ஆசையால் வாங்கினேன்…
புத்தர் சிலை.
சோம்பேறியின் வீட்டில் சுறுசுறுப்பாய்….
சிலந்தி.
குழாயடியில் அமைதி ( ?! )
குடங்களுடன் ஆண்கள்.
சுடும் வெயில் கடும் மழை
பாவம் அவள் பாதச்சுவடுகள்
சேமிப்பது சுலபம் செலவழிப்பது கடினம்
உடலில் கொழுப்பு.
வீட்டில் ஒரு செடியில்லை
முதலீடோ தேக்குமரத்திட்டத்தில்.
எழுநூறு அடியில் ஆழ்குழாய் தண்ணீர்
செம்மண் நிறத்தில்
பூமித்தாயின் குருதி.
சுதந்திர தினத்தன்று உரையாற்றினார் பிரதமர்
கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடியே.
ஏழையின் கவலை - பணத்திற்கு என்ன செய்வது என்று?
பணக்காரனின் கவலை - பணத்தை என்ன செய்வது என்று?
வீடெங்கும் சன்னல்கள்
மூடியபடியே…
நகரத்து வீடு.
எனக்கு ஒரு சந்தேகம்…
இறந்தவரைப் பார்த்து மனிதர்கள் அழுவது போல்
பிறந்த குழந்தையைப் பார்த்து ஆவிகள் அழுமோ?
—
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு…
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு…
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு…
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு…
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு…
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை…
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்…
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்…
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்…
நானாக நானிருக்க
நட்பே…
நீ எனக்கு
நட்பாக வேண்டும்…
நன்றி
மணிகண்டன்
—–
மர்மக் கடிதத்தில்,
“கடற்கரைக்கு வாருங்கள்”
–உன் அன்புக்காதலி என்று…
ஆனந்தத்தில் நான்….
நால்வரில் எவளோ என்று…..
No comments:
Post a Comment