மனதுக்குள் வேண்டினான்,
இதை கண்ட மனைவி,என்ன வேண்டுநிங்க என்று கேட்டவாறு,கிணற்றை பார்த்தாள்,அப்பொழுது கால் இடறி கிணற்றில் விழுந்து விட,
கணவன் சொன்னான்,
"அட உண்மையிலேயே நினைத்தது நடக்குதே"
----------
"எல்லோரும் கண்டிப்பாக கல்யாணம் பண்ணியே ஆகணும் ஏனென்றால் சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை அல்ல..."
-------
"பணத்துக்காக கல்யாணம் பண்ணாதிர்கள்,ஏனென்றால் நீங்கள் அதைவிட கம்மியான விலையில் கடன் வாங்கி கொள்ளலாம்...."
------
"புதிதாக கல்யாணம் ஆனவர்கள் சிரித்தால் அர்த்தம் புரியும்,ஆனால் கல்யாணம் ஆகி பத்து பன்னிரண்டு வருடம் ஆனவர்கள் சிரித்தால்?அதிசயம்...."
------
"காதலுக்கு கண்ணில்லை,ஆனால் கல்யாணம்?
கண்ணை திறக்கும் கருவி"
-------
"கார் நின்றவுடன் ,தன் மனைவிக்காக ஒருவன் கதவை திறக்கிறானா?
அப்படியானால்,ஒன்று கார் புதியதாக இருக்கும் அல்லது,மனைவி புதியவளாக இருப்பாள்...."
-------
"மனைவி:என்னங்க இன்னைக்கு நம்மோட கல்யாண நாள்,என்னிக்கும் போகாத எடமா பாத்து கூட்டிட்டு போங்க....

கணவன்:சரி வா கிட்சென்னுக்கு (சமையலறைக்கு)போகலாம்"
--------
நண்பர் 1 :நாங்கள் கணவன் மனைவி இருவரும் எப்போதும் கைகோர்த்து கொண்டுதான் வெளியே போவோம்....
நண்பர் 2 :அப்படியா?

நண்பர் 1 :ஆமாம் இல்லன்னா purchase பண்ண ஓடி விடுவாள்...
---------
குப்பை லாரியை கண்டு மனைவி,இன்னைக்கு குப்பைக்கு நான் லேட்டா?
பின்னாடி இருந்து கணவன்:அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படியே உள்ள குதுச்சிடு....
---------

உங்களுக்கு பிடித்ததா?கூல்....
->கார்த்தி...

10 comments:

ஜீவா said...

Hi friend ,my suggestion is please remove the music Gadget ,because its making slow browsing to view your blog. i am eager to read full but the music is makeing slow browsing. just my suggestion :)

நந்து f/o நிலா said...

அட அட அட சூப்பரப்பூ. இந்த போஸ்ட்ட என் கல்யாணத்துக்கு முன்னமே போட்டிருக்க கூடாதா? உசாரா இருந்திருப்பேனே

KARTHIK said...

நந்து f/o நிலா said...

// இந்த போஸ்ட்ட என் கல்யாணத்துக்கு முன்னமே போட்டிருக்க கூடாதா? உசாரா இருந்திருப்பேனே.//

ஆமாங்க ஒரு பெண்னோட வாழ்க்கைய காப்பாத்துன புண்ணியமாவது கெடச்சிருக்கும்.

KARTHIK said...

காதலையும் கல்யாணத்தை பத்தியும் ஒரு நண்பர் எனக்கு சொன்ன அறிவுரை:

அது ஒரு கார்ப்ரேசன் கக்கூசு மாதிரி வெளிய இருக்கவன் உள்ள போக துடிப்பான்.
உள்ள இருக்கவன் வெளிய வரத்துடிப்பான்.

அருமையான பதிவுங்க.

KARTHIK said...

சாரி நந்துணா நீங்கதான் லின்க் கொடுத்தீங்க.

இருந்தாலும் உன்மைய மறைக்க முடியல.

coolzkarthi said...

super comments.....
நந்து f/o நிலா
கார்த்திக்

ஆட்காட்டி said...

)))

coolzkarthi said...

நன்றி ஆட்காட்டி

கபீஷ் said...

//நீங்கள் கல்யாணம் ஆகாதவரா?//

இல்லீங்க.. ஆனாலும் படிச்சேன். கலக்கல், உங்க டேமேஜ் எப்போ?

ers said...

நெல்லைத்தமிழ் சோதனை திரட்டியில் இணைந்தமைக்கு நன்றி.

http://india.nellaitamil.com/upcoming.php

Blog Widget by LinkWithin