சென்னை போர் கால அடிப்படையில் தீபாவளிக்கு தயாராகி கொண்டு வருகிறது என்று தான் தோன்றுகிறது..
தி.நகர் எங்கும் வரலாறு காணாத கூட்டமா அல்லது அந்த fly over இனால் தெரியும் மாயையா என்று தெரியவில்லை,நிச்சயம் தி.நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து போத்திஸ் அல்லது சரவணா பிரம்மாண்டமாய் போவதற்குள்,கசக்கி பிழிந்து அல்லோல கல்லோல பட்டு செல்ல வேண்டி உள்ளது..அதில் நாம் அடிக்கடி நம் purse மற்றும் செல் போன் ஆகியவை பத்திரமாக இருக்கிறதா என்று அடிக்கொரு முறை பார்க்க வேண்டி உள்ளது...நம் பாக்கெட்டில் நாம் கை விட்டாலே பக்கத்தில் உள்ளவன்(ர்) சந்தேகமாக பார்க்கிறார்,ஏன் இவ்வளவு அவசரம்,ஏதோ போர் அல்லது பங்கு சந்தை வீழ்ச்சியால் நமக்கு உடுத்த உடை கூட கிடைக்காதோ என்பது போல் வருடம் முழுவதற்கும் தேவையானதை வாங்க வருபவர்கள் போல் தான் அனைவரும் வருகிறார்கள்...ஒவ்வொரு தீபாவளி அன்றும் வானில் சில கோடியும் தெருவில் பல கோடியும் வெடித்து காற்றில் கரையும் மாயம் தொடரும் என்றே தோன்றுகிறது,
இதில் கடைக்கு வரும் போது பல பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது,excuse me என்றே மிரட்டும் பெண்களை ரசிக்க தோன்றுவதில்லை,பல வார்த்தைகள் ஏதற்காக தோற்றுவிக்கபட்டதோ அதன் அடிப்படையில் இருந்து மாறி அதன் நேர் மாறானவற்றுக்கே பயன்படுகிறது அப்படி மாறி போனது தான் இந்த excuse me..excuse me என்று மிரட்டுவதற்கு பதில்" யோவ் நகருய்யா" என்றே decent ஆக சொல்லி விட்டு போகலாம்....
இன்மேலும் மிரட்டுவதற்கு பதில் கொஞ்சம் நகருங்க என்று கொஞ்சு தமிழில் காதோரம் கொஞ்சி பேசிவிட்டு போகலாமே...
»
No comments:
Post a Comment