சில கேள்விகள் பார்க்க ஒன்றும் இல்லாதவை போல் தோன்றினாலும்,அதன் ஆழம் நம்மை வியக்க வைக்கும்,பிறகு தான் நம் தவறு நமக்கு புரியும்,அவற்றில் சில,
1.மேரி இன் அப்பாவிற்கு நான்கு குழந்தைகள்,
முதல் குழந்தையின் பெயர் AIBQ
இராண்டாவது குழந்தையின் பெயர் BJCR
மூன்றாவது குழந்தையின் பெயர் CKDS
எனில் நான்காம் குழந்தையின் பெயர்?
2.இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,
நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...
3.typical classical question இது,
ஒரு வித்தியாசமான அல்லி செடி ஒரு நாளில் இரண்டு மடங்காக பெருகும்,அந்த செடிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குளத்தை மூட நூறு நாட்கள் எடுத்து கொண்டன எனில்,அந்த குளத்தில் பாதியை மூட எத்தனை நாட்கள் எடுத்து கொண்டிருக்கும்?
4.நீங்கள் ஒரு சிறிய குளத்தில் ஒரு படகில் போகும் போது கடுமையான மழை வந்து விடுகிறது,உங்கள் படகில் இருந்து ஒரு கயிறு 50 cm கீழே நீட்டி கொண்டிருக்கிறது,அதில் குளத்தில் 25 cm உள்ளது எனில் முழு 50 cm குளத்தில் மூழ்க எவ்வளவு நேரம் ஆகும்?மழை குளத்தை நிமிடத்திற்கு இரண்டு cm என்ற நிலையில் நிரப்பி கொண்டு வருகிறது....
5.ஒரு physics question,ஒரு பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன படகு போன்ற பொருளை மிதக்க விடுகிறிர்கள்,அந்த படகில் ஒரு கல்,இரண்டு இரும்பு துண்டு உள்ளது,அந்த படகு கஷ்ட பட்டு மிதக்கிறது,இப்பொழுது நீங்கள் அந்த கல்லையும் இரும்பையும் படகில் இருந்து எடுத்து அது மிதக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுகிரிர்கள் இப்பொழுது அந்த பாத்திரத்தை நிரம்பி இருந்த தண்ணீரின் level குறையுமா கூடுமா?
பதில்களை comment மூலம் சொல்லலாம்.
விடை காண முடியாத கேள்விகளுக்கு பின்னால் விடை தரப்படும்.
»
2 comments:
1. DLET
2. அப்பாவையும், நண்பனையும் காரில் அனுப்பி விட்டு, நான் காதலியோடு நடந்து போவேன். நடந்து போவதோ, காரில் போவதோ முக்கியம் இல்லை, காதலியோடு போவதுதான் முக்கியம்.
3.99 நாட்கள்
நன்று ராஜ் அவர்களே...
முதல் கேள்வியை சற்றே நிதானமாக பார்த்தால் மேரி இன் அப்பாவிற்கு என்ற வரி இருக்கும்...எனவே கடைசி குழந்தையின் பெயர் "மேரி"...
மற்ற இரண்டு பதில்களும் சரியோ சரி......
"அந்த குளத்தில் போகும் போது மழை பெய்யும்" கேள்விக்கு பதில்,எப்பொழுதும் அந்த கயிறு தண்ணீரில் மூழ்காது என்பது...ஏன் என்றால் தண்ணீரின் அளவு அதிகரிக்க அதிகரிக்க படகும் மேல் எழும்...
கடைசி கேள்வியை யாரேனும் physics தெரிந்தவரிடம்(physicist)"floating law"அல்லது "archimedes principle" மூலம் விளக்கி சொல்லும் மாறு கேட்கவும்....அதற்கான பதில்,
தண்ணீரின் அளவு குறையும்.....
Post a Comment