Wednesday, October 15, 2008

காமிக்ஸ் காமிக்ஸ்...

"நான் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இன் தீவிர ரசிகன் என்பதை பறை சாற்றுவதில் பெருமை கொள்கிறேன்"

என் சிறு வயதில்(இப்பொழுது ஒன்றும் கிழவன் இல்லை)நான் பிற புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் என்பதால் தான்...
அதன் படங்களை பார்க்கும் பொது உண்டான ஈர்ப்பு...என்னை கேட்டு கேட்டு படிக்க தூண்டியது...
முதலில் ராணி காமிக்ஸ் இல் இருந்து பிறகு லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இற்கு தாவினேன்...
நான் படிக்க ஆரம்பித்தது என்னவோ 90 களில் தான்.ஆனாலும் என்னால் இன்னும் அதனிடம் இருந்து விடு பட முடிவதில்லை...

காமிக்ஸ் இல் இருக்கும் பல விஷயங்கள் மறக்க முடியாதவை...சில ஐடியாக்கள் சிலிர்க்க வைப்பவை...குறிப்பாக,

காலடி தடத்தை வைத்து எத்தனை செவ்விந்தியர்கள்,எத்தனை வெள்ளை காரர்கள் சென்றார்கள்,அதில் ஒருவனுக்கு இடது காலில் அடி பட்டு உள்ளது என்றும்,

குதிரையின் சாணத்தை வைத்து எத்தனை நேரம் ஆனது என்று கண்டுபிடிப்பதில் ஆகட்டும்,நெருப்பு மூட்ட பட்ட இடத்தில் இருக்கும் கரியின் மூலம் கண்டு பிடிப்பதில் ஆகட்டும்...செவ்விந்தியர்களுக்கு சமம் அவர்களே....

இரவு கழுகின்பாத்திரம் அருமை.....அவரின் ஒரு nice gentleman ஹீரோ தனம் சலிக்காதது...
இதன் ஆசிரியர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை அன்றே எதிர்த்தாரோ என்று எண்ண தோன்றும்...

கிட் வில்லர் மற்றும் கார்சன்,டைகர் ஆகியோரின் பங்கும் முக்கியமானது...


அடுத்து எனக்கு பிடித்தமானவர் ப்ளூ பெர்ரி என்றும் அழைக்கப்படும் டைகர்...இவருடன் குடி கார கிழவன் joe அடிக்கும் கூத்து அமர்க்களம் ஆனது..டைகர் ஒவ்வொரு இக்கட்டில் இருந்தும் தப்பும் வழி மிக சுவாரசியமானது...

லக்கி லுக் அவரை விட எனக்கு ஜாலி jumper உம் டால்டன் களும் தான் மிக பிடிக்கும்...

ஆவ்ரெல் இனால் ஜோ மண்டை காயும் இடங்கள் நிச்சயம் வயிற்று வலிக்கு guarantee...
ஜோ தப்பிப்பதற்காக ஜெயிலை தீயிட்டு கொளுத்தும் போது ஆவ்ரெல்
"

இப்ப ஜெயில் எரிஞ்சிடுச்சு அப்படின்னா திரும்ப நம்மள எங்கே புடிச்சு போடுவாங்க"
என்பதில் ஆகட்டும்...

"ஜெயில் கதவின் சாவி கையில் கிடைத்ததும் ஜோ,ஸ்பூன் மூலம் சுரங்கம் தோண்ட முயற்சி செய்து கொண்டிடுக்கும் ஆவ்ரெல் இடம் கொடுப்பான்...உடனே ஆவ்ரெல் ஸ்பூனை தூக்கி போட்டு விட்டு சாவி மூலம் தோண்ட ஆரம்பிப்பான்...கதவை திறக்காமல்."
really unforgettable....

இன்னும் பல....
மற்றொரு மறக்க முடியாத கேரக்டர் "இரும்பு கை மாயாவி",
மற்றும்,
டேவிட் லாரன்ஸ்,
ஸ்டீவ்,
ஆர்ச்சி
ever green சிக் பில் & co....அவர்களின் காமெடி ச்சே சான்ஸ் இல்ல...ஸெரிப்(seriff)இடம் டெபுடி கிட் வாங்கும் உதை ச்சே...
அது ஒரு கனா காலம்....
.....
இன்னும் எத்தனையோ....
காமிக்ஸ் வாங்க நான் பட்ட பாடு சொல்லி மாளாது...
புத்தக கடைகளில் நான் காமிக்ஸ் கேட்டு அவர்களிடம் இருந்து வந்த response....

"அப்படின்னா"
"யோவ் நேத்து தானே கேட்ட"
சில கடைகளில் காய் கறி உடன் புக் உம் விற்பார்கள் அங்கேயும் போய் கேட்டது உண்டு அப்பொழுது...
அவர்கள் கத்திரிக்காய் என்று நினைத்து...
"எத்தனை கிலோ?"
சில சமயம் decent ஆக "இல்லை"
சில சமயம் அவன் முறைத்த உடன் நாம் கிளம்பி இருக்க வேண்டும்(அத்தனை தடவை கேட்டு இருப்பேன்)..
"இப்ப எல்லாம் வரதே இல்லைங்க"
காமிக்ஸ் இல்லை என்றும் தெரிந்தவுடன் ஒரு வெறுமை வந்து விடும் மனதினுள்...

எப்பொழுதாவது இருக்கு என்று சொல்லும் பொது வரும் ஒரு சிலிர்ப்பு,உன்னதமான தருணம் ச்சே அது காமிக்ஸ் படிப்பவர்களுக்கே.,அதுவும் தேடி பிடித்து பல மாதங்கள் கழித்து படிப்பவர்களுக்கே புரியும்..
இவ்வளவு வயசு ஆய்டுச்சு இன்னும் காமிக்ஸ் படிக்கறான் பார் என்று கேட்பவரிடம், நான் சொல்வதெல்லாம்


"ஒரு முறை நீங்களும் படித்து பாருங்கள் என்பது தான்"

3 comments:

anbukkarasan said...

I'm also a lover of muthu and lion comics...
thanks for remembering lucky luke....

King Viswa said...

கார்த்தி,

நீங்களும் காமிக்ஸ் வாசகர் தான் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து காமிக்ஸ் பற்றியும் எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

King Viswa

Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்

Meeraan said...

உங்கள் பதிவை மிகவும் ரசித்தேன்.

Blog Widget by LinkWithin